தொகுப்புகள்
▼
சனி, 31 மார்ச், 2018
வெள்ளி, 30 மார்ச், 2018
குஜராத் போகலாம் வாங்க – மாடு பிஸ்கட் சாப்பிடுமா
இரு மாநில பயணம் –
பகுதி – 19
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
த்வாரகாதீஷ் கோவில் - ஒரு கிட்டப் பார்வை....
இதற்கு முந்தைய பகுதியில் சொன்னது
போல, இரவு 08.45 மணிக்கு த்வாரகா வந்த நாங்கள் த்வாரகாநாதனை தரிசித்து, ஹோட்டல்
ஸ்ரீஜி தர்ஷனில் இரவு தங்கினோம். நல்ல உறக்கம். காலையிலேயே புறப்பட்டால் நல்லது என
முடிவு செய்ததால், 05.30 மணிக்கே எழுந்து விட்டேன். தங்குமிடத்தில் உணவகம் இல்லை
என்பதால் கீழே சாலைக்குச் சென்று தேநீர் அருந்தலாம் என என்னுடன் தங்கியிருந்த
பிரமோத்-ஐயும் அழைத்துக் கொண்டு கீழே சென்றேன். கீழே இருந்த கடையில் நல்ல கூட்டம்!
அதிகாலையிலேயே கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் நிறைய பேரை பார்க்க முடிந்தது.
தேநீர் கடையிலும் கூட்டம். ஒரு வழியாக எங்களுக்கும் தேநீர் கிடைத்தது. தேநீர்
அருந்திக் கொண்டிருந்த போது பார்த்த காட்சி…
வியாழன், 29 மார்ச், 2018
புதன், 28 மார்ச், 2018
குஜராத் போகலாம் வாங்க – த்வாரகாதீஷ் தரிசனமும் – இரவு உணவும்
இரு மாநில பயணம் –
பகுதி – 18
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
குட்டி கிருஷ்ணரை தலையில் சுமந்து செல்லும் காட்சி....
த்வாரகா நகரில்...
Bபுஜ் நகரிலிருந்து த்வாரகா நகர்
வரையிலான தூரத்தினை சுமார் ஏழரை மணி நேரத்தில் கடந்திருக்கிறோம் – இடையில் மதிய
உணவுக்கான இடைவெளியும், மாலை நேர தேநீர் இடைவெளியும், பருத்தித் தோட்டத்தில்
புகைப்படங்கள் எடுப்பதற்கான இடைவெளியும் உண்டு! ஒவ்வொரு இடத்திலும் அரை மணி நேரத்திற்கு
மேலாக நின்றிருப்போம் – சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து நாங்கள் த்வாரகா
நகரம் சென்றடைந்த போது இரவு மணி 08.45! மதியம் 01.15 மணிக்குப் புறப்பட்டோம்.
த்வாரகா நகருக்கு நான் பயணிப்பது இரண்டாம் முறை. சில வருடங்களுக்கு முன்னர்
பயணித்தபோது கிடைத்த அனுபவங்கள் பற்றி முன்னரே எழுதி இருக்கிறேன்.
செவ்வாய், 27 மார்ச், 2018
சிங்க நடை போட்டு – கல்யாணத்துக்குள்ள ஒல்லியாயிடுவேனா
மூன்று வாரங்களாக புதிய பழக்கம் – அதிகாலை வீட்டிலிருந்து புறப்பட்டு, அருகில்
இருக்கும் தால்கட்டோரா பூங்காவிற்குச் சென்று பூங்காவினை ஒரு சுற்று சுற்றி வரத் தொடங்கி
இருக்கிறேன். இது திடீர் பழக்கம் – விழா ஒன்றில் எடுத்த முடிவு – அடுத்த நாள் முதல்
பூங்காவினைச் சுற்றி வர வேண்டும்! அடுத்த நாள் முதல் ஒரு நாளும் விடாமல் காலை ஐந்தரை
மணிக்கு மேல் புறப்பட்டு ஏழு மணிக்குள் வீட்டுக்குத் திரும்பி, சமையல் முடித்து அலுவலகம்
- தொடர்ந்து இப்படி நடந்து கொண்டிருக்கிறேன். உடன் வரும் நண்பர் சில நாட்கள் வருவதில்லை
என்றாலும், நான் போவதை நிறுத்தவில்லை. எத்தனை
நாட்கள் தொடரப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் காலையில்
இப்படி பூங்காவில் நடப்பது புத்துணர்வு தருவதாக இருக்கிறது என்பது சர்வ நிச்சயம்.
