CHசம்பா – ஹிமாச்சலப்
பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டம். பெரும்பாலான மாவட்டங்கள் மலைப் பிரதேசமாக இருக்க,
இந்த மாவட்டம் ஒரு சமவெளியில்
அமைந்துள்ளது. ராவி நதியின் சமவெளியில் அமைந்துள்ள இந்த மாவட்டம் ஹிமாச்சலப்
பிரதேசத்தின் முக்கியமான சுற்றுலா தளம்.
பழமையான கோவில்கள், அரண்மனையும்
இங்கே உண்டு. CHசம்பா மாவட்டம்
மூன்று விஷயங்களுக்கு பிரபலமானது - CHசுக் எனப்படும் மிளகாய் சட்னி, CHசம்பா செருப்பு மற்றும் CHசம்பா
ஓவியங்கள்.......
தொகுப்புகள்
▼
ஞாயிறு, 30 ஏப்ரல், 2017
சனி, 29 ஏப்ரல், 2017
வெள்ளி, 28 ஏப்ரல், 2017
வியாழன், 27 ஏப்ரல், 2017
சோலே பனீர் – கோவில்பட்டி வீரலக்ஷ்மி – 40 மணி நேரத் தூக்கம்
சில
முறையாகவே தமிழகம் வரும்போது விமானத்திலேயே வந்து போவது வழக்கமாகி இருந்தது.
ரயிலில் வருவதென்றால் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் [போவதற்கும் வருவதற்கும்] ரயிலிலேயே
போய் விடுகிறது. வீட்டில் அதிக நாட்கள் இருக்க முடிவதில்லை என்பதால் இப்படி விமானத்திலேயே
பயணிப்பது வழக்கமாகிவிட்டது. விமானத்தில் சென்னை வரை வந்து பிறகு பேருந்திலோ,
ரயிலிலோ திருச்சி வரை வந்தால் காலையில் புறப்பட்டால் மாலையில் வீடு வந்து சேர
முடிகிறது. இந்த முறை விடுமுறையில் வருவது நிச்சயமில்லாத நிலையில் பயணச்சீட்டு
முன்பதிவு செய்ய இயலவில்லை. கடைசி நேரத்தில் விமானத்திற்கான கட்டணத்தினைப்
பார்த்தால் மலையளவு – 10000 ரூபாய்க்கு மேல் – ஒரு பக்கத்திற்கே! ரயிலில் பயணிக்க
முடிவு செய்தேன்.
புதன், 26 ஏப்ரல், 2017
செவ்வாய், 25 ஏப்ரல், 2017
திங்கள், 24 ஏப்ரல், 2017
ஞாயிறு, 23 ஏப்ரல், 2017
பணம் மட்டுமே போதாது – இந்த ஞாயிறில் சில காணொளிகள்
அன்பின்
நண்பர்களுக்கு, கடந்த சில வாரங்களாக, ஞாயிற்றுக் கிழமைகளில் நான் எடுத்த சில காணொளிகளைப்
பகிர்ந்து கொண்டேன். இந்த ஞாயிறில் நான் ரசித்த சில விளம்பரங்கள் – நம் ஊரில் [தமிழகத்தில்]
இவற்றைப் பார்க்க வாய்ப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. அதனால் இங்கே உங்கள் பார்வைக்கு…..
பணம் மட்டும் போதாது
– அனைவரிடத்தும் அன்பு செலுத்துங்கள்
பணத்தினால்
அன்பை வாங்க முடியாது என்பதைச் சொல்லும் “Currency” எனும் விளம்பரம் – அந்த விளம்பரம்
ஒரு ஊறுகாய்க்கு என்பதைக் கடைசியில் தான் தெரிந்து கொள்ள முடிந்தது! பாருங்களேன். 500,
1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்த பிறகு வந்த விளம்பரம்!
நட்பா, இல்லை மனிதமா – Choice is yours!
தானாகவே
கார் கதவு திறந்து ஏறிக்கொள்ளும் ஒரு மனிதர் – மஹிந்த்ரா மின்சாரத்தில் செலுத்தப்படும்
ஒரு காருக்கு இப்படி ஒரு விளம்பரம் – ஹிந்தியில் என்றாலும் புரிந்து கொள்ள முடியும்
என நம்புகிறேன் – நடுநடுவே ஆங்கிலமும் உண்டு! பாருங்களேன்.
