வியாழன், 24 ஜனவரி, 2019

சாப்பிட வாங்க: சப்பன் டிண்டா....



ஹாய்... நான் தான் Chசப்பன் டிண்டா...


ஹாய்.... நான் Chசப்பன் டிண்டா பேசுகிறேன். கடந்த சில வருஷத்துல, ஹிந்தி தெரியாதவங்க கூட Chசப்பன் என்ற ஹிந்தி வார்த்தைக்கு அர்த்தம் 56-ன்னு தெரிஞ்சுக்கிட்டாங்க – எல்லாம் இந்தியப் பிரதமர் சொன்ன Chசப்பன் இன்ச் கா Chசாத்தி மகிமை தான். ஆனா அவர் அப்படி சொல்றதுக்கு முன்னாடியிலிருந்தே என் பேர் Chசப்பன் டிண்டா தான்! நான் பூசணிக்காயோட உறவுக்காரன் தான் – சித்தப்பா பையன்னு வைச்சுக்கோங்களேன். பூசணி பெரிய அளவில் இருக்கும்னா நான் சின்னச் சின்னதா தான் இருப்பேன்.  டிண்டான்னு ஒரு காய்கறி இருக்கு – ஆனா எனக்கும் அதுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு – டிண்டாவுக்கு ப்ளைன் தோல்; எனக்கோ டிசைனர் தோல்! ஆனா இந்த மக்களுக்கு என்னமோ பூசணி என்றாலும், என் அண்ணன் டிண்டான்னாலும், நான் என்றாலும், பயங்கர வெறுப்பு. எங்களை வைச்சு சப்ஜி செஞ்சா எல்லாரும் மூஞ்சிய சுளிக்கிறாங்க!


நீள வாக்கில் நறுக்கி பாதியாக்கிய Chசப்பன் டிண்டா...

நான் பரவலா எல்லா ஊர்லயும் கிடைப்பதில்லை. வடக்கே தான் கிடைப்பேன். அண்ணாத்த டிண்டா எல்லா சீசன்லையும் கிடைப்பார். நான் குளிர் காலத்துல மட்டும் தான் கிடைக்கிற ஸ்பெஷல் ஆளு! ஆனாலும் என்னோட அருமை யாருக்கும் தெரியல! அதுலயும் தில்லில இருக்கற தமிழ் சமையல்காரங்க, எங்களை சாம்பார்ல துண்டு துண்டாப் போட்டா, எங்களை அப்படியே ஒதுக்கிட்டு சாப்படறாங்க. அதுவும், என் கதையைக் கேட்டு எழுதிட்டு இருக்காரே, இந்த ஆளு ரொம்பவே மோசம். பேரைக் கேட்டாலே, சாம்பாரே வேணாம்னு ஓடறார் மனுஷன். நாங்க என்ன பாவம் செய்தோம். எங்களையும் செய்யற விதத்தில் செய்தால் சப்ஜி நல்லாவே இருக்கும் தெரியுமா? பஞ்சாபிகள் எங்களை வச்சு எவ்வளவு சூப்பரா சப்ஜி செய்வாங்க தெரியுமா? எப்படிச் செய்யணும்னு நானே சொல்லித் தறேன். வாங்க... என்னை வச்சு சப்பன் டிண்டா சப்ஜி எப்படிச் செய்யறதுன்னு சொல்லித் தரேன்!


என் கூட்டாளிகளாக இவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்!

பஞ்சாபி முறையில எப்படி சப்பன் டிண்டா சப்ஜி செய்யறதுன்னு பார்க்கலாம். என்னென்ன தேவைன்னு சொல்றேன் குறிச்சுக்கோங்க....

சப்பன் டிண்டா – 500 கிராம்.
வெங்காயம் – 3
தக்காளி – 2
பெருங்காயம் – சிறிதளவு
ஜீரா – 1
பூண்டு – 1
இஞ்சி – 1 இஞ்ச்
ப. மிளகாய் - 2
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு.
மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன் [தேவையான அளவு]
மிளாகாய்த் தூள் – ½ ஸ்பூன்
தனியா பொடி – 1 ஸ்பூன்.
எண்ணெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்யணும் மாமூ:


Chசப்பன் டிண்டா சப்ஜியாக...

என் தோலை உரிச்சு [ஹாஹா… நானே என் தோலை உரிக்கச் சொல்ற நிலை எனக்கு!] நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சியை சிறு துண்டுகளாகவும், பூண்டு தோல் எடுத்து, நசுக்கியும் வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பெருங்காயம், சீரகம் போடவும். பிறகு இஞ்சி, பூண்டு சேர்க்கவும். வதக்கவும்.

நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய் சேர்க்கவும். உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் தனியாப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு நறுக்கி வைத்திருக்கும் என்னை – அதாங்க சப்பன் டிண்டாவை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.

மிதமான தீயில், வாணலியை மூடி வைக்கவும். ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை வேக வைக்கவும். நடுநடுவில் கொஞ்சம் கலக்கி விடலாம்.  நன்கு வதங்கிய பிறகு மேலே கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து வதக்கலாம்!

அவ்வளவு தாங்க சப்பன் டிண்டாவாகிய என்னை வைத்து தயாரித்த சப்ஜி ரெடி! அடுப்பை அணைத்து வாணலியில் தயாரான சப்பன் டிண்டா சப்ஜியை வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

சப்பாத்தி, பராட்டா ஆகியவற்றுடன் தொட்டுக்கையாக இந்த சப்பன் டிண்டா சப்ஜி நன்றாக இருக்கும்.


சப்பாத்தி, Chசப்பன் டிண்டா சப்ஜி மற்றும் பீட்ரூட் ஹல்வா...

உங்க ஊர்களில் கிடைத்தால், என்னை இந்த மாதிரி சப்ஜி செய்து சாப்பிட்டுப் பாருங்க! ஒரு தடவை செய்த பிறகு இந்தப் பதிவு எழுதிய ஆளு கூட வாரா வாரம் என்னை வாங்கி வருகிறார் தெரியுமா!

என்ன நண்பர்களே, இன்றைய சாப்பிட வாங்க பதிவு பிடித்ததா? உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் சந்திப்போம்... சிந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

42 கருத்துகள்:

  1. குட்மார்னிங். சப்பன் எனக்கு கிரிக்கெட் வாயிலாக அறிமுகம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. //அதுவும், என் கதையைக் கேட்டு எழுதிட்டு இருக்காரே, இந்த ஆளு ரொம்பவே மோசம். பேரைக் கேட்டாலே, சாம்பாரே வேணாம்னு ஓடறார் மனுஷன்.//

    ஹா... ஹா... ஹா... Same same sweet sweet !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஒரே ஒரு இடத்தில டிண்டா சிண்டா ஆகிவிட்டது! ஹா... ஹா.. ஹா... வித்தியாசமானா முறையில் சொல்லபப்ட்டிருக்கும் முறை சுவாரஸ்யம், ரசனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிண்டா..... :) மாற்றி விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அருமையாக சப்பன் டிண்டா தன்னை உணவாக்கும் விதத்தை சொன்னது.
    இங்கு கிடைத்தால் செய்யலாம்.
    கர்நாடகாவில் சாம்பாரில் இதனைதான் போடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ கர்நாடகாவில் கிடைக்கிறதா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. //இந்தப் பதிவு எழுதிய ஆளு கூட வாரா வாரம் என்னை வாங்கி வருகிறார் தெரியுமா!//

    செய்யும் முறையில் செய்தால் பிடிக்கும் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்யும் முறையில் செய்தால்..... அதே அதே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. ஜப்பான் tinda விட உங்கள் விளக்கம் சுவையாக இருக்கிறது Venkat ji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  7. நம்ம வீட்டில் மகளுக்கு மட்டும் சாம்பார் பிடிக்காது. ச்சப்பன் டிண்டா சப்ஜி நல்லாத்தான் இருக்கு. நானும் இன்றைக்கு சமையல் பதிவுதான்:-) ஸூக்கினி கறி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்கள் தளத்திலும் சமையல் பதிவு. மகிழ்ச்சி. படிக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. நம் ஊரில் புதிய வகை காய்கறி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  10. தாமதமான காலை வணக்கம் வெங்கட்ஜி!

    சூப்பரா சப்பன் டிண்டாவே பேசுவது போல எழுதியிருக்கீங்க...

    ////அதுவும், என் கதையைக் கேட்டு எழுதிட்டு இருக்காரே, இந்த ஆளு ரொம்பவே மோசம். பேரைக் கேட்டாலே, சாம்பாரே வேணாம்னு ஓடறார் மனுஷன்.//

    ஹா ஆ ஹா ஹா ஹா ஹா இதை வாசிச்சு சிரித்துவிட்டேன். அப்புறம் நான் அதற்கு பதில் சொல்லுவது போல வேண்டான்னு சொல்லி ஓடியவர் தானே இப்ப உன்னைப் புகழ்ந்து உன் டிஷ் ஒன்னும் எழுதியிருக்கார்னு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  11. டிண்டா சென்னையில் எப்போதேனும் கிடைக்கும் அதுவும் பனகல் பார்க் காய் கடைகளில்...கிலோ 80 சொல்லுவார்கள்...கொஞ்சம் விலை குறைந்த போது வாங்கிச் சமைத்ததுண்டு.

