தொகுப்புகள்

திங்கள், 25 ஜூன், 2012

என்னோட நியூயார்க் வந்துடும்மா...


[பட உதவி: கூகிள்]


புது தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தின் T3 ஓய்விடத்திலிருந்த இருக்கையில் சரிந்து அமர்ந்திருந்தார் அந்த வயதான பெண்மணி. வாழ்வில் பெற்ற அனுபவங்கள் வரிவரியாக சுருக்கங்களை அவரது தோலில் ஏற்றியிருந்தது. பலவித நாடுகளிலிருந்து வந்த/செல்லும் எண்ணிலடங்கா மனிதர்களுக்கு நடுவே இந்தப் பெண்மணி எங்கே பயணம் செய்யக் காத்திருக்கிறார்? அவரது மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள்தான் என்ன? பார்ப்போமா?


“அப்பாடி…. எவ்வளவு வருடங்கள் ஆயிற்று இப்படி நிம்மதியாய் உட்கார்ந்து. வாழ்வின் தொடக்கத்திலிருந்தே ஓடி ஓடி, மணமுடித்து, “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” என ஒரு மகனைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி என ஓட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ஒரு வருடமா, இரண்டு வருடமா, கடந்த 72 வருடங்களாக ஓடிட்டே தான் இருந்திருக்கேன்….

ஆச்சு, ஒரே பையனும் கல்யாணம் பண்ணி நியூயார்க்-லயே செட்டிலாயிட்டான். ஆனாலும் எனக்கென்னமோ இந்த தில்லியை விட்டு போகணும்னு நினைச்சுக்கூட பார்க்கமுடியல. வயசு தான் ஏறிட்டு போகுதே, எப்படி தனியாக இருக்க முடியும்னு அப்பப்ப மனசுல தோணிட்டே இருந்தாலும், ஏனோ போக மனசு வரல. ஆனா இந்த ஒரு வருஷமா உடம்பு ரொம்பதான் படுத்துது. எவ்வளவு நாள் தான் ஓட முடியும், என்னிக்காவது ஒரு நாள் உட்கார்ந்து தானே ஆகணும்.

இப்படி ஒரு நாள் உடம்பு சரியில்லாம பக்கத்து வீட்டுக்காரங்க துணையோட ஆஸ்பத்திரி போன போதுதான் என் பையன் அமெரிக்காவிலிருந்து ஃபோன் பண்ணான். “ஏம்மா, இன்னும் எத்தனை நாள் தான் தனியா கஷ்டப்படுவே, இங்கேயே வந்துடேன்னு” கூப்பிட்டான். உடம்பு சரியில்லாத கஷ்டத்திலேயே சரின்னு சொல்லிட்டேன்.

அவனும் அங்கே இருந்தே, இன்டர்னெட் மூலமா நான் இருந்த எங்க சொந்த வீட்டை விக்கிறதுக்கும், பாஸ்போர்ட், விசா, எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டு, என்னை அழைச்சிட்டுப் போக ஒரு மாசம் முன்னாடி வந்தான். எல்லா வேலையும் கடகடன்னு முடிச்சு, இதோ இங்கே ஏர்போர்ட் வரைக்கும் வந்தாச்சு, அடுத்து நியூயார்க் தான்.”

அவரோட எண்ண ஓட்டத்தை தடை செய்யறமாதிரி, பாதுகாப்பிற்கு நின்றிருந்த ஒரு போலீஸ்காரர், அந்தப் பெண்மணியை “மாதாஜி ரொம்ப நேரமா இங்கே உட்கார்ந்து இருக்கீங்களே, ஏதாவது உதவி வேணுமா?”ன்னு கேட்டார். அட பழைய நினைவுகளில் மூழ்கியதில் நேரம் போனதே தெரியலையேன்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டே, “என் பையனோட நியூயார்க் போகக் காத்திருக்கேன், உள்ள போய் போர்டிங் பாஸ் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு வரேன்னு போயிருக்கான், இப்ப வந்துடுவான்”_னு சொல்ல, அவர் விடாம “உங்க பையன் பேர் சொல்லுங்கம்மா, நான் விசாரிச்சு சொல்றேன்னு” பேர் கேட்டுட்டு உள்ளே போனார். 

[பட உதவி: கூகிள்]

உள்ளே போய் அரை மணி நேரம் கழித்து வந்த போலீஸ்காரர் முகத்தில் ஒரு வித அதிர்ச்சியும், அயர்ச்சியும். ”ஏம்மா, நல்லாத் தெரியுமா, உங்க பையன் உங்களுக்கும் டிக்கெட் வாங்கி இருக்காரான்னு?, ஏன்னா அவர் ஒரு மணி நேரம் முன்பு கிளம்பின நியூயார்க் விமானத்திலே போய்ட்டாரே…”  ன்னு சொன்னதைக் கேட்ட பெண்மணிக்கு மாத்திரமல்ல, நமக்கும் அதிர்ச்சி.

அந்த வயதான பெண்மணிக்கு உட்கார்ந்திருந்தாலும், தரை கீழே நழுவி உள்ளே விழுந்துவிட்டது போன்ற உணர்வு.  “நல்லா விசாரிச்சீங்களா, என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டானேன்னு” கேட்க, ”நல்லா விசாரிச்சேம்மா, அந்த விமானத்துல அவருக்கு மட்டும் தான் டிக்கெட் வாங்கி இருக்காரு, உங்களுக்கு வாங்கவே இல்லை, விமானம் போயிடுச்சேம்மா” என்று சொல்லி, ”உங்களுக்கு வீட்டுக்கு போகணும்னா சொல்லுங்க, வண்டி ஏற்பாடு பண்ணித் தரேன்னு” சொல்லியிருக்கார்.