பப்பிள் கம் பேப்பரில் ஒரு ஓரிகாமி!
அப்பாவுக்கும்
மகளுக்கும் இருக்கும் உறவு எப்போதுமே ஸ்பெஷல். அப்பா செய்து தரும் பேப்பர் பொம்மைகள்
கூட பெண்ணுக்குப் பொக்கிஷம் தான்! பாருங்களேன்.
என்ன
நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த காணொளிகளை ரசித்தீர்களா?
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
சனி, 22 ஏப்ரல், 2017
வெள்ளி, 21 ஏப்ரல், 2017
வியாழன், 20 ஏப்ரல், 2017
புதன், 19 ஏப்ரல், 2017
செவ்வாய், 18 ஏப்ரல், 2017
மாதொருபாகன் – வாசிப்பனுபவம்
குழந்தையின்மை
என்பது மிகப்பெரிய கொடுமை என்று தான் இந்த சமூகம் நினைக்கிறது. அதுவும் திருமணம் நடந்த
ஒரு வருடத்திற்குள்ளாகவே “என்ன ஒண்ணும் விசேஷம் இல்லையா?” என்ற கேள்விக்கணைகள் பெண்ணை
நோக்கி வீசப்படுகின்றன. ஆண்களிடம் இந்த கேள்விகள் அவ்வளவாக எழுப்பப்படுவதில்லை என்பதல்ல.
அவர்களிடம் கேட்டால் கொஞ்சம் சூடாகவே பதில் கிடைக்கும் என்ற பயம் இருக்கும். ஆனால்
பல பெண்கள் இது போன்ற கேள்விகளை எதிர்கொள்ளும்போது அத்தனை சுலபமாக பதில் சொல்ல முடிவதில்லை.
திங்கள், 17 ஏப்ரல், 2017
ஞாயிறு, 16 ஏப்ரல், 2017
சனி, 15 ஏப்ரல், 2017
வெள்ளி, 14 ஏப்ரல், 2017
ஆறடிக் கூந்தல் – பெண்ணுக்கு அழகா, ஆபத்தா?
பெண்களுக்கு
ஆறடிக் கூந்தல்! இப்படிக் கற்பனையாகச் சொன்னாலும், நிஜத்தில் அவ்வளவு நீளமான கூந்தல்
கொண்ட பெண்கள் வெகு சிலரே! சில பெண்களுக்கு முட்டி வரை கூந்தல் இருப்பதைக் கண்டு வியந்ததுண்டு.
“எப்படித்தான் இதைப் பராமரிக்கிறார்களோ என்ற எண்ணமும் வருவதுண்டு! மாதத்துக்கு ஒரு
முறையோ, 45 நாட்களுக்கு ஒரு முறையோ நாவிதரிடம் சென்று வளர்ந்திருக்கும் முடியை வெட்டிக்கொண்டு
வராவிட்டால் ஏதோ தலைக்கு மேல் பல கிலோ எடை அதிகரித்திருப்பது போல உணரும் எனக்கு, இவ்வளவு
முடி கொண்ட பெண்கள் பாவம், கஷ்டமா இருக்குமே என்று தோன்றும்.
வியாழன், 13 ஏப்ரல், 2017
ஸ்டென்சில் – பழசும் புதுசும்….
சில
நாட்கள் முன்னர் தட்டச்சுப் பயிற்சி பற்றிய பதிவு படித்தது என்னுடைய நினைவுகளையும்
மீட்டெடுக்க உதவியது. +2 முடித்த கல்லூரியில் சேர்ந்தபிறகு தான் தட்டச்சுப் பயிற்சி
ரொம்பவே முக்கியம் – ”நாளைக்கு வேலை கிடைக்கணும்னா அதுல சேர்ந்து, தட்டச்சு ஹையர்
பாஸ் பண்ணிட்டா, அதுவும் ஒரு Extra Qualification – English, Tamil என ரெண்டுமே முடிச்சுட்டா
ரொம்பவே நல்லது” என்று சொல்லி என்னையும் நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள ஒரு
Typewriting Institute-ல் சேர்த்துவிட்டார் அப்பா. Shorthand-ம் படிச்சா ரொம்ப நல்லதுன்னு
சொன்னாலும், ஏனோ படிக்கவில்லை!
