இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
பார்வை போகும் தூரம் வரை கடல்.....
தியு கோட்டையிலிருந்து....
தேவாலயத்தினையும் மேரி
மாதாவினையும் தரிசித்த பிறகு நாங்கள் சென்ற அடுத்த இடம் தியுவின் கோட்டை. கடலை ஒட்டியே
அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோட்டை மிகவும் அழகிய கோட்டை. கடலை கோட்டை மேலிருந்து
பார்ப்பது ஒரு அற்புதக் காட்சிதானே…. அங்கே தான் இப்போது நாம் போகப் போகிறோம்.
தியு கோட்டை போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை மற்ற அரசாங்கங்களால்
எடுக்கப்படும் படையெடுப்புகளை – தடுக்க, தங்களை தற்காத்துக் கொள்ள கட்டப்பட்ட
கோட்டை. 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை எனத் தெரிகிறது. இந்தியா
சுதந்திரம் அடைந்து சில வருடங்களுக்குப் பிறகு வரை கூட போர்த்துகீசியர்களின்
கட்டுப்பாட்டிலேயே இருந்திருக்கிறது இந்தப் பகுதி.
காலையில் நடைபயில தால்கட்டோரா
பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். முன்பு
தலைநகரின் ராஜ்பத் என அழைக்கப்படும் ராஜபாட்டையில் இப்படி பின் புறமாகவே நடந்து
செல்லும் ஒரு மனிதரைப் பற்றி எனது பதிவில் எழுதி இருப்பதாக நினைவு. அந்தப்
பதிவினைத் தேடினால் கிடைக்க வில்லை – என்ன தலைப்பு கொடுத்திருப்பேன் என யோசிக்க
வேண்டும்! பின் புறமாக நடப்பதில் ஏதேனும் உபயோகம் உண்டா? இப்போதெல்லாம், எதையாவது
ஒன்றைச் சொன்னால், அதனால் என்ன பலன் என்று கேள்விகள் வருகின்றன. முன் நோக்கி
நடக்காமல், பின்னோக்கி நடப்பதால் அப்படி என்ன பெரிய பலன் இருந்து விடமுடியும்?
பலன் உண்டு என்கிறது இணையம் – நீங்கள் பின்னோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு 100
அடியும், முன் நோக்கி எடுத்து வைக்கும் 1000 அடிக்குச் சமம் என்கிறது இணையம்!
CHசாய்வாலா – அரசியல்
புண்ணியத்தில் இந்த ஹிந்தி வார்த்தை இந்தியா முழுவதும், பட்டிதொட்டிகள், மொழி,
மதம், இனம் என எந்த வித்தியாசமும் இன்றி எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஹிந்தி
வார்த்தையாக மாறி இருக்கிறது. ஹிந்தி மொழியில் பெரும்பாலானவர்களுடன் இந்த “வாலா”
வாலாக ஒட்டிக்கொள்ளும் – கூடா வாலா [குப்பை எடுப்பவர்], DHதூத்DH வாலா [பால்
காரர்], ஆட்டோ வாலா, ரிக்ஷா வாலா, ப்ரெஸ் வாலா [இஸ்திரி செய்பவர்], சப்ஜி வாலா
[காய்கறி விற்பவர்] என பல வாலாக்கள். வாலாக்களுக்கு இங்கே குறைவே இல்லை. எங்கும்
நிறைந்திருக்கிறார்கள் இந்த ஹிந்தி வாலாக்கள்! இன்றைக்கு அப்படி ஒரு வாலாவைத் தான்
நாம் பார்க்கப் போகிறோம்.
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
நாய்தா குகைகளைப் பார்த்த பிறகு
அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் சென்று சேர்ந்த இடம் St. Paul’s Church, Diu!
கிட்டத்தட்ட 408 வருடங்கள் பழமையான தேவாலயம். போர்த்துகீசியர்கள் காலத்தில்
கட்டப்பட்ட இந்த தேவாலயம் இன்றைக்கும் வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. அவர்கள்
காலத்தில் தியுவில் கட்டப்பட்ட பல கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்கள்
சிதிலமடைந்துவிட்டாலும் இன்றைக்கும் நிலைத்து நின்று கொண்டிருக்கும் இந்த St.
