தொகுப்புகள்

புதன், 12 செப்டம்பர், 2012

மாமாவும் பாசமான மனைவியும்…




புதுதில்லி 2 திருச்சி பதிவின் முடிவில் சொன்னதுபோல் ”ரயில் பயணம் சுகமானதோர் அனுபவமாக இருப்பது நம்முடன் பயணிக்கும் சக பயணிகளைப் பொறுத்திருக்கிறது”.  என்ன தான் சில பயணிகளால் வெறுப்பு ஏற்பட்டாலும் வேறு சில பயணிகளைக் கவனித்ததில் சற்றே சுவாரசியமும்.

மாமாவும் பாசமான மனைவியும்: இளம் வயது கணவன் மனைவி. கருவுற்றிருக்கும் பாசமான மனைவியை பிரசவத்திற்காக அவரது வீட்டில் விடச்செல்லும் கணவன்.  “காலை நீட்டி உட்கார்ந்துக்க, சாப்பிடு, குடிக்க ஏதும் வேணுமா” என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்தவர்.  “முகத்தில் கொஞ்சம் சுணக்கம் கண்டாலும் “என்ன பண்ணுது?” என்று பதறுபவர். 

இவரது பாசத்திற்குச் சற்றும் குறைவில்லாத மனைவி. “மாமா, மாமா..” என வார்த்தைக்கு வார்த்தை மாமாவினை அழைக்கும் பாசக்கார மனைவி.  ”மாமா, உன்னை மட்டும் கல்யாணம் கட்டலன்னா, நான் டில்லிக்கு வந்திருக்கமாட்டேன்… புதுப்புது இடங்கள்லாம் பார்த்துருக்கவும் மாட்டேன்” என்றும், ”மாமா ட்ரையின்ல ஏசி கோச் எப்படி இருக்கும், நம்ம ஊர்ல இருக்கற பாசஞ்சர் ட்ரையின்லயும் இதே மாதிரி தான் சீட் இருக்குமா? என்று பேச்சு/கேள்வி.

சைட் லோயர், சைட் அப்பர் இருக்கைகள் தான் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.  சாதாரணமாக இருப்பவர்களாலேயே வசதியாகப் படுத்து வர முடியாத இந்த படுக்கையில் கருவுற்ற இப்பெண் நீண்ட பயணத்தில் நிச்சயம் நிறைய கஷ்டப்பட்டே வந்திருப்பார்.  ரயில்வே இன்னும் நிறைய முன்னேற வேண்டும்.  எப்போது என்பது தான் பெரிய கேள்விக்குறி.

அந்த இளைஞன், எமர்ஜென்சி விண்டோவினை மேலே ஏற்ற, அது கீழே விழ, திரும்பவும் மேலே ஏற்ற முயற்சிக்க தொடர்ந்தது விளையாட்டு.  ”வேண்டாம் மாமா விட்டுடு, பரவாயில்லை என மனைவி சொல்ல, விடாது முயற்சி செய்து, சற்றே வெற்றியடைந்தது போல இருக்க, “தடாலென” விழுந்தது எமர்ஜென்சி விண்டோ கம்பிகள்.  “மாமா கைல விழுந்ததா? பார்த்து மாமா, வேண்டாம்னு சொன்னேனே கேட்டியா, எரும்மாடு!” என்று பாசமாய் சொன்னார். எருமை என்று சொன்னவுடனே நான் சிரிக்க, “பாருங்கண்ணே, எத்தனை தடவை சொன்னேன் கேட்டாதானே?” என என்னிடமும் ஒரு முறையீடு…

சாப்பாடும் ”மதுர” பெண்களும்:

பொதுவாகவே ரயிலில் உணவு வகைகள் மகாமட்டமாக இருக்கும்.  அதுவும் இந்த ரயிலில் தந்த உணவு மிக மிக மோசம்.  40 ரூபாய் கொடுத்து ஒரு “தாலி” [தட்டுதான் இவர்களுக்குத் தாலி!] வாங்கினால் கேரள பப்படம் அளவில் இருக்கும் இரு மொட மொட சப்பாத்திகள், ஒரு அலுமினிய ஃபாயில் கிண்ணத்தில் அரைவேக்காடு சாதம் [இதை அரிசி என்று சொல்வது மேல்], இன்னொரு கிண்ணத்தில் உருளை-பட்டாணி சப்ஜி, மற்றொரு கிண்ணத்தில் வெறும் உப்பு போட்டு வேகவைத்த பருப்பு – இதற்கு ”[D]தால்” என்று பெயர்!, ஒரு ஆச்சி ஊறுகாய் பாக்கெட், ஒரு சிறிய பாக்கெட் உப்பு, ஒரு கப் “தயிர்” எனப் பெயர்படைத்த மோர், ஒரு கப் தண்ணீர் தருகிறார்கள்.  இதே தான் இரவிற்கும். 

