சமீபத்தில்
தமிழகத்தில் இருந்தபோது சில பேருந்து பயணங்கள். பெரும்பாலான பயணங்களில் சக பயணிகளின்
சம்பாஷணைகளை கவனிப்பது பழக்கமாக இருந்தது. [உடனே ”ராஜா காது
கழுதை காது பகுதிக்கு மேட்டர் நிறைய தேத்திட்டீங்க போல” என்று கேட்டால் பதில்
இல்லை என்பதாகத் தான் இருக்கும்! நகரப் பேருந்தில் பயணங்கள், அதுவும் கிராமப் புறப்
பயணங்களில் நிறையவே அனுபவங்கள் கிடைக்கின்றன. திருப்பராய்த்துறைக்கு சில முறைகள் பயணித்த
போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம். மக்கள் இப்போதெல்லாம் நிறையவே அரசியல் பேசுகிறார்கள்.
அப்படியே நிகழ்வுகளை நேரில் பார்த்த மாதிரியே விமர்சிக்கிறார்கள். அந்த அரசியல்வாதிக்கு
இத்தனை கோடி சொத்து, இவனுக்கு அவளோடு தொடர்பு என பேச நிறைய விஷயங்கள், அதையும் பொது
வெளியில் சத்தமாகவே பேசுகிறார்கள். The Right to Speech!
தொகுப்புகள்
▼
செவ்வாய், 31 அக்டோபர், 2017
திங்கள், 30 அக்டோபர், 2017
தரம்ஷாலா, ஹிமாச்சல் பிரதேசம் – இரண்டாம் தலைநகரம்
இரண்டாம்
தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 1
முன் குறிப்பு: சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 அன்று,
”அடுத்த பயணத் தொடர் – எங்கே – ஒரு புகைப்பட முன்னோட்டம்”
என்ற தலைப்பில் திங்களன்று என் அடுத்த பயணத்தொடர் தொடங்கும் என்று சொல்லி இருந்தேன்.
சொன்னபடியே இதோ திங்களன்று தொடங்கிவிட்டேன்! :) என்ன நடுவில் சில வாரங்கள் கடந்து விட்டன!
சரி தொடருக்குப் போவோம்!
ஞாயிறு, 29 அக்டோபர், 2017
புகைப்பட உலா – நவராத்ரி கொலு
நீண்ட
இடைவெளிக்குப் பிறகு இந்த ஞாயிறில் ஒரு புகைப்பட உலா. நவராத்ரி சமயத்தில் நான் சென்ற
வீடு/கோவில்களில் வைத்திருந்த கொலு பொம்மைகளை படம் எடுத்து பகிர்ந்து கொள்வதுண்டு.
[புகைப்படம் எடுக்கச் செல்கிறேன் என்ற பெயரில் சுண்டல் சாப்பிடச்
செல்வேன் என்று யாரும் தப்பாக புரிந்து கொள்ள வேண்டாம்! – யார்ப்பா அது, அது
தான் உண்மை என்று குரல் கொடுப்பது!]. இந்த ஆண்டு நவராத்ரி சமயத்தில் தமிழகத்தில் தான்
இருந்தேன் என்றாலும், கொலு பார்ப்பதற்கென்று சென்ற இடங்கள் ரொம்பவும் குறைவு – In
Fact, ஒரே ஒரு வீட்டிற்குத் தான் என்னை அழைத்துச் சென்றார்கள்!! What a pity! வீட்டிலேயே
கொலு வைத்திருந்ததால் அதற்கே நேரம் சரியாக இருந்தது [தினம்
சுண்டல் உங்க கைவண்ணம் தானே என மதுரைத் தமிழனும், சகோதரி ராஜியும் கேட்டால் பதிலாக,
நானில்லை என்று தான் சொல்லுவேன்!]