செவ்வாய், 21 மே, 2019

கதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு


விதம் விதமாய் உணவு – 7 May 2019


பனீர் குல்ச்சா...






சமோசா....


பாதாம் மில்க்... 

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். காலை நேரத்தில் இவ்வளவு ஹெவியா சாப்பிட முடியாது! நாங்கள் மாலை நேரத்தில் சாப்பிட்ட சில சிற்றுண்டிகள் இவை! எஞ்சாய்!

National war memorial - 5 May 2019



நேற்று மாலை India gate அருகே புதிதாக திறந்திருக்கும் War memorial சென்றோம். 40 ஏக்கர் பரப்பளவில் போர்களில் உயிர் துறந்த 30,000 வீரர்களுக்கு மரியாதை செல்லும் வண்ணம் ஃபிப்ரவரி 20 ந்தேதி பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

சக்கரவியூகம் போன்ற அமைப்பில் பரம்வீர் சக்ரா வாங்கிய வீரர்களின் வெண்கலச் சிலைகளும், பலவித போர்களில் உயிர்துறந்த வீரர்களின் பெயர்கள் அவர்களின் எண் மற்றும் ஆண்டு, அவர்களின் ஊரோடு பொறிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஒரு ஸ்தூபியும், அமர் ஜோதியும் உள்ளது. வீரர்கள் இங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றார்கள். இங்கு ஒரு Touchscreen வைக்கப்பட்டுள்ளது. அதில் நாம் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

இந்தியா கேட்டிலும் நிறைய படங்கள் எடுத்துக் கொண்டோம். அவை தனிப்பதிவாக விரைவில்…

India gate – பேல் பூரி – லிட்டி சோக்கா - ஐஸ்க்ரீம் – 6 May 2019





சனியன்று மாலை War memorial க்கு சென்றதை பகிர்ந்து கொண்டேன் அல்லவா!! அது இந்தியா கேட்டின் அருகே தான் உள்ளது. அங்கே மாலை விளக்கொளியில் மூவண்ணத்தில் ஜொலித்த இந்தியா கேட்டின் அழகைப் பாருங்களேன்.


லிட்டி சோக்கா...

அங்கே சுவைத்த பேல்பூரி மிகவும் சுவையாக இருந்தது. பீகாரின் உணவான Litti chokha வும் வாங்கி சுவைத்தோம். அது ஏனோ எனக்கு பிடிக்கலை. அடுப்பு கரியின் மேல் பந்தாக உருட்டிய மாவை வைத்து வாட்டுகிறார்கள். அடுப்பிலிருந்து எடுத்து நெய்யில் முக்கித் தருகிறார்கள். தொட்டுக்கையாக உருளையில் ஒரு சப்ஜியும், அதன் மேல் விதவிதமான சட்னிகளும். அடுப்புத் தணலின் வாடை தூக்கலாக இருப்பதாலோ என்னவோ எனக்கு பிடிக்கலை :) அப்பாவும், மகளும் சாப்பிட்டார்கள் :)

அப்புறம் Kwality walls ன் Uni cornetto வும் சுவைத்துக் கொண்டே ராஷ்ட்ரபதி பவன் வரை சென்று திரும்பினோம். அன்றைய மாலைப் பொழுது இனியதாக இருந்தது.

ஸ்வெட்டரின் கதை – 3 May 2019



ஏறக்குறைய பதினாறு வருடங்களுக்கு முன் நான் பின்னிய ஸ்வெட்டர் இது. அப்போது எனக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் இருக்கும். நான் தில்லியில் தான் இருந்தேன் அது ஒரு குளிர்காலம். .இங்குள்ள என் தோழி (தற்போது மும்பையில் இருக்கிறார்) ஒருவர், ஒருநாள் தன் பக்கத்து வீட்டு ஆண்ட்டியிடம் ஸ்வெட்டர் பின்னக் கற்றுக் கொள்ளப் போவதாகவும், நீயும் வந்தால் இருவரும் கற்றுக் கொள்ளலாம் என்றும் சொன்னார்.

