தொகுப்புகள்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

பிரம்மாண்டத்தின் மறுபெயர்


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி 4]


தான்சேனின்  சமாதியிலிருந்து திரும்பி நாங்கள் தங்கியிருந்ததான்சேன் ரெசிடென்சியில் மதிய உணவு உட்கொண்டோம்


14 பேர்களுக்கும் ஒரு நீண்ட மேஜையில் உணவு பரிமாறப்பட்டது.  வட இந்திய உணவு வகைகளே பிரதான உணவாக இருந்தது.  மிசோ மாநிலத்தவர்கள் அசைவ உணவும் மற்றவர்கள் சைவ உணவும் உட்கொண்டோம்.  சிறிது ஓய்வுக்குப் பின் எங்களது அடுத்த இலக்கான ஜெய்விலாஸ் அரண்மனை மற்றும் அருங்காட்சியகம் சென்றோம்.  

இந்த அரண்மணைக்குள் செல்ல கட்டணம் இந்தியர்களுக்கு ரூ.40-ம் வெளிநாட்டவர்களுக்கு ரூ.300-ம். புகைப்படக் கருவி எடுத்துச் செல்ல இந்தியர்களிடம்  தனியாக 60 ரூபாய் வாங்குகிறார்கள்வெளிநாட்டவர்களுக்கு அதிகமாம்.  வாரத்தின் எல்லா நாட்களும் [புதன் கிழமை தவிர] காலை 10.00 மணி முதல் மாலை 05.30 வரை திறந்திருக்கும்.

என்ன ஒரு பிரம்மாண்டம்


சிந்தியா ராஜாக்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்க உபயோகப்படுத்தும் அரண்மனை ஜெய்விலாஸ் பேலஸ்.  அதில் இருக்கும் முன்னூற்றுக்கும் அதிகமான மொத்த அறைகளில் 35 அறைகளை அருகாட்சியகமாக உருவாக்கி அதில் பல்வேறு கலைப்பொருட்களை வைத்திருக்கிறார்கள்


இந்த அறைகளைப் பார்க்கும்போது அந்த அரண்மனையின் பிரம்மாண்டம் விளங்குகிறது.  ஜயாஜிராவ் சிந்தியா அவர்களால் 1874 ஆம் வருடம் உருவாக்கப்பட்ட இந்த அரண்மணை வேல்ஸ் நாட்டு இளவரசரை வரவேற்கவென மூன்று வருடங்களில் [1872-74] கட்டி முடிக்கப்பட்டதாம்.

ஜயாஜிராவ் சிந்தியாவிற்கு மொத்தம் நான்கு மனைவிகள். [அட பலருக்கு ஒரு மனைவி கிடைக்கிறதே கஷ்டமாக இருக்கும் இக்காலத்தில் இதை நினைத்தால் பொறாமையாகத் தான் இருக்கும்…]. நான்காவது மனைவியான சாக்யாபாய் மூலம் அவருக்கு நான்காவது மகன் பிறந்தார். அவர்தான் மாதோராவ் சிந்தியா.  ஜயாஜிராவ் சிந்தியாவிற்குப் பிறகு குவாலியர் மஹாராஜா ஆனவர்

மாதோராவ் சிந்தியாவிற்கும் இரண்டு மனைவிகள்!  முதலாவது மனைவி குள்ளமானவர்.  இரண்டாவது மனைவி உயரம்.  முதலாவது மனைவிக்குக் குழந்தைகள் இல்லாததால் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.

இந்த அரண்மணையை ஜிவாஜிராவ் காலத்தில் கட்டியிருந்தாலும், மாதோராவ் காலத்தில் உப்யோகப்படுத்தின பல பொருட்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. நாலு அடி ராணிக்குத் தகுந்த அளவு கட்டில், மேஜை-நாற்காலிகள், சாப்பாட்டு மேஜைகள் என எல்லாம்.  உடனே அப்ப ஆறு அடி ராணி என்ன பாவம் செய்தாள் என்று கேட்கக் கூடாது. அவருக்குத் தகுந்த மாதிரியும் எல்லாவிதமான பொருட்களும் இங்கே இருக்கின்றன.


ஃப்ரான்ஸ், இத்தாலி போன்ற பலவித நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அறைகலன்களை [Furniture-க்கு தமிழாம்!] இங்கே வைத்திருக்கிறார்கள்.