Paul’s Church ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. 1601-ஆம் வருடம் கட்ட
ஆரம்பித்து 1610-ஆம் ஆண்டு கட்டி முடித்திருக்கிறார்கள்.இதே சமயத்தில் தான் போர்த்துகீசியர்கள் ஆண்ட
மற்றொரு இந்திய மாநிலமான கோவாவிலும் இதே போன்று ஒரு வழிபாட்டுத் தலத்தினை [Bom
Jesus Basilica, Goa] கட்டி இருப்பதாகத் தெரிகிறது.
சென்ற வாரத்தில் ஒரு நாள் புதிய
பதிவுகள் ஒன்றும் நான் தொடர்பவர்களின் வலைப்பூக்களில் இல்லாததால் என்ன செய்யலாம்
என யோசித்தபோது சரி ஏதாவது புத்தகம் படிக்கலாம் எனத் தோன்றியது. இப்போதெல்லாம்
அச்சடிக்கப்பட்ட புத்தகங்களைப் படிப்பதை விட ஏனோ மின்புத்தகங்களைப் படிக்கப்
பிடித்திருக்கிறது. சில நூல்களை தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். அப்படி
தரவிறக்கம் செய்து வைத்த நூல்களில் ஒன்று தான் சுழலில் மிதக்கும் தீபங்கள். திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களின் நாவல்
இது. WWW.FREETAMILEBOOKS.COM
தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
நாய்தா குகைகள், தியு
குகை வாசலில் நான்....
நாய்தா குகைகள், தியு
கடற்கரையில் இருந்த கங்கேஷ்வர்
கோவிலும், அங்கே அலைகள் அலுப்பில்லாமல், சிவபெருமானுக்குச் செய்து கொண்டிருக்கும்
அபிஷேகத்தினையும் பார்த்த பிறகு தன்னம்பிக்கைப் பெரியவர் Bபவன் அவர்களையும்
பார்த்து பேசிக் கொண்டிருந்து அங்கிருந்து புறப்பட்டோம். குகைக் கோவிலுக்கு
அடுத்ததாக இருந்த எங்கள் இலக்கும் குகைகளாகத் தான் இருந்தது. தியு நகரில்
இருக்கும் புகழ்பெற்ற குகைகளான நாய்தா குகைகளைக் காண்பது என்பது தான் எங்கள்
அடுத்த திட்டம். கோவிலிலிருந்து சிறிது தொலைவிலேயே இருக்கும் இந்த நாய்தா குகைகள்
இயற்கையிலேயே உருவானது என்றும், இல்லை இல்லை கோட்டை கட்டும்போது பாறைகளை
வெட்டியதால் உருவானது என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு – எதுவாக இருந்தாலும்
இப்போது சுற்றுலாத் தலமாக இருக்கிறது!
மணிப்பூர் தலைநகர் இம்ஃபால்
நகரிலிருந்து தில்லி வரை பேருந்திலேயே வருவது சாத்தியமா? கிட்டத்தட்ட 2500
கிலோமீட்டர் தொலைவு! ஆனால் அடிக்கடி இப்படி பேருந்திலேயே தில்லி வரை – வழியில் பல
இடங்களைப் பார்த்தபடியே வரும் சுற்றுலாப் பயணிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
பேருந்தின் மேற்புறத்தில் கட்டியிருக்கும் பொருட்களைப் பார்த்தால் ஒரு மாத
சுற்றுலாவாக வருபவர்கள் போல் தோன்றும். தில்லிக்கு வரும் வழியிலேயே அசாம், மேற்கு
வங்காளம், பீஹார், உத்திரப் பிரதேச மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும்
சென்று கடைசியாக இந்தியத் தலைநகருக்கு வந்து இங்கே சுற்றிப் பார்த்து விட்டு நிறைய
பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.அடிக்கடி இப்படியான சுற்றுலாப் பயணிகள் எங்கள் குடியிருப்பின் அருகே
இருக்கும் Chugh தரம்ஷாலாவில் பார்க்க முடிகிறது.
