[பட உதவி: கூகிள்]
இந்த வார செய்தி:
அக்டோபர் இரண்டாம் தேதி – காந்தி பிறந்த தினம்.
இந்த நாள் இன்னோரு விஷயத்திற்காகவும் பிரபலம்.
அன்று தான் உலக இன்னிசை தினம். இந்த வருடம் இந்த தினத்தில் உலகம் முழுவதும் இந்தியாவின் புராதன இசைக்கருவியான வீணை பல பிரபல இசைக்கலைஞர்களால் வாசிக்கப்பட இருக்கிறது.
பெங்களூரில் உள்ள
National Institute of Advanced Studies-ல் வயலின் மேஸ்ட்ரோ எல். சுப்ரமணியன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்க, சென்னை, ஹைதை, மும்பை, மைசூர், புது தில்லி, திருவனந்தபுரம், மெல்போர்ன், சிட்னி, நியூ ஜெர்சி, சான் ஃப்ரான்சிஸ்கோ, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஓஸ்லோ, டென்மார்க் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் வீணை வாசித்து இந்நாளைக் கொண்டாட இருக்கிறார்கள்.
சென்னையில் அக்டோபர் 2 முதல் 11-ஆம் தேதி வரை ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் ”வீணா மஹோத்சவ”மாகக் கொண்டாட இருக்கிறார்கள்.
இசைப் பிரியர்களுக்கு இது நிச்சயம் நல்ல விருந்தாக இருக்கும்.
இந்த வார முகப்புத்தக இற்றை:
பேசாத வார்த்தையை விட...
பார்க்காத கண்களை விட...
நினைத்துக் கொண்டிருக்கும்
இதயத்துக்கு வலி அதிகம்!
இந்த வார குறுஞ்செய்தி:
You can
make more friends in two months by becoming interested in other people than you
can in two years by trying to get other people interested in you – Dale
Carnegie.
நடந்தது என்ன:
[பட உதவி: கூகிள்]
இன்று 28, செப்டம்பர்.
இதே நாளில் தான் 1928-ஆம் வருடம் லண்டனின் செயிண்ட் மேரி மருத்துவமனையில் அலெக்ஸாண்டர் ஃப்ளெம்மிங் பென்சிலின் மருந்தினைக் கண்டுபிடித்தார். நவீன மருத்துவத்தில் மிகப்பெரிய மாற்றத்தினை உண்டாக்கிய இந்த மருந்தைக் கண்டுபிடித்தது சென்ற நூற்றாண்டின் முக்கிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
ராஜா காது கழுதைக் காது:
திருச்சி சத்திரம் பேருந்தின் எதிரே இருக்கும் வசந்த பவன் உணவகத்தில் ஆனியன் ஊத்தப்பம் சொல்லி விட்டுக் காத்திருந்தபோது கேட்ட “டிப்ஸ் மஹாத்மியம்”!
”டிப்ஸ் எவ்வளவு கொடுக்கணும்னு தெரியுமா?
நீ சாப்பிடறத பொறுத்துதான் கொடுக்கணும்.
50 ரூபாய்க்கு சாப்பிட்டா அவருக்கு வேலை கம்மி. 200 ரூபாய்க்கு மேலே சாப்பிட்டா கொஞ்சம் வேலை ஜாஸ்தி.
அதுனால, 50 ரூபாய்க்கு உனக்கு பில் வந்தா, 2 ரூபாய் டிப்ஸ் கொடு, 100 ரூபாய்லேர்ந்து 200 ரூபாய் வரைக்கும் உன் பில் வந்தா 5 ரூபாய் கொடு, 200 ரூபாய்க்கு மேலேன்னா, போனா போகுதுன்னு 10 ரூபாய் கொடு!” - சொன்னது ஒரு பதினெட்டு வயது இளைஞன்!
இந்த வாரக் காணொளி:
இந்தக் காணொளி எனது மின்னஞ்சலுக்கு வந்தது – உங்கள் குடும்பத்தினரோடு கண்டுகளியுங்கள் என்ற விண்ணப்பத்தோடு!
நீங்களும் பார்த்து ரசிக்கலாம்! :)
இந்த காணொளியைக் காண இங்கே செல்லுங்கள்!
மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.