பல்வேறு ராஜாக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், துப்பாக்கிகள், அவர்கள் அணிந்து கொண்ட கவசங்கள் என்று எல்லாவற்றையும் வரிசையாக வைத்திருக்கிறார்கள்


ஒவ்வொரு ஜன்மாஷ்டமியிலும் குட்டி கிருஷ்ணரை வைத்துத் தாலாட்ட, இத்தாலி நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட கண்ணாடியாலான ஒரு தொட்டில் ஒரு அறையில் நடுநாயகமாய் வீற்றிருக்கிறது


பெர்சியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு பெரிய கார்பெட்டில் சுமார் 180 உருவங்கள் வரையப்பட்டு இருக்கிறது.  ஒரு பெரிய பிளாஸ்டிக் பேப்பரில் இதைப் பொதித்து ஒரு அறையில் மாட்டி வைத்திருக்கிறார்கள்.  வருவோர் போவோர் எல்லோரும் அதைத் தொட்டு அசுத்தப் படுத்துவதால் இப்படி ஒரு ஏற்பாடாம்

இன்னும் பலப்பல அருமையான பொருட்கள் இந்த அரண்மணையில் கொட்டிக் கிடக்கின்றனபதிவின் நீளத்தைக் கருதி அவைகளை அடுத்தடுத்த பகுதிகளில் அளிக்க   இருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

வெங்கட்.

40 கருத்துகள்:

  1. வித்தியாசமான தகவல்கள்..

    ரொம்ப ப்ரம்மாண்டமாத்தான் இருக்கு அரண்மனை.. ஆனா வேல்ஸ் இளவரசருக்காக கட்டினாங்களான்னா கடுப்பாகுது... என்ன இருந்தாலும் வெளி நாட்டுக்காரங்கன்னா ஒரு மதிப்புத்தான்.. ஆனா அப்ப வரவேற்க கட்டினது இன்னிக்கும் நிக்குது .. இப்ப மானத்தைவாங்கற கட்டடத்தை இல்ல காமென்வெல்த் க்கு கட்டினாங்க.. ஒப்பிட்டுப்பாத்தா இன்னும் கடுப்பாகுது..:(

    பதிலளிநீக்கு
  2. @ முத்துலெட்சுமி: பதிவிட்ட சில நிமிடங்களில் தங்களது கருத்துரை. மிக்க நன்றி.

    வேல்ஸ் இளவரசருக்காக கட்டியது என்பது கஷ்டம் தான்...

    அப்போதைய கட்டிடங்களுக்கும் இப்போதையவற்றுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. //ஜயாஜிராவ் சிந்தியாவிற்கு மொத்தம் நான்கு மனைவிகள். [அட பலருக்கு ஒரு மனைவி கிடைக்கிறதே கஷ்டமாக இருக்கும் இக்காலத்தில் இதை நினைத்தால் பொறாமையாகத் தான் இருக்கும்…].//


    மிகவும் ருசிகரமான தகவல். “கரகாட்டக்காரன்” படத்தில் ”அந்தக்காரை கடைசியாக வைத்திருந்த ஸ்வப்னசுந்தரியை இப்போது யார் வைத்திருக்கிறார்கள்?” என்று செந்தில் கவுண்டமணியிடம் கேட்பார். அந்த ஞாபகம் வந்தது.

    மிகவும் பிரும்மாண்டமான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். தொடருங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    Voted. vgk

    பதிலளிநீக்கு
  4. லஷ்மி விலாஸ் என்றால் வங்கி நினைவுக்கு வரும்!
    அங்கு விலாஸ் என்றால் புகையிலை நினைவுக்கு வரும்!
    முனியாண்டி விலாஸ் என்றால் பிரியாணி நினைவுக்கு வரும்!
    பாரத விலாஸ் என்றால் சிவாஜி நினைவுக்கு வருவார்!
    ராம் விலாஸ் என்றால் பஸ்வான் நினைவுக்கு வருவார்!
    மிதிலா விலாஸ் என்றால் எழுத்தாளர் லஷ்மியின் நாவல் நினைவுக்கு வ்ரும்!
    உடனே அதன் முக்கிய கதாபாத்திரம் ஈஸ்வரன் நினைவுக்கு வருவார்!