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
கங்கேஷ்வர் - அலைகள் செய்யும் அபிஷேகம்....
கங்கேஷ்வர் - கோவிலும் கடற்கரையும்....
கங்கேஷ்வர் - அலைகள் செய்யும் அபிஷேகம்....
நாகாவ் கடற்கரையிலிருந்து மனதே
இல்லாமல் புறப்பட்ட நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற இடமும் ஒரு கடற்கரை தான் – அங்கே
ஒரு கோவில்! கோவில் என்றால் நம்ம ஊர் கோவில்கள் மாதிரி கோபுரங்களுடன், மிகப் பெரிய
அளவில் கட்டப்பட்ட கோவில் என நினைத்து விட வேண்டாம். மிகவும் சிறியதாக ஒரு குகை –
அது தான் கோவில்! அந்தக் கோவில் பற்றிய காணொளி ஒன்றை இணையத்தில் பார்த்தபிறகு தான்
இந்தப் பயணம் போக வேண்டும் என்ற எண்ணமே தோன்றியது என்பதையும் சொல்ல வேண்டும். அப்படி
என்ன ஸ்பெஷல் அந்த இடம் – அந்த இடத்தில் நான் எடுத்த காணொளியில் நீங்களே
பாருங்களேன்!
22 ஏப்ரல் – இந்த நாள் எங்கள்
குடும்பத்தினருக்கு ஒரு முக்கியமான நாள் – எங்கள் குடும்பத்தின் தலைவரான அப்பாவின்
பிறந்த நாள். இன்றைக்கு அவருக்கு 80-வது பிறந்த நாள். இந்த நாளும் வரும் எல்லா
நாட்களிலும் அவர் மகிழ்ச்சியுடன் இருக்க எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனை செய்து
கொள்கிறேன்.
எங்கள் அலுவலகத்தில் ஒரு ஓட்டுனர் –
ஆந்திரா – தமிழகத்தின் எல்லை மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கு, தமிழ்
என இரண்டு மொழிகளும் பேசுபவர் – தெலுங்கராக இருந்தாலும்! அவருடைய பணி ரொம்பவே
கடுமையானது. அரசாங்க ஊழியர் தானே, எட்டுமணி நேரம் வேலை செய்தாலே பெரிய விஷயம் என்ற
பொதுக் குற்றச்சாட்டு இவரைப் பொறுத்தவரை சொல்லவே முடியாது. நாளொன்றுக்கு எட்டு மணி
நேரம் ஓய்வு கிடைத்தாலே பெரிய விஷயம். காலையிலேயே பணிக்கு வந்தால், இரவு வெகு
நேரம் வரை – மிகவும் முக்கியமான பொறுப்பில் இருக்கும் அவருடைய அதிகாரி
வீட்டுக்குச் செல்லும்வரை ஓய்வு கிடையாது – அத்தனை நேரமும் பணி நேரம் தான்.
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
நாகாவ் கடற்கரை....
முதல் நாள் இரவு உணவுக்குப் பிறகு
அறை திரும்பும்போதே இரவின் இரண்டாம் பாதி துவங்கி இருந்தது. அறைக்கு வந்து அந்த
நாளின் கணக்கு வழக்குகளைப் பார்த்தபிறகு உறக்கம் தான்! அதிகாலையில் எழுந்திருந்து
அறையைக் காலி செய்து விட்டு தியு நகரத்தினைச் சுற்றிவருவது தான் திட்டம். அதிகாலையில்
எழுந்து தங்குமிடத்தில் தேநீர் கிடைக்குமா எனப் பார்த்தால் எட்டு மணிக்குத் தான்
கிடைக்கும் என்கிறார் சிப்பந்தி! இது சரி வராது, வெளியே சென்று தேநீர் அருந்தலாம்
என புறப்பட்டபோது இரண்டு நண்பர்கள் சேர்ந்து கொண்டார்கள். பொடிநடையாக காலைக்
காற்றைச் சுவாசித்த படி மார்க்கெட் பகுதிக்கு வந்தோம்.
