தொகுப்புகள்

▼

புதன், 21 அக்டோபர், 2026

நவராத்திரி கொலு 2026 - பகுதி மூன்று - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் இந்த நவராத்திரி நாட்களில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு ஒன்று - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட நவராத்திரி கொலு 2026 - பகுதி இரண்டு  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




*******




நவராத்திரி கொண்டாட்டங்கள் குறித்த எனது நேற்றைய பதிவினை படித்து ரசித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து இன்றைய பதிவில் தொடர்ந்து கொண்டாட்டங்கள் குறித்துப் பார்க்கலாம் வாருங்கள்!


நவராத்திரி 2026 - ஏழாம் நாள் - 17 அக்டோபர் 2026:







இரண்டு நாட்களாக மழை சற்று பெய்து கொண்டிருப்பதால் இங்கு குளுமையான சூழல் நிலவுகிறது! காலை எழுந்ததும் பசுமையின் சுகந்தத்தை சுவாசித்தவாறு இருவரும் நடைபயிற்சிக்கு சென்றோம்!


இங்க எப்பவும் வாழை பயிரிட்டிருப்பாங்களே! மழைக்காலம்னு விட்டுருப்பாங்களோ! கடவுளே! இந்த நிலமாவது ப்ளாட் போடாம இருக்கட்டும்!


இது என்ன செடின்னு தெரியலையே! வழி நெடுக பச்சை பசேல்னு வந்திருக்கு! 


இதுவா நாம கூட இதோட பூவை ஃபோட்டோ எடுத்துருக்கோமே!


ம்ம்! அட ஆமாம்! 


இப்படியான சம்பாஷணைகள் தொடர நல்லதொரு நடை - இனிமையான காலை வேளையில்! நவராத்திரி நேரமாக இருந்தாலும் நேரம் எடுத்து, விடுபட்ட நடைப்பயிறிசியினை தொடர முடிந்ததில் மகிழ்ச்சி. 


நவராத்திரி ஏழாம் நாளான இன்று பட்டாணி சுண்டல் பண்ணி அம்பாளுக்கு நிவேதனம் செய்தேன்! 


மனதுக்கு நெருக்கமான தோழிகள் இருவர் இன்று கொலுவைக் காண வந்திருந்ததால் அவர்களுடன் சற்றுநேரம் ரிலாக்ஸாக பேசிக் கொண்டிருந்தேன்!


இன்றைய நிறம் grey! இந்த நிறத்தில் என்னிடம் சில புடவைகள் உண்டு என்றாலும் இன்று நான் உடுத்திக் கொண்டது என் அருமைத் தம்பி எனக்கு வாங்கித் தந்தது! இன்று தான் முதன்முறையாக உடுத்தினேன்!


இன்றைய நாள் இனிய நாள்!


மீதிக்கதைகளை தொடர்ந்து பார்க்கலாம்.


*******


நவராத்திரி எட்டாம் நாள் - 18 அக்டோபர் 2026:






அதிகாலை வேளையின் அழகை ரசித்தவாறு இன்று இருவரும் 4.5 கிமீ  நடைப்பயிற்சி செய்தோம்!


நேத்து இங்க ஒரு புருஷன் பொண்டாட்டிய பார்த்தோமே! இன்னிக்கு அவங்க ரெண்டு பேரையும் காணோம் இல்ல!


ஆமா! சஷ்டி கவசம் கேட்டுட்டே நடப்பாங்க!


அது நடக்கும் போது மட்டும் தான்! அப்புறம் இந்த திட்டுல உட்கார்ந்துட்டு அவங்களுக்குள்ள குடும்ப பஞ்சாயத்து தான் ஓடுது...🙂 


அந்தக் குட்டி பொண்ணப் பாரேன்! என்ன விளையாட்டு! ஓரமா இருக்கிற கல்லை எல்லாம் தள்ளி விட்டுட்டே போறா பாரு!!