திங்கள், 26 மார்ச், 2018
குஜராத் போகலாம் வாங்க – புஜ் – த்வாரகாதீஷ் நெடுஞ்சாலையில் – மதிய உணவு
இரு மாநில பயணம் –
பகுதி – 17
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
Bபுஜ் நகரில் இருக்கும் ப்ராக்g
மஹால் மற்றும் ஆய்னா மஹால் பார்த்த பிறகு எங்கே போகவேண்டும் என ஓட்டுனர்
முகேஷ்-இடம் கேட்க, அவர் இங்கே ஒரு பெரிய, பழமையான ஸ்வாமி நாராயண் மந்திர்
இருக்கிறது – அங்கே போகலாம் என்று சொன்னார். சரி ஸ்வாமி நாராயண் மந்திர் பார்த்து
விட்டுப் போகலாம் என்றால் நீண்ட நேரமெடுக்கும் என்றும் சொல்கிறார் முகேஷ்.
எங்களுக்கு அன்றைய இரவுக்குள் த்வாரகா செல்லும் திட்டம் இருந்தது. சரி கோவில்
வாசல் வரை செல்வோம், அங்கே சென்று முடிவு செய்து கொள்ளலாம் என முகேஷிடம் புறப்படச்
சொன்னோம். ஸ்வாமிநாராயண் Sect என்று தற்போது வழங்கப்படும் இயக்கத்தினை உருவாக்கிய ஸ்வாமிநாராயண்
பகவான் அவர்களால் அமைக்கப்பட்ட ஆறு கோவில்களில் ஒன்று இந்த Bபுஜ் ஸ்வாமிநாராயண் மந்திர்.
ஞாயிறு, 25 மார்ச், 2018
ஐயம் பேக்!
ஐயம் Bபேக்!
இரண்டு வாரங்களாக பதிவுலகம் பக்கமே
வர இயலவில்லை. சனிக்கிழமை [10 மார்ச்] அன்று கணினியில் அடுத்த வாரத்திற்கான
பதிவுகளைத் தட்டச்சு செய்து கொண்டிருந்தபோது திடீரென கணினி கண்களைச் சிமிட்டி
மொத்தமாக நின்றுபோனது. பார்த்தால் Charge-ஆகவே இல்லை. எனக்குத் தெரிந்த கணினி
நிபுணர்கள் சிலர் “ஊதிப்பாரு, ஒயர ஆட்டிப் பாரு, ஒரு தட்டு தட்டிப்பாரு”
என்றெல்லாம் யோசனைகள் சொல்ல அதெல்லாம் சரி வராது எனத் தோன்றியது. மடிக்கணினி
வாங்கி ஆறு-ஏழு வருடங்களுக்கு மேலாகிவிட்டது – சரி மொத்தமா உயிர விட்டுடுச்சு
போலன்னு தோன்றியது. சரி எதுக்கும் நண்பரின் அலுவலகத்திற்கு வரும் கணினிப்
பொறியாளரிடம் காண்பிக்கச் சொல்லலாம் என நண்பரிடம் ஞாயிறன்று கொடுத்து வந்தேன்.
ஞாயிறு, 11 மார்ச், 2018
சனி, 10 மார்ச், 2018
வெள்ளி, 9 மார்ச், 2018
அடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள் - விடைகள்
புகைப்படம் எடுத்து வைத்துக்
கொண்டு இருப்பதில் என்ன பலன். நான் எடுக்கும் புகைப்படங்களை மற்றவர்களும் ரசிக்கத்
தருவதில் எனக்கும் மகிழ்ச்சி. அப்படி சில
புகைப்படங்கள் எடுத்த எனக்கு அவை என்ன என்று தெரியும் என்றாலும், மற்றவர்களுக்கும்
பகிர்ந்து கொள்ள இப்படி ஒரு புகைப்படப் புதிர்! நேற்று காலை வெளியிட்ட
புகைப்படங்களுக்கான விடைகள் கீழே….
