தொகுப்புகள்

புதன், 29 பிப்ரவரி, 2012

உடைந்த சாவி – எஸ். ரா. சொன்ன கதை


[பட உதவி:  கூகிள்]

ஒரு பிரபல அமெரிக்க வங்கியின் மேலதிகாரிஅவருக்குத் தேவையான எல்லாப் பொருளையும், வசதிகளையும் காசு கொடுத்து வாங்காது அட்டையைத் தேய்த்து வாங்கும் பணக்காரர்வசதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர்

ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் எண்பதாவது மாடியில் குடியிருக்கும் அவர் ஒரு நாள் தனது குடியிருப்பிலிருந்து வெளியே வர சாவி போட்டுத் திறக்க முயற்சிக்கும்போது சாவி உள்ளே மாட்டி உடைந்து விட, உடனே அலைபேசியில் உதவியாளரை அழைத்து பூட்டைத் திறக்க ஆள் அனுப்புமாறு சொன்னார்பூட்டினை மாற்றுச் சாவி செய்து திறக்க வந்த ஆள் சொன்னார், “பூட்டினை திறக்க பத்து டாலர் கதவின் கீழ் வழியே தள்ளுங்கள்”.

அந்த அதிகாரிதான் காசே வைத்துக்கொள்ளாத ஆளாயிற்றே… ”நீ கதவைத் திற நான் அட்டையைத் தேய்த்து உனது பணிக்கான கூலியைத் தருகிறேன்என்றாராம்இல்லை ஐயாவேலை முடிந்த பின் பலர் கூலி தராததால்வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னரே கூலி வாங்குவது என எங்கள் சங்கத்தில்  முடிவு செய்துவிட்டோம்என்று அந்த நபர் சொல்ல, வந்ததே  அதிகாரிக்குக் கோபம், "நீ இல்லையென்றால் என்ன, நான் வேறு யாரையாவது வைத்து கதவினைத் திறந்து கொள்கிறேன்!" என்று கூறி அவரை திட்டி அனுப்பினார்.   அந்த நபர், "நான் சங்கத்தில் உங்களைப் பற்றி ஒரு புகார் எழுதி விடுகிறேன்எங்கள் சங்கத்து ஆட்கள் யாரும் உங்கள் பூட்டினைத் திறக்க மாட்டார்கள்" என சொல்லிச் சென்றார்.

அதிகாரி உடனே தனது கீழே வேலை செய்யும் நபரை அழைத்து, நீ வந்து மாற்று சாவி போட்டு எனது வீட்டைத் திற எனச் சொல்ல, “சார் நீங்க இரண்டு நாளுக்கு முன்னாடி நான் அலுவலக நேரத்தில் வெளியே செல்ல அனுமதி கேட்டபோது, அலுவலகம் முடிந்த பின் செல்லச் சொன்னீர்கள், அது போல, இதுவும் அலுவலகம் சாரா விஷயம் அதனால் அலுவலகம் முடிந்தபின் வந்து கதவினைத் திறக்கிறேன்எனச் சொல்ல, அவரையும் திட்டினார்உடனே அவரது உதவியாளர், எனக்கு இது நல்ல வாய்ப்பு, என்னைத் திட்டியது பற்றி மேலதிகாரிகளுக்குப் புகார் அளிக்கிறேன் என சொன்னார்.

அடுத்து அந்த வங்கி அதிகாரி, தனது அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை அழைத்து, தான் வீட்டினுள் மாட்டிக்கொண்டதாகவும், மாற்றுச் சாவி வைத்து திறக்கும்படி சொல்ல, காவலாளி சொன்னாராம் – “எத்தனை முறை என்னை சட்ட திட்டங்கள் சொல்லி மிரட்டுவீர்கள், இப்போது நீங்களேவீட்டின் உரிமையாளர் வீட்டிலிருக்கும்போது, காவலாளி மாற்று சாவி போட்டுத் திறக்கக்கூடாதுஎன்ற சட்டத்தினை மீறச்சொல்கிறீர்களே…  என்னால் முடியாது என்று அவரும் மறுத்து விட்டார்.

அடுத்தது அவர் அழைத்தது யாரை  என நினைக்கிறீர்கள்….  இவர்கள் எல்லோரும் வெளி ஆட்கள்என் காதலி என்னை நிச்சயம் கைவிட மாட்டாள் என அவளை தொலைபேசியில் அழைக்க, அவளோ , “என்னை எத்தனை முறை வரச்சொல்லிவிட்டு, அலுவல் வேலையில் மூழ்கி நீங்கள் வாராது என்னைக் காத்திருக்க வைத்திருக்கிறீர்கள்!, அதனால் இரவு வரை காத்திருங்கள்என்று சொல்லி அலைபேசியை அணைத்தாளாம்.