நான் இருப்பது மத்திய அரசுப்
பணியாளர்களுக்கான குடியிருப்பு. இந்தக் குடியிருப்புகளின் பராமரிப்பு அரசுத்துறை
ஒன்றையே சாரும் என்றாலும், அதற்கான பணியாளர்கள் குறைவானவர்களே என்பதால், தனியார்
Contractors மூலம் தான் பல விதமான பரமாரிப்புப் பணிகளைச் செய்வார்கள். இந்த
Contractor-களிடம் வேலை செய்வது பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்த பணியாளர்கள் –
பெரும்பாலும் குடும்பத்துடன் வேலைகளைச் செய்ய வந்துவிடுவார்கள். இந்த பணியாளர்களை
Contractor-கள் அரசின் காலி இடம் ஒன்றிலேயே தங்க வைத்திருந்தார்கள். சின்னச்
சின்னதாக Tent-களாக இருந்த தங்குமிடங்கள், மண்குடிசைகளாக மாறி, செங்கல்
சுவர்களோடு, மேலே தகர ஷீட் போட்ட வீடுகளாக மாறி விட்டன.
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
தங்குமிடம் சென்று உடைமைகளை வைத்து
குளித்த பிறகு இரவு உணவிற்காக விசாரித்த போது, ”முதலிலேயே சொன்னால் தான்
கிடைக்கும் – நீங்கள் வந்ததே நேரம் கழித்து என்பதால் வெளியே சாப்பிடுங்கள், நிறைய
உணவகங்கள் உண்டு” என்று சொல்லி விட்டார் தங்குமிடச் சிப்பந்தி. சரி வெளியே சென்று
சாப்பிடலாம் என தங்குமிடத்திலிருந்து முக்கிய வியாபார வீதிக்கு வந்தோம். வீதியே
களை கட்டியிருந்தது. சுற்றுலா வந்தவர்களும், அண்டை மாநிலமான குஜராத்திலிருந்து
வாரா வாரம் இங்கே வருபவர்களும் என கடை வீதியே களை கட்டியிருந்தது. குஜராத்திற்கும்
தியுவிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு – அது மதுவிற்கான தடை.
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
சோம்நாத்திலிருந்து தியு....
வரைபடம் - இணையத்திலிருந்து....
சென்ற பகுதியினை முடிக்கும் போது
இப்படி முடித்திருந்தேன். அன்றைய இரவு சோம்நாத் நகரில் தங்குவதாக எங்கள் திட்டத்தில்
இல்லை. அங்கிருந்து சுமார் 85 கிலோமீட்டர் தொலைவுள்ள ஒரு இடத்திற்குச் சென்று
அங்கே தங்குவதாகத் திட்டம். சோம்நாத் நகரிலிருந்து 06.45 மணிக்குப் புறப்பட்டோம்.
சரியாகச் சென்றிருந்தால் 08.00 மணிக்குள் எங்கள் இலக்கை அடைந்திருகலாம். ஆனால்
திட்டமிட்டபடி செல்ல முடிந்ததா? பயணித்தபோது சந்தித்தது என்ன என்பதை அடுத்த
பகுதியில் சொல்கிறேன்.
காவிரி ஆறு – நீர் பங்கீடு.
அரசியலாக்கப்பட்ட ஒரு விஷயம். இதைப் பற்றி ஒன்றும் சொல்வதிற்கில்லை. நதியை வைத்து
நன்றாக அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள் - கட்சி பாகுபாடின்றி அனைத்து
அரசியல்வாதிகளும்!
