புதன், 6 பிப்ரவரி, 2019

கோடை விடுமுறை நினைவுகள்


கோடை விடுமுறை என்றாலே கோடை வாசஸ்தலங்களுக்கும், சுற்றுலா மையங்களுக்கும் சென்று வருவது என்பது  இப்போதைய கலாச்சாரமாகி விட்டது. ஆனால் என் சிறு வயதில் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் நான் பிறந்த ஊரான சிவகங்கைக்குத் தான் அழைத்துச் செல்வார்கள். கடைசி பரீட்சை முடிந்த அன்றே கிளம்பி விடுவோம். கோயமுத்தூரிலிருந்து பேருந்து பிடித்து மதுரை சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்தில் ஒரு மணிநேர பிரயாணத்தில் சிவகங்கையை சென்றடைவோம். பெரும்பாலும் அப்பாவும் வருவார். இல்லையென்றால் அம்மா, நான் தம்பி மூன்று பேரும் செல்வோம். கோவையிலிருந்து மதுரைக்குமணிநேரம். சிவகங்கைக்கு 1 மணிநேரம். ஆக மொத்தம்மணிநேர பிரயாணத்தில் சிவகங்கையை அடையலாம். இதுவே அன்றைய நாளில் எனக்கு பெரிய பயணமாகத் தோன்றும். இப்போதோ தில்லிக்கு 40 மணிக்கும் மேற்பட்ட ரயில் பிரயாணத்தை நான் மேற்கொள்வதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.


அத்தை / மாமா வீடு

சிவகங்கையில் என் அத்தையும் (அப்பாவின் அக்கா) மாமாவும் (அம்மாவின் தம்பி) இருக்கிறார்கள். பெரிய சிவன் கோவில் இருக்கும். அதற்கு எதிர் புறமாக அத்தையின்  அந்த கால வீடு. நெடுக போய்க்கொண்டே இருக்கும். முதலில் வராந்தா. அங்கிருந்தே மாடிக்கு செல்லும் வழி இருக்கும். வராந்தாவைத் தாண்டிச்  சென்றால் ஏழு, எட்டு தூண்களுடன் கூடியரேழிஎன்று சொல்லப்படும் பெரிய அறை இருக்கும். அடுத்து இடதுபுறம் ஒரு சிறிய அறை. அதற்கடுத்து கூடம். கூடத்தின் ஒரு புறம் பூஜையறைக்கு வழி, அடுத்து ஸ்டோர் ரூம். அதைக் கடந்தால் பெரிய சமைலறை. சமையலறைக்கு நடுவில் பெரிய முற்றம். அதை தாண்டி கிணற்றடி. இதன் இரு புறங்களிலும் இரண்டு அறைகள். விறகுகள் அடுக்கி வைக்க. அப்புறம் தோட்டம். தோட்டத்தில் 6,7 தென்னை மரங்களும், செம்பருத்தி, நந்தியா வட்டை போன்ற பூச்செடிகளும் இன்ன பிறவும் இருந்தது

கிணற்றடியில் தண்ணீர் இறைத்து, துவைத்து, குளித்து அமர்க்களம் செய்வோம். இரவில் அங்கேயே இருக்கும் தாழ்வாரத்தில் எல்லோரும் வட்டமாக அமர்ந்து கொள்ள, அத்தை சாதத்தை உருட்டி கையில் பிசைந்து போடப் போட, நாங்கள் அதன் நடுவே குழி செய்ய, அது கொள்ளும் அளவு குழம்பு விடுவார். அதோடு சாப்பிட்டால் அளவே இல்லாமல் உள்ளே போகும். செம்பருத்தி இலைகளை பறித்து தோய்க்கும் கல்லிலேயே வைத்து கசக்கினால் நுரை வரும் இதை தலையில் தேய்த்து குளிப்போம். காலையில் பூஜைக்கு மலர்கள் பறிப்பது எங்கள் வேலை.

