சனி, 5 அக்டோபர், 2019

காஃபி வித் கிட்டு – காணாமல் போன லக்ஷ்மி – நம்பிக்கை - மனோ - மாத்தியோசி



 காஃபி வித் கிட்டு – பகுதி – 48

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, ’ஒரு வேளை முடியலாம்’ என்று மெல்லியதாக உங்களுக்குக் கேட்கும் குரலே நம்பிக்கை.

இந்த வாரத்தின் செய்தி – காணாமல் போன லக்ஷ்மி:

இரண்டு மாதங்களுக்கு முன்னர் திடீரென ஒரு நாள் லக்ஷ்மி காணாமல் போனார். கூடவே அதே பகுதியில் இருந்த சdhதாமும் இருந்த இடமே தெரியவில்லை. எங்கே போனார்கள் என்று காவல்துறைக்கு கேள்வி மேல் கேள்வி! புகார்களும் வந்து சேர, தில்லி மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அவர்களைக் கண்டுபிடித்தால் தகவல் சொல்லச் சொல்லி செய்தி அனுப்பினார்கள் காவல்துறையினர் – வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டால் ரெட் கார்னர் நோட்டீஸ் ஒன்று கொடுப்பார்கள் – அது கொடுக்காதது தான் பாக்கி! நீதிமன்றம் விரைவில் லக்ஷ்மியைக் கண்டுபிடித்து ஆஜர் செய்ய வேண்டும் என்று கிடுக்கிப் பிடி கொடுத்தது காவல் துறைக்கு! எவ்வளவு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று திடீரென அடித்தது லக்கி ப்ரைஸ்! லக்ஷ்மி கிடைத்து விட்டாள்!

தில்லியில் ஓடும் யமுனை நதியின் படுகையில் உள்ள வனப் பகுதியில் மறைந்து இருந்தார்கள் லக்ஷ்மியும் சdhதாமும்! பிடிபட்ட சdhதாம் சிறையில் அடைக்கப்பட்டார்.  லக்ஷ்மியை லாரி ஒன்றில் ஏற்றி வைக்கப்பட்டு ஹரியானாவிற்கு அனுப்பி வைத்தார்கள்! லாரியில் எதற்கு என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்! லக்ஷ்மி 47 வயது யானை! ஹரியானாவில் உள்ள யானைகள் முகாம் ஒன்றிற்கு லக்ஷ்மியை அனுப்பி வைத்திருக்கிறார்கள் வனத்துறையினரும் காவல் துறையினரும்! சdhதாம் யானைப் பாகன்! யானையின் உரிமையாளரையும் அவரது மகனையும் காவல்துறை தேடிவருகிறது! யானையைக் கொடுமைப் படுத்தியதாக வழக்கு இருக்கிறது என்பதால்! பல வருடங்களாக யானையை வைத்து பிழைப்பு நடத்தியதோடு, அதனை கொடுமைப் படுத்தியதாக உரிமையாளர், அவரது மகன் மற்றும் பாகன் மூன்று பேருடைய மீதும் வழக்கு!

இந்த வாரக் காட்சி – பொறுமை என்ன விலை?

மதிய நேரம் உணவகத்தில் அமர்ந்து தான் நான் கொண்டு போகம் உணவை பத்மநாபன் அண்ணாச்சியுடன் சாப்பிடுவது வழக்கம். அன்றைக்கு எங்கள் எதிர் இருக்கையில் ஒருவர் அமர்ந்திருந்தார்.  நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிரில் அமர்ந்து கொண்டு வந்த லஞ்ச் டப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். வீட்டிலிருந்து கொண்டு வந்த சப்ஜி டப்பா திறக்க முடியவில்லை – கொஞ்சம் டைட்டான மூடி போலும்! கைகளால் திறந்து பார்க்க, திறக்கவில்லை. பக்கத்து சுவற்றில் இரண்டு மூன்று முறை அடித்துப் பார்த்தார் திறக்கவில்லை. நிறைய விதங்களில் திறந்து பார்க்கவும் செய்தார் – ஆனால் மூடி திறக்கவே முடியைவில்லை. சுடச் சுட சப்ஜியை வைத்து மூடியிருப்பார்கள் போலும். டப்பா இருந்த கைகளை மேலே தூக்க, எங்கே வீசி விடுவாரோ என்று குழப்பம் வந்தது – எதிரே நானும் பத்மநாபன் அண்ணாச்சியும்! வீசும்போது தப்பித்தவறி எங்கள் மீது பட்டால்! :) நல்லவேளை தூக்கிய கைகளை இறக்கி டப்பாவை மேஜை மீது வைத்தார்.

