தொகுப்புகள்

ஞாயிறு, 31 மார்ச், 2019

வாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி இரண்டு



வாரணாசி – பழமையான நகரம். என்னதான் பழமையின் பிடியில் இருந்தாலும் சமீப காலங்களில் முன்னேற்றத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்ற முறை சென்ற போது பார்த்த ஊருக்கும், இப்போது பார்த்த ஊருக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. ஊரின் இரயில் நிலையம் சிறப்பாக இருக்கிறது இப்போது. புதிய ஒரு இரயில் நிலையமும் எல்லா வித வசதிகளுடனும் திறந்திருக்கிறார்கள். பல இடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன என்றாலும், மக்களும் அரசுடன் சேர்ந்து சுத்தமாக வைத்திருக்க தங்கள் பங்காக உழைக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னமும் இந்த விஷயத்தில் மக்கள் மெத்தனமாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

சனி, 30 மார்ச், 2019

காஃபி வித் கிட்டு – தொக்கு – சேச்சா – ஹம்சஃபர் - ஸ்ரவாணி


காஃபி வித் கிட்டு – பகுதி – 26

சாப்பிட வாங்க – பச்சைக்கத்திரிக்காய் தொக்கு….

எங்கள் பிளாக் ”திங்க” கிழமை பதிவாக கீதாஜி எழுதியிருந்த வழுதநஞ்சா தொக்கு பார்த்த ஒன்றிரண்டு நாட்களில் எங்கள் பகுதி காய்கறி மார்க்கெட்டில் இந்த வகை நீண்ட பச்சை நிற கத்தரிக்காய் கிடைத்தது. 

வெள்ளி, 29 மார்ச், 2019

மூடப்படும் அரசுப் பள்ளிகள் – நினைவுகளைத் தேடி – மூன்று


சமீபத்தில் எனது பிறந்த/வளர்ந்த ஊரான நெய்வேலி நகருக்கு ஒரு நாள் பயணமாகச் சென்று வந்ததைப் பற்றி இதற்கு முன்னர் எழுதிய நினைவுகளைத் தேடி பதிவுகளின் சுட்டி கீழே.

நினைவுகளைத் தேடி – ஒன்று இரண்டு

வியாழன், 28 மார்ச், 2019

சாப்பிட வாங்க – அம்ரூத் கி சட்னி




தோசையும் தொட்டுக்கொள்ள அம்ரூத் கி சட்னியும்


’தம்பி டீ இன்னும் வரல! வடிவேலு அவர்களின் புகழ்பெற்ற வசனம்! பலமுறை நானும் பயன்படுத்தி இருக்கிறேன். இந்த மாதிரியே “சட்னி இன்னும் வரல!” என்று சொல்ல வேண்டி இருந்தது திருமதி சுஜாதா அவர்களிடம்! சமீபத்தில் தான் ஒரு புதிய சமையல் குறிப்பினை எங்கள் குழுவில் பகிர்ந்து கொண்டார் அவர். செய்முறையை எழுதி அனுப்பச் சொல்லி இருந்தேன். அவருக்கு இருக்கும் பணிச்சுமையில் எழுதி அனுப்பவே இல்லை. இணையத்தில் ஒரு செய்முறை கிடைக்க, அந்த முறையில் செய்து பார்த்தேன். நன்றாகவே இருந்தது. என்றாலும், அவர் சொல்லும் முறை என்ன என்பதைக் கேட்டு இங்கே வெளியிட நினைத்ததால், மீண்டும் அவரைக் கேட்க, செய்முறையை அனுப்பி வைத்தார். அந்த குறிப்பு தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போவது! 

புதன், 27 மார்ச், 2019

வில்லுடையான்பட்டு கோவில், நெய்வேலி – நினைவுகளைத் தேடி – இரண்டு


சமீபத்தில் எனது பிறந்த/வளர்ந்த ஊரான நெய்வேலி நகருக்கு ஒரு நாள் பயணமாகச் சென்று வந்ததைப் பற்றி இதற்கு முன்னர் எழுதிய பதிவின் சுட்டி கீழே.