அப்பா, அம்மாவை விட்டு நானும் தம்பியும் முதல் முறையாக அத்தை வீட்டிற்கு சென்ற போது நான் தோட்டத்துக்குச் சென்று மலர் பறிக்கும் போது என் அத்தை பையன் தோட்டத்து கதவை வெளியிலிருந்து பூட்டி சாவியை ஓட்டுக்கு மேலே வீசிவிட நான் அழுது கதறி, பின்பு எல்லோரும் ஓடி வந்து அவனை திட்டி சாவியை எடுத்து கதவைத்  திறந்தார்கள். இந்த அமர்களத்தில் எனக்கு ஜுரம் வந்து படுத்தது, அதற்காக திரும்பவும் அத்தை பையனுக்கு கிடைத்த திட்டு இன்றும் நினைவிருக்கிறது.

மாலை வேளைகளில் சிவன் கோவிலுக்கு சென்று வருவோம். இரவு நேரத்தில் அத்திம்பேர் சொல்லும் குட்டிக் குட்டிக் கதைகளைக் கேட்க ஆர்வமாயிருக்கும். அதைக் கேட்பதில் அலாதியான சந்தோஷம் எங்களுக்கு. அவர் சொல்லிய கதைகளில் சுண்டு விரல் உயரமுள்ள பையனின் கதை, ராஜா ராணி கதைகள் என நிறைய கதைகள் நாங்கள் விரும்பிக் கேட்டவை.

மாமாவின் வீடு அடுத்த தெருவிலேயே இருந்தது. இங்கும் அங்குமாய் இருப்போம். காலையில் அத்தை வீட்டில் சாப்பிட்டால் மதியம் மாமா வீட்டில். மாமா எங்களை நிறைய சினிமாக்களுக்கு அழைத்துச் செல்வார். ஒரு முறை மாமா, மாமி, அம்மா மூவரும் இரவுக் காட்சிக்கு பேய் படத்துக்கு செல்லும் போது என்னையும் தம்பியையும் பாட்டியுடன் சம்பூர்ண ராமாயணத்துக்கு அனுப்பினார். மறக்க முடியாதது. மாமா சாப்பிட நிறைய வாங்கித் தருவார். அப்படி நான் ரசித்து, ருசித்து சாப்பிட்டவற்றில் சிலவற்றை சொல்கிறேன். 


ஆறுமுகம் கடை வறுபயிறுசுண்டல்:

மாலை 5   மணி ஆகி விட்டால் ஆறுமுகம் கடை வாசலில் கும்பல் அலை மோதும்காரணம் அவர் கடையின் ஸ்பெஷலான வறுபயறும்சுண்டலும் தான்ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்த அனைத்துமே காலி ஆகி விடும்அவ்வளவு சுவையானதாக இருக்கும்சிறு வயதில் சாப்பிட்ட சுவை, இதை எழுதும் போது என் நாக்கில் தெரிகிறது.

மனோகரன் கடை ரோஸ் மில்க்:

இந்த கடை ஸ்பெஷல் ரோஸ் மில்க் மற்றும் ப்ரூட் மிக்ஸ் ஆகும்ஒரு பாத்திரத்தையோதண்ணீர் ஜக்கையோ எடுத்துக் கொண்டு மாமா வீட்டின் கொல்லைபுறக் கதவைத் திறந்து கொண்டு போனால் நடக்கும் தொலைவில் கடைத்தெருவில் இருக்கும் மனோகரன் கடை வந்து விடும்அங்கு சென்று ரோஸ் மில்க்கோப்ரூட் மிக்ஸ்ஸோ வாங்கிக் கொண்டு ஓடி வருவோம் [அப்போது தானே ஜில்லென்று சாப்பிட முடியும்]. அப்போதெல்லாம் எல்லோர் வீட்டிலும் ஃப்ரிட்ஜ் கிடையாதேஇப்போது வீட்டிலேயே சுகாதாரமாக செய்தாலும்ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் அந்த சுவைக்கு ஈடு இணை ஏதுமில்லை.

நுங்குஇனிப்புகள் நெல்லிக்காயை தேனில் ஊறப் போட்டு கொடுப்பது என்று நிறைய ஐட்டங்கள் உண்டுஎங்கள் பாட்டிசாதாரணமா கீரை வாங்கி சுத்தம் செய்து வேக வைத்து மசித்து தாளித்துக் கொட்டினாலே அவ்வளவு சுவையானதாக இருக்கும்.

