ஞாயிறு, 6 ஜனவரி, 2019

பீஹார் டைரி – நிழற்பட உலா – புத்தரின் வாழ்க்கை – மதுபனி ஓவியங்களாக…




பட்னா அருங்காட்சியகத்தில் பார்த்த சிற்பங்கள் தவிர ஓவியங்களையும் பிறிதொரு வாரம் பகிர்ந்து கொள்கிறேன் என சென்ற வாரம் எழுதி இருந்தேன். இதோ இந்த வாரத்தில் புத்தரின் வாழ்க்கையைச் சொல்லும் ஓவியங்கள்.  மதுபனி ஓவியங்கள் மிகச் சிறப்பானவை. இந்த ஓவியங்கள் பற்றி முன்பு கூட எனது பக்கத்தில் ஒரு பதிவு எழுதியதுண்டு. இயற்கை வண்ணங்களை வைத்து வரையப்படும் இந்த ஓவியங்கள் ஜீவனுள்ளவை.  புத்தரின் வாழ்க்கையை மதுபனி ஓவியங்களாகப் பார்த்தபோது படங்களாக எடுத்து வைத்துக்கொள்ள கை துடித்தது. பட்னா அருங்காட்சியகத்தில் எடுத்த படங்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாருங்கள் புத்தரின் வாழ்க்கையை மதுபனி ஓவியங்களாகப் பார்த்து ரசிக்கலாம்….


























வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    முதல் படமே அசத்தலா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ஜி!. அருங்காட்சியகத்தில் ஒரு பக்கத்தில் இருந்த ஓவியங்கள் இவை. எனக்கும் பிடித்த ஓவியம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. அனைத்து படங்களும் ரொம்ப அழகாக இருக்கின்றன ஜி. மதுபானி ஓவியங்கள் ரொம்பப் பிடிக்கும். வண்ணங்கள் அழகு....ராஜ்புதானி ஓவியங்களும் சிறப்பாக இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுபனி, ராஜ்புத் ஓவியங்கள் என பல ஓவியங்களை வரைபவர்கள் இப்போது குறைந்து கொண்டே வருகிறார்கள் என்பது ஒரு சோகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. மதுபானியின் சிறப்பு எல்லா இடங்களும் ஃபில் ஆகியிருக்கும்...கண்கள், மூக்கு இவையும் ஸ்பெஷல்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இண்டு இடுக்கு விடாமல் முழுவதும் நிரப்புவது இந்த ஓவியப் பாணி. பெரும்பாலான பழங்கால ஓவியங்கள் இப்படித்தான் இருக்கின்றன எனத் தோன்றுவதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. உங்கள் சுட்டி போய் பார்க்கிறேன் பார்த்த நினைவு இல்லை போல இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பார்த்து விடுங்கள் கீதா ஜி....

      ஓ பார்த்து விட்டீர்கள் போல... இப்போது தான் மின்னஞ்சல் பார்த்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மதுபநி-மதுபானி என்று சொல்லி சொல்லி மதுபானி என்றே அடித்துவிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுபனி என்பது தான் சரி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. குட்மார்னிங். மதுபனி ​ஓவியங்கள்... ஓ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      மதுபனி ஓவியங்களே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. ​படங்கள் வரிசைக் கிரமத்தில் அமையவில்லையா? இல்லை, நாந்தான் புத்தர் கதையை மறந்து விட்டேனா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரிசைக் கிரமமாக இல்லை. சில பெரிய படங்களை பகுதிகளாக எடுத்ததைப் பகிர்ந்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. எல்லாப்படங்களையுமே ரசித்தேன். பழைய பதிவில் முதல் கமெண்ட்டே நான்தானென்று பார்த்து மகிழ்ந்தேன்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பதிவில் உங்களுடையதே முதல் கருத்து! மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. ஓவியங்களை ரசிக்க தந்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. மதுபாணி ஓவியங்கள் மிகவும் அழகு. புத்தரின் வாழ்க்கையை அழகான வண்ண ஓவியங்கள் மூலம் எங்களுக்கு கொடுத்தத்திற்க்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுபனி ஓவியங்களை ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  11. அழகான ஓவியங்கள் வெங்கட்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இப்பதிவில் பகிர்ந்த ஓவியங்களை ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  12. மதுபனி (மதுபானியா) ஓவியங்கள்வரைபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

    பதிலளிநீக்கு
  13. மதுபனி என்பது தான் சரி. மதுபானி அல்ல....

    நீங்களும் இந்த வகை ஓவியங்களை வரைவதற்கு முயற்சி செய்யலாம்.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

    பதிலளிநீக்கு
  14. மதுபனி ஓவியங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    மிகவும் அழகான ஓவியங்கள். மதுபனி என்றால் என்னவென்று புரிந்து கொண்டேன். ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கின்றன. புத்தரின் வாழ்க்கையை ஓவியமாக தந்து ரசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுபனி ஓவியங்களை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  16. மிக அருமையான படங்கள் ...

    மதுபனி படங்கள் சில வரைந்து இருந்தாலும் ...இப்பொழுது புத்தர் படங்களையும் வரையும் ஆசை வருகிறது ...வரைவதற்கு இப்படங்களை சேமித்துக் கொண்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நீங்கள் வரையப் போவது அறிந்து மகிழ்ச்சி. வரைந்த பிறகு பகிர்ந்து கொள்ளுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  17. அருமையான ஓவியங்கள். எல்லாப் படங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  18. Buddha in madhubani art. His complete story in madhubani paintings. Excellent. Buddha's life stories into visual imagery of the art form could be universally understood. Chance to see once again or at anytime. Thank you for sharing.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....