இத்தனை வருடம் கஷ்டப்பட்டு, வளர்த்து ஆளாக்கி விட்ட மகன் பணத்திற்காக இப்படிச் செய்வான்னு எதிர்பார்க்காத அந்த பாட்டி அதிர்ச்சியில் அங்கேயே மயங்கிச் சரிந்தார். செல்வதற்கு வீடும் இல்லாமல், கையில் பணமும் இல்லாது என்ன செய்ய முடியும் அந்த மூதாட்டியால்? 

பணத்திற்காக பெற்ற தாயையே இப்படி நட்டாற்றில் விட்டுச் சென்ற அவலம் இந்தத் தலைநகர் தில்லியில் உண்மையாகவே நடந்தது. வடக்கு தில்லியில் நிறைய அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஒன்றில் இருந்த ஒரு பெண்மணிக்கு நேர்ந்த கதி இது. விஷயம் கேள்விப்பட்டு அந்தக் குடியிருப்பில் இருந்த சில பெரியவர்கள் அந்த மூதாட்டியை அழைத்து வந்து மேற்கொண்டு என்ன செய்யமுடியுமோ அதைச் செய்தார்கள். இப்படியும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பெற்ற தாயை இப்படி நடுத்தெருவில் விட்டுப்போன அந்த படுபாவியை என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்.

மீண்டும் சந்திப்போம்…

வெங்கட்.
புது தில்லி.


110 கருத்துகள்:

  1. அந்தப் பையனை எல்லாம் வெட்டி எறிந்தாலும் தவறில்லை

    www.bhageerathi.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்...

      என்ன மகனோ....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

      நீக்கு
  2. பெற்ற தாயை இப்படி நடுத்தெருவில் விட்டுப்போன அந்த படுபாவியை என்ன செய்யலாம்?

    இந்த விஷயத்தை ஜீரணிக்கவே
    பல நாட்கள் ஆகும் போல இருக்கே
    அவன் அத்தோடு தொலையட்டும்
    அவனை ஆண்டவன் பார்த்துக் கொல்வான்
    இந்த அளவிலாவது நல்லவர்களுடன்
    இணைத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்வோம்
    தூக்கம் கெடுத்துப் போகும் பதிவுபோகும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவனை ஆண்டவன் பார்த்துக் கொல்வான்
      இந்த அளவிலாவது நல்லவர்களுடன்
      இணைத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்வோம்//

      சரியாச் சொன்னீங்க, அவனை ஆண்டவன் பார்த்துக் கொல்வான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி.

      நீக்கு
  3. மிகவும் அதிர்ச்சியை தந்த தகவல். மனது கனத்தது....அவனுக்கும் வயதாகும் அவனும் கண்டிப்பாக இதற்கு மேல் அதிகம் அனுபவிப்பான். நீயுயார்க் இரக்கமனதுள்ள மனிதர்கள் வாழும் இந்தியா அல்ல. அவன் தாயிற்கு உதவ பல மனித இதயங்கள் வந்தன. ஆனால் இந்த நாய் நிச்சயம் அனுபவிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவனுக்கும் வயதாகும் அவனும் கண்டிப்பாக இதற்கு மேல் அதிகம் அனுபவிப்பான். // எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

      தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி “அவர்கள் உண்மைகள்”.

      நீக்கு
  4. ஏமாற்றுதல், மோசடி, நயவஞ்சகம் முதலான பல குற்றங்கள் புரிந்ததுதடன் பெற்றதாயின் மனத்தைக் கொலை செய்த பாவி இருக்கும் ஊரிலும் பணியாற்றும் இடங்களிலும் இத்தகவலைப் பரப்புங்கள். இக் கொடுமையை நினைக்கும் பொழுது ஒன்றும் எழுத வரவில்லை. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திரு...

      நிச்சயம் பெற்ற தாயின் மனதைக் கொலை செய்துவிட்டது தான் அதிர்ச்சியாக இருந்தது. கேட்டிருந்தால் அந்தத் தாயே அவனுக்கு சொத்து அனைத்தையும் கொடுத்திருக்கக்கூடும்....

      நீக்கு
  5. கொடுமை ஆரம்பத்தில் சிறுகதையோ என நினைத்தேன். உண்மை சம்பவம் என அறிந்தால் கொடுமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை சம்பவம் தான் மோகன். நீண்ட நாள் பகிர வேண்டாமென்றே இருந்தேன். எனது அலுவகத்திலுள்ள ஒரு நண்பரின் அடுக்கு மாடிக்குடியிருப்பில் நடந்த நிகழ்விது....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. கேட்டதிலிருந்து எனது மனதிலும் பாரம். சற்றே இறக்கி வைக்கவே இப்பகிர்வு....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. இவனா மகன்?..... எல்லோருடைய மனதிலும் இதே கேள்விதான்..

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  8. கேவலம் பணத்துக்காக இந்த அளவு கீழ்த்தரமாக நடந்து கொள்வார்களா? கேட்கவே உடம்பெல்லாம் பதறுகிறது! அந்த அம்மாவிற்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதன் பணத்திற்காக எதையும் செய்யத்துணிந்து விட்டான்.... அதற்காக பெற்ற தாயையும் இப்படி விட்டுவிட்டானே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து.