திங்கள், 25 மார்ச், 2019

இந்த நாள் இனிய நாள்!!



அம்மா இரவே சர்ப்ரைஸாக செய்து வைத்திருக்கும் இனிப்புடன், இரவே வைத்துக் கொண்ட மருதாணிக் கைகளுடன் தான் விடியும் என் பிறந்த நாட்கள். புத்தாடை வருடத்துக்கு ஒன்றே! அதுவும் தீபாவளிக்கே! புத்தாடை இல்லையென்றாலும் என் மகிழ்ச்சிக்கு குறைவு இருந்ததில்லை :)

சனி, 23 மார்ச், 2019

காஃபி வித் கிட்டு – தண்டாய் - பதிவர் அறிமுகம் – திண்ணை – நாலு பேருக்கு ஒரு படுக்கை



காஃபி வித் கிட்டு – பகுதி – 25

சாப்பிட வாங்க – தண்டாய்….


இந்த வாரத்தில் தான் வட இந்தியர்கள் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார்கள். ஹோலி மற்றும் சிவராத்ரி சமயத்தில் இங்கே தயாரித்து அருந்தும் ஒரு பானம் தான் தண்டாய்… இதிலே பாங்க் எனப்படும் பதார்த்தம் கலக்காமல் கொழுப்பு சத்து நிறையந்த பால், குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா, முந்திரி, வெள்ளரி விதைகள், கசகசா, ஏலக்காய், சோம்பு என பலவிதமான பொருட்களைச் சேர்த்து செய்யப்படும் இந்த தண்டாய் உடம்பிற்கு மிகவும் நல்லது. ஹோலி மற்றும் சிவராத்ரி சமயத்தில் வீடுகளில் செய்து பருகுவார்கள். தில்லி போன்ற நகரங்களில் கடைகளிலும் கிடைக்கிறது. இந்த தண்டாய் தயாரிக்க பொடிகளும் கிடைக்கிறது – அதை வாங்கி சூடான பாலில் கலந்து அருந்தலாம்.  நான் கடையில் தான் பருகினேன். எப்படிச் செய்வது என்பதை பார்க்க நினைத்தால் இங்கே பார்க்கலாம்! காணொளியாக எனில் ஹிந்தியில் இங்கே இருக்கிறது!

வெள்ளி, 22 மார்ச், 2019

பீஹார் டைரி – புத்த கயா – மஹா போதி ஆலயம்



புத்தகயா என்று தமிழில் நாம் சொன்னாலும்/எழுதினாலும் இந்த இடத்தினை Bபோத்dh Gகயா என்று தான் அழைக்க வேண்டும். இந்த Bபோத்dh Gகயாவில் தான் புத்தர் போதி மரத்தின் கீழே அமர்ந்து ஞானத்தினை அடைந்தார் என்பது வரலாறு. முழுமையாக வரலாறு பற்றி இங்கே சொல்லப் போவதில்லை. தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள சுட்டியில் தகவல்களை படித்து அறிந்து கொள்ளலாம்.

புதன், 20 மார்ச், 2019

ஆனந்தம்! விவேகானந்தம்! - பத்மநாபன்




இந்த வருடம் ஆரம்பித்ததுமே இரண்டு மகிழ்வு தரும் செய்திகள் என் காதினிலே வந்து விழுந்தன. முதலாவது செய்தி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவிற்கு 'காந்தி அமைதி விருது' அதன் கிராமப்புற முன்னேற்றம் மற்றும் கல்விப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது அதே விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் திருப்பதி தேவஸ்தானம் வெங்கடாசலபதி திருக்கோவில் அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செவ்வாய், 19 மார்ச், 2019

கதம்பம் – சீனா ஐயா - உயிரின் மதிப்பு - பாவ் பாஜி –– இலை வடாம் - ஜீயர்புரம்

சீனா ஐயா – 16 மார்ச் 2019



வலைச்சரம் என்ற தளத்தில் பல பதிவர்களை ஆசிரியராக்கி சிறப்பித்தவர். என்னையும் மூன்று முறை ஆசிரியராக அமர்த்தியவர். வை.கோபாலகிருஷ்ணன் சார் ஒருமுறை ஐயாவைவும், அவரது துணைவியையும் எங்கள் இல்லத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்.