குஜராத் போகலாம் வாங்க – ஆய்னா மஹால் – கண்ணாடி மாளிகை….
இரு மாநில பயணம் –
பகுதி – 16
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
ஆய்னா மஹால் - உள்ளே....
Bபுஜ் நகரில் இருக்கும் ப்ராக்g
மஹால் பக்கத்திலேயே இருக்கும் இன்னுமொரு அரண்மனை ஆய்னா மஹால். ஹிந்தி மொழியில்
ஆய்னா என்றால் முகம் பார்க்கும் கண்ணாடி. இந்த ஆய்னா மஹால் உள்ளே இருக்கும் ஒரு
அறையின் சுவர் முழுவதுமே கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருப்பதால் இந்த மாளிகைக்கே ஆய்னா
மஹால் என்ற பெயர் வந்து விட்டது. ப்ராக்g மஹால் பார்த்த பிறகு அந்த ஆய்னா
மஹாலுக்குத் தான் நாங்கள் சென்றோம். இரண்டுமே பக்கம் பக்கமாக இருப்பதால் தனியே
பயணிக்க வேண்டாம். இரண்டு மாளிகைகளையும் ஒரு சேர பார்த்து விட முடியும். ப்ராக்g
மஹால் முழுவதையும் பார்த்து ரசித்த பிறகு நாங்கள் ஆய்னா மஹால் நோக்கிச் சென்றோம்.
வியாழன், 8 மார்ச், 2018
அடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள்
புகைப்படம் எடுத்து வைத்துக்
கொண்டு இருப்பதில் என்ன பலன். நான் எடுக்கும் புகைப்படங்களை மற்றவர்களும் ரசிக்கத்
தருவதில் எனக்கும் மகிழ்ச்சி. அப்படி சில
புகைப்படங்கள் எடுத்த எனக்கு அவை என்ன என்று தெரியும் என்றாலும், மற்றவர்களுக்கும்
பகிர்ந்து கொள்ள இப்படி ஒரு புகைப்படப் புதிர்!
புதன், 7 மார்ச், 2018
செவ்வாய், 6 மார்ச், 2018
சில நினைவுகளின் முகவரிகள் – அனங்கன் கவிதைகள்
தில்லையகத்து கீதா அவர்களின்
மூலமாக எனக்குக் கிடைத்தது ஒரு கவிதைத் தொகுப்பு – ”சில
நினைவுகளின் முகவரிகள்” என்ற தலைப்புடன்.
சுகுமார் எனும் இயற்பெயர் கொண்டவர் ”அனங்கன்” என்ற புனைப்பெயரில் எழுதுகிறார். இது
அவரது முதலாம் கவிதைத் தொகுப்பு. அனங்கன் என்றால் உருவமில்லாதவன் என்ற பொருள் –
சிவபெருமானையும் மன்மதனையும் குறிக்கும் ஒரு சொல். இதே பெயரில் திரு சுகுமார்
அவர்கள் கவிதை எழுதுகிறார். இவரது இந்தக் கவிதைத் தொகுப்பு WWW.FREETAMILEBOOKS.COM தளத்தில் ஞாயிற்றுக் கிழமையன்று
வெளிவந்திருக்கிறது. வாருங்கள் கவிதைத் தொகுப்பில் இருக்கும் சில கவிதைகளைப்
பார்க்கலாம்….
திங்கள், 5 மார்ச், 2018
குஜராத் போகலாம் வாங்க – பூங்கா வாடகை எவ்வளவு – ஹோட்கா கிராமத்துக்குள்….
இரு மாநில பயணம் –
பகுதி – 14
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கான
வாடகை எவ்வளவு என்று சென்ற பதிவில் நெல்லைத் தமிழன் கேட்டிருந்தார். நாங்கள் அங்கு
செல்வதற்கு முன்னரே இணையம் வழியே தான் இந்த Rann Visamo Village Stay என்ற இடத்தினைத் தேர்ந்தெடுத்தோம். இணையத்தில் சொல்லி இருக்கும் கட்டணம்
சற்றே அதிகமாகத் தெரிய, திரு Gகgகன் அவர்களுக்கு நேரடியாக அலைபேசி மூலம் அழைத்துப்
பேசியதில் நல்ல வழி கிடைத்தது. இங்கே மூன்று விதமான தங்கும் வசதிகள் – Bபூங்கா,
காட்டேஜ் மற்றும் டெண்ட் கொட்டகைகள். பூங்காவிற்கான கட்டணம் இருப்பதிலேயே அதிகம்.
