தொகுப்புகள்

வெள்ளி, 24 மே, 2019

தில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…


குல்ஃபி ஃபலூடா – 10 May 2019 :


தலைநகர் வந்து விட்டு குல்ஃபி ஃபலூடா சாப்பிடாவிட்டால் எப்படி? கரோல் பாக் பகுதியில் இருக்கும் ரோஷன் தி குல்ஃபி சென்றபோது அங்கே கூட்டம் அதிகம். சாப்பிட முடியவில்லை என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் ஸ்விக்கி மூலம் அதே பகுதியில் இருக்கும் கிங்க்ஸ் குல்ஃபியிலிருந்து ஃபலூடா வரவழைத்து சுவைத்தாயிற்று!

வியாழன், 23 மே, 2019

உழைப்பாளிகள் – தில்லி – நிழற்பட உலா



தலைநகரின் பிரதான பொழுது போக்கு ஸ்தலங்களில் ஒன்று இந்தியா கேட் பகுதி. அதன் பக்கத்திலேயே இப்பொழுது மிகப்பெரிய வளாகத்தில் தேசிய போர் நினைவுச் சின்னம் ஒன்றினை அமைத்து பார்வையாளர்களுக்கு திறந்து இருக்கிறார்கள். இந்த வருடத்தின் ஃபிப்ரவரி மாதத்தில் திறக்கப்பட்ட இந்த இடமும் இராணுவத்தினரால் பராமரிக்கப்படுகிறது. மிகவும் சிறப்பாகப் பராமரிக்கிறார்கள். இந்த இடம் பற்றியும், வேறு சில விஷயங்களையும் பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.  இந்த நாளில் இப்பகுதியில் ஒவ்வொரு நாளும் வியர்வை சிந்தும் மனிதர்கள் சிலரைப் பற்றி மட்டும் பார்க்கலாம்!

புதன், 22 மே, 2019

தில்லி டைரி – பங்க்ளா சாஹேப் குருத்வாரா – லோதி கார்டன்



லோதி கார்டன் - ஒரு பகுதியில்...

லோதி கார்டன்:

இன்றைய தில்லி டைரியில் ஒரு சனிக்கிழமையன்று மாலை லோதி கார்டன் சென்ற பொது கிடைத்த அனுபவங்களை முதலில் பார்க்கலாம். மரங்கள் அடர்ந்த பகுதிகளும், புல்வெளிகளும், Tomb களும் இங்கு காணப்படுகின்றன. கண்ணுக்கினிய காட்சிகளும், பறவைகளின் ஒலிகளும், பார்க்க/கேட்கக் கிடைக்கும் இடம்.

செவ்வாய், 21 மே, 2019

திங்கள், 20 மே, 2019

என்னைத் துரத்திய உருவம் – ரங்கராஜன்



அன்பின் நண்பர்களுக்கு வணக்கம். நான் ரங்கராஜன். என்னில் பாதியை [நிர்மலா ரங்கராஜன்] இந்த வலைப்பூவில் வெளியிட்ட பதிவுகள் வழி நீங்கள் அறிந்து இருப்பீர்கள். எனது சிறுவயதில் கிடைத்த ஒரு அனுபவத்தினை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

ஞாயிறு, 19 மே, 2019

ப்ரயாக்ராஜ் - கும்பமேளா – சாலைக் காட்சிகள் - நிழற்பட உலா – பகுதி நான்கு


குதிரை வண்டிப் பயணம் போகலாமா?

ஒவ்வொரு ஊருக்குமென சில சிறப்புகள் இருக்கும். பல காட்சிகள் நமக்குப் புதியவையாக இருக்கும். அப்படிப் பார்க்கும்போது அவற்றை நிழற்படமாக எடுத்து வைத்துக் கொள்வது உண்டு. 