      நீக்கு
  9. உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? கொடுமை..சே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? //

      தெரியவில்லை சகோ.... எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்.....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

      நீக்கு
  10. இப்படி எல்லாமா நடக்குது. இனி அந்தப்பாட்டியம்மாவின் கதி என்னாகுமோன்னுபதைப்புதான் தோனுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதைப்புதான். சில நல்லுள்ளங்களாகச் சேர்ந்து அந்தம்மாவினை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடுகள் செய்துவருகிறார்களென தெரிகிறது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா...

      நீக்கு
  11. மாதா வயிறெரிய வாழா ஒருநாளும் என்பார்கள். அந்த மகன்(?) என்கிற படுபாவி செய்த அக்கிரமத்துக்கு அவனுக்கு நிச்சயம் தண்டனை எந்த ரூபத்திலும் கிடைத்தே தீரும் வெங்கட். என் கையில் கிடைத்தால் ஒவ்வொரு உறுப்பாக வெட்டிக் கொலை செய்வேன். (5)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாதா வயிறெரிய வாழா ஒருநாளும் //

      சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள்... ஆனாலும்...

      //என் கையில் கிடைத்தால் ஒவ்வொரு உறுப்பாக வெட்டிக் கொலை செய்வேன்//

      அவனுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாது போய்விடும் நண்பர் கணேஷ். நிச்சயம் அவனுக்கு தக்க தண்டனை கிடைக்காமலா போய்விடும்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. //பணத்திற்காக பெற்ற தாயையே இப்படி நட்டாற்றில் விட்டுச் சென்ற அவலம் இந்தத் தலைநகர் தில்லியில் உண்மையாகவே நடந்தது.//

    இதைப்படித்ததும் என் கண்ணில் கண்ணீர் வந்தது, வெங்க்ட் ஜி.

    //விஷயம் கேள்விப்பட்டு அந்தக் குடியிருப்பில் இருந்த சில பெரியவர்கள் அந்த மூதாட்டியை அழைத்து வந்து மேற்கொண்டு என்ன செய்யமுடியுமோ அதைச் செய்தார்கள்//

    மிகவும் கொடுமை தான்.

    //பெற்ற தாயை இப்படி நடுத்தெருவில் விட்டுப்போன அந்த படுபாவியை என்ன செய்யலாம்?//

    ஒன்றுமே செய்ய முடியாது. இதுபோன்ற பாவிகள் இப்போது அதிகரித்துக்கொண்டே தான் வருகின்றனர்.

    இதை அனைத்துப் பெற்றோர்களும் முன்கூட்டியே அறிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தான் பெற்ற செல்வங்களே ஆனாலும், தன்னை கடைசிவரை காப்பாற்றுவார்கள் என்று முழுவதுமாக நம்பி இருந்துவிடாமல் சுதாரிப்புடன் இருக்க வேண்டும்.

    என் மனம் மிகவும் வருத்தமாகவே உள்ளது, இதுபோன்ற செய்திகளை அவ்வப்போது, ஆங்காங்கே, கேள்விப்படும் போது. ;(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதை அனைத்துப் பெற்றோர்களும் முன்கூட்டியே அறிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தான் பெற்ற செல்வங்களே ஆனாலும், தன்னை கடைசிவரை காப்பாற்றுவார்கள் என்று முழுவதுமாக நம்பி இருந்துவிடாமல் சுதாரிப்புடன் இருக்க வேண்டும்.
      //

      எல்லோருமே பாதுகாப்பாக இருப்பது தான் நல்லதெனத் தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

      நீக்கு
    2. சரியாகச் சொன்னார் வைகோ. விழிப்புணர்வு முக்கியம். புருஷன் பெண்டாட்டி பிள்ளை அம்மா அப்பா எல்லாமே தனக்குப் பிறகு தான்.

      நீக்கு
    3. //விழிப்புணர்வு முக்கியம். புருஷன் பெண்டாட்டி பிள்ளை அம்மா அப்பா எல்லாமே தனக்குப் பிறகு தான்.//

      சரியாச் சொன்னீங்க அப்பாதுரை ஜி!

      நீக்கு
  13. ஆகவே விக்கிரமாதித்யா! நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்!

    1. இப்படி மகன் பணம் தின்னும் பிணமாய் மாற அவன் இருக்கும் நியூயார்க் எனும் பண நகரம் காரணமா?

    2. சிறுவயதிலேயே நல்ல பண்புகளை கற்றுக் கொடுக்கத் தவறிய தாய் தந்தையர் மற்றும் கல்விமுறை காரணமா?

    3. இப்படி அவனைச் செய்யத் தூண்டிய பிற சூழல்கள் (மனைவியின் தூண்டல், அமெரிக்க பொருளாதாரச் சூழல்கள் போன்றவை காரணமா?

    சரியான விடை சொல்லவில்லையேல் அந்த மகனின் தலை ஆயிரம் துண்டுகளாக வெடித்து விடும். சொல்லி விட்டால் 999 துண்டுகளாக வெடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சரியான விடை சொல்லவில்லையேல் அந்த மகனின் தலை ஆயிரம் துண்டுகளாக வெடித்து விடும். சொல்லி விட்டால் 999 துண்டுகளாக வெடிக்கும்.//

      வெடிக்க வேண்டும்... :(

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்து அண்ணாச்சி [ஈஸ்வரன்].