கடல் – பார்க்கப் பார்க்கத்
திகட்டாத ஒரு விஷயம் – கடல்! அலுப்பு சலிப்பில்லாமல் தொடர்ந்து கரையைத் தொடும்
அலைகள்! எத்தனை முறை தோற்றாலும், மீண்டும் மீண்டும் முயற்சியைத் தொடர வேண்டும் என
அறிவுறுத்தும் அலைகள்! கடலும் அலைகளும் மிகவும் பிடித்த விஷயம். எத்தனை நேரம்
வேண்டுமானாலும் இந்த அலைகளையும் கடலையும் பார்த்தபடியே – அதுவும் தனிமையில் –
இருக்க எனக்குப் பிடிக்கும். கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, மஹாபலிபுரம்,
திருவனந்தபுரம், கன்னியாகுமரி, தியு, விசாகப்பட்டினம், குஜராத், ஒடிசா என ஊர்
ஊராக, மாநிலம் மாநிலமாகச் சென்று கடலைப் பார்த்திருந்தாலும், ஏனோ அலுக்காத ஒரு
விஷயம் என்றால் அது கடல் – இரண்டாவது மலைகள்…..
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
சோம்நாத் கோவில் - சூரியாஸ்தமன வேளையில்....
த்வாரகாதீஷ் நகரில் கிருஷ்ணரை
தரிசித்த பிறகு போர்பந்தர் வழியாக வந்து சேர்ந்த இடம் முதலாம் ஜோதிர்லிங்க ஸ்தலமான
சோம்நாத். மாலை நேரத்தில் வந்து சேர்ந்து வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தினை
நிறுத்தி சற்றே நடந்து செல்ல வேண்டியிருக்கும். பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் என்பதால்
கேமரா, மொபைல் போன்றவற்றிற்கு அனுமதி இல்லை. எல்லாவற்றையும் வாகனத்திலேயே வைத்து
விட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும். வாகன நிறுத்தத்திலிருந்து நடந்து வந்து
பாதுகாப்புச் சோதனைகளை முடித்துக் கொண்டு கோவில் வளாகத்திற்குள் நுழைந்தோம். நல்ல
பெரிய கோவில் இது.
காலை நேரம் பூங்காவில் நடப்பது
பற்றி எழுதி இருந்தேன். ஒவ்வொரு நாளும் ஏதேனும் புதிய விஷயம் பார்க்க/கேட்க
கிடைக்கிறது. ஒரு நாள் பார்த்தால், பூங்காவினுள் தேநீர்/சமோசா விநியோகம் நடந்து
கொண்டிருந்தது. இரண்டு மூன்று குழுக்கள் இங்கே நடப்பதுண்டு – குழுவில் உள்ளவர்கள்
அனைவருமே ஒரே சமயத்தில் பூங்காவிற்கு வந்து நடப்பது வழக்கம். ஒரு குழிவின்
உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு இடத்தில் கடை வைத்திருப்பவர்கள் என்றால், மற்றொரு
குழுவினர் வக்கீல்கள்! இந்த குழுவினர் அனைவருமே நடந்து முடித்த பிறகு, பூங்காவில்
அமர, சமோசா/தேநீர் விநியோகம் நடக்கிறது. காகிதத் தட்டுகளில் சமோசா, நெகிழி
கோப்பைகளில் தேநீர்! சாப்பிட்டு, குப்பையை போட்டுப் போகிறார்கள்.எனக்கு ஒரு சந்தேகம் – இவங்க நடக்க வந்தாங்களா
இல்லை சாப்பிட வந்தாங்களா?
ஃபேஸ்புக் – இதனால் பெரிதாக என்ன
பயன்? பலரும் இதைத் தவறாகவே பயன்படுத்துவதாக ஒரு கருத்துண்டு. எனக்கும் கூட இதில்
பெரிதாக ஈடுபாடு இருப்பதில்லை. தினமும், எனது வலைப்பூவில் பதிவு வெளியானவுடன்,
அதற்கான இணைப்பினை இங்கே கொடுத்து சில நிமிடங்கள் அங்கே செலவிட்டு, அன்றைய தினம்
பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி, சில பல லைக்குகளை
போட்டு விட்டு அங்கிருந்து நகர்வதே வழக்கமாக இருக்கிறது! ஒரு நாளைக்கு அதிக
பட்சமாக இங்கே செலவிடுவது நிமிடங்களில் மட்டுமே! ஆனால் சிலர் இங்கேயே மூழ்கிக்
கிடக்கிறார்கள் – குறிப்பாக அவர்கள் எழுதுகிறார்களோ இல்லையோ, அடுத்தவர்கள்
எழுதுவதை ஷேர் செய்கிறார்கள் – இல்லை காப்பி செய்து தன் பக்கத்தில், தானே எழுதியது
போல வெளியிடுகிறார்கள்!