    சப்பன் டிண்டா நான் டில்லிக்கு குளிர் சீசனில் சென்றிருந்த போது சாப்பிட்டிருக்கேன். உறவினர் வீட்டில்.
    ஆனால் சப்பன் டிண்டா சென்னையில் பார்க்கவில்லை. இங்கு பங்களூரிலாவது விண்டர் ஆச்சே வரும் என்று நினைத்து தேடினேன் கிடைக்கவில்லை எங்கள் ஏரியாவில். ஒரு வேளை சிட்டிக்குள் அரிதாக பெரிய கடைகள் எதிலாவது கிடைக்கலாமாக இருக்கும். பார்க்கவில்லை. டிண்டாவே இங்கு இன்னும் கண்ணில் படவில்லை.

    உங்கள் படங்கள் செய்முறை எல்லாம் சூப்பரா இருக்கு ஜி. பார்த்துக் கொண்டேன். இங்கு கிடைத்தால் செய்யனும்....நம் வீட்டில் சப்பாத்தி அதிகம் பயன்பாட்டில்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்சியில் நான் இக்காயைப் பார்த்தது இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  12. முதல் படம் குண்டு கத்திரி ரகமோ என்று நினைக்க வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. இது வரை பார்த்த நினைவில்லை. இனி குளிர்காலத்தில் கிடைக்கிறதா எனக் கவனித்துப் பார்க்கிறேன். பார்க்க கத்திரிக்காய் போலவும் உள்ளது. ஆங்கிலப் பெயர் என்னவோ?

    அருமையான குறிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கில பெயர் தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  15. நம்ம ஊரு வாழைக்காய் மாதிரி இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழைக்காய்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  16. இந்த டிண்டா என்பதை நான் முதன் முதலில் கடுகு சாரின் (எழுத்தாளர் அகஸ்தியன்) பதிவில்தான் படித்தேன். அப்புறம் இது தில்லிக்கே உரித்தான காய் என்று நினைத்தேன்.

    படத்தில் பார்த்த, காய் ஆன உடனே (அதாவது பூவிலிருந்து காய் ஆன உடன்) பறித்த சிறிய அளவு பறங்கிக்கொட்டை போல் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்தியாவில் கிடைக்கும். தமிழகத்தில் நானும் பார்த்தது இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  17. இந்த சப்பன் டிண்டாவுக்கும் எனக்கும் இதுவரை எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை, என் வீட்டு எண் சப்பன் என்பதைத் தவிர. ஏனோ இந்த சப்ஜி மீது அவ்வளவு விருப்பம் இருந்ததில்லை. இப்போது உங்கள் செய்முறை பார்த்து முயற்சிக்கலாம் போல உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆமாம் உங்களது வீட்டு இலக்கம் சப்பன் என்பது மறந்து விட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  18. சப்பனும்:) சப்பாத்தியும் நல்லா இருக்கு.. ச்சும்மா ஹிந்தியில பேசி நம்மை எல்லாம் பயமுறுத்துவதே வேலையாக்கிடக்கு:)).. ஹா ஹா ஹா இது இங்கு நான் காணவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா ஹிந்தியில் பேசி பயமுறுத்துவதே வேலையாக் கிடக்கு..... ஹாஹா. அப்படியே பயந்துட்டாலும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    சப்பன் டிண்டா.. புது மாதிரியான காயாகத்தான் இருக்கிறது. படத்தில் கத்திரிக்காய் மாதிரி உள்ளது. வித்தியாசமான உரையாடலில், (காய்கறியே பேசுவது போல்) பதிவை அமைத்திருப்பது அருமை. இங்கு இதுவரை பார்த்ததில்லை. எங்கேனும் கிடைத்தால் வாங்கி செய்து பார்க்கலாம். செய்முறையும் அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  20. சப்பன் டின்டா கேள்விப்படலை! டிண்டா சென்னையில், அம்பத்தூரில் கூட நிறையவே கிடைக்கும். இது செய்து பார்த்தது இல்லை. நல்லா எழுதி இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  21. டின்டவில்ஒர் ரகம் அண்ணமலை (A டின்டா1)யுனிவர்சிட்டியில் 1980 ெவளி இட்டார்கள் அப்போது கொஞ்சம் கிடைத்தது குறுகிய வயது பிறகு விதை கிடைக்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே. உங்கள் பெயரையும் சொல்லி இருக்கலாம்!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....