மறுநாளே என்னவர் அலுவலகம் சென்றதும் வேலைகளை முடித்துக் கொண்டு தோழியைப் பார்க்கச் சென்றேன். தோழிக்கு அப்போது தான் முதல் குழந்தை பிறந்து ஒரு வருடம் இருக்கும். அந்த ஹிந்தி ஆண்ட்டி வகுப்பை துவக்கினார். என்னிடம் வுல்லன் கூட இல்லை :)

தோழி தனக்காக வாங்கி வைத்திருந்த வுல்லனில் ஆரம்பித்தார். நாலு பின்னலை போடுவதற்குள் குழந்தை அழத் துவங்கியது :) அவ்வளவு தான் கையில் வைத்திருந்த வுல்லனை என்னிடம் கொடுத்து விட்டுச் சென்றார் :) நான் தான் அதில் பின்னினேன் :)

நீங்க நாளை வுல்லன் வாங்கிக் கொண்டு வாங்க. ஆரம்பித்து தரேன். கணவருக்காக பின்னிக் குடுங்க என்றார் ஆண்ட்டி் :) என்னவரோ, எனக்கு வேண்டாம்! உனக்கு வேணா போட்டுக்கோ!! என்று சொல்ல Vardhaman ல் மெரூன் நிற வுல்லனும், பின்ன Needleம் வாங்கிக் கொண்டேன் :)

ஒவ்வொரு பகுதி ஆரம்பிக்கும் போதும் ஆண்ட்டியிடம் கேட்டுக் கொள்வேன். மற்றபடி வீட்டிலேயே ஒரு மாதம் போல பின்னினேன் :) இறுதியாக ஆண்ட்டியிடம் கொடுத்து முடித்து வாங்கினேன். பட்டன்களும் வைத்து தைத்தேன். என் கையால் பின்னிய கைகளில்லாத Half sweater தயார் :)

ஆண்ட்டி என்னிடம் எந்த கட்டணமும் வாங்கவில்லை. தென்னிந்திய உணவுகளின் ரெசிபிக்களை தான் கேட்டுத் தெரிந்து கொள்வார். நானும் எனக்கு தெரிந்த ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் சொல்லி புரியவைப்பேன் :))

என்னை ஸ்வெட்டர் பின்னக் கற்றுக் கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்த தோழியால் அதன் பின்பு கற்றுக் கொள்ளவே முடியவில்லை :)

இந்த ஸ்வெட்டருக்கு பின்பு குழந்தைக்காக ஒரு ஸ்வெட்டரும், மஃப்ளரும் பின்னி பாதியிலேயே நிற்கிறது :)

நானும் இந்த ஸ்வெட்டரை இத்தனை வருடங்களாக பத்திரமாக வைத்திருக்கிறேன். இப்போதும் சரியாக இருக்கிறது. ஊருக்கு எடுத்துச் செல்ல துவைத்து பெட்டிக்குள் வைத்துள்ளேன் :) ஸ்வெட்டருடனான என் நினைவுகளும் பத்திரமாய் மனதுக்குள் :)

Ice cream soda - 9 May 2019


ஐஸ்க்ரீம் சோடா...

முதல்முறையாக கேள்விப்பட்டதும், சுவைத்ததும் :) முக்கால் அடிக்கும் குறையாத டம்ளரில் சோடாவுடன் ஐஸ்க்ரீம் சேர்த்து பரிமாறப்பட்டது :) ஒரு டம்ளர் 120 ரூ!! வேண்டுமானால் சேர்த்துக் கொள்ள தனியே சோடாவும் தரப்பட்டது :)

ஊருக்குச் சென்ற பின் இதை பன்னீர் சோடாவுடன் முயற்சித்துப் பார்க்க குறித்துக் கொண்டேன்.

தற்சமயம் வாசிப்பில்!! எப்போதும் பெண் – 9 May 2019



ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒவ்வொரு வித உணர்வுகள்.

சில வருடங்களுக்கு முன் என் வலைப்பூவில் எழுதிய வாசிப்பனுபவத்தின் இணைப்பு

Birla mandir! (Lakshmi Narayan Temple) – 10 May 2019


பிர்லா மந்திர்...