இத்தனை பேரும் உதவ மறுக்க, வங்கி அதிகாரி இத்தனை நேரம் தனக்கு நடந்த அனைத்தையும் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தாராம்இத்தனை நாட்களாக, பணம், வசதி இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என நினைத்தோமே, சக மனிதர்களை மதிக்காது, அவமதித்து விட்டோமே, அனைவரோடும் பாரபட்சமின்றி பழகி நட்போடு இருந்திருந்தால் இன்று இப்படி ஆகியிருக்காதேஎன்று வருந்தினாராம்.

[பட உதவி:  கூகிள்]


இத்தனை காலம் எவ்வளவு தவறு செய்து விட்டோம் என அவர் உணர்ந்து வருந்திக்கொண்டிருந்த போது, ”என்னதான் இருந்தாலும் பாவம் ஒரு நாள் முழுவதும் வீட்டில் அடைந்திருப்பது கடினம் என எண்ணி”, ஒரே சமயத்தில் அவர் வீட்டின் கதவுகளைத் திறக்க வந்து சேர்ந்தார்கள்பூட்டு-சாவி பழுது பார்ப்பவர், உதவியாளர், காவலாளி மற்றும் காதலி ஆகியோர்.

திறந்து வீட்டினுள் வந்த அனைவரையும் பார்த்து அந்த அதிகாரி சொன்னார் – “இத்தனை நாட்களாக மூடனாக இருந்த என்னைத் திருந்த வாய்ப்பளித்த இந்த உடைந்த சாவிக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்உங்கள் அனைவருக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறதுஉங்களுக்கும் எனது நன்றிகள் எனச் சொன்னாராம்.

உடைந்த சாவியே உனக்கு எனது நன்றிகள்….

நாமும் சாவி உடையும் வரை காத்திருக்காது கதையின் கருத்தினைப் புரிந்து கொள்வோம்.

மீண்டும் சந்திப்போம்

நட்புடன்
வெங்கட்.




59 கருத்துகள்:

  1. அட்டையை மட்டும் நம்பி இருக்காமல் கையில் எப்போதும் கொஞ்சம் கேஷ் வச்சுக்கணும் என்ற பாடத்தை யாரும் கவனிக்கலையா:-))))))

    பதிலளிநீக்கு
  2. @ ராமலக்ஷ்மி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  3. @ துளசி கோபால்: ஆமாம்.... அட்டையை நம்பியோர் கைவிடப்படுவார்! என்று சொல்லிக்கலாம் :))

    பதிலளிநீக்கு
  4. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை.
    அன்று தவற விட்ட எஸ்.ரா. அவர்களின் பேச்சை
    உங்கள் பதிவுகளின் மூலம் தெரிந்து கொண்டேன்.
    ரொம்ப நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  6. நாமும் சாவி உடையும் வரை காத்திருக்காது கதையின் கருத்தினைப் புரிந்து கொள்வோம்//

    ந‌ல்ல‌ ப‌டிப்பினை!

    பதிலளிநீக்கு
  7. Very good story. It is good that you are sharing them one by one in a detailed manner. If you had shared it all, you need to cut short them.

    பதிலளிநீக்கு
  8. உடைந்த சாவிதான் திறந்திருக்கிறது திறக்கமுடியாத பூட்டை.பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  9. அவரது பூட்டிய மனதை திறக்க எத்தனை மனிதர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  10. சாவி உடைந்தாலும், அவர் இறுகிய மனம் என்ற பூட்டு திறந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. நல்லதொரு அருமையான கதையைக் கேட்டு எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள். vgk

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு கருத்து. ‘அட்டை’ வெச்சுக்கற வசதி இல்லாத (என் மாதிரி) ஆளுங்களுக்குக் கூட இதிலுள்ள நீதி பயன்படும். நன்று நண்பரே...

    பதிலளிநீக்கு
  12. அன்பு நண்பருக்கு

    இந்த உலகத்தில் நிறைய உடைந்த சாவிகள் உலவுகின்றன. தங்களின் இந்த படைப்பு அந்த சாவிகளை சரி செய்யும் என நம்புகிறேன்

    அன்புடன்

    விஜய்

    பதிலளிநீக்கு
  13. நல்ல கதை. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  14. அருமையான கதை.
    பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  15. மனதை திறந்த சாவி.மிகவும் அருமையான கதை.நன்றி பகிர்வுக்கு,வெங்கட்.