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
பயணித்த பாதை.....
காந்திஜி பிறந்த மண்ணான
போர்பந்தரிலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் அடுத்த இலக்கான சோம்நாத் நோக்கிச்
சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பயணமும் தேசிய நெடுஞ்சாலை வழி
இல்லாது மாநில நெடுஞ்சாலை வழி தான். வழியில் இருக்கும் கிராமங்கள், கிராமிய
மனிதர்கள் எனப் பார்த்தபடியே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். பெரும்பாலும்
ஒட்டுனருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து தான் நான் பயணிப்பது வழக்கம் – என்
உயரம் அதிகமென்பதால் அந்த இருக்கை தான் கால்களை நீட்டிக்கொள்ள வசதி – வேறு சில
தொல்லைகள் இருந்தாலும், இந்த முன்னிருக்கையில் இருக்கும் இன்னுமொரு பயன் –
பயணித்தபடியே படங்கள் எடுப்பது சுலபம்! எனது பயணங்களில் இப்படி எடுத்த
புகைப்படங்கள் சில வெகுவும் சிறப்பாக அமைந்ததுண்டு.
பயணித்த பாதைகளில் தென்னந்தோப்பு.....
முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டு
ஓட்டுனரிடம் பேசிக்கொண்டே போவதிலும் ஒரு வசதி – அவரை பேச விட்டு, நிறைய கதைகள்
கேட்டுக்கொள்ளலாம். முகேஷ் ராஜஸ்தான் மாநிலத்தினைச் சேர்ந்தவர் – பணிபுரிவது
குஜராத் மாநிலத்தில் என்றாலும் ராஜஸ்தானி! குஜராத்தி, ராஜஸ்தானி, ஹிந்தி என இரண்டு
மூன்று மொழிகள் தெரிந்து வைத்திருக்கிறார். இப்படியான டூரிஸ்ட் ஓட்டுனர்களுக்கு
நிறைய அனுபவங்கள் கிடைக்கின்றன. அதைக் கேட்க எனக்கும் ஸ்வாரஸ்யம் உண்டு. பல
விஷயங்களை, அவரைப் பேசவைத்து, கேட்டுக் கொண்டே வருவதில் ஒரு ஸ்வாரஸ்யம். பின்
இருக்கையில் இருந்த மலையாள நண்பர், “விக்ஸ்” வேண்டுமென்று கேட்க, பேச்சு ஜலதோஷம்
பற்றித் திரும்பியது!
உழைப்பாளி.....
பயணித்த பாதையில்.....
இதுக்கு நல்ல மருந்து விஸ்கி தான்
என்றார் ஓட்டுனர் முகேஷ். அதுவும் சாதாரண விஸ்கி அல்ல! டிக்ரி என அழைக்கப்படும்
மண் பானையின் ஒரு சிறு துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும், அதனை நெருப்பில் காட்டி,
நன்கு சிவந்ததும் [Red Hot!], அந்தத் துண்டை ஒரு இடுக்கியில் பிடித்து எடுத்து,
கொஞ்சமாக டம்ளரில் ஊற்றி வைத்திருக்கும் விஸ்கியில் ஒரு முக்கு! டிக்ரியை எடுத்து
வீசி விட்டு, அந்த விஸ்கியைக் குடித்தால் ஜலதோஷம் போகும் – “மாயமில்லை,
மந்திரமில்லை! போயே போச்சு, போயிந்தி, இட்ஸ் கான்!” என்று உற்சாகக் குரல்
கொடுக்கலாம்! எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குக் கூட இப்படியான மருத்துவம் – விஸ்கி
அளவு மட்டும் குறையும் – செய்வதுண்டு என்றார் முகேஷ்! நல்ல மருத்துவம்!
பயணித்த பாதை.....