திங்கள், 18 மார்ச், 2019

பீஹார் டைரி – புத்த கயா – தி க்ரேட் புத்தா மற்றும் சில தலங்கள்


80 அடியில் ஒரு அமைதிப்பார்வை...

புத்த கயா சென்ற போது முதன்மையான மஹாபோதி புத்தர் கோவிலுக்குச் செல்லும் முன்னர் ஒரு பேட்டரி ரிக்‌ஷாவில் பல நாடுகளிலுள்ள புத்த சமயத்தினர் புத்தருக்கு ஞானம் கிடைத்த ஸ்தலமான புத்தகயாவில் அமைத்திருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வந்தோம் என்பதை தாய்லாந்து கோவில் பதிவில் சொன்னது நினைவில் இருக்கலாம். இன்றைக்கு அப்படிப் பார்த்த சில வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அங்கே கிடைத்த தகவல்கள், அனுபவங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

ஞாயிறு, 17 மார்ச், 2019

ஐம்புலன்களுக்கு விருந்து – நிழற்பட உலா – பகுதி நான்கு



தலைநகரின் சாகேத் பகுதியில் உள்ள பூங்காவில் [Garden of Five Senses] நடந்த தோட்டத் திருவிழா சென்ற போது எடுத்த நிழற்படங்களின் நான்காவது தொகுப்பு இதோ இந்த வார ஞாயிறில். இப்பூங்காவில் எடுத்த படங்களின் கடைசி பகுதி இது. இன்னும் நிறைய படங்கள் உண்டு. அவற்றைக் காண விருப்பம் இருப்பவர்கள் காண, கீழே தொகுப்பின் சுட்டியைத் தந்திருக்கிறேன்.

சனி, 16 மார்ச், 2019

வெள்ளி, 15 மார்ச், 2019

பீஹார் டைரி – புத்தகயா - தாய்லாந்து கோவில் – நாளொரு உண்டியல் – நாளொரு பலன்




எங்கள் பீஹார் பயணத்தில் முக்கியமாக நாங்கள் பார்க்க நினைத்த ஒரு இடம் என்றால் அது புத்தகயா. புத்தருக்கு ஞானம் பிறந்த இடம். அங்கே அமைந்திருக்கும் புத்தர் வழிபாட்டுத் தலம் ரொம்பவே சிறப்பானது. புத்தகயாவில் பார்க்க வேண்டிய இடங்கள் என நிறையவே இருக்கிறது. புத்த மார்க்கத்தினை தழுவிய பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள். 

புதன், 13 மார்ச், 2019

பீஹார் டைரி – நாளந்தா – கருப்பு புத்தரும் வெள்ளை மஹாவீரரும்


கருப்பு புத்தர்!

நாளந்தா அழிவுச் சின்னங்களைக் காணச் சென்ற போது கூடவே அதன் எதிர்புறத்தில் இருந்த அருங்காட்சியகமும் பார்த்து வந்ததைப் பற்றி எழுதி இருந்தேன். நாளந்தா அருகில் இன்னும் பல இடங்கள் – சில பழையவை, சில புதியவை இருக்கின்றன. அப்படிப் பார்த்த இரண்டு இடங்கள் தான் இந்தப் பதிவில் சொல்லப் போகிறேன். முதலில் மஹாவீரரைப் பற்றிப் பார்க்கலாம்.

