தொகுப்புகள்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

விருது வாங்கலையோ விருது!




”என்னங்க! வாசல்ல கையிலே வீடியோ காமிரா, மைக் எல்லாம் வச்சுக்கிட்டு ஒரு பெரிய கும்பல், உங்க பேரைச் சொல்லி கேட்கறாங்க! நீங்க என்னடான்னா இன்னும் தூங்கிக்கிட்டிருக்கீங்க, சீக்கிரம் எழுந்து வாங்க" என்ற குரல் கேட்டு  ”ஞாயிற்றுக்கிழமை தானே இன்னிக்கு! காலையிலேயே எழுப்பறியே!” என்று கேட்டபடியே எழுந்தேன். 

”அட காமிரா, மைக் எல்லாம் எடுத்துட்டு ஒரு கும்பல் நம்மளத் தேடியா? தப்பா எதுவும் பண்ணலையே” என்று எண்ணியபடியே வெளியே வந்தேன்.  மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் அரசியல்வாதி வெளியே வரும்போது தள்ளுமுள்ளு பண்ணி ஒரே சமயத்தில் பல நிருபர்கள் மைக்கை நீட்டி கேள்வி கேட்பது போல, என்னிடம் கேள்வி கேட்க முட்டி மோதினார்கள் நிருபர்கள்.  என்ன விஷயம் என்றே புரியாமல் முழித்தேன். 

நான் பேய் முழி முழிப்பதைப் பார்த்த ஒரு நிருபர், “என்ன சார் அடுத்தடுத்த நாள்ல இரண்டு பெரிய விருது வாங்கிட்டு, இப்படி அடக்கமா ஒண்ணும் தெரியாத மாதிரி முழிக்கிறீங்களே!  நாங்க ஒண்ணும் பார்ட்டி வையுங்க என்றெல்லாம் கேட்க மாட்டோம்! தைரியமா வெளியே வாங்க! ”என்றார்.  விருதா? எனக்கா?  என்ன விருது என்று இன்னமும் புரியாமல் கேட்டேன்.





”அட என்னங்க எங்க கிட்ட போய்  விளையாடிகிட்டு” – என்றபடி “உங்களுக்கு மதுரகவி வலைப்பூ வைத்திருக்கும் ரமா ரவி “The Versatile Blogger Award” கொடுத்து இருக்காங்க.  அது மட்டுமா அதே விருதினை திரும்பவும் கற்றலும் கேட்டலும் ராஜி-யும் கொடுத்திருக்காங்க!  இப்படி இரண்டு தடவை ஒரே விருது வாங்கியும் இவ்வளவு அவை அடக்கமா!  அதான் உங்க கிட்ட பேட்டி வாங்க வந்துட்டோம் காலையிலே" என்றார்கள். 

"இந்த செய்தியை சொன்ன உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி…  நமக்குக் கொஞ்சம் கூச்ச சுபாவம்!  திடீர்னு நம்ம மேலே ஃபோகஸ் லைட் எல்லாம் பட்டா வெக்கத்திலேயே ‘அளுதுருவேன்!’.  அதுனால பேட்டின்னுல்லாம் வேண்டாம்!  காலையிலேயே வந்து இருக்கீங்க, அம்மணி நல்ல டிகிரி காப்பி தருவாங்க! வாங்கி குடிச்சுட்டு கிளம்புங்க!”  என்று ஒரு வழியாக சமாளித்து அனுப்பி வைத்தேன். 

அவர்களை அனுப்பிய பிறகு, “அது என்ன, ’The Versatile Blogger Award’?  Versatile-ன்னா என்ன”ன்னு…Google Translate பண்ணிப் பார்த்தேன். ”பல துறைகளிலும் திறமையுடைய” என்று சொல்லுது கூகுள்.  அட எனக்குள்ள பல துறை வேற இருக்கா?   என்னமோ வெறும் எலும்பும், நரம்பும் தான் இருக்குன்னு இல்ல நினைச்சேன்!”  சரி சரி நம்ம திறமையை அடுத்தவங்க எடுத்துச் சொன்னாத்தானே புரியுது!  இந்த திறமையை உலகுக்கு எடுத்துச் சொன்ன சகோதரி ரமா ரவி அவர்களுக்கும் சகோதரி ராஜி அவர்களுக்கும் மிக்க நன்றி. 





