தொகுப்புகள்
▼
செவ்வாய், 1 ஜூன், 2010
பறவைகள் பலவிதம்….
தினம் தினம் பல மனிதர்களை நாம் சந்த்திக்கிறோம். ஒவ்வொருவரிடமும் சில தனித்தனமைகள் இருக்கும். பொதுவாக சில விஷயங்களில் எல்லோருடைய நடவடிக்கைகளும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன. வேறு சில விஷயங்களில் மிகுந்த வேறுபாடுகள் காண முடிகின்றது. அப்படி நான் சந்தித்த சில வித்தியாசமான சிலரைப் பற்றியே இப் பதிவு.
இப்பொழுதெல்லாம் தேனீர் கடைகளில் டீ-பேக் போட்டு தேனீர் தருகிறார்கள். அதற்கு முக்கிய காரணமே யாருக்கு எவ்வளவு ஸ்ட்ராங்கா வேணுமோ அது மாதிரி டிப் செய்து கொண்டால் போதும் என்பதே. அன்னிக்கு ஒரு ஆள பார்த்தா – பலமுறை டிப் செய்த பிறகு, டீ-பேகை கையில் எடுத்து கசக்கிப்பிழிந்து கப்பில் விட்டுக்கொண்டு இருந்தார், தேன்கூட்டில் இருந்து தேன் பிழிந்து எடுப்பதைப்போல. “கடைசி சொட்டு வரை எடுக்காம விடமாட்டோம்ல” என்று முத்தாய்ப்பு வேறு.
தமிழ்நாட்டில் நமக்கு ப்ரெட் என்பது ஜுரம் வந்தால் மட்டுமே சாப்பிடக்கூடியது. தில்லில அப்படி இல்லை, இங்க மக்கள் தினம் தினம் ப்ரெட் மூஞ்சீல தான் முழிக்கிறாங்க தெரியுமா? ப்ரெட் டோஸ்ட், ப்ரெட் ஜாம், ப்ரெட் சாண்ட்விச் என்று பலவிதங்களில் ப்ரெட்-ப்ரெட்-ப்ரெட் தான் காலை உணவு. நம்ம ஊர்ல இருந்து வந்த ஒருத்தர் வித்தியாசமா ப்ரெட் டோஸ்ட்-க்குக் காரக்குழும்பு ஊத்தி அடிச்சுட்டு இருக்காரு … என்னே அவரது சுவை!!
வெய்யில் கொடுமை தாங்காம நேற்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது ”மதர் டைரி”ல ஒரு குல்ஃபி வாங்கி சாப்பிட்டபடியே வீடு செல்லலாம் என தள்ளுவண்டியிடம் நின்றபோது, அங்கே ஒருவர் கோன் ஐஸ் வாங்கி மேலுள்ள பேப்பரைப் பிரித்தபடி கடைக்காரரிடம் ”ஒரு ஸ்பூன் குடுங்க”ன்னு கேட்டுட்டு இருக்கார். அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு ஸ்பூன் கொடுத்தா, கோன் ஐஸ்ஸை ஸ்பூனால எடுத்து சாப்பிட்டு இருக்கார் மனுஷன் – ”இது புது மாதிரியா இருக்கே, உக்கார்ந்து யோசிப்பாரோ?”ன்னு நினைத்தபடி குல்ஃபி சுவைத்தேன்.
எல்லாம் புதுசு புதுசா யோசிப்பாய்ங்க போலிருக்கு!
ஒரு மனுஷன் நிம்மதியா அவரவர் விருப்பப்படி ஐஸ் கிரீம் சாப்பிட முடியுதா! டீ குடிக்க முடியுதா! பார்த்துக்கிட்டு வந்து ப்ளாக் எழுதிப் புடறீங்க. நாளை முதல் ரகசியமாகத்தான் எல்லாம் செய்யணுமப்பா.
பதிலளிநீக்கு// கோன் ஐஸ்ஸை ஸ்பூனால எடுத்து சாப்பிட்டு இருக்கார் மனுஷன்//
பதிலளிநீக்குநல்லவேளை கட்பண்ணி சாப்பிட கத்தியும், முள்கரண்டியும் கேக்காம விட்டாரே :-)))
ஆஹா! பிரெட்டை மிளகுரசத்துலே ஊற வச்சுச் சாப்பிட்டிருக்கிறீங்களா சார்? :-)
பதிலளிநீக்குசூப்பரா இருக்கும்!