சனி, 18 மே, 2019

காஃபி வித் கிட்டு – பொறுமை – அவஸ்தைகள் – தும்பா பாடல் – மா – ஹாய் நலமா



காஃபி வித் கிட்டு – பகுதி – 33

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை ஒரு இனிய சிந்தனையோடு துவங்குவோம்! இதுவும் கடந்து போகும்… எவ்வளவு பெரிய புயலாக இருந்தாலும், அது சில மணி நேரங்களில் கடந்து விடுகிறது. அது போல, எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும், அது சில நாட்களில் கடந்து விடும்! அதனால் பொறுமை கொள்வோம்!

படித்ததில் பிடித்தது – அவஸ்தைகள் – இந்திரா பார்த்தசாரதி:



இரயில் பயணம் ஒன்றில் நடக்கும் கதை – முழுக் கதையும் படிக்க விரும்பினால் இங்கே படிக்கலாம்!

இந்த வாரத்தில் ஒரு தமிழ் பாடல் – புதுசாட்டம்

தும்பா எனும் படத்திலிருந்து ஒரு பாடல். படத்தின் ட்ரைலர் பார்த்தால் நன்றாக எடுத்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது. காட்டுக்குள் நடக்கும் கதை – அனிமேஷனும் உண்டு! கூடவே காதலும் உண்டு! பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் பார்க்க நினைத்திருக்கிறேன்.




ராஜா காது கழுதைக் காது – படுத்துட்டுக் கூட படம் எடுக்கலாம்!

விடுமுறை நாட்கள் என்பதால் தலைநகரில் நிறைய சுற்றுலா வாசிகள் – நம் தமிழகத்திலிருந்தும் பலர் வந்திருக்கிறார்கள்! சமீபத்தில் குடும்பத்துடன் இந்தியா கேட் பகுதிக்குச் சென்ற போது அங்கே ஒரு தமிழ்க் குடும்பம். மகள் படம் எடுக்க, அம்மா, அப்பா மற்றும் அண்ணன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். குடும்பத்தினரையும், இந்தியா கேட்டையும் ஒரே ஃப்ரேமில் கொண்டு வர கொஞ்சம் கஷ்டப்பட்ட அந்தப் பெண்ணிடம் அவள் அண்ணன் சொன்னது – ”படம் நல்லா வரணும்னா, படுத்துட்டுக் கூட எடுக்கலாம்! கீழே உட்கார்ந்து எடு – நாங்களும் வருவோம், இந்தியா கேட்டும் வரும்!

முகநூலிலிருந்து – சும்மா நச்சுன்னு சொல்லிட்டாங்க:



சரியாத்தான் இருக்கு! ஆனா பலரும் இதை உணர்வதில்லை! மூழ்கியில்ல போயிட்டாங்க!

இந்த வாரத்தின் வலைப்பூ அறிமுகம்:

மருத்துவர் முருகானந்தம் அவர்களின் ஹாய் நலமா? வலைப்பூ – நல்ல பல தகவல்களைக் கொண்டுள்ள ஒரு வலைப்பூ. இதுவரை படித்ததில்லை எனில் படிக்கலாமே! உதாரணத்திற்கு ஒரு பதிவு கீழே!


இந்த வாரத்தின் காணொளி - மா:

மே 12 – இந்த வருடத்தின் அன்னையர் தினம்! அன்று அமிதாப் பச்சனின் குரலில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி. கேட்டுப் பாருங்களேன்.




என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

வெள்ளி, 17 மே, 2019

ஏழு உலக அதிசயம் பூங்கா – தேவையற்ற பொருட்களிலிருந்து…




ஞாயிறு மாலை எங்கள் பகுதியிலிருந்து மெட்ரோ பிடித்து Nizamudeen ஸ்டேஷனில் இறங்கினோம். அங்கிருந்து E Rickshaw பிடித்து இங்கு சென்றோம். இந்த வருடத்தின் ஃபிப்ரவரி 21-ஆம் தேதி தான் இதை துவக்கியுள்ளார்கள். South Delhi Municipal Corporation இந்த பூங்காவினை உருவாக்கி இருக்கிறது.