இந்த விருது பெற்றால் செய்யவேண்டியது என்ன என்று Fine Print-ல் சொல்லிட்டாங்க!  அதாவது விருது பெற்றவர்களுக்குப் பிடித்த ஏழு விஷயங்களைச் சொல்லி வேறு ஐந்து வலைப்பதிவாளர்களுக்கு வழங்க வேண்டுமாம்!  அதனால் முதல்ல எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைச் சொல்லிடறேன்.

  • புத்தகங்கள் படிப்பது [இப்போது வலைப்பூக்கள் இந்த இடத்தினை மெதுவாகத் திருடிக்கொண்டு விட்டது!]
  • திரை இசைப் பாடல்கள் சேகரிப்பது [முன்பு ஒலிநாடாக்களில் இப்போது குறுந்தகடுகளில்!] மற்றும் கேட்பது.
  • சில வருடங்களாக புகைப்படம் எடுப்பது [வளைத்து வளைத்து எடுக்கிறேன் – அதான் பிடிக்கலைன்னா ஈசியா அழிச்சிடலாமே – டிஜிட்டலில்]
  • இரவு நேரப் பயணம் [பெரும்பாலும் பேருந்தில் செல்லும் போது இரவு நேரப் பயணத்தினையே விரும்புவேன் – நான் தூங்காது இரவின் நிசப்தத்தில் கடந்து செல்லும் அமைதியான ஊர்களைப் பார்ப்பதில் ஒரு ஆனந்தம்!]
  • எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் உணவினை ரசிப்பதும் ருசிப்பதும் [இருப்பதை விட்டு இல்லாததைத் தேடுவானேன்!]
  • அட ஐந்து தான் ஆயிற்றா?  இன்னும் ரெண்டு எழுதிடுவோம்..  :)  நண்பர்களோடு நெடும்பயணம் செய்யப் பிடிக்கும்.
  • நடப்பது மிகவும் பிடிக்கும் – அதற்காகவே இரு சக்கர – நான்கு சக்கர வாகனம் வாங்கவில்லையெனில் பாருங்களேன்.


சரி இப்போது விருது வழங்கும் நேரம் வந்து விட்டது.  நான் ரசித்த, ரசிக்கும், சில வலைப்பூ எழுதுபவர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறேன். 

காரஞ்சன் சிந்தனைகள் எனும் வலைப்பூவில் எழுதும் ஈ.எஸ். சேஷாத்ரி;

சோமாயணம் எனும் வலைப்பூவில் எழுதி வரும் கலாநேசன்;

ஆனந்த வாசிப்பு வலைப்பூ வைத்திருக்கும் பத்மநாபன்;

எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லும் ”ஆரண்யநிவாஸ்” ஆர். ராமமூர்த்தி;

நானோர் வானவில் மனிதன் என்று சொல்லும் மோகன்ஜி.

விருது பெற்ற நண்பர்கள் அனைவரும் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாய் ஒரு பதிவு எழுதி விருந்தினை மேலே Fine Print-ல் சொன்னது போல செய்து விட வேண்டும் என்ற விண்ணப்பத்துடன்...

மீண்டும் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


56 கருத்துகள்:

  1. பதிவுலகில் இப்ப எல்லாபக்கமும் விருதுமழைதான் பொழிந்துகொண்டிருக்கு. நீங்கதான் வித்யாசமான கோணத்தில் பதிவிட்டிருக்கீங்க. வாழ்த்துகள். பெற்றதற்கும் வழங்கியதற்கும்.

    பதிலளிநீக்கு
  2. @ லக்ஷ்மி: தங்களது உடனடி வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி ... கலந்து கட்டி எழுதும் உங்களுக்கு பல துறைக்கான விருது எல்லா வகையிலும் பொருந்தும் .. வாழ்த்துக்கள் ....
    எனக்கு நீங்கள் கொடுத்தது '' அப்பப்ப எதாவது எழுதுப்பா'' ன்னு சொல்லி ஊக்க படுத்தும் வகையில் இருக்கிறது ... மீண்டும் நன்றி

    பதிலளிநீக்கு
  4. @ பத்மநாபன்: வரவேண்டும் நண்பரே... தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. அப்பப்ப எதாவது எழுதுங்கள் நண்பரே... உங்களை வலையுலகம் நிறைய மிஸ் செய்கிறது.....