      நீக்கு
    2. @ EaswaranJune

      ///1. இப்படி மகன் பணம் தின்னும் பிணமாய் மாற அவன் இருக்கும் நியூயார்க் எனும் பண நகரம் காரணமா?//

      இந்தியாவில் பணம் இல்லையென்றாலும் நாலு பண்புமிக்க இதயங்களின் உதவியால் காலம் தள்ளிவிடலாம். ஆனால் அமெரிக்காவில் பணம் இருந்தாலும் தேங்க்ஸ் கிவிங்க் மற்றும் கிறிஸ்துமஸ் நாளில் மட்டும் தாயை அழைத்து விருந்து மட்டும்தருவார்கள் அது மனைவிக்கு ஒகே வா இருந்தால் மட்டும். அந்த மாதிரி பண்புள்ளவர்களிடம் இந்த இந்திய நாய் அமெரிக்க பண்பை கற்று இருக்க வேண்டும்

      2. சிறுவயதிலேயே நல்ல பண்புகளை கற்றுக் கொடுக்கத் தவறிய தாய் தந்தையர் மற்றும் கல்விமுறை காரணமா?
      எந்த பெற்றோர்களும் தான் எப்படி இருந்தாலும் குழந்தைகளுக்கு நல்ல பண்பை கற்றுகொடுக்காதான் செய்வார்கள். வேண்டுமானால் கலிவி முறையை குறை சொல்லாம்


      3. இப்படி அவனைச் செய்யத் தூண்டிய பிற சூழல்கள் (மனைவியின் தூண்டல், அமெரிக்க பொருளாதாரச் சூழல்கள் போன்றவை காரணமா?
      நீங்கள் சொன்ன காரனைங்களின் தூண்டுதல் கூட காரணமாக இருக்கலாம் ஆனாய் இவனுக்கு எங்க அறிவு போச்சு.

      முகம் அறியா பேஸ்புக்கில் உள்ள நண்பர்களுக்கு கூட உதவி செய்யும் இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதானா

      அந்த தாய்யிடமும் அவர்களது உறவினர்களிடமும் விசாரித்து அதை மீடியா மூலம் பப்ளிஷ் செய்து அவனுக்கு தண்டணை வாங்கி தரலாம்.

      இப்பை ஒரு உண்மையான நிகழ்ச்சி நடந்து இருக்கும் பட்சட்த்தில் அவனை பற்றிய விபரங்கள் முழுதாகவும் உண்மையாகவும் இருக்கும் பட்ட்சத்தில் அதை இங்குள்ள மீடியா முலம் வெளிகொணர்ந்து அவன் மீது நடவடிக்கையை எடுக்க என்னாலான முயற்சியை செய்ய நான் தயார்

      நீக்கு
    3. அந்தத் தாயிடம் இந்த நிகழ்வுக்குப் பிறகு கூட மகனைப் பழிவாங்கும் எண்ணமில்லை. நிச்சயம் திருந்தி வருவான் என்றுதான் சொல்லிக்கொண்டு இருந்தார்.

      எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனச் சொல்லி விட்டார்.

      தங்களது இரண்டாம் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி “அவர்கள் உண்மைகள்”.

      நீக்கு
  14. சரியாச் சொன்னீங்க, அவனை ஆண்டவன் பார்த்துக் கொல்வான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

      நீக்கு
  15. பணம் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி “வரலாற்று சுவடுகள்”...

      நீக்கு
  16. பதில்கள்
    1. நம்பவே முடியாத விஷயம் தான். ஆனால் இப்படியும் ஒரு மகன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

      நீக்கு
  17. இவ்ளோ நடந்தும் தம் புள்ள நல்லா இருந்தா போதும்னு நெனைப்பாங்க அந்தம்மா.. ஏன்னா அவங்களோட உள்ளம் தூய்மையான 'தாயுள்ளம்'...

    தாயிற் சிறந்த கோவிலில்லை..
    God felt he cannot be everywhere everytime, so he created 'Mother'.

    அந்தப் புள்ளைக்குத்தான் 'வினை விதைத்தவன் வினையறுப்பான்.....' விளங்கல போல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்தப் புள்ளைக்குத்தான் 'வினை விதைத்தவன் வினையறுப்பான்.....' விளங்கல போல..//

      கரெக்ட்...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்.

      நீக்கு
  18. எனக்குக் குழுமம் மூலமா இந்தப்பதிவு குறித்துத் தெரிய வந்தது. முதலில் ஏதோ சிறுகதைனே நினைச்சேன். இப்படியும் ஒரு பாவியா? பாவம் அந்தத் தாய். அந்த மகனைக் கடவுள் பார்த்துக்குவார். மனசே வேதனையா இருக்கு. :((((((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்குக் குழுமம் மூலமா இந்தப்பதிவு குறித்துத் தெரிய வந்தது. முதலில் ஏதோ சிறுகதைனே நினைச்சேன்.//

      சிறுகதை இல்ல கீதாம்மா... உண்மைச் சம்பவம். நடந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. இதைப் பற்றி பகிர வேண்டுமா கூடாதா என எனக்குள் ஒரு போராட்டம். பிறகு எழுதிவிட்டேன் - இப்படியும் சிலர் எனத் தெரிவிக்கவே எழுதினேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  19. பதிவு திறக்கவும், கமென்ட் எடுக்கவும் நேரம் ரொம்ப எடுக்குதே??????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் தமிழ்மணம் திறக்க நேரமாகிறது - எல்லா வலைப்பூக்களிலும்...