பெரிதாய்
அதில் ஈடுபாடு இல்லை என்றாலும், கையில் ஒரு பேப்பரை சுருட்டி எடுத்துக்கொண்டு சைக்கிளில்
வீட்டிலிருந்து மெயின் பஜார் Institute வரை சென்று வருவேன். புதுசாகப் பழகுபவர்களுக்கென்றே
ஒரு பாடாவதி ஓட்டை மெஷின் வைத்திருப்பார் அந்த Institute owner! ஒவ்வொரு Key மீதும்
ஏறி உட்கார்ந்தால் தான் அதன் அச்சு பேப்பரில் விழும்! அப்படி பல முறை ஏறி உட்கார்ந்து
ஒரு வழியாக பத்து நாட்கள் ஆனபின்னர் தான் வேறு ஒரு மெஷின்! அப்படியே Lower, Higher
என ஆங்கில தட்டச்சு மட்டுமே பயின்றேன். தமிழ் தட்டச்சில் அத்தனை ஆர்வம் வரவில்லை! ஒன்றிரண்டு
முறை முயன்று, கைவிட்டேன். Typewriter-இல் பல முறை Shift Key அழுத்த வேண்டியிருப்பது, தமிழ் தட்டச்சின் சாபக் கேடு!
அந்த
Institute owner எப்போதாவது தான் வருவார். தட்டச்சு சொல்லித்தர ஒரு அக்கா தான் இருப்பார்கள்!
அவருக்கு நம்மள பார்த்தாலே ஏதோ பயம் – இத்தனைக்கும் ஊதினா பறந்து போற மாதிரி தான் இருப்பேன்
நான்! மொத்தமே முப்பது, முப்பத்தி ஐந்து கிலோ தான்! பெரும்பாலான நாட்கள் தட்டச்சு செய்து
முடித்தபிறகு பேப்பரைக் காண்பித்தால், “டைப் அடிச்சாச்சு இல்ல, போய்ட்டே இரு… காத்து
வரட்டும், வழிவிடுன்னு”ன்ற மாதிரி அனுப்பிடுவாங்க! எப்படியோ, ஆறே மாதத்தில் லோயர்,
அடுத்த ஆறாவது மாதத்தில் ஹையர் என இரண்டும் முடித்தேன்.
Institute
வரும் பெரும்பாலானவர்கள் தெரிந்தவர்களாகத் தான் இருப்பார்கள். அப்போதைய நெய்வேலி ஒரு
Close Knit Community! இப்போது எப்படி என்பது தெரியாது! பெரும்பாலானவர்கள் தெரிந்தவர்களாகவே
இருப்பார்கள். இன்ஸ்டிடியூட் போனமா வந்தமான்னு இருக்கணும். விதி படத்துல வர மாதிரி சைட் அடிக்க மட்டும் அங்கே
நான் போனதில்ல! L, O, V, E எழுத்துகள் தேய்ந்து போனதும் இல்லை! ஆனா, நான் கத்துக்கிட்ட
மெஷின்ல a எழுத்து மட்டும் மேல் பகுதி பாதி தான் வரும்! அந்த Key-ஐ மட்டுமாவது மாத்துங்கன்னு
அந்த அக்காட்ட சொன்னா, “அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு!, எதை மாத்தணும், எப்ப மாத்தணும்னு
எங்களுக்குத் தெரியும், போயிட்டே இரு”ன்னு சொல்லிடுவாங்க!
வெறும்
டைப்ரைட்டிங் மட்டும்தான் கத்துக்கிட்டேன்! ஸ்டென்சில் எப்படி கட் பண்ணனும் தெரிஞ்சுக்கல,
சொல்லித்தரவும் இல்லை! கல்லூரி முடிக்கிறதுக்குள்ளேயே, வேலைக்கான தேர்வு எழுதி, அதிலே
பாஸ் பண்ண, டைப்ரைட்டிங் டெஸ்ட் – பாண்டிச்சேரியில்! நெய்வேலிலருந்து மெஷின் தூக்கிட்டுப்
போகணும்! பஸ்லயும், கையிலும் தூக்கிக்கொண்டு போய், டைப் டெஸ்ட் எழுதி, மெஷின பத்திரமா
கொண்டுவந்து திருப்பிக் கொடுக்கணும்! மெஷின தூக்கிட்டுப் போறது பெரிய தொல்லை! எப்படியோ
பாஸ் பண்ணி, தில்லி வந்தாச்சு! டைப் ரைட்டிங் என்னைத் துரத்தியது!