நேற்று இரவு எங்கள் குடியிருப்புக்கு பின்புறச் சாலையில் இருக்கும் புகழ்பெற்ற பிர்லா மந்திர் வரை அப்படியே நடந்து சென்றோம். செல்ஃபோன் போன்ற எதற்கும் அனுமதியில்லை. நம்முடைய பொருட்களை வாங்கி லாக்கரில் வைத்து பூட்டி சாவியையும் நம்மிடம் கொடுத்து விடுவார்கள்.

அதே போல் டெல்லியில் எல்லா இடங்களையும் போல் இங்கும் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள். உள்ளே சென்று தரிசித்து விட்டு வெளியே வந்து சிறிது நேரம் அமர்ந்து புகைப்படம் எடுத்தேன்.


அங்கே வாசலில் தண்ணீருக்காக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. dr.water. உங்கள் பாட்டிலை வைத்து 5ரூ போட்டால் தண்ணீர் கிடைக்கும்.

அப்படியே நடந்து வரும் வழியில் ஆளுக்கொரு ஐஸ்க்ரீமை வாங்கி ருசித்து அதைப் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு வீடு திரும்பினோம்.

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம்/தில்லி டைரி பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

32 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    சற்றே நீளமான பதிவோ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே நீளமான பதிவு - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சமோசா வேண்டாம். பனீர் குல்ச்சா போதும்!!!!

    இந்தியா கேட் பார்த்ததும் ரங் தே பசந்தி படப்பாடால் நினைவுக்கு வருகிறது... "டு த மஹால் ஆப் த தாஜ்...."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனீர் குல்ச்சா மட்டும் போதுமா... ஓகே! டன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஸ்வெட்டர் பின்ன ஆரம்பமும் முடிவும் .பின்னர் கற்றுக்கொண்டு விட்டீர்களா?

    சிலவற்றை பேஸ்புக்கிலும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் வெளியிட்ட பிறகு தானே இங்கே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  5. திருமணமான புதிதில் டில்லிவாசிகள் ஸ்வெட்டர் பின்ன கற்றுக்கொள்வது என்பது வீட்டுக்கு வீடு வாசப்படி கதைதான், அதன் பிறகு ஸ்வெட்டர் பின்னுகின்ற ஆர்வமே இருப்பதில்லை. வெங்கட் சாரின் அம்மையாரும் அவ்வாறே என்று தோன்றுகிறது.எப்படியோ ஒரு கலையை கற்றமைக்கு வாழ்த்துக்கள். ரங்கராஜன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன்....

      நீக்கு
  6. புகைப்படங்கள் எடுத்தது நீங்களா உங்கள் கணவரா? யாராக இருந்தாலும் பிடியுங்கள் பாராட்டுகளை, படங்கள் துல்லியம்.
    ஐஸ்கிரீம் சோடா இங்கும் கிடைக்கிறது. இதுவரை முயற்சித்ததில்லை. உங்கள் பதிவை படித்த பிறகு முயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில படங்கள் இணையத்திலிருந்து. சில நாங்கள் எடுத்தவை.

      ஐஸ்க்ரீம் சோடா சுவைத்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மா...

      நீக்கு
  7. வாவ் ஆதி ஆரம்பமே பனீர் குல்சா...சூப்பர்11

    சமோசா நன்றாக இருக்கிறது. இந்த சமோசாவும் பிடிக்கும் என்றாலும் இதைவிட ஆனியன் சமோசா க்ரிஸ்பியா இருக்கற சமோதா ரொம்பப் பிடிக்கும். குட்டி சமோசா என்றும் சின்ன சின்னதா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே பல விதங்களில் சமோசா கிடைக்கிறது. மினி சமோசாவுக்கென்றே கனாட் ப்ளேஸ் பகுதியில் ஒரு நடைபாதைக் கடை மிகவும் பிரபலம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  8. ஐஸ்க்ரீம் சோடா கிடைக்கிறது இங்கும்.

    ஸ்வெட்டர் சூப்பரா இருக்கு. முடிவுகத்துக்கிட்டீங்களா ஆதி?