டப்பாவை திறக்க முடியாமல் வேர்த்து விறுவிறுத்த அவரைப் பார்க்கப் பாவமாகவும் இருந்தது.  அலைபேசியை எடுத்து அழைத்து “என்ன டப்பா கொடுத்து அனுப்பி இருக்க? திறக்கவே முடியல! ஒழுங்கா பார்த்து வைக்கமாட்டியா? எதுக்கும் லாயக்கில்லை” என்று படபடவென பொரிந்து தள்ளினார்! அன்றைக்கு மாலை வீட்டில் என்ன வரவேற்பு கிடைத்திருக்கும் எனத் தெரிந்து கொள்ள ஆசை! அடுத்த நாள் அவரைப் பார்த்தால் கேட்க வேண்டும் என நினைத்தேன் – அடுத்த நாள் அவர் கண்ணில் படவே இல்லை! அதற்கு அடுத்த நாளும் பார்க்க வில்லை – அடி பலமோ?

சமீபத்தில் படிக்க ஆரம்பித்த வலைப்பூ:

ஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல் ஆகியவற்றை எழுதிய எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் “கரிசக்காடு” வலைப்பூவை சமீபத்தில் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அவருடைய சமீபத்திய பதிவு ஒன்று – அப்பாவின் தந்திரம்! படித்துப் பாருங்களேன்…

இந்த வாரத்தின் விளம்பரம் – மாத்தியோசி

வாழ்நாள் முழுவதும் இவரோடு தான் கழிக்க வேண்டும் என ஒரே ஒரு சமோசா கொடுத்து எப்படி முடிவு எடுப்பதுப்பா? கேட்கும் மகள்… மாத்தியோசி விளம்பரம்! பாருங்களேன். 




இந்த வாரத்தின் ஸ்வாரஸ்ய கேள்வி பதில்:

கேள்வி: நீங்கள் ஒரு கடையில் பார்த்த விசித்திரமான விஷயம் என்ன?

பதில்:  ”கடன் அன்பை முறிக்கும்”. இதை நாம் அனைத்து கடைகளிலும் பார்த்திருப்போம். ஒரு கடைக்கு மதிய உணவு சாப்பிடச் சென்றிருந்தோம். சாப்பிட்டு முடித்த பிறகு பணம் கொடுக்க நின்றுகொண்டிருந்தேன் அப்போது அங்கே ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்றால், வாடிக்கையாளர்களே எங்களது கடவுள் அந்த கடவுளுக்கே கடன் அளிக்கும் தகுதி எங்களுக்கில்லை.  இதை படித்த பிறகு எவருக்கும் கடன் சொல்ல மனது வராது.

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2013-ஆம் ஆண்டு இதே நாளில் எழுதிய ஒரு பதிவு – மனோவுடன் ஒரு மாலைப் பொழுது! பாடகர் மனோ தில்லியில் எங்கள் வீட்டின் அருகே இருக்கு தால்கட்டோரா ஸ்டேடியத்தில் வந்து பாடிய நிகழ்ச்சி ஒன்று பற்றி எழுதி இருக்கிறேன். படிக்காதவர்கள் படிக்கலாமே!


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. காஃபி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!! காஃபி மணக்குதே அழகான வாசகத்துடன்..

    //மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, ’ஒரு வேளை முடியலாம்’ என்று மெல்லியதாக உங்களுக்குக் கேட்கும் குரலே நம்பிக்கை.//

    யெஸ் யெஸ் இந்தத் துளி நம்பிக்கை என் மனதில் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்கும். அதுவும் நான் நினைக்கும் நல்லதைப் போல வேறு யாரேனும் சிந்திப்பார்கள் உலகின் மூலையில் அந்த நல்லது கண்டிப்பாக ஒரு நாள் நடக்கலாம் என்று. நடக்குதோ இல்லையோ அந்த நம்பிக்கைதானே நம்மை வழி நடத்திச் செல்லுகிறது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிய நேர வணக்கம் கீதாஜி.