வியாழன், 16 மே, 2019

தங்கமே தங்கம் – சுதா த்வாரகநாதன்



அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இப்பதிவின் மூலம் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தில்லியில் எனக்குக் கிடைத்த ஒரு அனுபவம் பற்றி பார்க்கலாம்.

புதன், 15 மே, 2019

போலீஸ்னா எனக்கு பயம் – போலீஸ் போலீஸ் - பகுதி இரண்டு - பத்மநாபன்


படம்: இணையத்திலிருந்து...


தம்பி ஓடாத நில்லு – போலீஸ் போலீஸ் – பகுதி 1 இங்கே படிக்கலாம்!

"டேய் தம்பி! நில்லுடா" என்று கூறிக்கொண்டே சைக்கிளின் முன்னால் சடன் பிரேக் போட்டு ஜீப்பை நிறுத்தினார். அவர் நிறுத்திய உடன் பையன் ஓடிய ஓட்டம் எங்களை கொஞ்சம் தடுமாறச் செய்தது.

செவ்வாய், 14 மே, 2019

கதம்பம் – தில்லி டைரி – ரிக்‌ஷா – விதம் விதமாய் சாப்பிட வாங்க…


தில்லி டைரி –- E Rickshaw & Delhi Metro & Ice cream milkshake - 30 ஏப்ரல் 2019


கேசர் பிஸ்தா மில்க் ஷேக் 

திங்கள், 13 மே, 2019

தம்பி ஓடாத நில்லு – போலீஸ் போலிஸ் - பகுதி ஒன்று - பத்மநாபன்



"தம்பி...! ஓடாதே. நில்லு!" ஜீப்பில் கட்டியிருந்த ஒலிபெருக்கி வழியாக இப்படி கத்தியது வேறு யாருமில்லை. சாட்சாத் நானேதான். அந்தக் கூத்தச் சொல்லுகேன், ஒண்ணு கேக்கேளா!

ஞாயிறு, 12 மே, 2019

ப்ரயாக்ராஜ் - கும்பமேளா – நிஷானா - நிழற்பட உலா – பகுதி மூன்று



சென்ற பகுதியில் வெளியிட்ட படங்களில் ஒன்றாக சில பக்தர்கள் சிகப்புத் துணியால் சுற்றப்பட்ட மூங்கில் கழியை எடுத்துக் கொண்டு போவது போன்ற மேலுள்ள படத்தினை வெளியிட்டு இருந்தேன். அது என்ன என்று சிலருக்குத் தோன்றியிருக்கலாம்! ஆனால் பின்னூட்டத்தில் கேட்காமலும் விட்டிருக்கலாம்! ஆனால் அது என்ன வழக்கம் என்று நான் சொல்லத்தான் போகிறேன்!

சனி, 11 மே, 2019

காஃபி வித் கிட்டு – குறும்படம் – ஸ்பேஸ் பார் – பறவை – யாரும் காணாதே



காஃபி வித் கிட்டு – பகுதி – 32



அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைக்கு ஒரு மனதைத் தொட்ட விஷயத்துடன் பதிவினை ஆரம்பிக்கலாம். இந்த தட்டச்சு இயந்திரம், உங்கள் கணினியின் விசைப்பலகையில் உள்ளவற்றில் அதிகமாகப் பயன்படுவது எது? Space Bar! பல முறை அதைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அதற்கான மரியாதை கிடைப்பதேயில்லை – அதைச் சுற்றிலும் இருக்கும் மற்றவற்றில் மறைந்து கிடக்கும் வார்த்தைகளையேத் தேடிக் கொண்டிருக்கிறோம். விசைப்பலகையில் இருக்கும் ஸ்பேஸ் பார் போன்று தான் பெற்றோர்கள் பல வீடுகளில்...