மற்றவை அதை விடக் குறைவு. நாங்கள் ஒரு பூங்காவிற்கு மூவாயிரம் ரூபாய் வீதம் கொடுத்தோம்
– அதில் மூன்று வேளை உணவும் அடக்கம். ஆறாயிரம் ரூபாயில் மூன்று வேளை உணவும், ஒரு
நாள் தங்கவும் – ஐந்து பேருக்கு!
ஞாயிறு, 4 மார்ச், 2018
அசத்தல் ஓவியங்கள் – கலா மேளா – புகைப்பட உலா
Lalit Kala Academy சார்பில்
தலைநகர் தில்லியில் ஃபிப்ரவரி 4 முதல் 18-ஆம் தேதி வரை முதலாம் உலகளாவிய கலா மேளா
நடைபெற்றது. நாடெங்கிலும் இருந்து பல ஓவியர்களும், சிற்பிகளும் வந்திருந்தார்கள்.
தினமும் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நேரம் – என்றாலும் என்னால்
கடைசி தினம் தான் செல்ல முடிந்தது. அன்று நான் பார்த்த சில ஓவியங்கள் மற்றும்
சிற்பங்கள் இதோ உங்கள் பார்வைக்கு – இந்த ஞாயிறில் புகைப்பட உலாவாக….
சனி, 3 மார்ச், 2018
குஜராத் போகலாம் வாங்க – பிஜோரா - கிராமிய சூரிய உதயமும் காலை உணவும்
இரு மாநில பயணம் –
பகுதி – 13
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
சென்ற பதிவில் இரவு உணவு உண்டது
பற்றிச் சொன்னபோது விடுபட்ட ஒரு விஷயம் அங்கே கிடைத்த இனிப்பு ஊறுகாய். அந்த
இனிப்பு ஊறுகாயின் பெயர் Bபிஜோரா! Bபிஜோரா என்பது நம் ஊரில் கிடைக்கும்
நார்த்தங்காய் தான்! ஆனால் அதில் வெல்லம் சேர்த்து ஊறுகாய் செய்கிறார்கள். நன்றாகவே இருந்தது. ரோட்லி என அழைக்கப்படும்
ரொட்டியுடன் இந்த Bபிஜோரா சேர்த்து சாப்பிடப் பிடித்திருந்தது. இங்கே Bபிஜோரா
கிடைத்தால் செய்து பார்க்க வேண்டும். எப்போதாவது தான் கிடைக்கிறது! பார்க்கலாம்.
அப்படிச் செய்தால் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.
வெள்ளி, 2 மார்ச், 2018
எத்தனை நாள் ஆசையோ – சில காணொளிகள்
நடனம் ஆட வேண்டும், பாட்டு பாட
வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என ஒவ்வொருக்கும்
எத்தனையோ ஆசைகள். ”அத்தனைக்கும் ஆசைப்படு!” என யாரும் சொல்லாமலேயே ஆசைப்படுவது
தானே மனித இயல்பு. உதாரணத்திற்கு
நடனத்தினையே எடுத்துக் கொள்ளுங்களேன். சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.
எதிரே ஒரு கல்யாண ஊர்வலம் – கால்களைத் தன்னால் ஆட வைக்கும் ஒரு டோல் இசைக்கிறது!
ஆனால் ”அட சாலையில் இருக்கும்போது ஆட முடியுமா?” என்ற நினைவு வர, நம்மைக் கட்டுப்
படுத்திக் கொள்கிறோம். ஆசைப்பட்டவுடன் ஆட முடிவதில்லை! அப்படி ஒருவர், யாரைப்
பற்றியும் கவலை இன்றி களத்திலிறங்கி ஆடினால் எப்படி இருக்கும்?