    இனிமேல் -

    ஜெய் விலாஸ் என்றால் வெங்கட் நாகராஜ் நினைவுக்கு வருவார்.


    எப்பூடி?

    பதிலளிநீக்கு
  5. அரண்மனைகளைப் பார்த்தால்தான் ராஜாக்களின் சொகுசு வாழ்க்கை புரிகிறது. ஆனால் சிம்மாசனப் போர்களால் அதிக ஆபத்தும் அவுங்களுக்குத்தானே:(

    நாலடி ராணிக்கு எல்லாம் பார்த்துப்பார்த்துச் செஞ்சுருப்பதைப் பாராட்டத்தான் வேணும்.

    படங்கள் எல்லாம் அருமை.

    இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. [அட பலருக்கு ஒரு மனைவி கிடைக்கிறதே கஷ்டமாக இருக்கும் இக்காலத்தில் இதை நினைத்தால் பொறாமையாகத் தான் இருக்கும்…]

    நிஜமாகவே (நீ வேடிக்கைக்காக எழுதினாலும்) இப்பொழுது மனைவி கிடைப்பது தான் கடினமாக உள்ளது. காரணம், ஆண் பெண் விகிதாசார வேற்றுமை. நிலமை சரி செய்யாவிட்டால் வருங்காலங்களில் இன்னும் மோசமாகிவிடும்.

    பதிலளிநீக்கு
  7. கேள்விப்படாத இடம். அறிமுகத்துக்கு நன்றி. படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  8. இதுவரை அறியாத பார்க்காத இடங்கள்
    அறியத் தந்தமைக்கு நன்றி
    படங்களும் விளக்கங்களும் நேரில் பார்ப்பதைப் போன்ற
    உணர்வை ஏற்படுத்துகிறது.நன்றி

    பதிலளிநீக்கு
  9. # வை. கோபாலகிருஷ்ணன்: கரகாட்டக்கரன் :)

    தங்களது அன்பான வருகைக்கும், பாராட்டுதலுக்கும், இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. # ஈஸ்வரன்: ஒரே ”விலாஸ்” ஆ இருக்கே... என்ன நினைவு அண்ணாச்சி உங்களுக்கு... ஈஸ்வரன் வேறு நினைவுக்கு வருவாரா லக்ஷ்மி நாவல் என்றால்... :))

    தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
  11. @ துளசி கோபால்: போர்க்களத்தில் இவர்கள் சந்திக்கும் இன்னல்கள்.... சில தங்கள் ஆசையினால், அதிக நாடுகளை தங்கள் வசம் செய்யும் ஆசையினால் வந்தவை... சில தங்களிடம் இருப்பதைக் காக்க வேண்டிய கட்டாயத்தினால்.... இருப்பினும் ஆண்டு அனுபவிச்சு இருக்காங்க!!

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்.

    பதிலளிநீக்கு
  12. # வேங்கட ஸ்ரீனிவாசன்: உண்மைதான்... அதுவும் ஹரியானா போன்ற மாநிலங்களில் நிலமை மிகவும் மோசம் டா....

    உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா...

    பதிலளிநீக்கு
  13. @ அப்பாதுரை: உங்கள் இனிய வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. # ரமணி: தங்களது வருகைக்கும், இனிய கருத்துரைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இந்த ராஜாக்களின் வாழ்க்கையே சொகுசாகவும்
    வாழ்ந்திருக்காங்க. அந்த பிரம்மாண்ட மாளிகை
    களைப்பாத்தாலே தெரியுது.அதே சமயம் போர்னு வந்துட்டா அதிக ஆபத்துகளையும் சந்திச்சு இருக்காங்க
    பதிவும் படங்களும் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  16. ஜெய் பூர் அரண்மனை கேள்வி பட்டிருக்கிறேன்... ஜெய்விலாஸ் இப்பொழுதுதான்... விலாஸை விலா வாரியா அளித்ததற்க்கு நன்றி... அறைகலன் பெயர் அணிகலன் மாதிரி அழகாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  17. தெரியாத விஷயங்கள்..
    காணாத படங்கள்..
    நல்ல பதிவு..

