சனி, 9 பிப்ரவரி, 2019

கதம்பம் - நம்ம ஊரு ஹீரோ - இப்படியும் சிலர் - உரம் தயாரிக்கலாம் வாங்க


நம்ம ஊரு ஹீரோ!! – 21 January 2019






நேற்று முதல் சன் தொலைக்காட்சியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகியது. இரவு 9:30 முதல் 10:30 வரை..

அரசுப் பள்ளியில் பணியாற்றும் இரு வேறு அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுடன் உரையாடல் நிகழ்ந்தது.

ஆசிரியை ஒருவர் கிராமத்தில் பயிலும் தங்கள் பள்ளி மாணாக்கர்களுக்கும் நகரத்துக்கு ஈடாக ஆங்கிலம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் phonetic அதாவது ஒலி வடிவில் கற்றுக் கொடுக்கிறார்..அந்த மாணவிகளும் அதை வாசித்து காட்டுகின்றனர்.

வீடு வீடாகச் சென்று அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கச் சொல்லி வலியுறுத்துகிறாராம். தங்கள் மாணவிகளின் ஆங்கிலத் திறமையை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றி உற்சாகப்படுத்துகிறார்.

தன் நகைகளை விற்று மாணாக்கர்களுக்கு பென்ச், நாற்காலி வாங்கிப் போட்டிருக்கிறார். என் குழந்தைகளுக்கு நான் செய்தேன் என்கிறார்!!!

இன்னொரு ஆசிரியர் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே தன்னை வேஷமிட்டுக் கொண்டு வந்து பாட்டு வடிவில் மாணாக்கர்களுக்கு புரிய வைக்கிறார்.

இரவு வகுப்பும் தெருவிளக்கு வெளிச்சத்தில் எடுத்து குழந்தைகளிடம் கலைகளையும், கற்பனைத் திறமையும் வளர்க்கிறார்.

இப்படிப்பட்ட செய்யும் வேலையில் அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியர்களைப் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

விஜய் சேதுபதியும் எளிமையாக எல்லோருடனும் உரையாடினார். அவர் பேசியது அதிசயமாக புரிந்து கொள்ளவும் முடிந்தது :)

வரும் வாரம் முடிந்தால் நீங்களும் பாருங்களேன்.

இப்படியும் சிலர் -  22 January 2019

நேற்று தன்னுடைய வேலையை சேவையாக எண்ணி பணியாற்றும் இரண்டு ஆசிரியர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன்..இன்று அதற்கு நேரெதிர்.

காய்கறி வாங்க நேற்றுச் சென்ற போது இரண்டு ஆசிரியைகளும் நின்று வாங்கிக் கொண்டிருந்தனர். "அண்ணா! Five potatoes! குடுங்க!! Twelve tomatoes எடுத்திருக்கேன் என்று அளந்து கொண்டிருந்தனர்.

வெளிநாட்டவர்களோ என்று எண்ணி விட வேண்டாம்.. உள்ளூர் தான். சி.பி.எஸ்.இ பள்ளியில் பணியாற்றுகிறார்கள். அவ்வளவு தான்..:) அது போக எந்த ஊரில் காய்கறி கிலோகணக்கில் இல்லாமல் எண்ணிக்கையில் தருகிறார்கள்!!! எப்பவுமே மற்றவர்கள் முன்னிலையில் இதே மாதிரி தான்...:))

இரண்டு பேரில் ஒருவர் ஒரு கேரட்டை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதுவும் வழக்கமாக நடக்கும் வேலை தான்..:)

காய்கறிகளை வாங்கிக் கொண்ட பின் கடைக்காரரிடம் கேரிபேக் கேட்டனர். அவரும் அதையெல்லாம் தடை பண்ணிட்டாங்க. நானும் தரக்கூடாது!! நீங்களும் கேட்கக்கூடாது!! என்றார். மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கவே, உங்ககிட்ட பை இருந்தா எடுத்துக்கோங்க, இல்லன்னா விட்டுடுங்க! என்றார்.

இறுதியில் அவர்களின் மதிய உணவு கொண்டு போகும் பையில் வாங்கிக் கொண்டனர்.

ஆசிரியரானவர் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர். ஊரெல்லாம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு விட்டது என்று சொன்னாலும் இவர்கள் இங்கே பை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..:) யாராலும் இந்த மாதிரி மக்களை திருத்தவே முடியாது.

INDOOR HOME COMPOSTER – 23 JANUARY 2019



மாநகராட்சியிலிருந்து உரம் தயாரிக்க வலியுறுத்தியதும், குடியிருப்புக்காக நான் அதைப் பற்றி வாசித்தும், நேரில் பார்த்தும் சேகரித்த விஷயங்கள் ஏராளம்.. எந்த பட்ஜெட்டிலும் உரம் தயாரிக்கலாம்.