செவ்வாய், 12 மார்ச், 2019

கதம்பம் – ஃப்ரூட் புட்டிங் – நாளும் தாம்பூலம் – மெஹந்தி – அஞ்சாங்கல் ஆட்டம்



சாப்பிட வாங்க – ஃப்ரூட் புட்டிங் – 8 மார்ச் 2019



மகளிர் தினம் ஸ்பெஷலாகச் செய்த ஃப்ரூட் புட்டிங்…. சாப்பிடலாம் வாங்க!

திங்கள், 11 மார்ச், 2019

பீஹார் டைரி – நாளந்தா – அருங்காட்சியகம்



நாளந்தாவின் அழிவுச் சின்னங்களைப் பார்த்த கையோடு அந்த இடத்தின் எதிர் பக்கத்தில் இருந்த அருங்காட்சியகத்தினையும் பார்க்கச் சென்றோம். நுழைவாயில் அருகிலேயே மிகப் பிரம்மாண்டமான மணி ஒன்று நம்மை வரவேற்கிறது. இத்தனை பெரிய மணியை வேறு எங்கும் பார்த்ததில்லை. அந்த மணியை சிறப்பான மண்டபத்தில் தொங்க விட்டு அப்பக்கத்தில் சிறு பூங்காவினையும் அமைத்திருக்கிறார்கள். அதனைப் பார்த்தபடியே அருங்காட்சியகத்திற்குள் நுழைவதற்கான நுழைவுச் சீட்டினை வாங்கிக் கொண்டு உள்ளே செல்கிறோம்.

ஞாயிறு, 10 மார்ச், 2019

ஐம்புலன்களுக்கு விருந்து – நிழற்பட உலா – பகுதி மூன்று



தலைநகரின் சாகேத் பகுதியில் உள்ள பூங்காவில் [Garden of Five Senses] நடந்த தோட்டத் திருவிழா சென்ற போது எடுத்த நிழற்படங்களை இரண்டு வாரங்கள் மட்டுமே வெளியிட நினைத்திருந்தேன். ஆனாலும், பல படங்களை ஒரே பதிவில் வெளியிடுவது சரியல்ல, சாத்தியமும் இல்லை. 

வெள்ளி, 8 மார்ச், 2019

மங்கையராய் பிறக்க மாதவம்!




மாலை வேளை என் மகளின் டிவி நேரம். அதில் அவள் ஒரு மழலைகளின் தொடரை பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் தேநீரை பருகிக் கொண்டே அவளுடன் பார்த்துக் கொண்டிருந்த போது அதில் ஒரு காட்சி....  இந்த வருடத்தின் விடுமுறை வேலையாக ஆசிரியர் என்ன தரப் போகிறார் என வகுப்பில் உள்ள மாணவர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆசிரியர் இந்த முறை வித்தியாசமாக அவரவர் வீட்டில் இல்லாமல் சக நண்பரின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அவர்களின் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்ளச் சொல்கிறார். மாணவர்களும் ஆசிரியர் சொல்வது போல் செய்கின்றனர். மற்றவரின் வீட்டு விதிமுறைப்படி இருக்க முடியாமல் திணறிப் போகின்றனர். இதை நகைச்சுவையாக காட்டியிருந்தனர்.

வியாழன், 7 மார்ச், 2019

சாப்பிட வாங்க – Bபப்பா Dhதொய் மற்றும் ரப்டி




எனக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். எல்லா வித இனிப்புகளையும் ஒரு கை பார்ப்பது வழக்கம். அவ்வப்போது வீட்டிலும் செய்து பார்த்து விடுவேன். ஒவ்வொரு முறை தில்லிக்கு இரயிலில் செல்லும் போதும் மிஷ்டி dhதொய் சாப்பிடுவது வழக்கம். சமீபத்தில் இந்த மிஷ்டி dhதொய் மாதிரியே இன்னுமொரு இனிப்பு பதார்த்தம் பார்த்தேன். எனக்குப் புதிதான அந்த பெங்காலி பதார்த்தம் செய்யும் முயற்சியில் இறங்கினேன்.  முகநூலில் இந்த இனிப்பினை செய்து பார்க்க முயற்சி செய்யும் முன்னர் ”நன்றாக வந்தால் பகிர்கிறேன்..:)) செய்து முடிக்கும் வரை என்னவாக இருக்கும் என்று சொல்லுங்க பார்ப்போம்...:)) சரியாக சொல்பவர்களுக்கு அதில் பங்கீடு உண்டு!! நன்றாக வந்தாலும்!!” என்று எழுதி இருந்தேன்.