      தங்களது இரண்டாவது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  20. இது போல ஒரு நிகழ்ச்சியை நான் நேரில் பார்த்திருக்கிரேன். சில வருடங்களுக்கு முன் என் அலுவலகத்தில் பணி புரிந்து ஒய்வு பெற்ற ஒருவரின் மகன் அவரை டெல்லி ISBTல் தவிக்க விட்டு விட்டு (குளிர் காலம் வேறு) சென்று விட்டான். எப்படியோ தட்டு தடுமாறி எங்கள் அலுவலகம் வந்து விட்டார். அப்போது அவருக்கு வயது 75. கையில் காசும் இல்லை, மாற்றி உடுக்க உடையும் இல்லை. மிகவும் பரிதாபமான நிலையில் இருந்த அவரை, எங்கள் அலுவலக அதிகாரிகள் அரசு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டனர். அவர் மகன் வங்கி ஒன்றில் மேனஜராக பணி புரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சில வருடங்களுக்கு முன் என் அலுவலகத்தில் பணி புரிந்து ஒய்வு பெற்ற ஒருவரின் மகன் அவரை டெல்லி ISBTல் தவிக்க விட்டு விட்டு (குளிர் காலம் வேறு) சென்று விட்டான். எப்படியோ தட்டு தடுமாறி எங்கள் அலுவலகம் வந்து விட்டார். அப்போது அவருக்கு வயது 75.//

      இது போல தில்லியில் தான் அதிகம் நடக்கிறதோ. தில்லியில் தான் நிறைய முதியவர்கள் தனியாக இருக்கின்றனர் என சமீபத்தில் படித்த நினைவு.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சரஸ்வதி ரங்கநாதன்.

      நீக்கு
  21. ம்ஹும்...

    ஒன்றும் சொல்வதற்கில்லை....

    உண்மை பல நேரங்களில் கதையை விடக் கொடுமையாக இருக்கும் என்பது சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உண்மை பல நேரங்களில் கதையை விடக் கொடுமையாக இருக்கும் என்பது சரிதான்.//

      உண்மை தான் சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிடா.....

      நீக்கு
  22. இது கலிகாலம் இல்லை மக்கா பேய்காலம், வேற என்னத்த சொல்ல மனசு தாங்கல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இது கலிகாலம் இல்லை மக்கா பேய்காலம்//

      சரியாச் சொன்னீங்க மக்கா....

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ.

      நீக்கு
  23. Eppadiyum sila manidhargal irukkaththaan seygiraargal yaravadhu oru manidhar amerikkaavil irukkum avargaladhu nanbargal moolm andha magan vaeli seyyum aluvalagaththaipatri vsaariththu andha company nirvaagiyidam nadandha dhaisolli avan vaelaikku vaettu vykkavaendum

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Eppadiyum sila manidhargal irukkaththaan seygiraargal//

      ஆமாம் நண்பரே...

      தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தாசரதி.

      நீக்கு
    2. Comment pannum ellorukkum badhil sollum(Nandriyudan saerththu}ungal paangu enakku migavum pidiththrukkiradhu keep it up NANDRI

      நீக்கு
    3. இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தாசரதி....

      நீக்கு
  24. மகனா என்றுகூட இல்லை மனுசன் தானா என்று கேட்கனும்..:((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

      நீக்கு
  25. சின்ன சின்ன துண்டுகளா வெட்டி கடல்ல மீன்களுக்குப் போடணும் இல்லைன்னா தோலை உரிச்சு உப்பு தடவி ஸஹாரா பாலைவனத்துல போட்டுடணும். இவனுக்கு அமெரிக்காவுல இல்லாத பணமா? எப்படியும் அந்த அம்மா போனதுக்கப்புறம் அந்த வீடு இவனுக்குத்தானே வரப்போகுது?

    நிச்சயம் நரகத்துக்குத்கான் போவான் பாவி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிச்சயம் நரகத்துக்குத்கான் போவான் பாவி.//

      :((( எங்கு போனால் என்ன... அம்மாதான் மகன் இருக்கும் போதே முதியோர் இல்லம் செல்ல வேண்டியாகிவிட்டதே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஜி!

      நீக்கு
  26. அதிர்ச்சியான சம்பவம்.
    இவனையெல்லாம் பெத்ததுக்கு.... அந்தத் தாய் மலடியாகவே வாழ்ந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிர்ச்சியான சம்பவம் தான் சே. குமார். நீங்கள் சொல்வது சரி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  27. பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுவனப் பிரியன்.

      நீக்கு
  28. அந்த நிமிடத்தில் அந்த தாய் எப்படி துடித்துப் போயிருப்பாள்.ஆண்டவன் பார்த்துக் கொல்வான் என்று விட்டு விடாமல் இந்தியச் சட்டம் இம்மாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தினால் தேவலை.சிறார்களுக்கும் பெண்களுக்கும் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரலெழுப்பும் அமைப்புகள் போன்று முதியோர்களின் பாதுகாப்பிற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிறார்களுக்கும் பெண்களுக்கும் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரலெழுப்பும் அமைப்புகள் போன்று முதியோர்களின் பாதுகாப்பிற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.//

      நிச்சயம் செய்யப்படவேண்டிய ஒன்று....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
    2. அந்த அம்மாவின் அப்பாவி (முட்டாள்?) தனத்துக்கு சட்டம் என்ன செய்யும் raji?