ஆனால் யாரும் அதை பொருட்படுத்தவில்லை... பள்ளிகளிலும் மாணாக்கர்கள் மூலம் பெற்றோரை வலியுறுத்தியும் வருகின்றனர். இதற்கென ஒரு அட்டை கொடுத்து உரமாக்குகிறோம் என்று மாநகராட்சியில் கையொப்பம் வாங்கி பள்ளியில் சமர்ப்பிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு என்று.

இதையெல்லாம் யோசித்து தனியாகவே செய்யலாம் என்று முடிவெடுத்து என்னவரிடம் சொன்னதும் அமேசானில் ஆர்டர் செய்து கொடுத்து இன்றும் வந்தும் விட்டது.

சமுதாயத்துக்கு நம்மால் ஆன நல்லதைச் செய்வோம்.

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவு உங்களுக்குத் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூடடத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் சிந்திப்போம்... சிந்திப்போம்....

நடிப்புடன்....

ஆதி வெங்கட்

38 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்க்ட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. சூப்பர் கதம்பம் ஆதி. ப்ளாஸ்டிக் ஒழிப்பு நல்லதுதான் என்றாலும் அதை விட அதை சரியான விதத்திலும் டிஸ்போஸ் செய்ய வேண்டும் என்பதை முதலில் கடைபிடிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. ப்ளாஸ்டிக் கவர் வேண்டுமானால் தடை விதிக்கப்படலாம் ஆனால் பால் கவர், ப்ளாஸ்டிக் டப்பாக்கள்...பாட்டில் மூடிகள், ப்ளாஸ்டிக் கன்டெய்னர்கள், பக்கெட், மக் என்று எல்லா இடத்திலும் நுழைந்திருக்கும் இவற்றை எப்படி எங்கு டிஸ்போஸ் செய்வது என்பது கேள்விக் குறிதான்.

    இப்போது கவர்கள் கொடுப்பதில்லை என்பது நல்ல விஷயம்...

    உரம் தயாரிக்க முயற்சிக்கு வாழ்த்துகள் ஆதி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவொரு நல்ல தொடக்கமாக இருக்கும் என நம்பிக்கை கொள்வோம்..... இன்னும் நிறைய மாற்றங்கள் தேவை - நம்மிடமும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. குட்மார்னிங். விஜய் சேதுபதி நிகழ்ச்சி பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தமிழகத்தில் இருந்ததால் இந்த வாரம் பார்த்தேன். ஓகே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. சன் டிவி யூ டியூபில் தரவேற்றம் செய்திருக்கிறார்கள் ஸ்ரீராம். விஜய் சேதுபதிக்கு இனிமையான் குணம்.

      நீக்கு
    3. யூவில் இருந்தால் பார்க்க வசதி. வேண்டும் போது பார்த்துக் கொள்ளலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  4. அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் - அசட்டையான அலட்டல் ஆசிரியர்கள்... எவ்வளவு வேறுபாடு!