வேலைக்குச்
சேர்ந்தபிறகு எனக்கு கொடுக்கப்பட்ட பிரிவு அதிக ஆட்களைக் கொண்டது. அதுவும்
Statistics சம்பந்தப்பட்டது. சாதாரண கடிதங்களைத் தவிர பட்டியல்கள், Tables தான் நிறைய
டைப் பண்ண வேண்டியிருக்கும்! அதுவும் வருஷத்துக்கு 300, 400 பக்கம் கொண்ட இரண்டு புத்தகங்கள்
வெளியிடுவார்கள் – அதில் முக்கால்வாசி Tables! நிறைய Copies என்பதால் சாதாரண பேப்பர்
டைப்பிங் கிடையாது! Stencil Cut பண்ணனும்! ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு Stencil!
அழுத்தி அடிச்சா, ஸ்டென்சில் கிழிந்து விடும், லேசா அடிச்சா, கட் ஆகாது! பெரிய தொல்லை!
தப்பா அடிச்சா, சிவப்பு கலர்ல ஒரு Solution தடவி, அது காய்ந்த பிறகு அதே இடத்தில் சரியான
வார்த்தையை அடிக்கணும்! கம்ப்யூட்டர் வர வரைக்கும் இப்படி மூணு நாலு வருஷம் Stencil
கட் பண்ணி கட் பண்ணியே வாழ்க்கை வெறுத்தது! விரல் நுனிகள் எரியும்!, கைவிரல்கள் முழுவதும்
கெஞ்சும்….
இதுல
நான் வேற ரொம்ப திறமைசாலின்னு நிறைய வேலை செய்து காட்ட, எல்லோருடைய வேலையும் என் தலையில்!
ஹிந்தி வேற தெரியாது – யார் வேலை குடுத்தாலும் மாங்கு மாங்குன்னு செய்வேன்! செய்ய முடியாதுன்னு
சொல்லத் தெரியாது! பெரும்பாலான அதிகாரிகள் மருத்துவர்கள்! அவர்கள் Dictation கொடுக்கற
மாதிரி சொல்ல, நான் நேரடியாக Typewriter-ல டைப் பண்ணுவேன்! நம்ம வேகம் அவ்வளவுன்னு
புகழ்ந்தே வேலை வாங்கிடுவாங்க! ஒரு டாக்டர் – காஷ்மீரி – நடிகர் அனுபம் கேர்-க்கு சொந்தக்காரங்க!
அவங்க டிக்டேஷன் கொடுக்கும்போது திண்டாடுவேன்! வார்த்தை உச்சரிப்பு அந்த மாதிரி!
பேயன்,
அக்கேயன் என்றெல்லாம் வார்த்தைகள் சொல்லுவார்கள்! பேயன் – இது என்ன நம்ம ஊர் வாழைப்பழமா,
இல்லை, யாரையாவது பேயன்னு திட்டறாங்களா, இதை ஆங்கிலத்தில் peyan அப்படின்னு டைப் பண்ணனுமான்னு
தெரியாது! அதுக்கப்புறம் அவங்க கிட்டயே ஸ்பெல்லிங்க் கேட்க, ”அட பேயன், பேயன்,
இது தெரியாதா உனக்கு?” என்று கேட்டு, P A S S I O N அப்படின்னு சொல்லுவாங்க! அக்கேயன்
– O C C A S I O N….. நம்ம பேஷன், அக்கேஷன்-னு சொல்றதுதானே வழக்கம்! இப்படி
நிறைய வார்த்தைகள்!
ஒரு
வழியா கணினி வந்து, டைப்ரைட்டிங் மெஷின்களுக்கு ஓய்வு கொடுக்க, பல விஷயங்கள் சுலபமாச்சு!
இப்பல்லாம் ஸ்டென்சில் கட்டிங் வழக்கொழிந்து போனது! ஆனா இந்த ஸ்டென்ஸில் வேற ஒரு விஷயத்துக்குப்
பயன்படுது - அந்த பழைய ஸ்டென்ஸில் இல்லை – வார்த்தை மட்டும் இருக்கு! புதுசா தலைமுடிக்கு
டிசைன் பண்ண ஸ்டென்சில் பயன்படுத்தறாங்க! பாருங்களேன்!