இன்னிக்கு துலா ஸ்நானம் முதல் முழுக்கு! அதான் எல்லாரும் வரிசையா ஸ்நானம் பண்ண படித்துறைக்கு போறாங்க! 


ஒரு நிமிஷம் இரு! இதோ வரேன்!


வேப்பிலையா சாப்பிடப் போறீங்க! கசக்கப் போறது! தண்ணி கூட எடுத்துண்டு வரல!


ஒண்ணும் ஆகாது! எதுவானாலும் கொஞ்ச நேரம் தான்! 

காலை நேர நடையின் போது தான் இப்படி பல விஷயங்களை எங்களுக்குள் பேசிக் கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது! நடைக்கு நடை! கூடவே கொஞ்சம் அரட்டையும்! சரி நவராத்திரி பதிவுக்கு வருவோம்! 


நவராத்திரி எட்டாம் நாளான இன்று தட்டைப்பயறு சுண்டல் பண்ணி நிவேதனம் செய்தேன்!


தாம்பூலம் வாங்கிக் கொள்ள குட்டீஸ் சிலர் எங்கள் இல்லத்துக்கு வந்தனர்! அப்படியே நானும் இரண்டு வீடுகளுக்கு கொலு பார்க்க சென்று வந்தேன்! சென்ற இடத்திலும் புதிதாக சிலரும் அறிமுகமாக அவர்களையும் நம்ம வீட்டுக்கு  அழைத்தேன்! 


இன்றைய சிந்தனையாக “நாம இப்பல்லாம் ரொம்ப பேசறோமோ!!! புவனா/ஆதி பேசவே மாட்டான்னு தானே பொதுவா எல்லாரும் சொல்லுவாங்க! எப்போ இப்படி மாறுனோம்?”


இன்றைய நிறம் purple! உறவினர் திருமணத்தில் மகளுக்கு தந்த புடவை இது! இன்றைய நிறத்துக்கு ஏற்றதாய் இருந்ததால் உடுத்திக் கொண்டேன்!


தொடர்ந்து மீதிக்கதைகளை பார்க்கலாம்!


*******


நவராத்திரி ஒன்பதாம் நாள் -  19 அக்டோபர் 2026:








அதிகாலை நடைப்பயிற்சியும், அதன் பின்பு பூஜைக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது! வழக்கமான சமையலுடன் நைவேத்தியங்களுக்காக சர்க்கரைப் பொங்கலும், உளுந்து வடையும் செய்திருந்தேன்! அம்மா கொழக்கட்டை, அப்பம், வடை, பாயசம், சுண்டல் என்று செய்வாள்! ஆனால் இப்போது அவ்வளவு ஐயிட்டங்களை ஒருசேர சாப்பிட முடிவதில்லை என்பதால் செய்ய முனைவதில்லை! 


வாசலில் மகள் அழகாக கோலமிட்டாள்!வேதமந்திரங்களை உச்சரித்து பூஜையை வெகு சிறப்பாக செய்தார் என்னவர்!  அறிவோடு, அன்பும் ஓங்கி இருக்கணும் என்று மனமுருக பிரார்த்தித்துக் கொண்டேன்! 'அக்‌ஷமாலா ஷராகாரா' யாகுந்தேந்து துஷார ஹார தவளா' என்று அப்பா சொல்லித் தந்த ஸ்லோகங்களை எல்லாம் சொல்லி பிரார்த்தித்து நின்றேன்!


अक्षमालाक्षराकाराक्षराक्षर फल प्रदा 

अनन्तानन्द सुखदानन्त चन्द्र निभानना 


நவராத்திரி ஒன்பதாம் நாளான இன்று மாலை வெள்ளை கொண்டக்கடலையில் சுண்டல் பண்ணி நிவேதனம் செய்தேன்! இன்றும் சிலர் தாம்பூலம் வாங்கிக் கொள்ள வந்ததால் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் இனிமையாக கடந்து சென்றது!