      துளி நம்பிக்கை இருந்தால் கூட வெற்றியை நோக்கி பயணிக்க முடியும் என்ற எண்ணம் நமக்குள் தோன்றிவிட்டால் வெற்றி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. லக்ஷ்மி காணாமல் போனதை வாசிக்கத் தொடங்கியதுமே தெரிந்துவிட்டது நாலுகால் செல்லம்...பசு அல்லது வேறு என்று....யானை என்றும் தோன்றியது கேரளமாக இருக்கும் என்று... ஆனால் யானை எங்கு தில்லியில் என்றும் தோன்றியது...ஹிஹிஹிஹி...

    சதாம் பாகன் என்று தோன்றவில்லை....அதுவும் அதன் இணையோ என்றுதான் தோன்றியது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லக்ஷ்மி என்றாலே நாலு கால் செல்லமாக இருக்க வேண்டும் என்று தான் எனக்கும் தோன்றும் கீதாஜி.

      சதாம் - பாகனாக இருக்கக் கூடும் என்பது உங்களுக்குத் தோன்றவில்லை! இங்கே இப்படி நிறைய உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வலைப்பூ அறிமுகம்...குறித்துக் கொண்டேன் ஜி. வாசிக்கிறேன்...

    வாடிக்கையாளர்களே எங்களது கடவுள் அந்த கடவுளுக்கே கடன் அளிக்கும் தகுதி எங்களுக்கில்லை.// ரசித்தேன்..

    மனோ அண்ட் காணொளி அப்புறம் வருகிறேன் ஜி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூ அறிமுகம் - குறித்துக் கொண்டதில் மகிழ்ச்சி.

      வாடிக்கையாளர் வாசகம் நல்ல உத்தி தான் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அழகிய பொன்மொழி.  குட்மார்னிங்.

    காணாமல் போன லக்ஷ்மி போலிஸ் நாயாக இருக்குமோ என்கிற சந்தேகத்துடன் படித்தேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      லக்ஷ்மி - போலீஸ் நாயாக இருக்குமோ? :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இப்படி மூடிக்கொள்ளும் டப்பாக்கள் வெறுப்பேற்றும்தான்.  ஆனால் எப்படியும் முயற்சித்துத் திறந்து விடலாம் என்பது என் அனுபவம்!  என் நண்பர் ஒருவருக்கு நான்தான் திறந்து கொடுப்பேன்!

    விளம்பரம் சுவாரஸ்யம்.    அதில் வரும் பெண் சமீபத்தில்  அமேசான் பிரைமில் நான் பார்த்து ரசித்த எவரு கதாநாயகி போல இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூடிக்கொள்ளும் டப்பாக்கள் - கொஞ்சமல்ல நிறையவே பொறுமை தேவை. அது அந்த இளைஞருக்கு இல்லை ஸ்ரீராம்.

      விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. தினமும் புதிதாய்ப் பார்க்கும் "இன்று ரொக்கம் நாளை கடன்"  வாசகத்தை விட புத்திசாலித்தனமான வாசகம்!

    கதைகள் தளம் பிறகுதான் பார்க்கவேண்டும்.   கேவாபோக்கு கதை கேட்டால் தருவாரோ...!   எங்கே?  வெங்கட்டே தர மாட்டேன் என்கிறார்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் புத்திசாலித்தனமானது - உண்மை.

      கதைகள் தளம் முடிந்த போது பாருங்கள்.

