ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

ஹிமாச்சலப் பிரதேசம் – முகங்கள் – நிழற்பட உலா


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு வாசகத்துடன் துவங்கலாம்…

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டியிருக்கிறது - யாரோ
 
முகங்கள் – பயணங்களில் எப்போதுமே பூக்களையும், இயற்கையையும் படம் பிடிப்பது போலவே சிலரின் முகங்களையும் படம் பிடிக்க எனக்கு ஆவல் உண்டு. குறிப்பாக குழந்தைகளையும் முதியவர்களையும். அவர்களிடம் பேசுவதும் எனக்கு வழக்கம்.  பயணத்தில் இப்படி தெரியாதவர்களுடன் பேசும்போது பல புதிய விஷயங்களையும், பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் பெரும்பாலும் நான் எடுப்பது ஆண்களின் நிழற்படங்களாகத் தான் இருக்கும்! பெண்களின் படங்களை எடுப்பதில்லை – பிரச்சனைகளைத் தவிர்க்க! அவர்களாகவே எடுத்துக் கொடுங்கள் என்று கேட்காத வரை படம் எடுப்பதில்லை – சிலர் எடுத்துக் காண்பிக்கச் சொல்வதுண்டு! அப்போது எடுத்திருக்கிறேன். குழந்தைகளின் படங்களும் அப்படித்தான். குழந்தைகளின் படங்கள் எடுக்கும்போது கூட சில சமயங்களில் ”ஏன் எடுத்தீர்கள்?” என்ற கேள்வியுடன் சிடுசிடுப்பவர்கள் உண்டு!

சமீபத்தில் ஹிமாச்சலப் பிரதேசம் சென்ற போதும் இப்படி சில முதியவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர்களிடம் அனுமதி பெற்று நிழற்படமும் எடுத்துக் கொண்டேன். அப்படி எடுத்த படங்கள் இப்பதிவில்.  பேசிய விஷயங்களும் கடைசி கிராமம் தொடரில் எழுதலாம்! இன்றைக்கு இந்தப் படங்களைப் பாருங்கள்.


படம்-1: இப்பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தது ஒரு கோவிலில்... காலை நேரத்தில் கோவில் பணி இவருக்கானது!


படம்-2: இங்கே போலீஸ் ஸ்டேஷன்லாம் கிடையாது... தப்பு பண்ணா, நாலு தட்டு தட்டி, மலையிலிருந்து நதியில் உருட்டிவிட வேண்டியது தான்! 


படம்-3: தில்லிக்காரங்க எல்லாம் திருட்டுப் பசங்க! அது சரி நீங்க எங்கே இருந்து வரீங்க? கேள்வியை முதலில் கேட்டு இருக்கணுமோ?


படம்-4: ஹிஹி... என்னையா படம் பிடிக்கணும்னு சொன்னீங்க? 


படம்-5: முதுகுச் சுமையோடு ஒரு மூதாட்டி... சாலையில் நடந்து சென்றவரை முதல் மாடியிலிருந்து எடுத்த படம்... அத்தனை திருப்தி இல்லை இப்படம் எடுத்ததில்... ஆனாலும் இங்கே சேர்த்தது ஒரு காரணத்திற்காக...


படம்-6: முதல் மாடி ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்த ஒரு சுட்டிக் குழந்தை...

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறொரு பதிவில் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி

14 கருத்துகள்:

  1. //படம்-5: முதுகுச் சுமையோடு ஒரு மூதாட்டி... சாலையில் நடந்து சென்றவரை முதல் மாடியிலிருந்து எடுத்த படம்... அத்தனை திருப்தி இல்லை//

    உங்களது ரசனை எனக்கு பிடிக்கிறது உண்மைதான் இப்படம் முழுமையாக வரவில்லை காரணம் பின்புறமுள்ள கூடையோ, பக்கெட்டோ பகுதி கட்டாகியது போல் இருக்கிறது.

    நடந்து செல்பவரை அதுவும் தெரியாத இடத்தில் அனுமதி பெறாமல் எடுக்கும் படம் மேலும் மூதாட்டியாயினும் பெண். இதைக்காணும் பிறர்கூட பிரச்சனை செய்யலாம் என்ற குழப்பமான சூழலில் சரியாக எடுப்பது கஷ்டமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே தயக்கத்துடன் தான் எடுத்தேன் கில்லர்ஜி. இந்த வயதிலும் ஆப்பிள் தோட்ட வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார் இந்த மூதாட்டி என்பதை தங்குமொட ஊழியரிடமிருந்து அறிந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட்.

    படங்கள் அருமை. அந்தப் பெரியவர்களின் சிரித்த முகமும் வயதான தோற்றமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம்.வெங்கட்.
      படங்கள் உயிரோட்டத்துடன் இருக்கின்றன.

      அந்த மூதாட்டியின் முகத்தில் பாரத்தை விட மேலும் சோகம் தெரிகிறது.
      என்ன கவலையோ.

      முதியவர் சிரிப்பு கொள்ளை அழகு.
      மலை
      யிலிருந்து உருட்டி விடுவார்களா.
      அப்பா சாமி.....
      குட்டிக் குழந்தை எவ்வளவு இன்னொசெண்ட்/.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். படங்கள் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் வல்லிம்மா.

      மூதாட்டியின் முகத்தில் சோகம். கவலைகள்.... இல்லாத மனிதர்கள் எங்கே...

      மலையிலிருந்து உருட்டி விடுவோம் என்று சொன்னது பற்றி பிறகு சொல்கிறேன் மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. முதுமை முகங்கள் அழகு.
    அதிலும் நெற்றியில் உள்ள கோடுகள் ஒரே மாதிரி இருக்கிறது.
    குழந்தைக்கும் ஒரு நாள் முதுமை பருவம் வரும்.
    மகிழ்ச்சியாக இல்லையே குழ்ந்தை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகங்கள் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      குழந்தை மகிழ்ச்சியாகவே இருந்தது. படம் எடுத்த போது பாவம் முகம் மாறிவிட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் நன்றாக உள்ளது.

    முகம் தெரியாத "யாரோ" ஒருவர் கூறியிருப்பினும், முகமுடிகள் கழன்று விழாத வரை உண்மை முகம் நமக்கு புலப்படுபவதில்லை என்ற அவரின் உண்மை வாசகம் ரசிக்க வைத்தது.

    முதுமை முகங்கள் படங்கள் அனைவரும் சற்றேறக்குறைய ஒரே மாதிரி உள்ளனர். அருமை. ரசித்தேன்.

    இவ்வளவு முதுமையிலும், சுமை தூக்கி வேலை செய்யும் அந்த மூதாட்டி பாவமாக இருக்கிறார்..
    குழந்தை படம் மிகவும் அழகாக உள்ளது.
    அழகான படங்களின் பகிர்வுக்கு நன்றிகள்.
    முதியவர்களிடம் பேசிய பேச்சுக்களை பற்றி அடுத்த பதிவில் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. முதுமையும் சுமையே :( அவரின் உழைப்பு மனதைரியம் திகைக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....