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ச‌ந்தோஷ‌ம் ச‌கோ...!! வாழ்த்துக‌ள் ... வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கும், வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ளுக்கும்!

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துகள் வெங்கட்.
    எழுத்துகளில் அன்பும் அருமையும் விவரமாகத் தெரிவிக்கப்படுகிறது, எங்களையும் வந்தடைகிறது. அதனால இந்த விருதுக்கு நீங்கள் அழகு செய்கிறீர்கள்.
    உங்களிடமிருந்து விருது பெற்ற அனைவருக்கும்
    என் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. சூப்பர் தலைப்பு
    விருதுகள் பெற்றமைக்கும் வழங்கியமைக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. இரண்டு விருதுகள் பெற்ற தங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். அதை சுவைபட எழுதியுள்ளதற்கு பாராட்டுக்கள்.

    தங்களுக்கு விருது அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்.

    தாங்கள் இந்த விருதை பகிர்ந்து அளித்துள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள் வெங்கட்.

    ஏழில் இரண்டு பயணம் பற்றியது. உன் பயணக் கட்டுரைகளின் தரத்தின் காரணம் புரிகிறது.

    பதிலளிநீக்கு
  12. ஆஹா..... டபுள் Dடிப்!!!!!

    அளித்தவர்களுக்கும் பெற்றவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள், பல்துறை மன்னரே!

    பதிலளிநீக்கு
  13. விருது மழையில் நனைந்தமைக்கு
    வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  14. தங்களுக்கு மேலும் ஒரு விருது காத்துள்ளது. பெற்றுக்கொள்ள தயவுசெய்து வருகை தாருங்கள்.

    http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_11.html

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  15. அட!! விருதுகளை நீங்க பெற்றுக்கொண்டவிதம் நன்னாயிருக்கு வெங்கட்..மிக்க நன்றி,

    பதிலளிநீக்கு
  16. விருதுக்கும் விருதினை பகிர்ந்து கொண்டமைக்கும்
    அதனையும் வித்தியாசமான பதிவாகக் கொடுத்து
    அசத்தியமைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. இரண்டு விருதுகள் பெற்ற தங்களுக்கு வாழ்த்துகள் வெங்கட்...

    பதிலளிநீக்கு
  18. முதல் தடவையா உங்க தளத்துக்கு வர்றப்பவே ரெண்டு விருது வாங்கின பூரிப்போட உங்களை சந்திக்கறேன். அதையும் அழகாச் சொல்லியிருக்கீங்க. இந்த விருதுக்கும் இன்னும் பல விருதுகள் பெறவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள்ல பஸ் பயணம்ங்கிற விஷயத்துல மட்டும் நான் நேர்மாறு. ரயில் பயணம் தான் பிடிக்கும். (ஏன்கறதை என்னோட அடுத்த பதிவுல தெரிஞ்சுக்கங்க) மற்றபடி நீங்க நம்ம ஆளுதான்!

    பதிலளிநீக்கு
  19. @ புலவர் சா. இராமாநுசம்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி புலவரே....

    பதிலளிநீக்கு
  20. @ ஆசியா உமர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.....

    பதிலளிநீக்கு
  21. @ நிலாமகள்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  22. @ சமுத்ரா: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. @ வல்லிசிம்ஹன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் வாழ்த்திய உங்களது நல்லுள்ளத்திற்கும் மிக்க நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  24. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும், பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சார்.....

    பதிலளிநீக்கு
  26. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: உனது வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி சீனு....

    பதிலளிநீக்கு
  27. @ துளசி கோபால்: டபுள் Dடிப்... :))

    உங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி டீச்சர்....

    பதிலளிநீக்கு
  28. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. @ வை. கோபாலகிருஷ்ணன்: அட இன்னுமொரு விருது.... இதைத் தந்து கௌரவித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.....

    நானும் தொடர்கிறேன்.... விரைவில்...

    பதிலளிநீக்கு
  30. @ ராம்வி: ஓ.... நன்றாக இருந்ததா.... ரசித்தமைக்கு மிக்க நன்றி ரமா ரவி....