இத்தனை சாப்பிட்டால் வயிறு சும்மா இருக்குமாஇதற்கும் ஒரு வைத்தியம் உண்டுநல்ல கொழுந்து  வேப்பிலையை பறித்து அரைத்து  எல்லா குழந்தைகளுக்கும் ஒவ்வொரு உருண்டை வாயில் போட்டு சிறிய டம்ளரில் மோர் விட்டு எங்கள் வாயில் ஊற்றி அழுத்தி மூடிவிடுவார்கள்.  எத்தனை ஆட்டமும் ஓட்டமும் காட்டினாலும் இந்த வேப்பிலை உருண்டை வைத்தியத்தில் இருந்து தப்ப முடிந்ததில்லை என்பதில் எனக்கு இன்னமும் வருத்தம் உண்டு. 

சின்ன அத்தை வீடு இராமநாதபுரத்தில் மாவட்டத்தில்அவர்கள் வீடு நாற்பது ,ஐம்பது பேரை கொண்ட கூட்டு குடும்ப வீடுபந்தி பந்தியாக சாப்பாடு நடக்கும்அவர்களுக்கு சொந்தமாக ஹோட்டல் உள்ளதால் காலை டிபன் அங்கிருந்து வந்து விடும்நிறைய வாண்டுகள் இருந்ததால் பொழுது போவதே தெரியாதுஅங்கிருந்ததும் எனக்கு ஜாலியான அனுபவம் தான்.

பெரிய வகுப்புகள் வந்ததும் ஊருக்கு போகும் வாய்ப்பே இல்லாமல் போனதுஇன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் இப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைப்பது கடினம் தான்இன்று வரையிலும் இனிமையான கோடை விடுமுறை நாட்கள் அவை.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்….


ஆதி வெங்கட்.

28 கருத்துகள்:

  1. நாங்களும் உள்ளூரிலேயே இருக்கும் தாத்தா வீட்டுக்குத் தான் போவோம். வெளியூர் எல்லாம் போனதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் என வந்திருக்கணும். :)

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம்.

      நான் விஜயவாடா சென்று விடுவேன் வருடா வருடம் விடுமுறையில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
    3. :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  2. இளமைக்கால நினைவலைகள் என்றுமே இனியவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்

    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  4. வீட்டின் வர்ணனை, பார்க்க வேண்டும் போல் உள்ளது ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வீடு இப்பொழுது இல்லை. கல்யாண மண்டபம் ஆகிவிட்டது. :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. அருமையான மலரும் நினைவுகள்.
    நாங்களும் சிறு வயதில், சித்தப்பாவீடு, சித்தி வீடு, மாமா வீடு, மதினி வீடு என்று விடுமுறைக்கு போய் வருவோம்.
    மகிழ்ச்சியான காலங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. நானும் விடுமுறை நாட்களில் அக்காள் வீட்டிற்க்கு சென்று ஆறு குளங்களில் கும்மாளம் போட்டதை நினைத்து சந்தோஷமாக இருந்தது. மீன்டும் அந்தநாள் வராதோ என்ற ஏக்கம். நல்ல பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன் ஜி.

      நீக்கு
  7. இனி திரும்ப கிடைக்கவே கிடைக்காத பொற்காலம்.. நமக்கும்... நம் வாரிசுகளுக்கும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி.

      நீக்கு
  9. சிறப்பு.

    இந்த ஆனந்தத்தை இன்றைய தலைமுறை குழந்தைகள் இழந்துதான் போனார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  10. இனிய நினைவுகள். நாங்களும் சிலமுறைகள் உறவினர் வீடுகளுக்குச் சென்றிருக்கிறோம். எங்கள் தந்தை வழி உறவினர் வீடு. மதுரை அருகே சக்குடி என்கிற கிராமத்துக்குச் சென்றுவந்த இனிய மற்றும் கசப்பான நிகழ்வுகளை மறக்க முடியாது! அப்போது நாங்கள் தஞ்சையில் இருந்தோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. அந்த பால் சர்பத் நானும் குடிச்சிருக்கேன் ..இப்போ எத்தனை ஜிகர்தண்டா வந்தாலும் அந்த சுவை இப்போ இல்லை .அருமையான நினைவுகள் .அழகா எழுதியிருக்கீங்க ஆதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  13. அருமையயான நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....