    வெங்கட்ஜி கூட பதிவில் இந்த லிட்டில் சோக்கா பற்றி சொல்லியிருந்தார். பிஹார் டிஷ். வீட்டில் செய்வது நான் க்ரில் மோடில் ஓவனில் வைத்துச் செய்வேன் ஆதி அது நன்றாக வருகிறது.

    இன்றைய உணவு வகைகள் அனைத்தும் சுவை....

    சுவைத்தாயிற்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவுகள் அனைத்தும் சுவைத்ததில் மகிழ்ச்சி.

      லிட்டி சோக்கா இங்கே இப்போது நிறைய கிடைக்கிறது - பீஹார் மாநிலத்தவர்கள் இங்கேயும் நிறையவும் இருக்கிறார்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  9. இங்கு கேன் வாட்டர்தான் பயன்படுத்துகிறோம். இங்கு பல ஏரியாக்களில் தண்ணீர் சுத்தப்படுத்திக் கொடுக்கிறார்கள். அது பொதுவாக இளைஞர்கள் செய்கிறார்கள். எங்கள் வீட்டருகில் 4 வீடு தள்ளி இருக்கிறது குறிப்பிட்ட நேரத்தில் திறப்பார்கள் காலை மாலை என்று. 20 லிட்டர் பபிள் டாப் கேன் 10 ரூ தான். ரீஃபில் பண்ணி எடுத்துக் கொண்டு வருவோம். சில இடங்களில் 5 ரூபாய்தான் 20 லிட்டருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது பல ஊர்களில் குடிப்பதற்கு கேன் வாட்டர் தான்! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  10. படங்கள் அத்தனையும் சூப்பர்! ரொம்ப அழகா எடுத்துருக்கீங்க ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றிரண்டு படங்கள் இணையத்திலிருந்து... மற்றவை நாங்கள் மூவரும் எடுத்த படங்களிலிருந்து!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  11. படங்கள், பதிவை பேஸ்புக்கில் படித்து ரசித்தேன், மீண்டும் இங்கும் படித்தேன்.
    அங்கு குளிர்காலத்தில் எல்லோரும் வெயிலில் உட்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிக் கொண்டே இருப்பாட்களே!
    நான் என் அக்கா மகனுக்கு சின்ன ஸ்வெட்டர், குல்லா, சாக்ஸ் எல்லாம் பின்னினேன் என் அம்மாவிடம் கற்றுக் கொண்டு.
    உல்லன் ஸ்கார்ப் பின்னினேன் என் ஓர்ப்படியிடம் கற்றுக் கொண்டு.
    நினைவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது ஸ்வெட்டர் பின்னும் பெண்மணிகள் குறைந்து விட்டார்கள். எல்லாம் கடையில் வாங்கிக்கலாம் என்று சொல்பவர்கள் தான் அதிகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. குளிர்ச்சியுடன் அனைத்து இடங்களையும், நாங்களும் சுற்றி வந்தோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. ஸ்வெட்டர் பின்னுவது ஒஒரு வித பலனளிக்கும் ஹாபி கைபாட்டுக்கு வேலை செய்ய மனம் எதையும் நினைக்கலாம்சிலர் பின்னுவதைக் காணும்போது ஆச்சரியமாய் இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. அழகான புகைப்படங்கள்.

    இரவில் ஜொலிக்கும் இந்திய கேட் அழகுதான். ஆனால் அதன் இயற்கை அழகு இதைவிட அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  15. அருமையான பதிவு. டெல்லியில் நீண்ட காலம் இருந்தபோதிலும் லிட்டி சோக்கா சாப்பிட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  16. ராஜஸ்தானின் தால் பாட்டி மாதிரியோ பிஹாரின் லிட்டி சோக்கா? பிஹார் உணவு சாப்பிட்டதில்லை. ஐஸ்க்ரீம் சோடாவெல்லாம் சாப்பிட ஆசை தான்! ஒத்துக்குமானு பயம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டும் சற்றேறக்குறைய ஒரே சுவை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....