    எல்லாத் துறைகளிலும் இதுபோன்ற ஆட்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி எல்லாத் துறைகளிலும்.... உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. வீட்டிலேயே உரமா? அது எப்படி வேலை செய்கிறது என்று சொல்லி இருக்கக் கூடாதோ? எப்படியும் நான் செய்ய மாட்டேன்! சும்மா தெரிந்து கொள்ளும் ஆர்வம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "எப்படியும் செய்ய மாட்டீர்களா? ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. ஆரம்ப காலங்களில் இம்மாதிரிப் பால்பண்ணைகள் அரசு நடத்துவதன் மூலம் பால் கொடுக்கையில் அரைலிட்டர், ஒரு லிட்டர் பாட்டில்களில் தான் கொடுத்தார்கள். சிவப்பு வண்ண மூடி போட்டிருந்தால் கொழுப்பு நிறைந்த பால், மூடியிலேயே வெண்ணெய் போல் க்ரீம் ஒட்டிக்கொண்டிருக்கும். அவசரம் அவசரமாக அதை முதலில் எடுத்து யார் சாப்பிடுவது என ஒரு போட்டியே எங்களுக்குள் நடக்கும். நீல நிற மூடி போட்டுக் கொழுப்புச் சத்தில்லாத பால்! அல்லது வெள்லை நிறமோ? நினைவில் இல்லை. பள்ளியில் படிக்கும்போது வர ஆரம்பித்தது. முதலில் இந்தப்பாலை வாங்கவே எல்லோரும் யோசித்தார்கள். ஒரே ஒரு பாட்டில் மட்டும் எங்க வீட்டில் வாங்குவார்கள். ஆனால் குடிக்க அது தடை செய்யப்பட்டிருந்தது. குடிக்கப் பால்காரர் கொடுக்கும் பால் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெய்வேலி நகரில் இருந்த போது பால் வாங்கி வந்தது உண்டு - பாத்திரத்தில் தான். பாட்டில்கள் கிடையாது. அம்மா சொல்லி கேள்விப்பட்டது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  7. இஃகி,இஃகி, ப்ளாஸ்டிக் பால்கவர் பத்தி எழுத ஆரம்பிச்சது எங்கேயோ போயிடுச்சு! ப்ளாஸ்டிக் தடை எனில் இனி பால் எதில் கொடுக்கப் போறாங்க! அதே போல் பல எண்ணெய்களும் ப்ளாஸ்டிக் கவர்களில் வருகின்றன. அவற்றை எல்லாம் எப்படி மாத்தப் போறாங்க? எங்க வீட்டைப் பொறுத்தவரை பால் பசும்பால் தான். பால்காரர் கொண்டு வருவது. எண்ணெய்களும்பாத்திரம் எடுத்துப் போய் வாங்குகிறோம். இதை எல்லாம் எப்படி மாத்தப் போறாங்க? என்ன திட்டமிட்டிருக்காங்க? இதை எல்லாம் முன் கூட்டியே செய்யாமல் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை எப்படி ஒழிக்கிறது? மேற்கு வங்கத்தில் ஹைகோர்ட் மாநில அரசுக்கு இம்மாதிரித் தடைகள் போடும் அதிகாரம் இல்லைனு தீர்ப்புச் சொல்லி இருக்கு. இங்கேயும் கோர்ட் வியாபாரிகளுக்குத் தொந்திரவு கொடுக்கும் வகையில் துன்புறுத்தக் கூடாதுனு சொல்லி இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிலும் நிறைய அரசியலும், ஊழலும் இருக்கிறது. நல்ல தொடக்கம் வேண்டும். அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  8. ஹிஹி, மறுபடி கதை எழுத ஆரம்பிச்சுட்டேன். ஆசிரியர்கள் பத்தியும், ப்ளாஸ்டிக் பயன்பாடு, உரம் தயாரிப்புப் பற்றியும் முகநூலிலும் படிச்சேன். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. விஜய் சேதுபதி நிகழ்ச்சி பற்றித் தெரியாது. அதோடு ஒன்பதரைக்கெல்லாம் முழிச்சுண்டு இருக்கவும் மாட்டேன். குஞ்சுலு தாமதமாய் வந்தால் தான் உட்கார்ந்திருப்பேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தில் இருந்ததால் இந்த வாரம் பார்த்தேன். :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  10. விஜய் சேதுபதி நிகழ்ச்சி நன்றாக உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. வீட்டில் உற்பத்தி செய்யும் உரங்களை என்செய்வது தோட்டமிருந்தால் சரி இல்லையென்றால் எப்படி விற்பனை செய்வது யார் வாங்குவது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விற்பனை செய்ய வேண்டும் என்பதில்லை. அருகில் உள்ள பூங்காவில் கொடுக்கலாம். சில ஊர்களில் நகராட்சி வாங்கிக் கொள்வது உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. விஜய் சேதுபதி நிகழ்ச்சி இரவு வைப்பதால் பார்க்கவில்லை. வாட்ஸப்பில் வந்தது பார்த்தேன் நல்ல நிகழச்சி.

    . தன் நகைகளை விற்று 1 இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து பிள்ளைகளுக்கு மேஜை, நாற்காலி வாங்கி போட்டு இருக்கிறார். பாராட்ட வேண்டும் ஆசிரியரை.
    வெளி நாட்டினர் பேசுவது போல் ஆங்கிலம் பேச வைத்து இருக்கிறார். கல்லூரிகளுக்கு போனால் அவர்கள் பயமில்லாமல் படிக்கலாம் என்றார். நன்றாக இருந்தது நிகழச்சி.
    ஊர் மக்கள் மிகவும் வாழ்த்தினர் ஆசிரியரை நாமும் வாழ்த்துவோம்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஆசிரியர்கள் அமைவது ஒரு வரம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  13. //சமுதாயத்துக்கு நம்மால் ஆன நல்லதைச் செய்வோம்.//

    பாராட்டுக்கள் ஆதி. நல்லதை செய்ய தொடங்கி விட்டீர்கள் உங்களைப்பார்த்து உங்கள் வளாகத்தில் உள்ளவர்களும் முன் வந்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  14. உண்மைதான், படிப்பிக்கும்போது மட்டும் நல்லது செய்தால் போதாது, முன் உதாரணமாகவும் இருந்து காட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு

  15. விஜய் சேதுபதி நிகழ்ச்சியை யூடியூப்பில் பார்த்தேன் பாராட்டப்பட வேண்டிய ஆசிரியர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  16. கதம்பம் அருமை. ப்ளாஸ்டிக் கவர் பைகள் இப்போது தமிழ்நாட்டில் இல்லை என்பது நல்ல விஷயம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

      நீக்கு
  17. நல்ல மனதுடைய ஆசிரியர்கள் மத்தியில், இப்படி கேவலமான ஆசிரியர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி.

      நீக்கு
  18. நாங்கள் சென்னையில் இருந்த காலனியில் எக்ஸ்னோரா உதவியோடு காலனி குப்பைகளை பிரித்து கம்போஸ்ட் உரம் செய்ய வேண்டும் என்று நானும் வேறு சில பெண்களும் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. நம் வீட்டில் தனியாக செய்ய வேண்டியதுதான். உங்கள் முயற்சி பலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நீங்களும் முயற்சி செய்தது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....