    பதிலளிநீக்கு
  18. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  19. ஜெயவிலாஸ் அரண்மனை பற்றிய தகவல்கள் படங்கள் அருமை.பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  20. அந்த புகைப்படத்தில் பாதி பேர் Ready for the kill போலில்லையே...Slaughterக்கு தயாரான ஆடு போல் அல்லவா இருக்கு...

    உங்கள் பதிவு அருமை.. அருமை நண்பரே...பயணம் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  21. @ லக்ஷ்மி: அம்மா, வாழ்க்கை சொகுசாகவும் வீரத்திற்கு வேலை கொடுப்பதாயும் அவர்களுக்கு அமைந்துவிட்டது என்னமோ உண்மை.

    தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  22. அருமையான பதிவு. நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. # பத்மநாபன்: “விலாசை விலாவாரியாக அளித்ததற்கு நன்றி” .... அட... எத்தனை வி...

    தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  24. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது தொடர் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே. நான் சென்று பார்த்தவற்றை மற்றவர்களுக்கும் பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி....

    தங்களது இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. # ரத்னவேல்: தங்களது தொடர் வருகைக்கும், இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  26. @ ராம்வி: புகைப்படங்கள் குறித்த தங்களது பாராட்டுகளுக்கும், இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்...

    பதிலளிநீக்கு
  27. # ரெவெரி: Ready for the kill - என்பது இரண்டு பக்கமுமே நண்பரே.... :)))

    தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  29. # DrPKandaswamyPhD: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  30. அரண்மனைக்கு என்னையும் அழைச்சுக்கிட்டு போன மாதிரி, புகைப்படத்தாலயும், வர்ணனையாலும் உணர வச்சுட்டீங்க சகோ!

    பதிலளிநீக்கு
  31. @ ராஜி: தங்களது முதல் வருகை?

    தங்களது வருகைக்கும், இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  32. அறைகலன்களின் அழகுப் படங்கள்.. சுவாரசியம் குறையாத உங்கள் விவரணம்.. அங்கே போய் வந்த பிரமை எனக்குள்.

    பதிலளிநீக்கு
  33. # ரிஷபன்: இன்னும் நிறைய அணிகலன்களும் அவற்றைப் பற்றிய படங்களும் இருந்தன.... பிறகு அவற்றை முகப்புத்தகத்தில் பகிர்கிறேன்...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  34. நான்குஅடி ,ஆறுஅடி எல்லாம் அழகாகத்தான் இருக்கிறது.:)

    பதிலளிநீக்கு
  35. @ மாதேவி: அழகாய் இருந்ததால் தானே இங்கே குறிப்பிட்டது :))))

    தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  36. @ அருள்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்

    பதிலளிநீக்கு
  37. மைசூர் அரண்மனை, சஃப்தர்ஜங் ம்யூசியம் உள்ள அரண்மனை, ஜெய்ப்பூர் அரண்மனை, உதயப்பூர் அரண்மனைனு பார்த்துட்டதாலே இதன் பிரம்மாண்டம் உறைக்கலை. ஆனாலும் கட்டமைப்பு கண்களைக் கவர்கிறது. வட மாநிலங்களில் எங்கு போனாலும் இம்மாதிரி அரண்மனைகள் ராஜாக்கள் கட்டியது பெரிது பெரிதாகப் பார்க்கலாம்; ஆனால் தென் மாநிலங்களிலோ மன்னர்கள் பெயரால் பெரிது பெரிதாகக் கோயில்களைப் பார்க்கலாம். சரஸ்வதி மஹால் தஞ்சையிலும், திருமலை நாயக்கர் மஹால் மதுரையிலும், புதுக்கோட்டை அரண்மனையையும் தவிர வேறு அரண்மனைகள் தமிழ்நாட்டில் இருக்கா? இருந்தால் சொல்லுங்கப்பா. போய்ப் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோட்டைகள் இருக்கின்றன. அரண்மனைகள் நம்மூரில் என்னன்னு இருக்குன்னு தேடணும். துளசி டீச்சர் எங்கிருந்தாலும் வருக! அவங்க தான் இந்த மாதிரி விஷயத்தில் ஸ்பெஷலிஸ்ட்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

      தொடர்ந்து அடுத்த பாகங்களையும் படித்திடுங்க கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....