திருபாய் அம்பானியின் வீடு - பின்புறம்....
போர்பந்தரிலிருந்து நாங்கள்
புறப்பட்டபோது மணி 02.40. வழியில் ஓரிடத்தில் நிறுத்தி ஹானஸ்ட் என்ற உணவகத்தில்
தேநீர் அருந்தினோம். அந்த உணவகத்திலிருந்து புறப்பட்டு கிராமங்கள் வழியாகவே
சோம்நாத் சென்றடைய வேண்டும். செல்லும் வழியில் ஒரு சிற்றூர் – பெயர் chசோர்வாட்d!
ரொம்பவும் சிறிய ஊராக இருந்தாலும், இந்த இடம் மிகவும் புகழ்பெற்ற பிஸினெஸ்
மேக்னெட்-ஆக உயர்ந்த திருபாய் அம்பானியின் ஊர்! இப்போதும் இங்கே அவர்களுடைய ஒரு
வீடு இருக்கிறது. இங்கே தான் திருபாய் அம்பானி பிறந்து வளர்ந்தார். நாங்கள் சென்ற
சாலை மாளிகையின் பின்புறம். முன்புறம் சென்றால் அவரது பெயரில்
அமைக்கப்பட்டிருக்கும் நினைவிடம் இருக்கிறது. வெளியிலிருந்து புகைப்படம் எடுத்துக்
கொள்ள வேண்டும் என நண்பர்கள் அங்கே இறங்கி புகைப்படம் எடுத்தார்கள். எனக்கென்னமோ
எடுக்கப் பிடிக்கவில்லை. அதனால் நான் வாகனத்திலேயே இருந்தேன்.
பாரம்பரிய உடையில் மூதாட்டி.....
பயணித்த பாதை - ஒரு காணொளி.....
சோர்வாட் கிராமத்தினையும் கடந்து,
சோம்நாத் சென்றடைந்த போது மாலை நேரம். அத்தனை கூட்டம் இல்லை. நிம்மதியான தரிசனம்
கிடைக்கும் என்ற ஆசையுடன் வாகன நிறுத்தத்தில் வாகனத்தினை நிறுத்தினோம். இந்தக்
கோவிலில் கேமரா, மொபைல், தோல் பொருட்கள் [பெல்ட் போன்றவை] ஆகியவற்றே உள்ளே
எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வாகனத்திலேயே வைக்க வேண்டும், இல்லை எனில் அதற்கான
பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும். நாங்கள் வாகனத்திலேயே வைத்து விட்டுக் கோவிலை
நோக்கிச் சென்றோம். ஆனால் புகைப்படம் எடுக்க வேண்டுமே. அதனால் கோவிலுக்குள் சென்று
தரிசனம் செய்த பிறகு மீண்டும் ஒரு முறை கேமராவுடன் கோயில் வாசலுக்கு வர வேண்டும்.
கேடியா உடையில் முதியவர்.....
பன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்களுக்குள்
முதலாம் இடம்பெறுவது சோம்நாத். அரபிக்கடலின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும்
இக்கோவில் இயற்கைச் சீற்றங்களினாலும் அன்னிய படையெடுப்புகளினாலும் பல முறை
சிதைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட
இக்கோவிலின் தற்போதைய வடிவம் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல்
அவர்களின் முயற்சியால் சீரமைக்கப்பட்டது. சோம்நாத் கோவில் தரிசனம் எப்படி
இருந்தது, அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதைப் பற்றி அடுத்த பகுதியில்
சொல்கிறேன்.
வலையுலகின் தொடர் பதிவு போல,
முகப்புத்தகத்திலும் அவ்வப்போது ஏதாவது வந்து கொண்டிருக்கிறது – பத்து
வருடத்துக்கு முன்னாடி எப்படி இருந்தீர்கள் என புகைப்படம் பகிரும் பலரை இப்போது
பார்க்க முடிகிறது. அப்படி ஒரு தொடர் தான் இந்த ஏழு நாட்கள் ஏழு புத்தகங்கள்.