இன்றைய நிறம் peacock blue! மகள் தன் பள்ளி Farewell sareeஐ தந்து உடுத்திக்க சொன்னாள்! எனக்கென்னவோ என்னை விட அவளுக்கு தான் அந்தப் புடவை அழகாக இருந்ததாக தோன்றியது...🙂


இன்றைய நாள் இனிய நாள்!


நவராத்திரி ஒன்பது நாட்களும் விதம் விதமான மனிதர்களின் நட்பு, சம்பாஷணைகள், தாம்பூலம் பெற்றது, விநியோகம் செய்தது என சிறப்பாகக் கடந்தது.  ஒன்பது நாட்களும் பெற்ற அனுபவங்களை இங்கே மூன்று நாட்களாக பதிவுகள் வழி உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. மீண்டும் வேறு ஒரு பகிர்வு வழி உங்களைச் சந்திக்கிறேன். 


*******


இன்றைய தொகுப்புப் பகிர்வு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

21 அக்டோபர் 2026


12 கருத்துகள்:

  1. கணவன் மனைவி நடைப்பயிற்சியில் இது மாதிரியான பொதுவான இனிமையான சம்பாஷணை இடம்பெறுவதே இனிமை.  சென்னையிலும் மழை நசநச.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசிக் கொண்டு செல்வதில் நடையும் தொய்வில்லாது இருக்கும்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. முதல் கமெண்ட்டில் நான் சொல்லாமல் விட்ட விஷயம் உங்கள் பதிவின் இரண்டாவது பகுதியில் வந்திருக்கிறது..  குடும்பப் பஞ்சாயத்தைப் பேசுவது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா.. ஆமாம் சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. கோலமும் கொலுப் படங்களும் அருமை.  இந்த வருடம் கொலுவுக்கென்று சில பொம்மைகள் புதிதாக வாங்கி இருந்திருப்பீர்களே..  அதை மட்டும் போட்டோ எடுத்து தனியாகக் காட்டலாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வருடம் நாங்கள் வாங்கிய பொம்மைகளும் இந்த தொடரில் இடம்பெற்றது சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. அழகான கொலு. சிறப்புற நிறைவுற்ற நவராத்திரி. முந்தைய இரு பதிவுகளையும், முகநூல் பதிவுகளையும் கண்டேன். படங்களும் பகிர்வும் அருமை. உங்கள் மூவருக்கும் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலஷ்மி மேம்

      நீக்கு
  5. நடைக்கு நடை! கூடவே கொஞ்சம் அரட்டையும்!//

    அருமை. நாள் முழுவதும் உற்சாகம் தரும்.
    கொலு படங்கள் , பிரசாதங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. இந்தப் பதிவைப் படித்தேன். கருத்து எழுதினேன் என்று நினைவு.

    பொம்மைகளில் நீலக்கலரில் பேண்ட் வாத்தியம் நாட்டியமாடும் பெண்கள் மிகவும் கவர்ந்தது.

    பண்டிகைக்கான நிவேதனங்கள்... அதிகமாக வெரைட்டியாகச் செய்தாலும், சாப்பிட ஆள் வேணும். அதனால் நீங்கள் செய்வதுபோல பண்ணுவது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேண்ட் வாத்திய பொம்மைகள் என் பெரிய மாமியாருடையது! ரொம்ப வருஷத்து பொம்மை. எப்போதோ வடக்கே யாத்திரை சென்ற போது வாங்கியதாகச் சொன்னார். கொலுவுக்கு வந்த சிலரும் கூட அந்த பொம்மை அழகாய் இருப்பதாய் சொன்னார்கள்.

      எங்கள் வீட்டில் அன்றாட சமையலில் கூட குழம்போ ரசமோ ஏதேனும் ஒன்று தான்! அப்படியிருக்கையில் பண்டிகை சமையல்..:)

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....