கவி காளமேகம் அவர்களின் ஒரு சுவையான பாடல் நினைவுக்கு வந்தது இந்த தயிர் எனும் மோர் பார்த்து –

கார் என்று பேர் படைத்தாய் ககனத்துரும்போது!
நீர் என்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வீழ்ந்ததன் பின்!!
வார் சடை மென்கூந்தல் பால் ஆய்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!!!


இருபது ரூபாய்க்குத் தரும் பொங்கல் வடை இதை விட மோசம்.  அரிசியை அப்படியே வேகவைத்து உப்பு போட்டு கொடுத்துவிட்டார்கள் போல!  பொங்கல் என்றால் அதில் பருப்பும், மிளகும், சேர்க்கவேண்டும் என இவர்களுக்கு யாராவது சொல்லிக் கொடுத்தால் புண்ணியம் சேரும் அவங்களுக்கு! 

இப்படி ஒரு மட்டமான உணவினை சாப்பிடுவதை விட சாப்பிடாமல் இருப்பது ”மேல்” என நினைத்தோ என்னமோ, பக்கத்து “bay”-வில் இருந்த இரு மதுரப் பெண்கள் முழுப்பயணத்திலும் உணவே சாப்பிடவில்லை ஒன்றுமே சாப்பிடாது, தேநீர்-காபி கூட அருந்தாது வந்தார்கள்.  உணவு கொடுத்த சிப்பந்தியே “என்ன ஒண்ணுமே சாப்பிட மாட்டீங்கறங்களே” என்று கேட்டு விட்டார் – அவ்வளவு கொலை பட்டினி.  பசிக்காம இருந்தா நாங்கூட அப்படி இருந்துருப்பேன்…

எல்லாவிதத்திலும் முன்னேற வேண்டும் ரயில்வே துறை.  காசு அதிகமாக வாங்கி நல்ல உணவு தந்தால் நிச்சயம் வரவேற்பிருக்கும்.  செய்வார்களா?

பிறிதொரு பகிர்வுடன் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


70 கருத்துகள்:

  1. நீங்க அந்நியனா மாறி நடவடிக்கை எடுங்க வெங்கட் :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நான் உங்களை அன்னியனா மாறச் சொல்ல நினைச்சுருந்தேனே!

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோவை நேரம்.

      நீக்கு
  5. அந்நியன் படத்தில் உள்ள காட்சியை ஞாபகப்படுத்துகிறது..ஹஹ. மதுரை பெண்ணுங்க மட்டுமல்ல, மலேசியப்பெண்களான நாங்களும் தொட மாட்டோம், உணவு இவ்வளவு மோசமாக இருந்தால்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி!

      நீக்கு
  6. ரயில் பயணம் கசப்பான அனுபவம் பசியோடு என்ன பார்க்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  7. துரை! ரயில்வே துறையைப் பற்றி உண்மையைப் சொன்னீங்க துரை!

    ரயில் என்று பேர் படைத்தாய் நடைமேடைவரும்போது!
    செயில் சோறு படைத்திட்டாய் வயிற்றுப் பசிபோக்க!!
    குயில்போல கூவியது நினைவில் உண்டு இப்போதும் – ஐயகோ!
    துயில் தூக்கம் போனதுவே இற்றை நாள் பயணத்தில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியின் காளமேகப் புலவரே... வருக வருக! :)))

      தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி!

      நீக்கு
  8. இப்ப சென்னை பதிவர் சந்திப்புக்கு சென்று திரும்பும் சமயம் எனக்கும் அப்பர் பர்த்தான் கொடுத்தாங்க. வயசானவங்கன்னு தெரிஞ்சுமே ஏன் அப்படி கொடுக்குராங்க? டி டி வந்தப்போ கேட்டேன். எல்லாம் கம்ப்யூட்டர் செய்ய்து என்னால எதுவும் செய்யமுடியாது சக பயனியிடம் கேட்டு மாத்திக்கோங்கன்னுட்டான். சக பயனியும் மாதிக்க ரெடியா இல்லே கஷ்டப்பட்டு மேலே ஏறித்தான் படுக்க வேண்டி வந்தது.சாப்பாடெல்லாம் ரயிலில் வாங்கவே மாட்டேன் தப்பிச்சேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் நானும் பழங்கள் சாப்பிட்டே பயணித்து விடுவேன். சில சமயங்களில் உணவு வாங்கும்போது இப்படித்தான் வெறுக்கவைக்கிறார்கள்....

      தங்களது வருகைக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

      நீக்கு
  9. ரயில் பயணங்களில் நான் பிஸ்கட், காபி இப்படியே பொழுதை ஓட்டி விடுவேன். இவர்கள் தரும் உணவின் லட்சண்ம் மாற இன்னும் எத்தனை வருடங்களாகுமோ...? ஆனாலும் ஷார்ப் நீங்க. கூடவர்ற கேரக்டர்களை கூர்ந்து கவனிக்கற உஙகளுடைய ரசனைக்கு ஒரு சல்யூட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்....

      கேரக்டர்களை கவனிப்பதில் தானே நேரமே போகிறது!