வெள்ளி, 10 மே, 2019

ஜார்க்கண்ட் உலா – பத்ராது – மலைப்பாதையும் ரம்மியமான நதியும்


Gகாட்டி ரோட்

பத்ராது – பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? மும்தாஜ் அவர்களிடம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் என்னென்ன பார்க்கலாம் என்று கேட்ட போது Gகாட்டி ரோட் பார்க்கலாமா எனக் கேட்டார். அது என்ன Gகாட்டி ரோட் – வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையைத் தான் Gகாட்டி ரோட் என அழைக்கிறார்கள். கூடவே அங்கே ஒரு நதியும் அனல் மின் நிலையமும் இருக்கிறது. அழகான இடம். ராஞ்சி நகரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இடம். சரி போகலாம் என புறப்பட்டு விட்டோம்.

வியாழன், 9 மே, 2019

முட்டிக்கு முட்டி தட்டிய கதை – சுதா த்வாரகநாதன்




சில வாரங்களுக்கு முன்னர் என் மகன், மருத்துவப் படிப்பு படிக்கும்போது மண்டையோடு மற்றும் எலும்புகளை வீட்டிற்குக் கொண்டு வந்தது பற்றி எழுதி இருந்தேன். இன்றைக்கு அதே சமயத்தில் என் மகன் என்னை முட்டிக்கு முட்டி தட்டிய கதையைப் பற்றி பார்க்கலாம்!

புதன், 8 மே, 2019

ஜார்க்கண்ட் உலா – ரஜ்ரப்பா – சின்னமஸ்திகா தேவி கோவிலும் அருவியும்


பைரவி ஆறு தாமோதர் ஆற்றில் சங்கமிக்கும் காட்சி...

ரஜ்ரப்பா – இந்தப் பெயரை இது வரை நீங்கள் கேட்டதுண்டா? இந்தப் பெயரில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு அழகிய இடம் இருக்கிறது. இன்றைய பதிவின் மூலம் நாம் இந்த அழகான இடத்திற்குத் தான் செல்லப் போகிறோம். ரஜ்ரப்பா – இந்த இடம் இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் ஒரு இடம் – கூடவே ஒரு மிகச் சிறப்பான கோவிலும் இங்கே அமைந்திருக்கிறது. வாருங்கள் இந்த ரஜ்ரப்பா பற்றி பார்க்கலாம்!

செவ்வாய், 7 மே, 2019

கதம்பம் – தில்லி டைரி – கேசர் லஸ்ஸி - பஞ்சு – புறாக்கூட்டம் – மீட்டா பான்


சாப்பிட வாங்க – கேசர் லஸ்ஸி - 26 ஏப்ரல் 2019

கேசர் லஸ்ஸி... 

வெயிலுக்கு இதமாய்! வயிற்றுக்கு குளுகுளு!! செம ருசி!! ஒரு டம்ளர் 75 ரூ. ஓரளவுக்கு மேல் திகட்டிப் போகிறது :) இன்று எங்கள் காலை உணவே இது தான்.

திங்கள், 6 மே, 2019

ஜார்க்கண்ட் உலா – அருவிகள் நகரம் – ஹூண்ட்ரூ அருவி


ஹூண்ட்ரூ அருவி...

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மலைப்பகுதிகள் அதிகம் என்பதால் அருவிகளும் அங்கே நிறைய உண்டு. அருவிகள் நிறைய என்பதால் ராஞ்சி நகரை அருவிகள் நகரம் என்றும் அழைப்பதுண்டு. சில அருவிகள் ராஞ்சி நகருக்கு சில கிலோமீட்டர் தொலைவிலும், சில அருவிகள் சற்றே தொலைவிலும் இருக்கின்றன. எங்கள் பயணத்தின் போது நாங்களும் சில அருவிகளுக்குச் சென்று பார்த்து ரசித்து வந்தோம். நாங்கள் சென்ற சமயத்தில் தண்ணீர் வரத்து அத்தனை அதிகம் இல்லை என்றாலும் சுமாராக இருந்தது. தண்ணீர் வரத்து அதிகம் இருந்தால் இன்னும் அதிகமாக ரசிக்க முடியும். ஆனால் அந்த அருவிக்குச் சென்று பார்ப்பதே ஒரு உற்சாக அனுபவம் – படிகளில் கீழே இறங்கிச் சென்று பார்த்து வர வேண்டும்!