      நீக்கு
    3. சில தனி மனிதர்களின் செயல்களை சட்டமோ, சமுதாயமோ ஒன்றும் செய்வதில்லை தான் அப்பாதுரை ஜி!

      நீக்கு
  29. இது உண்மை என்று நம்ப மனம் மறுக்குது வெங்கட்ஜி...There should be more to the story..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி. உண்மையே....

      நீக்கு
  30. பதில்கள்
    1. வேதனை தான் ஐயா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரத்னவேல் நடராஜன் ஜி!

      நீக்கு
  31. கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சொல்வோர் இதைக் கடவுள் பார்த்துக் கொண்டிருந்தார் என்று ஏன் நினைக்கவில்லை? இது கதையின் போக்கைவிட நம்பமுடியாத பாங்காக இருக்கிறது. மகனை அப்படிச் செய்ய வைத்ததும் கடவுள் தானே? ஒரு வேளை தாயின் பூர்வ ஜென்ம பாவம் தான் இப்படி அவளை ஆட்டுவிக்கிறதோ? கோவில் சாமி என்று கும்பிடாமல் பிள்ளைக்கு சமைப்பதிலும் வயலின் கிளாஸ் கொண்டுவிடுவதிலும் துணிதுவைப்பதிலும் கவனமாக இருந்துவிட்டாரோ? தனக்குத் தேவையானதை செய்துகொள்ள வேண்டும் என்று அவருக்குத் தெரியாமல் போனதேன்? சாகும் வரை விழிப்போடு இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்காதது அவருடைய பெற்றோரின் தவறோ? கடவுளின் லீலைகள் சிலிர்க்கவைக்கிறது.

    ஓகே.. இந்த ஆள் யுஎஸ்சில் எங்கே இருக்கிறான் என்று விலாசம் தெரிந்தால் இமெயில் அனுப்பி வையுங்கள். ஒரு புகைப்படம் கிடைத்தால் இன்னும் வசதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தத் தாயிடம் இந்த நிகழ்வுக்குப் பிறகு கூட மகனைப் பழிவாங்கும் எண்ணமில்லை. நிச்சயம் திருந்தி வருவான் என்றுதான் சொல்லிக்கொண்டு இருந்தார்.

      எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனச் சொல்லி விட்டார்.

      சாகும் வரை விழிப்போடு இருக்கவேண்டும் - பெற்ற மகனாயிருந்தாலும் என்பது தான் நமக்கு ஒரு படிப்பினை.....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

      நீக்கு
  32. என்ன சொல்வதென்றே தெரியவில்லை:(.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  33. உண்மை சுடும் என்பது உண்மை தான்! எப்பேர்ப்பட்ட பாதகத்திற்கும் மன்னிப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் பெற்ற தாயை, அவளை முழுவதுமாக ஏமாற்றி, அவளது சிறிய சொத்துக்களையும் ஏமாற்றிக் கவர்ந்து கொன்டு நடுத்தெருவில் அனாதையாக விட்டு விட்டு சென்ற மகனுக்கு எந்த தண்டனையும் சரியானதா என்று புரியவில்லை. எங்கள் பக்கத்தில் முன்பெல்லாம் சிறு சிறு திருட்டுக்கள் போன்ற தவறுகள் செய்தவர்களுக்கே நாற்சந்தியில் நிற்க வைத்து சாட்டையால் அடிப்பார்கள். இந்த மாதிரியான துரோகத்திற்கு என்ன தண்டனை? அந்தத் தாயின் கண்ணீரால் நிச்சயம் அவன் நன்றாக இருக்கப்போவதில்லை என்பது மட்டும் புரிகிறது.
    இதே போன்றதொரு பதிவை முன்பு நானும் எழுதியிருக்கிறேன். மனம் தான் கனத்துப் போகிறது இவை போன்ற நிகழ்வுகளைப் பற்றிக் கேள்விப்படும்போது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்தத் தாயின் கண்ணீரால் நிச்சயம் அவன் நன்றாக இருக்கப்போவதில்லை என்பது மட்டும் புரிகிறது.//

      அந்தத் தாயிடம் இந்த நிகழ்வுக்குப் பிறகு கூட மகனைப் பழிவாங்கும் எண்ணமில்லை. நிச்சயம் திருந்தி வருவான் என்றுதான் சொல்லிக்கொண்டு இருந்தார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

      நீக்கு
  34. என்ன இது உண்மையான கதையா...இவ்வளவு கேவலமான மனிதர்கள் பிணமாகிப் போகும் போது பத்திய கொண்டு செல்ல போகிறார்கள்... என்ன ஒரு மனிதர்களோ... உங்கள் மனதைப் பாதித்த சம்பவத்தை எங்களையும் பாதிக்கும் விதமாகப் பதிவாகியது அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இவ்வளவு கேவலமான மனிதர்கள் பிணமாகிப் போகும் போது பத்திய கொண்டு செல்ல போகிறார்கள்...//

