ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

வாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி ஐந்து



கரையோரக் கவிதைகள் நிழற்பட உலா வரிசையில் இது கடைசி பகுதி! நான் வாரணாசி சென்ற போது எடுத்த படங்களை, கடந்த ஐந்து வாரங்களாக உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. அடுத்த வாரம் வேறு ஒரு புகைப்படப் பகிர்வாக இருக்கும். இந்த வாரணாசி உலாவின் கடைசி பகுதியில் இன்னும் சில விஷயங்களைப் பார்க்கலாம்.
 
முக்தி ஸ்தலங்கள் என சிலவற்றை பெரியோர்கள் சொல்கிறார்கள். திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரம் நடராஜரை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலை அண்ணாமலையப்பரை நினைத்தாலே முக்தி என்ற வரிசையில் காசியில் மரணித்தால் முக்தி என்று சொல்வதுண்டு. பலர் தங்கள் வீட்டில் இருக்கும் முதியோர்களை அவர்களது அந்திமக் காலத்தில் இப்படி வாரணாசியில் கொண்டு வந்து விட்டுச் செல்வதுண்டு. காசியில் இப்படி பல சத்திரங்களில் இருக்கும் முதியோர்கள் எண்ணிக்கை நிறையவே. பக்கத்து ஊர்களில் இறந்தாலும் காசி நகருக்கு வந்து கங்கைக் கரையில் தான் அவர்களது உடலை தகனம் செய்வார்கள். முன்பெல்லாம் பாதி எரிந்தும் எரியாமலும் கங்கையில் இறந்தவர்களின் உடலை இழுத்து விட்டுவிடுவதுண்டு! அத்தனை நீண்ட வரிசை இங்கே!

இப்போதெல்லாம் அந்த மாதிரி செய்ய விடுவதில்லை. கொஞ்சம் சுத்தமாக பராமரிக்கிறார்கள். மணிகர்ணிகா Gகாட், ராஜா ஹரிஷ்சந்திர Gகாட் என பல Gகாட்களில் பராமரிப்பு முன்பு இருந்ததை விட இப்போது பரவாயில்லை எனத் தோன்றுகிறது. காசி பற்றி படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. காசியில் மரிப்பவருக்கு முக்தி; ஆனால், அது எல்லாருக்கும் கிடைத்து விடாது. காசியில் மரிக்க வேண்டிய புண்ணியம் உள்ளவர்களை அழைத்து வரவும், புண்ணியமில்லாதவர்களை வரவிடாமல் தடுத்தும், அப்படி, யாராவது தங்கியிருந்தாலும், அவர்களை வெளியூருக்குக் கிளப்பி விடவும் தனித்தனியாக பூத கணங்களை அங்கே பகவான் வைத்திருப்பாராம்.

புண்ணியமில்லாதவன், காசிக்குப் போகிறேன் என்று, எத்தனை தடவை புறப்பட்டாலும் போக முடியாது; அதே போல், புண்ணியமில்லாதவன் அங்கிருந்தாலும் கடைசி காலத்தில் அங்கே மரிக்க முடியாது. புண்ணியமுள்ளவன் அங்கே இருந்தால் அது பாக்கியம் அல்லது வேறு எங்கேயாவது இருந்தாலும் மரண காலத்தில் அவன் அங்கே வந்து சேர்ந்து விடுவான். இது ஈ, எறும்பு முதல் எல்லா ஜீவன்களுக்கும் பொருந்தும். காசியிலுள்ள அனைத்து ஜீவன்களுக்கும் முக்தி!

காசி செல்ல ஏற்பாடு செய்கிறாள் ஒரு பாட்டியம்மா. எத்தனையோ சாமான்களை சேகரம் செய்து வைத்துக் கொள்கிறாள். கூடவே, ஒரு டின் நிறைய முறுக்கு எடுத்துக் கொள்கிறாள். காசியில் போய் டின்னைத் திறந்து பார்க்கிறாள். அதற்குள்ளே கட்டெறும்பு ஒன்று முழிச்சு, முழிச்சு பார்க்கிறது. “அட, சீ… கட்டெறும்பு, வந்துடுத்தே!’ என்று சொல்லி, எறும்பை எடுத்து கீழே தரையில் போட்டு காலால் மர்த்தனம் செய்கிறாள். கட்டெறும்பு புண்ணியம் செய்திருந்தது. டிக்கட் கூட வாங்காமல், சாப்பாட்டு செலவும் இல்லாமல் காசியில் மரணம்; முக்தி! இது எல்லாருக்கும் கிடைத்துவிடாது. அங்கே யாராவது மரணமடைந்தால், அழமாட்டார்கள்; காசி விசுவநாதன் அழைத்துக் கொண்டு விட்டான் என்பார்கள்.