நாள் -1; புத்தகம்-1:
இப்பொதெல்லாம் முகப்புத்தகத்தில்
எழுதுவதே இல்லை. என்னுடைய வலைப்பதிவின் சுட்டியைத் தந்து விட்டு ஒரே ஓட்டம்! நேரம்
இல்லை என்பது மட்டுமல்லாது, முகப்புத்தகம் அலுத்து விட்டது.
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
நேற்று காலை ஐந்தாவது புகைப்படப்
புதிராக இரண்டே இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம். அந்த
இரண்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடம், அவை என்ன என்பதை இன்றைக்குப்
பார்க்கலாம்.
31 ஜனவரி 2018 – சந்திர கிரஹணம் –
Super Blue Blood Moon என பரபரப்பாக பேசப்பட்ட சந்திர கிரஹணம் சமயத்தில்
திருவரங்கத்தில் இருந்தேன். என்னிடம் இருக்கும் கேமராவைக் கொண்டு சந்திர கிரஹணப்
படங்களை, என்னால் சிறப்பாக எடுக்க முடியாது என்பது தெரியும் – இருந்தாலும் அலைபேசியிலேயே
சிலர் எடுத்துக் கொண்டிருக்க, முயற்சி செய்து பார்க்கலாம் என எடுத்த சில படங்கள்
என்னிடம் இருந்தன. இத்தனை நாட்களாக அதை பகிர்ந்து கொள்ளவே இல்லை. இந்த ஞாயிறில்
புகைப்பட உலாவாக பகிர்ந்து கொள்கிறேன். முதல் படம் கிரஹணத்திற்கு முன்னர் மாலையில்
எடுத்த படம். மற்ற படங்கள் கிரஹணத்தின் போது எடுத்தவை.
Canon DSLR 55-250 mm Zoom lens
வைத்து எடுத்த படங்கள் இவை. கைதேர்ந்த புகைப்படக்காரராக இருந்தால் இன்னும்
சிறப்பாக எடுத்திருக்கலாம். எனக்குத் தெரிந்தவரை எடுத்தேன்.
என்ன நண்பர்களே, புகைப்படங்களை
ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
நாகேஷ்வர் - பிரம்மாண்ட சிவன் சிலை....
Bபேட்t த்வாரகாவிலிருந்து
புறப்பட்ட நாங்கள் அடுத்ததாய் சென்று சேர்ந்த இடம் நாகேஷ்வர்! பன்னிரெண்டு
ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் இந்த நாகேஷ்வர் எனும் இடமும் ஒன்று. இந்த இடத்திற்கு
நிறைய புராணக் கதைகள் உண்டு. இந்த இடமும் எனது முதல் குஜராத் பயணத்தில்
சென்றதுண்டு. அது பற்றி எழுதியும் இருக்கிறேன் என்பதால் கோவில் பற்றிய முழு
விவரங்களை இங்கே எழுதப் போவதில்லை. அப்பதிவின் சுட்டி மட்டும் கீழே தருகிறேன்.
அனைவரும் படிக்கலாம்! தேவதாரு மரங்கள் அடர்ந்த இப்பகுதியில் இருக்கும் கோவில்
மிகவும் சிறப்பான ஒன்று. நாங்கள் சென்றபோது அத்தனை கூட்டம் இல்லை என்பதால்
நிம்மதியான தரிசனம். சில நிமிடங்கள் நின்று நிதானித்து தரிசனம் செய்து வெளியே
வந்தோம். கோவில் பற்றிய ஒரு சிறு கதை மட்டும் இங்கே….
களி, கஞ்சி, அடை என்று சுவைத்திருந்தாலும்
கூழ் இதுவரை குடித்ததில்லை. தோழியிடம் கேட்டதில் தகவல்கள் கிடைத்தன. இன்று செய்தாச்சு.
மகள் கம்பெனி கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள்! அவளுக்கு தோசையை வார்த்து கொடுத்து
விட்டு, நானே நானாக ஒரு கடி! ஒரு குடி!! என கூழை காலி செய்தேன். சுவையும் ஜோர். வயிறும்
நிறைந்தது.