சனி, 4 மே, 2019

காஃபி வித் கிட்டு – ஒரு ஜோடி கால்கள் – நோடா – விளம்பரம் - பகோடா - உழைப்பாளி



காஃபி வித் கிட்டு – பகுதி – 31



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.  அடி மேல் அடி வைத்து நடக்கும் ஒரு ஜோடி கால்களில், முன்னால் இருக்கும் கால், ”நான் முன்னே இருக்கிறேன் என பெருமிதம் கொள்வதில்லை! பின்னால் இருக்கும் காலும் பின்னால் இருக்கிறோமே என வெட்கப் படுவதில்லை” இரண்டு கால்களுக்குமே தன் நிலை மாறி மாறி தான் வரும் என்பது தெரியும். அந்தக் கால்களைப் போலவே நம் வாழ்விலும். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும், போகும்! கவலை கொள்ளாமல் இருப்போம்!

படித்ததில் பிடித்தது – தேர்தலும் நோடாவும்:

சார் ! என்ன சாப்பிடுறீங்க? இட்லி ?

சீ. அது கார்போஹைட்ரேட்!

தோசை?

சீ! ஆயில்

பொங்கல்?

அது மயக்க மருந்து!!

பூரி?

சீச்சி! அது மைதா! உடம்புக்குக் கெடுதி

அப்ப உப்புமா?

அதை மனுஷன் சாப்புடுவானா?

அப்ப என்னதான் சார் ஆர்டர் பண்ணப் போறீங்க?

எல்லா உணவுமே கெடுதி! நான் பட்டினி கிடக்கப் போறேன்! வர்றேன்.

#நோட்டாவிற்கு வாக்களித்தவர் ஓட்டலுக்குச் சென்று காலை உணவு அருந்திய போது!!

இந்த வாரத்தின் ரசித்த பாடல்:

சமீபத்தில் ரசித்த ஒரு ஹிந்தி பாடல் – கேட்டுப் பாருங்களேன்.




சாப்பிட வாங்க – சூடா பகோடா:



மலைப் பிரதேசம் ஒன்றில் பயணித்த போது சாப்பிட்ட பகோடா… மேலே வெங்காயம், கொத்தமல்லி தழைகள், சாட் மசாலா தூவி மேலே இரண்டு பச்சை மிளகாய் வைத்து கொடுக்க பகோடாவும் தேநீரும்! மலைப் பிரதேசத்தில் ரொம்பவே சுவையாக இருந்தது. கடைக்காரர் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம் – அது பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்! இப்போதைக்கு பகோடா சாப்பிடுங்க! என்ன மிளகாய் தான் கொஞ்சம் காரம் அதிகம்! பார்த்து! ஒரு கடி கடிச்சுட்டு எரியுதுன்னு சொல்லக் கூடாது!