வாருங்கள் நண்பர்களே, வாரணாசி நகரில் கங்கை நதியில் படகுப் பயணத்தின் போது எடுத்த சில படங்கள் இந்த ஞாயிறில்!




































என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

54 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    காசியில் அந்திம காலத்தில் முதியோர்களைக் கொண்டு விட்டுவிடுவார்களா? இப்படியும் ஒரு நம்பிக்கை இல்லையா? அவர்கள் தனியாகவா இருப்பார்கள்?!! ம்ம்ம் புதிய தகவல் இது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதாஜி!

      பலப் பல நம்பிக்கைகள். சில கேள்விக்குரியவையாக.

      முதியோர்களை இப்படிக் கொண்டு விடுவது ஒரு சில இடங்களில் நடந்து கொண்டே தான் இருக்கிறது. தனி மனிதர்கள் திருந்தும் வரை இதை தடை செய்யவும் முடியாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  2. காசியில் மரணம் அடைவது புண்ணியம் என்று நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் விவரங்கள் அனைத்தும் இப்போதுதான் அறிகிறேன். எப்படி எல்லாம் நம்பிக்கைகள்!

    படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்தி ஸ்தலங்கள் என கேள்விப் பட்டிருக்கலாம் நீங்கள். நம்பிக்கை தானே வாழ்க்கை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
    2. @ கீதா Said..
      >>> காசியில் மரணம் அடைவது புண்ணியம் என்று நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் விவரங்கள் அனைத்தும் இப்போதுதான் அறிகிறேன்...<<<

      இதையெல்லாம் அறிந்ததில்லையா... ஆச்சர்யம்!...


      நீக்கு
    3. ஆமாம் எனக்கும் ஆச்சர்யம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. அங்கே குட்டிச் செல்லங்கள் அழகாக இருக்கு....அவை புண்ணியம் செய்தவையோ!

    அந்த ஆஞ்சு ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறார். கையை அகலமாக விரித்துக் கொண்டு ஏதோ டான்ஸ் ஆடுவது போல!

    அந்த விபூடி அப்பிக் கொண்டு இருப்பவர்கள் அகோரிகள் என்று சொல்லப்படுபவர்கள்தானா ஜி. இப்படி உள்ள எல்லாருமே பொதுவாக அகோரிகள் என்றால் சொல்லப்படுவது போலத்தானா அதாவது அவர்கள் உணவு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டிச் செல்லங்கள் எல்லாமே புண்ணியம் செய்தவை - மனிதர்களைப் போல உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் குணம் இல்லாதவை!

      அந்தக் கட்டிடத்தை தாங்கிப் பிடிப்பது போன்ற போஸ்!

      அகோரிகள் - பொதுவாக அகோரிகள் இந்த மாதிரி வெளியே இருப்பதில்லை. வனங்களுக்குள் தான் இருப்பார்கள். இங்கே இருக்கும் அகோரிகள் போன்றவர்களின் உணவு நம்மைப் போலத்தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  4. அந்தப் பெரிய படகும் கடைசியில் வரும் வித்தியாசமான படகுகளும் மிக அழகாக இருக்கின்றன ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படகுகள், படகுகள் எங்கெங்கும் படகுகள்.... வாரணாசி, ப்ரயாக்ராஜ் என இரு ஊர்களிலும் இப்படி படகுகள் தான். மிகப் பெரிய வியாபாரம் படகோட்டுவது! அதற்கு பல ஏஜெண்டுகள்... படகோட்டிகளை விட அவர்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  5. இனிய தரிசனம்.. புண்ணிய காசி தரிசனம்..

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நமச் சிவாய.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. குட்மார்னிங்.

    வாரணாசி என்று முன்னர் படித்தபோது வராத ஒரு சொந்தம், அறிமுக உணர்வு இம்முறை மனதில் தோன்றுகிறது! நானும் கூட சுற்றுலா சென்று வந்துவிட்டேன்... ஹோ... ஹோ...ஹோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      ஹாஹா... நீங்கள் சமீபத்தில் சென்று வந்த இடம் என்பதால் ஒரு சொந்த உணர்வு! இருக்கத்தான் செய்யும்.

      நீங்களும் சுற்றுலா சென்று வந்து விட்டீர்கள்! ஹாஹாஹா.... பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. காசியில் மரணிப்பவர்கள் பற்றிய செய்திகளை எங்களுக்கு எங்கள் கைட் சொன்னார். நானும் சில உடல்களை பார்த்தேன். அவற்றைப் பார்ப்பது மற்ற ஊர்களில் தீட்டாகக் கருதப்படும். ஆனால் இங்கு புண்ணியம் என்றார். ஆம், சுத்தமாகத்தான் பராமரிக்கிறார்கள். நான் பயந்த மாதிரி இல்லை. ஹரிச்சந்திரா காட்டா, ஹரிஷ்சந்திரா காட்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தச் சுத்தம் எல்லாம் சமீபத்திய விஷயம். முன்பு பார்த்ததற்கும் இப்போது பார்த்ததற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இன்னும் நிறைய மாற வேண்டும் - மக்களும் மாற வேண்டும்!