      ஒன்றுமில்லை... போகும் வரை அது புரிவதுமில்லை...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  35. வெங்கட் நாகராஜ் அவர்களே! தமிழகத்துக் கிராமங்களில், சிற்றூர்களில் பெற்றவர்களால் கைவிடப்பட்ட வயொதிகக் கிழவர்கள்,கிழவிகள் தன்னந்தனியாக உயிரைப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்,வருமானமில்லாத விவசாயம் , கூலி கிடைக்காத தினக்கூலிகள், வயிற்றுக்காக நகரத்தை நாடு கிறார்கள். சாலை ஒரங்களில் வாழ்கிறார்கள்.வயொதிகப் பெற்றோரை கைவிட்டு விடவேண்டிய நிலமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ந்யூயார்க மகனின் செயலை நியாயப்படுத்தவில்லை. இந்திய கிராமங்களில் இது நடந்து கொண்டுதானிருக்கிறது. இவர்களுக்கு முதியோர் பெண்சன் வாங்கித்தர கமிஷன் கெட்கிறவனை என்ன சொல்வீர்கள்.---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒரு பெரிய பிரச்சனை தான் காஷ்யபன்ஜி...

      பணம் இல்லாதவர்கள் இப்படி விடுவது அவர்களது நிலையாமை... ஆனால் பணம் படைத்தவர்களும் தனது பணத்தாசையினால் இப்படிச் செய்வது தான் மிகவும் புண்படச் செய்கிறது.

      முதியோர் பென்ஷன் வாங்கித்தர கமிஷன் - மனிதன் இறந்தால், அவரது இறப்புச் சான்றிதழ் வாங்கித் தரக்கூட கமிஷனும், லஞ்சமும் கேட்பவர்கள் நம்மூரில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... பணத்திற்காக எதையும் செய்யக்கூடிய நிலைதான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காஷ்யபன் ஜி!

      நீக்கு
  36. "இது போல தில்லியில் தான் அதிகம் நடக்கிறதோ. தில்லியில் தான் நிறைய முதியவர்கள் தனியாக இருக்கின்றனர் என சமீபத்தில் படித்த நினைவு."

    சமீபத்தில் நடத்திய ஒரு புள்ளிவிவரப்படி, தமிழ் நாட்டில் தான் முதியோர் இல்லம் அதிகம். பெற்றவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளும் பிள்ளைகள் பீஹாரில் தான் அதிகமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி சரஸ்வதி ரங்கநாதன்.

      தமிழகத்தில் நிறைய முதியோர் இல்லம் இருக்கிறது. அங்கே முதியவர்கள் நிலையும் மோசமே. என்னுடைய அலுவலக நண்பர் ஒருவரின் உறவினர் இது போன்ற முதியோர் இல்லத்தில் இருக்கிறார்....

      நீக்கு
  37. நடுத்தெருவில் நற்ற வைத்து பெட்ரோல் ஊற்றி வனை எரிக்க வேண்டும்

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி புலவரே...

      நீக்கு
  38. என்ன உலகம்... பணம் பந்தியிலே குணம் குப்பையிலேதான். கதையில் படிக்கலாம். நிஜமாகவே நடந்தது என்றால் ஆறவில்லை. நீதி என்னவென்றால் முதியவர்கள் தங்கள் கையில் உள்ள செல்வத்தை, தன் காலம் முடியும் வரைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.

    அந்தப் பையனைப் பசித்த புலி தின்னட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // முதியவர்கள் தங்கள் கையில் உள்ள செல்வத்தை, தன் காலம் முடியும் வரைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.//

      அது தான் நல்லது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. மறுபடியும் மனம் கனத்தது... இப்போது அந்த அம்மா எங்கே, எப்படி இருக்கிறாரோ....

      நீக்கு
    3. இந்தப் பதிவினை மீண்டும் படித்து இணைத்தபோது எனக்குள்ளும் இதே எண்ணங்கள்... அந்த அம்மா எப்படி இருக்காங்களோ?

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    4. மறுபடியும் மனம் கனம்தான்.

      நீக்கு
  39. இந்தப் பதிவு படித்தவுடன் ஏனோ மனசினில் “ மண்ணுக்கு மரம் பாரமாம்...மரத்துக்கு கிளை பாரமாம் “ பாடல் ரீங்காரமிட்டது. உடல் வலி வரலாம்....ஆனால் மனதினில் வலி வந்தால்....வலியை ஏற்படுத்தி அதன் விளைவினை உலகோர் உணரச் செய்த நிகழ்ச்சி.... கலி முற்றிப் போய்விட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உடல் வலி வரலாம்....ஆனால் மனதினில் வலி வந்தால்...//

      மனதில் வலி வந்தால் அதிலிருந்து மீள்வது கடினம் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அட்சயா.

      நீக்கு
  40. ஸ்ரீரங்கம் தெருவில் இப்படித்தான் ஒரு அம்மா சுற்றிக் கொண்டிருந்தார். மகன் தில்லியில் நல்ல வேலையில். கடைசியில் யாரோ கொள்ளி போட்டார்கள்.
    நம்மால் முடிந்தது இம்மாதிரி கைவிடப்பட்டவர்களுக்கு உதவுவது. அதைச் செய்த உங்கள் குடியிருப்புவாசிகளுக்கு மனப்பூர்வ நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்ரீரங்கம் தெருவில் இப்படித்தான் ஒரு அம்மா சுற்றிக் கொண்டிருந்தார். மகன் தில்லியில் நல்ல வேலையில். கடைசியில் யாரோ கொள்ளி போட்டார்கள். //

      :(((( என்ன சொல்வது. வார்த்தைகளில்லை....