    பதிலளிநீக்கு
  16. நாங்கலாம் சாவிய உடைக்க மாட்டோம்...
    தொலைக்கறதொடு சரி...

    Moral : (மனக்)கதவை திறக்கும் வலிமை படைத்தது சாவி..

    பதிலளிநீக்கு
  17. அன்று காதற்ற ஊசி ... இன்று உடைந்த சாவி ... அருமை .. பகிர்வுக்கு நன்றி !!

    பதிலளிநீக்கு
  18. @ ஜிஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜிஜி.... அன்று உங்களையும் மற்ற பதிவர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  19. @ நிலாமகள்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
  20. @ முத்துலெட்சுமி: மிக்க நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  21. @ அமைதிச்சாரல்: மிக்க நன்றி அமைதிச்சாரல்....

    பதிலளிநீக்கு
  22. @ மோகன்குமார்: தனித்தனியாக பதிவு செய்தால் முழுதாகச் சொல்லலாம் என்றே இந்த முடிவு... :)

    ரசித்தமைக்கு நன்றி மோகன்....

    பதிலளிநீக்கு
  23. @ சுந்தர்ஜி: தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
  24. @ ஈஸ்வரன்: எத்தனை மனிதர்கள் தேவைப்பட்டு இருக்கிறார்கள்... :(

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி...

    பதிலளிநீக்கு
  25. உடைந்த சாவி
    உள்ளத்தைத் திற்ந்தது!

    நன்றாக இருந்தது நண்பரே! நன்றி!
    காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  26. @ வை. கோபாலகிருஷ்ணன்: // அவர் இறுகிய மனம் என்ற பூட்டு திறந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. //

    உண்மை...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்....

    பதிலளிநீக்கு
  27. @ பழனி கந்தசாமி: பதிவினைப் படித்து, கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  28. @ கணேஷ்: நமக்கும் கடன் அட்டையெல்லாம் கிடையாது நண்பரே.... இருந்தால் செலவு செய்வோம் - இல்லையெனில் பேசாமல் இருப்போம்! :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  29. @ விஜயராகவன்: நம்புவோம்....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  30. @ பந்து: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்து எழுதியமைக்கும் நன்றி....

    பதிலளிநீக்கு
  31. @ ராம்வி: பதிவினைப் படித்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி ரமா ரவி...

    பதிலளிநீக்கு
  32. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: //Moral : (மனக்)கதவை திறக்கும் வலிமை படைத்தது சாவி..// அதே அதே...

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்...

    பதிலளிநீக்கு
  33. @ ரிஷபன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்....

    பதிலளிநீக்கு
  34. @ எஸ். ஏ. சரவணகுமார்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    நல்ல நினைவு உங்களுக்கு... மிக்க மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  35. @ சேஷாத்ரி.ஈ.எஸ்.: மிக்க மகிழ்ச்சி நண்பரே....

    பதிலளிநீக்கு
  36. வெங்கட் அருமையாயிருக்கு கதை...

    பதிலளிநீக்கு
  37. Good story with 'key' message. I really missed on that day. thanks...

    பதிலளிநீக்கு
  38. கதை உடையாத சாவியாகவே மனப் பூட்டை திறக்குமாறு உள்ளது.பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  39. @ ரெவெரி: வருகைக்கும், பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ரெவெரி....

    பதிலளிநீக்கு
  40. @ கலாநேசன்: தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  41. @ ராஜி: பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி ராஜி....

    பதிலளிநீக்கு
  42. உடைந்த சாவிதான் என்றாலும் , கண்களைத் திறந்தது. அருமையான கதை.பகிர்வுக்கு நன்றி

    நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  43. @ சிவகுமாரன்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் பக்கத்தில் உங்களது வருகை.. மிக்க மகிழ்ச்சி நண்பரே....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. அனைவரும் அவசியம மனதில் ஏற்றிவைத்துக் கொள்ளவேண்டிய
    அருமையான கதை பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  45. @ ரமணி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து, கருத்துரை வழங்கி தமிழ்மணத்திலும் வாக்களித்தமைக்கு மிக்க நன்றி சார்.

    இன்னும் இந்தப் பகிர்வுக்கு நீங்கள் வரவில்லையே என நினைத்தேன்.. வந்தது மகிழ்ச்சி அளித்தது.....

    பதிலளிநீக்கு
  46. உடைந்த சாவியை வைத்து , ஒரு நல்ல கருத்தான கதை..எஸ்.ரா வை உள்வாங்கி பகிர்ந்த விதம் அருமை..

    பதிலளிநீக்கு
  47. @ பத்மநாபன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்துஜி!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....