      ஹிந்தியில் என்றால் ஹரிஷ்சந்திர காட்! நம் ஊர்க்காரர்கள் சொல்வது ஹரிச்சந்திர காட்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. படங்களை பார்த்தபோது மறுபடி அங்கே இருக்கும் உணர்வு. நாங்கள் படகில் செல்லும் நேரம் அலைபேசியை கொண்டு போகாமல் போன தருணமாய் அமைந்து விட்டதில் புகைப்படங்கள் நிறைய எடுக்க முடியவில்லை. மேலும் நான் எடுத்தது மற்ற புகைப்படங்களும் அலைபேசிப் புகைப்படங்கள்தான் கேமிரா இல்லை என்பதால் பெரிய அளவில் இருக்காது என்றும் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். மிகச் சமீபத்தில் சென்று வந்ததால், படங்களைப் பார்க்கும்போது அங்கே மீண்டும் சென்ற உணர்வு வரும்.

      அலைபேசியில் எடுக்கும் படங்கள் அவ்வளவு நன்றாக இருப்பதில்லை. ஒன் ப்ளஸ், ஓப்போ போன்ற அலைபேசிகளின் காமிரா கொஞ்சம் பரவாயில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. காய்ந்து கொண்டிருக்கும் புடைவையில் சயனித்திருக்கும் குட்டிச் செல்லம் கண்ணையும் மனதையும் கவர்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூரத்தில் இருந்து எடுத்த படம் என்பதால் எனக்கு அவ்வளவு திருப்தி தரவில்லை. ஆனாலும் பகிர்ந்து கொண்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. நாங்க போன சமயம் இம்மாதிரி அகோரிகளையோ விபூதி பூசிக் கொண்ட சாமியார்களையோ பார்க்க நேரவில்லை.இந்த இரட்டை மாடிப் படகு போலவும் பார்க்கலை. இப்போ இருக்கும் நிலையில் போனால் படகில் உட்கார முடியுமா என்று கவலையும் இருக்கிறது. அதே போல் ஹரிஷ்சந்திர காட்டும் நாங்க எதிர்பார்த்த மாதிரி எல்லாம் இல்லை. யாரும் பிணங்களைப் பாதி எரியும்போதே தள்ளி விட்டுப் பார்க்கலை. எங்க நேரமோ என்னமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விபூதி பூசிக் கொண்ட சாமியார்கள், அகோரிகள் பொதுவாக எல்லா நாட்களிலும் இருப்பதில்லை. நாங்கள் சென்ற சமயம் கும்ப மேளா சமயம் என்பதால் வாரணாசியிலும், ப்ரயாக்ராஜிலும் சில அகோரிகளையும் பார்க்க முடிந்தது - சில முற்றும் துறந்தவர்களையும்!

      பாதி எரியும் போது தள்ளி விடுவது என்பது ஒரே சமயத்தில் நிறைய பூத உடல்கள் வரும் சமயத்தில் நடந்தது முன்பு. ஆனால் இப்போது அப்படி இல்லை. காத்திருந்து தான் ஆக வேண்டும். வசதிகளும் நிறைய வந்திருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  11. குட்டிச் செல்லங்கள் அழகோ அழகு. தி/கீதாவுக்குக் காசி பற்றிய செய்தி தெரியாது என்பது வியப்புக்கு உரியது. அடுத்து ஸ்ரீராம் தன்னோட நினைவுகளைப் பகிர்வார் என எதிர்பார்க்கலாம். இன்னிக்கு என்னமோ உங்க பதிவிலே கருத்துச் சொன்னவுடனேயே தாமதம் இல்லாமல் பக்கம் சரியாக வருகிறது. எப்போவும் காத்திருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டிச் செல்லங்கள் - அழகு. நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி.

      ஸ்ரீராம் அனுபவங்களைப் பதிவிட நானும் காத்திருக்கிறேன்.

      பக்கம் திறப்பதில் பிரச்சனையா? அப்படித் தெரியவில்லையே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.

      நீக்கு
  13. முன்பெல்லாம் பாதி எரிந்தும் எரியாமலும் கங்கையில் இறந்தவர்களின் உடலை இழுத்து விட்டுவிடுவதுண்டு! அத்தனை நீண்ட வரிசை இங்கே!//

    அந்தக் காலத்தில் விறகு தட்டுபாடு, குளிரால் விறகு எரிய நேரம் ஆகும், காத்து இருக்கும் மக்களை நினைத்து தள்ளி விடுவார்கள். அப்போது பணமும் மக்களிடம் தட்டுபாடு.
    இப்போது எல்லோர் கையிலும் காசு இருக்கிறது, விறகும் கிடைக்கிறது. காசியில் மக்கள் கூட்டமும் வெப்பம் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.