    தங்களுக்கும், ராஜிக்கும் தான் நன்றி சொல்லவேண்டும் இப்பதிவிற்கு! விருது கொடுத்தது நீங்கள் தானே... :)

    பதிலளிநீக்கு
  31. @ தனசேகரன்.எஸ்.
    @ சந்துரு:

    தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  32. @ ரமணி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும், இப்பதிவினை ரசித்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  33. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  34. @ கணேஷ்: அட உங்களது முதல் வரவு.... மிக்க மகிழ்ச்சி.... பயணம் என்றாலே சுகம்தான்.... ரயிலோ, பேருந்தோ இல்லை மாட்டுவண்டியோ எதுவுமே சுகம்தான்....

    உங்களது நாளைய பதிவினையும் பார்க்கிறேன்....

    தொடர்ந்து வந்து எனது பதிவினைப் படிக்க வேண்டுகிறேன்....

    பதிலளிநீக்கு
  35. அட அட! என்ன ஒரு அடக்கம்! என்ன ஒரு அமரிக்கை! ரெண்டு விருது வாங்கியும் கொஞ்சமும் பந்தா பண்ணாம காமரா மைக் ஆளுங்க கிட்ட பணிவா பதில் சொல்லிருக்கீங்களே!இதுக்காக உங்களுக்கு "பணிவான பதிவுத் திலகம்"னு இன்னொரு பட்டமும் கொடுத்துடறோம்.என்ன சரிதான?

    விருதுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  36. விருது விருது என்று துருவி துருவி கேட்டு வாங்கறவங்க மத்தியில நல்ல விஷயங்களை துருவி துருவி எழுதி விருது வாங்கியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. சுவை பட எழுதியமைக்கும், விருது பெற்றமைக்கும் வாழ்த்துகள் சார்

    பதிலளிநீக்கு
  38. இரண்டு விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  39. @ ராஜி: //உங்களுக்கு "பணிவான பதிவுத் திலகம்"னு இன்னொரு பட்டமும் கொடுத்துடறோம்.//

    அடடா.... இன்னொரு பட்டமா... தலை தாங்காது சகோ :)))))

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  40. @ ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி... தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  41. @ அரசன். சே: தங்களது முதல் வருகைக்கு நன்றி நண்பரே... எனது வலைப்பூவினைத் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  42. @ ஜிஜி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
  43. சார்..உங்களைத் தான்!
    சொல்லுங்க..
    உங்களுக்கு ஒரு விருது,வெஙக்ட் நாகராஜ் வலைப்பூவில் காத்திக்கிட்டு இருக்கு..
    சார் ...விளையாடாதீங்க..இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணு இல்லையே...
    உங்களை எதுக்கு சார், நான் ஏப்ரல் ஒண்ணாம் தேதி முட்டாளாக்கணும்?
    சார்...சார்..என்ன சார் சொல்றீங்க..
    போங்க சார்..வெங்கட் வலைத் தளத்திற்கு போய்ப் பாருங்க ...அப்ப புரியும்..
    மிக்க நன்றி சார்..உடனே போறேன்!
    அடேடே..எனக்கும் விருதா?
    மிக்க நன்றி,வெங்கட்!

    பதிலளிநீக்கு
  44. //சார் ...விளையாடாதீங்க..இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணு இல்லையே...
    உங்களை எதுக்கு சார், நான் ஏப்ரல் ஒண்ணாம் தேதி முட்டாளாக்கணும்?
    சார்...சார்..என்ன சார் சொல்றீங்க..//

    அடாடா.... :)))

    தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி மூவார் முத்தே....

    பதிலளிநீக்கு
  45. அன்பு நண்பருக்கு

    விருது வாங்கிய உங்களுக்கு நல் வாழ்த்துகள். மேலும் பல விருதுகள் வாங்க வாழ்த்துகள். முடிந்தால் இன்று மாலை 7½ மணி அளவில் செக்டர் 4 இல் சந்திக்கலாம். நாளை காலை 7 அளவில் கணபதி ஹோமம் ஆரம்பம்

    பதிலளிநீக்கு
  46. @ விஜய்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  47. விருது மழையில் நனைந்து மகிழுங்கள் வெங்கட்.
    வாழ்த்துக்கள்!
    உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  48. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றிம்மா.....

    பதிலளிநீக்கு
  49. மலர்ந்த முகம் ! பரந்த உள்ளம் ! உயிர்களிடத்து அன்பு வேணும் உபதேசம் ! விருதுக்கென்ன பஞ்சம் ? நல்வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கர ராமசாமி ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....