புதன், 6 மார்ச், 2019

பீஹார் டைரி – நாளந்தா – எரிந்த நூலகம் - அழிவின் சின்னங்கள்



நாளந்தா - அழிவின் சின்னங்கள்...

பீஹார் டைரி என்ற குறிப்போடு பதிவுகள் எழுதி நிறைய நாளாயிற்று! தொடராக எழுதாமல் இப்படி தனித்தனி பதிவுகளாக எழுதுவதில் ஒரு வசதி. Continuity விட்டுப் போய்விடுமே என்ற கவலையில்லை! முடிந்தால் எழுதலாம் இல்லையென்றால் விட்டு விடலாம்! இதோ இன்றைக்கு ஒரு பீஹார் டைரி பதிவுடன் உங்களைச் சந்திக்க வந்தாயிற்று. கடைசியாக எழுதிய பீஹார் டைரி பதிவு – வெந்நீர் ஊற்று – குதிரை வண்டி பயணம்! – எழுதிய நாள் ஜனவரி 21! என்னே எனது சுறுசுறுப்பு! சரி வாருங்கள், இன்றைய பீஹார் டைரி பதிவுக்குப் போகலாம்.

செவ்வாய், 5 மார்ச், 2019

கதம்பம் – மேத்தி பூரி – நட்பு – நீட் கோச்சிங் – ஹரே ராமா – கென்யா காஃபி



சாப்பிட வாங்க – மேத்தி பூரி – 27 ஃபிப்ரவரி 2019


Hebbar's kitchen தளத்தில் பார்த்து செய்த மேத்தி பூரி ஆலு சப்ஜியுடன்! வெந்தயக்கீரையை மேத்தி என்று ஹிந்தியில் சொல்வார்கள். உருளைக்கிழங்கை ஆலூ என்று சொல்வார்கள். சாப்பிடலாம் வாங்க!

திங்கள், 4 மார்ச், 2019

ஞாயிறு, 3 மார்ச், 2019

ஐம்புலன்களுக்கு விருந்து – நிழற்பட உலா - பகுதி இரண்டு




சென்ற ஞாயிறன்று தலைநகரின் சாகேத் பகுதியில் உள்ள பூங்காவில் [Garden of Five Senses] நடந்த தோட்டத் திருவிழா சென்ற போது எடுத்த நிழற்படங்களின் முதல் பகுதியாக பதினைந்து நிழற்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். அந்தப் பதிவினைப் பார்க்காதவர்கள் சென்ற ஞாயிறு வெளியிட்ட பதிவினை இங்கே பார்க்கலாம்! அதன் பிறகு இந்தப் பதிவில் வெளியிட்ட நிழற்படங்களையும் ரசிக்கலாம்! படங்களைப் பார்ப்பதற்கு முன்னர் தலைநகர் பூங்காக்கள் பற்றிய ஒரு தகவல்….

சனி, 2 மார்ச், 2019

காஃபி வித் கிட்டு – உயிர்வலி – பெண் – கச்சேரியும் உணவும்




காஃபி வித் கிட்டு – பகுதி – 22

ராஜா காது கழுதைக் காது - கச்சேரியும் உணவும்

சென்ற வாரம் சனிக்கிழமை தலைநகரில் உள்ள சண்முகானந்தா சங்கீத சபா TTD பாலாஜி மந்திர் வளாகத்தில் இருக்கும் த்யான மந்திர் அரங்கில் ”ரஞ்சனி-காயத்ரி” கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்வு பற்றி முன்னரே அறிந்திருந்தாலும், சரியாக மறந்து விட்டது.