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  41. antha paiyyan naasamaa pogattum....paavam antha paatimaa ippa enna seiraanga enga thangi irukkaanga..saapdalam yaar paathukkuvaanga ..thagaval irunthaal sollungal thozharey

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கு நன்றி கவிதை நாடன்.

      அந்தத் தாயிடம் இந்த நிகழ்வுக்குப் பிறகு கூட மகனைப் பழிவாங்கும் எண்ணமில்லை. நிச்சயம் திருந்தி வருவான் என்றுதான் சொல்லிக்கொண்டு இருந்தார்.

      அந்தப் பெண்மணியை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டனர்.

      நீக்கு
  42. பதில்கள்
    1. கொடுமை தான் சகோ.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

      நீக்கு
  43. பதில்கள்
    1. பாவம் தான் சகோ.

      தங்களது இரண்டாம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

      நீக்கு
  44. படிக்கும்போதே திக் என்று ஆகிவிட்டது.:((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் கேள்விப்பட்டதிலிருந்தே திக் திக்... மற்றும் கோபம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  45. மின்னஞ்சலில் வந்த கருத்துரை:

    அன்பு நண்பா

    "என்னோட நியூயார்க் வந்துடும்மா......" ஏதோ கதை என்று நினைத்தேன். ஆனால் அந்த கடைசி பாராவை படிக்கும் போது [உண்மையாகவே நடந்த நிகழ்ச்சி] என்னால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.

    இப்படியும் மகன்களா? இப்போதுதான் புரிகிறது தமிழ் நாட்டில் ஏன் இவ்வளவு முதியோர் இல்லங்கள் உள்ளன என்று!!!!!!!!

    நமது குழந்தைகளுக்கு நல்ல சம்ஸ்காரம் [Sanksar] கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

    Pl arrange to translate this article into english and put it in your blogspot so that our children should also read this.

    Thanks & regards
    Vijay

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பர் விஜயராகவனுக்கு,

      மின்னஞ்சல் மூலம் தாங்கள் அனுப்பிய கருத்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  46. “நல்லா விசாரிச்சீங்களா, என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டானேன்னு” கேட்க, ”நல்லா விசாரிச்சேம்மா, அந்த விமானத்துல அவருக்கு மட்டும் தான் டிக்கெட் வாங்கி இருக்காரு, உங்களுக்கு வாங்கவே இல்லை, விமானம் போயிடுச்சேம்மா” என்று சொல்லி, ”உங்களுக்கு வீட்டுக்கு போகணும்னா சொல்லுங்க,//

    உன்னை அழைத்து செல்ல முடியாது என்று சொல்லி முதியோர் இல்லத்தில் சேர்த்து சென்று இருந்தால்கூட பரவாயில்லை. இப்படி நம்பிக்கை துரோகம் செய்யும் பிள்ளைகளை என்ன செய்வது!

    சட்டம் இருக்கு அவர்களை தண்டிக்க ஆனால் தாயுள்ளம் சம்மதிக்க வேண்டுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சட்டம் இருக்கு அவர்களை தண்டிக்க ஆனால் தாயுள்ளம் சம்மதிக்க வேண்டுமே.//

      அதான் தாயுள்ளம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  47. என்னுடைய நினைவு சரியாக இருக்கிறதா என்று பார்க்க, இந்தத் தளத்திற்கு மீண்டும் வந்து நிகழ்வைப் படித்தேன். எல்லோரும் பையனைக் குற்றம் சொல்கிறார்கள். அது ஒரு புறமிருக்க, நம் குழந்தைகளுக்குத் திருமணம் ஆகிவிட்டால், அவர்கள் இன்னொரு குடும்பமாக ஆகிவிடுகிறார்கள். நாம் நம் வாழ்க்கையைத்தான் (நமது துணையின் வாழ்க்கையையும்..ஏனெனின் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்கணும்) முதலில் பார்த்துக்கொள்ளவேண்டும். எந்த எமெர்ஜென்ஸி எப்போது யாருக்கு வரும் என்று தெரியாது. நாம்தான் மோர்சாதம் ஊறுகாய் சாப்பிடுகிறோமே நமக்கெதற்கு சொத்தும் பணமும் என்று நினைத்துவிடக் கூடாது. கடைசி வரை நம் சொத்து நம்மிடம் இருக்கணும். நமக்கு அப்புறம் எப்படியும் நம் வாரிசுகளுக்குத்தானே போய்ச்சேரும்.

    என் அப்பா, நிறைய நடந்த விஷயங்களைச் சொல்லி எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார். பசங்க படித்துவிட்டு குடும்பத்துக்குள் நுழைந்துவிட்டால், நம் ரெஸ்பான்ஸிபிலிட்டி, பணத்தைப் பொறுத்த வரையில் முடிந்தது என்று சொல்லியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  48. ஏதிலிகளுக்கு நாம் செய்யும் தவறுகள் பன்மடங்கு வேகத்துடன் நம்மைத் தாக்கும். ஏதிலிகளுக்கு நாம் செய்யும் நன்மைகள் நமக்கு பன்மடங்கில் பலனளிக்கும். நான் நம் வீரத்தை, நம்மைவிடப் பலமுள்ளவர்களிடம் மட்டுமே காட்டவேண்டும்.

    பதிலளிநீக்கு
  49. இது மனதிலேயே சுழன்றுகொண்டிருக்கிறது. Expect the unexpected ALWAYS. தாயும் மகனும் என்றாலும் வாயும் வயிறும் வேறல்லவா?

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....