மனதைத் தொட்ட ஒரு விளம்பரம்:

சிலருக்கு, குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு - எப்போதுமே வேலை இருந்து கொண்டே இருக்கும்! அவர்களுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம் எனச் சொல்லும் ஒரு விளம்பரம் – உண்மையில் அப்படி பலரும் யோசிப்பதில்லை என்றாலும், ரசிக்க முடிந்தது…



இந்த வார வலைப்பூ அறிமுகம் – எண்ணத்தின் வண்ணங்கள்:

திருமதி ராதா பாலு – நான்கு வலைப்பூக்களில் அவ்வப்போது எழுதி வருகிறார். வை.கோ அவர்களின் வலைப்பூவில் இவரை பார்த்திருக்கலாம். அவரது சில பதிவுகள் வாசித்ததுண்டு. கோலங்கள், எண்ணத்தின் வண்ணங்கள், என் மன ஊஞ்சலில், அறுசுவைக் களஞ்சியம் என நான்கு வலைப்பூக்களில் எழுதுகிறார். இந்த வார அறிமுகமாக எண்ணத்தின் வண்ணங்கள் வலைப்பூவிலிருந்து ஒரு சிறுகதைக்கான இணைப்பு… படித்து ரசிக்கலாமே!


இந்த வாரத்தின் கதை மாந்தர்:



வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள், சுக-துக்கங்கள் வரலாம். ஆனாலும் வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆக வேண்டும். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்குப் பாடமாக தந்து செல்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தின் வனப் பகுதி ஒன்றில் அமர்ந்து வனத்தில் கிடைக்கும் மரத்திலிருந்து ஒரு சிறிய கோடரி கொண்டு விதம் விதமான பொம்மைகளும், பொருட்களும் செய்து விற்பனைக்கு வைத்திருக்கிறார் இந்தப் பெரியவர். பெரிதாக யாரும் வந்து விடப் போவதில்லை. விற்பனையும் அதிக அளவில் ஆவதில்லை – அன்றைய பொழுது கழிய தேவையான பணம் கிடைத்தாலே பெரிது. ஆனாலும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார் இப் பெரியவர். நிறைய விஷயங்களைச் சொல்லும் இந்த முகம் – உங்களிடம் என்ன சொன்னது – சொல்லுங்களேன் பின்னூட்டத்தில்!



என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

வெள்ளி, 3 மே, 2019

ஜார்க்கண்ட் உலா – மும்தாஜுடன் ஒரு பயணம்


 மும்தாஜுடன் ஒரு பயணம்...

சில நாட்களுக்கு முன்னர் எழுதிய தோசா ப்ளாசா பதிவில் எங்களுக்கு அமைந்த ஓட்டுனர் குல்தீப் எனும் இளைஞர் பற்றி எழுதி இருந்தேன். ரொம்பவே விளையாட்டுப் பிள்ளை – ஓடி ஓடி செல்ஃபி எடுப்பதும், வண்டியை விட்டு எங்களுடன் எல்லா இடங்களுக்கும் வருவதும் என எங்களை விட அப்பயணத்தினை அதிகமாகவே ரசித்தார். அடுத்த நாள் காலையில் ஏழரை மணிக்கு வந்து விடுவதாகச் சொல்லிச் சென்றார் – சரி வண்டி ஏற்பாடு செய்த நண்பரிடம் காலை பேசிக் கொள்ளலாம் என இருந்தோம்.

வியாழன், 2 மே, 2019

சாப்பிட வாங்க – மட்டர் பனீர் - சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பூ


பனீர் – இதை நம் ஊரில் என்னவோ பன்னீர் என்று சொல்கிறார்கள்! பன்னீருக்கும் பனீருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு! வேற்று மொழி வார்த்தையை நம் மொழியில் எழுதும்போதும், பேசும்போதும் இப்படி நிறைய தடுமாற்றங்கள்!

புதன், 1 மே, 2019

அலுவலக அனுபவங்கள் – தொலைந்து போன மாலா



ஒரு பரபரப்பான வெள்ளிக்கிழமை மாலை நேரம். அந்த வாரத்தின் மீதமிருந்த எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டிய சூழலில் பிரிவிலிருந்த அனைவருமே அவரவர் இருக்கையில் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியான சூழலில் தான் மாலா தொலைந்து போனது தெரிந்தது. முதல் நாள் வரை இருந்த மாலா, வெள்ளிக்கிழமை அன்று இல்லை!