    ஹரிசந்திரா கதையில் சொல்வார்கள், காசு இல்லாமல் சந்திரமதி தன் மகனை எரிக்க முடியாமல் கஷ்டபட்ட கதையை. தன் மகன் என்று தெரியாமல் ஹரிசந்திரன் (வெட்டியான்) காசு கேட்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது எல்லோர் கையிலும் காசு - உண்மை. நிறைய இடங்களில் இப்படி பார்த்திருக்கிறேன்.

      ஹரிச்சந்திரா கதையை நினைவு கூர்ந்தது சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. படங்கள் எல்லாம் அழகு.
    காயவைத்து இருக்கும் புடவையில் செல்லம் , மச்சக்கன்னி படகு எல்லாம் கவர்கிறது.
    ஆனந்த மடம் என்ற படத்தில் இப்படி வயதானவர்கள் இறப்புக்கு காத்து இருப்பதை சொல்வார்கள்.

    தாங்களே விரும்பி இருப்போரும், வீட்டினர் கொண்டு வந்து விட்டவர்களும், யாருமே இல்லதவர்களும் இருப்பார்கள்.

    பாட்டியம்மா கதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனந்த மடம் போன்று இங்கே நிறைய இடங்கள் உண்டு. இறப்பதற்காகக் காத்திருப்பது பெரும் கொடுமை. என்றைக்கு முடியும் இவ்வாழ்க்கை என்ற கணக்கு தெரிந்து விட்டால், இப்போதை விட இன்னமும் அதிகமாக ஆசைப்படும் மனித மனது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதியம்மா...

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    படங்கள் அத்தனையும் மிக அழகு. காசி தரிசனம் விழிகளால் கண்டு கொண்டேன். படகு படங்கள், ஆஞ்சநேயரின் வீர மிகும் படம், செல்லங்கள் நிம்மதியாக உறங்கும் படம் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது. தங்கள் பதிவின் புண்ணியத்தில் நானும் காசியை தரிசனம் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  17. அழகான படங்கள். அறிய விவரங்கள். காசியை பற்றி சில தெரியாத விஷயங்களை தந்த உங்களுக்கு நன்றி. எறும்புக்கு கிடைத்த புண்ணியம் குறித்து வியப்படைந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  18. எறும்பின் நிகழ்வு சிந்திக்க வைத்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  19. சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின் அற்புத உரையை தேடினேன்... கிடைத்தவுடன் தருகின்றேன்...

    பாழாப் போன சாதியோ அல்லது உலகை கெடுக்கும மதமோ அல்லாதவர்கள் - சாதாரண மக்கள் எல்லாம் மக்களே இல்லையா...? அவர்களின் சாவு அற்பமானதா...? அவர்களின் உடம்பில் ஓடும் ரத்தம் மட்டும் வேறா...? புண்ணியம் என்பதே தெரியாத அவர்களின் பலவற்றை அனுபவிப்பவர்களின் புண்ணியம் மேலானதா...?

    இன்னும் நிறைய உள்ளன... சிந்தித்தால் விடை கிடைக்கலாம்... பதிவும் வரலாம்... ஆனால் தங்களிடமிருந்து மட்டுமல்ல... யாரிடமும் இருந்து வராது...

    நன்றி "ஜி"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  20. செமையான உள்ளீடு...
    படங்கள் அருமை
    பயணங்கள் தொடரட்டும் சித்தரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  22. பொதுவாக நான் எடுக்கும் படங்கள் வெகு சுமார் ரகம்தான் இருந்தாலும் நமக்கு வேண்டியவர்களையும் சேர்த்துதான் படமெடுப்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  23. காசியில் மரணித்தால் முக்தி என்ற நம்பிக்கையில் வயதானவர்களை கொண்டு போய் பணம் கட்டி அங்கிருக்கும் விடுதிகளில் விட்டுட்டு வந்திடுறாங்கன்னு அம்மா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

    காசியின் இன்னொரு பக்கத்தின் படங்கள் சிலவற்றை பார்த்ததிலிருந்து அங்கு செல்லும் ஆசையே எழும்பலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  24. படகு பயணத்தில் ஒரு கங்கையில் ஒரு பிணங் கூட மிதக்க வில்லையா, அட கங்கை சுத்தமாகி விட்டதோ? அல்ல மனிதர்கள் மாறி விட்டார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வெற்றிவேல்.

      நீக்கு
  25. கரையோரக் கவிதைகள் தொடர் தொகுப்பு தகவல்களுடன் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  26. படங்கள் அருமை. புண்ணியம் இருந்தால் எங்கள் பயணமும் சாத்தியப்பட இறைவன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....