      //வெங்கட்டே தர மாட்டென் என்கிறார்!!// ஹாஹா. வைத்துக் கொண்டா இல்லை என்று சொன்னேன்! எனக்குக் கதையும் எழுத வரும் என நம்பிக்கை இன்னும் வரவில்லை ஸ்ரீராம். சில நாட்களாக எழுதுவதே கடினமாக இருக்கிறது! அலுவலகப் பிரச்சனைகள், மடிக்கணினி செய்யும் பிகு என அனைத்தும் ஒன்றாக சேர்ந்து விட்டது. பதிவுகள் இன்னும் சில நாட்கள் எழுத முடியும் என்று தோன்றவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மனோவின் மாலை சுவாரஸ்யம்.  அது, இந்தப்பதிவு வந்தபின் இரண்டு வருடங்களுக்கு முன், நான் சென்ற ஒரு திருமண வரவேற்பை நினைவுபடுத்தியது.  சாதாரணமாக திருமண வரவேற்புகளில் பாட்டுக்கச்சேரி கொடுமையிலும் கொடுமையிலும் கொடுமையிலும் கொடுமை!   ஆனால் இந்தக் கச்சேரி விதிவிலக்காக இருந்ததற்கு அந்த ஹாலின் அமைப்பும், பாடிய திறமையான பாடகர்களும்.   குறிப்பாக பாக்கியராஜ் எனும் பாடகர்.  அவரைப் பற்றி அப்பொதே பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொண்டேன்! 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல சமயங்களில் பாட்டுக் கச்சேரிகள் கேட்க முடிவதில்லை - அத்தனை நாராசமாக பாடுபவர்களாக இருக்கிறார்கள்! :) திறமையான பாடகர்கள் எனும்போது கேட்க ஸ்வாரஸ்யம் தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. முதல் பகுதியைப் படித்து மதக்கலவரம் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறீர்களோன்னு நினைத்தேன். பாதியில் யானை என்று தோன்றியது. சதாம் பெயர்தான் யானைக்கு வைக்க மாட்டார்களே என்று யோசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக, மதம், மதக் கலவரம் பற்றியெல்லாம் நான் எழுதுவதில்லை நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. லக்ஷ்மி கணடு பிடிக்கப்பட்டு விட்டாள் :)
    உதயசங்கர் வலைப்பூ படிக்கிறேன் நன்றி.
    விளம்பரம் அசத்தல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லக்ஷ்மி கண்டு பிடிக்கப்பட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி தான் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. லட்சுமி இனியாவது நலமுடன் வாழட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லக்ஷ்மி நலமுடன் வாழ வேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பமும் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. மனோவுடன் ஒரு மாலைப்பொழுது அருமை. அனைத்து பாடல்களும் மறக்க முடியாத என்றும் நினைவில் நிற்கும் பாடல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  13. லக்ஷ்மி என்றதும் பசுமாடு அல்லது யானை என்றே தோன்றியது. பின்னர் நினைவு வந்தது காணாமல் போன செய்தியைப் படித்தது! பாவம் யானைகள்!மனிதர்கள் பாடாய்ப் படுத்தி எடுக்கின்றனர். புதிய வலைப்பூவுக்கும் சென்று பார்க்கிறேன். பாடகர் மனோவின் நிகழ்ச்சியை அடிக்கடி முன்னால் பொதிகையில் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர்கள் படுத்தலுக்குக் கேட்க வேண்டுமா கீதாம்மா... பல விதங்களில் படுத்துவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்களே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. லட்சுமியின் நிலை அறிந்து வருந்தினேன். இனி நடப்பது நல்லதாகஇருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடப்பது நல்லதாகவே நடக்கட்டும் - அதுவே அனைவருடைய விருப்பமும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. ரசித்த வாசகம், காணொளி எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இந்த வார காஃபி அபாரமாக மணந்தது.

    ரசித்த வாசகம் மிக அருமை. தன்னம்பிக்கை குரல் ஒலிக்கும் நேரந்தான் வாழ்க்கையின் திருப்பு முனை. அருமையான சிந்தனை.

    காணாமல் போன லக்ஷ்மி கதை ஸ்வாரஸ்யமாக இருந்தது.

    பொறுமையின் விலை சம்பவமும் நமக்கு நன்றாக உள்ளது. நீங்கள் கூறுவது போல மாலை வீடு சென்றதும் அவருக்கு வரவேற்பு எப்படியோ என்ற கவலை வருகிறது. பாவம்.!

    இந்த வார ஸ்வாரஸ்யமான கேள்வி பதிலில் கடன் அன்பை முறிக்கும் என்பதற்கு பதிலாக மாற்றி சுவைப்பட எழுதியிருந்த வாசகங்கள் அருமையாக இருக்கின்றன.

    காணொளிகள் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வாரத்தின் காஃபி சுவை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....