அலுவலகம்
வழியாக, ஹிந்தி கற்றுக்கொண்டு தேர்வுகள் எழுதி அதிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, ஹிந்தி
டைப்ரைட்டிங் கத்துக்கலாமே என ஒருவர் கேட்க, அலறி அடித்து பதில் சொன்னேன் – No! தமிழ்
தட்டச்சே கத்துக்கல, நான் ஹிந்தி தட்டச்சு நிச்சயம் கத்துக்க மாட்டேன்னு கண்டியனா
[அதாங்க கண்டிஷனா] சொல்லிட்டேன்!
நாளை
வேறொரு பதிவில் சந்திக்கும்வரை…..
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
புதன், 12 ஏப்ரல், 2017
செவ்வாய், 11 ஏப்ரல், 2017
திங்கள், 10 ஏப்ரல், 2017
ஞாயிறு, 9 ஏப்ரல், 2017
சாலையைக் கடக்கும் ஒட்டக மந்தை – காணொளி
நம்ம
கிராமங்களில் மாடு, ஆடு இல்லை என்றால் வாத்துகளை மொத்தமாக சாலைகளில் ஓட்டிக்கொண்டு
போவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒட்டகங்களைக் கூட்டமாக நீங்கள் பார்த்திருக்க
வாய்ப்பில்லை – அரபு நாடுகளில் இருப்பவர்கள் தவிர்த்து! ஏற்கனவே ஒரு முறை எனது பதிவொன்றில்
பல ஒட்டகங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதுண்டு. ஆனால் இன்று, இந்த ஞாயிறில் ஒரு காணொளி – கிட்டத்தட்ட
150 ஒட்டகங்களுக்கு மேல் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் ஒரு சாலையைக் கடக்கும்போது
எடுத்த காணொளி ஒன்று!
சனி, 8 ஏப்ரல், 2017
வெள்ளி, 7 ஏப்ரல், 2017
வியாழன், 6 ஏப்ரல், 2017
புதன், 5 ஏப்ரல், 2017
செவ்வாய், 4 ஏப்ரல், 2017
மகளின் – ஓவியங்கள் – கைவேலைகள் – ஒரு தொகுப்பாக – இந்த இனிய நாளில்!
மகளின்
ஓவியங்கள் மற்றும் கைவேலைகளை அவ்வப்போது முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருந்தாலும்,
சமீபத்தில் வலைப்பூவில் பகிரவில்லை. முகப்புத்தகத்தில் பகிர்வது சில சமயம் திரும்பி
எடுப்பதில் பிரச்சனைகள் உண்டு. இங்கேயும் ஒரு சேமிப்பாக, மற்றும் அங்கே பார்க்காதவர்கள்
வசதிக்காகவும்…..
திங்கள், 3 ஏப்ரல், 2017
ஞாயிறு, 2 ஏப்ரல், 2017
ABCD - Any body can dance - ஒரு காணொளி
வடக்கே
ஒரு பழக்கம். பெரும்பாலான திருமணங்களில், விழாக்களில் டோல் எனப்படும் மேளம் முழுங்குவதுண்டு.
ஒரே மாதிரியான இசை, ஒரே மாதிரியான நடனம் – கைகளை மேலே தூக்கியபடி நடனம் ஆடுவது வழக்கம். திருமணங்களில் மாப்பிள்ளையானவர் குதிரை மேல் அமர்ந்து
வர, அவருக்கு முன்னே மேளதாளங்கள் முழங்க, திருமணத்திற்கு வந்திருக்கும் ஆண்களும் பெண்களும்
ஆடியபடியே வருவார்கள். இது திருமணம் தவிர, எங்கே மேளம் முழங்கினாலும் களத்தில் குதித்து
நடனமாடும் ஆண்களும் பெண்களும் பார்க்க முடியும்…..
சூரஜ்குண்ட்
மேளா சென்ற போது ஹரியானாவின் பாரம்பரிய இசை மற்றும் மேளத்துடன் வாசித்துக் கொண்டிருக்க,
அங்கே களத்தில் சிலர் குதிக்க, அதை காணொளியாக எடுத்த பலரில் நானும் ஒருவன். அந்த காணொளி இந்த ஞாயிறில் உங்களுக்காக….
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.