மோர் சாதம், பாயசம் இதுல அப்பளம் நொறுக்கி சாப்பிடறது.. தோசை மிளகாய்ப்பொடி தொட்டு மோர்சாதம்.. இப்படி ரகம் ரகமா டேஸ்ட் பார்க்கறவங்க உண்டு.. எப்படியோ நல்லா சாப்பிட்டா சரிதானே..
பதிலளிநீக்குநம்ம ஊர்ல உப்மா, இட்லி மாதிரி அங்க பிரட் அண்ட் ரொட்டி
பதிலளிநீக்குநல்லா சாப்பிட்ட தானே உக்காந்து யோசிக்க முடியும்? -கே.பி.ஜனா
பதிலளிநீக்கு/////அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு ஸ்பூன் கொடுத்தா, கோன் ஐஸ்ஸை ஸ்பூனால எடுத்து சாப்பிட்டு இருக்கார் மனுஷன் – ”இது புது மாதிரியா இருக்கே, உக்கார்ந்து யோசிப்பாரோ?”ன்னு நினைத்தபடி குல்ஃபி சுவைத்தேன்.
பதிலளிநீக்கு//////
இப்பொழுதெல்லாம் வித்தியாசமாக ஏதாவது பண்ணுகிறேன் என்று சொல்லி பக்கத்தில் உள்ளவர்களை பயித்தியம் ஆக்கும் அளவிற்கு கொடூறமாக ஏதாவது ஒன்றை செய்வதுதான் இன்றைய ப்பேஷன் .
பறவைகள் பலவிதம்…. அருமை
பதிலளிநீக்குஆஹா....நம்மளை விட பெரியா ஆளா இருப்பார் போலிருக்கே...முக்கியமா பிரெட்ல காரக்குழம்பு ஊத்தி சாப்பிட்ட ஆளு நம்மூரா இருப்பாரோ??
பதிலளிநீக்கு@@ ஈஸ்வரன்
பதிலளிநீக்குவாங்க அண்ணாச்சி, வரவுக்கு நன்றி. நீங்க பயப்படுற அளவுக்கு ஒண்ணும் பண்ணலையே….. :)
@@ அமைதிச்சாரல்
கேட்டாலும் கேட்டு இருப்பாரு, ரோட் சைடு கடை, அதுனால கேட்கலையோ என்னமோ? :)
@@ சேட்டைக்காரன்
இது புது விஷயமா இருக்கே… செஞ்சு பார்த்துட்டு சொல்றேன். :)
@@ ரிஷபன்
வாங்க சார், நல்லா சாப்பிடறது தான் முக்கியம் தான். :)
@@ LK
வாங்க, வரவுக்கும், கருத்து பரிமாற்றத்துக்கும் நன்றி. :)
@@ KBJ
வாங்க சார். நீங்க சொல்றது சரிதான். :)
@@ பனித்துளி சங்கர்
வாங்க, வரவுக்கும், கருத்து பரிமாற்றத்துக்கும் நன்றி. :)
@@ யாதவன்
உங்களது முதல் வரவுக்கு நன்றி, யாதவன். :)
@@ அன்னு
வாங்க அன்னு, நிச்சயமா நம்ம ஊர்க்காரர் தேன்.. :)
தமிலிஷ்-ல் வாக்கு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
இங்க வந்து இந்த ப்ரவுன் ப்ரட்டை சாப்பிட்டுட்டு .. நம்ம ஊருக்கு போய் வெள்ளை ப்ரட் சாப்பிடவே பிடிக்கிறதில்லைன்னா பாத்துக்குங்க அவ்ளோ இந்த டில்லி ப்ரட்டுக்கு நாங்களும் அடிக்ட் ஆகிட்டோம். ;)
பதிலளிநீக்குவாங்க முத்துலெட்சுமி, நீங்களும் “ப்ரட்டுக்கு நான் அடிமை!”ன்னு பாட ஆரம்பிச்சுட்டீங்களா? வரவுக்கும் கருத்து பரிமாற்றத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்கு