      நீக்கு
  10. // எல்லாவிதத்திலும் முன்னேற வேண்டும் ரயில்வே துறை. காசு அதிகமாக வாங்கி நல்ல உணவு தந்தால் நிச்சயம் வரவேற்பிருக்கும். செய்வார்களா? //

    அதிக காசு கொடுக்க நாம் தயாராக இருந்தாலும், அந்த காசுக்குத் தகுந்த தரமான உணவைத் தர அவர்கள் தயாராக இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதிக காசு கொடுக்க நாம் தயாராக இருந்தாலும், அந்த காசுக்குத் தகுந்த தரமான உணவைத் தர அவர்கள் தயாராக இல்லை. //

      உண்மை...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  11. நல்ல பொழுது போக்கு போலிருகிறதே!!!

    சிலகாலம் முன்பு வரை தென்னக ரயில்வே-யின் சாப்பாடு தரமாகவே இருந்தது. இப்பொழுது, கழுதைத் தேய்ந்து கட்டெறுப்பான கதையாக ஆகிவிட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிலகாலம் முன்பு வரை தென்னக ரயில்வே-யின் சாப்பாடு தரமாகவே இருந்தது. இப்பொழுது, கழுதைத் தேய்ந்து கட்டெறுப்பான கதையாக ஆகிவிட்டது...//

      ஆமாம் சீனு. இப்போது மகாமோசம்....

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்]!

      நீக்கு
  12. //எருமை என்று சொன்னவுடனே நான் சிரிக்க//

    ஏன், ‘டில்லி எருமை’ ஞாபாகம் வந்துடுச்சோ?!! :-))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏன், ‘டில்லி எருமை’ ஞாபாகம் வந்துடுச்சோ?!! :-))))//

      சரியா கண்டுபிடிச்சுட்டீங்களே! :))

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

      நீக்கு
  13. மாமாவும் பாசமான மனைவியும்… படித்தோம் ரசித்தோம். வாழ்த்துக்கள். "மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!!!" இந்த வரிகளை என் அம்மா அடிக்கடி உபயோகிப்பார்கள். அவரின் ஞாபகம் வந்தது.

    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //"மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!!!" இந்த வரிகளை என் அம்மா அடிக்கடி உபயோகிப்பார்கள். அவரின் ஞாபகம் வந்தது. //

      எனது அம்மாவும் அடிக்கடிச் சொல்லும் பாடல் இது....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  14. எப்பவுமே ரயில் பயணம் அழகுதான்....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    வலைப்பூ தலையங்க அட்டவணை
    info@ezedcal.com
    http//www.ezedcal.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மலர்.

      நீக்கு
  15. ஆமாம்.பிஸ்கெட்,பழம் என்று கையில் இல்லைன்னா கொலை பட்டினி தான்.ஏந்தான் இவ்வளவு மோசமான சாப்பாடு தராங்களோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே குறைவான நேரப் பயணம் எனில் பிஸ்கெட், பழம் வைத்து ஓட்டி விடலாம்... நீண்ட பயணங்களில் தான் பிரச்சனையே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

      நீக்கு
  16. போனவாட்டி ராஜ்தானி எக்ஸ்பரஸ்ஸில் வந்திட்டு அந்த சாப்பாட்டை சாப்பிட்டு நொந்தே போனோம். :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... ராஜ்தானி, ஷதாப்தி என்றாலும் இதே உணவு தான்!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

      நீக்கு
  17. தங்களின் பயண அனுபவம் அறிந்தேன்...

    ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியான அனுபவங்கள் இருக்கும்... எப்போதோ சந்தித்த ரயில் நண்பர்கள் அவ்வப்போது தொடர்பு கொள்ளும் போது (இன்றும் கூட) மனம் அவ்வளவு சந்தோசப்படும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  18. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

      நீக்கு
  19. இதுபோன்ற மோசமான பராமரிப்பினால்
    பயணிப்பது சிரமமாக இருப்பினும்
    இதுபோன்ற சில வித்தியாசமான பயணிகள்தான்
    நம் பயணத்தை சுவாரஸ்யப்படுத்திப்போகிறார்கள்
    பயணப் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பயணிப்பது சிரமமாக இருப்பினும்
      இதுபோன்ற சில வித்தியாசமான பயணிகள்தான்
      நம் பயணத்தை சுவாரஸ்யப்படுத்திப்போகிறார்கள்//

      உண்மை...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  20. பசிக்காம இருந்தா நாங்கூட அப்படி இருந்துருப்பேன்…// நானும்கூடங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா சார்.

      நீக்கு
  21. அருமையான அழகான கவனிப்புடன் கூடிய ரயில் பயணப்பதிவு,
    பாராட்டுக்கள், வெங்கட் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  23. ரயில் பயணங்களில் மற்றவர்களின் நடவடிக்கைகளைக் கவனிப்பதே ஒரு சுவாரஸ்யமான நுபவம்தான்.நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

      நீக்கு
  24. ரயில் பயணங்களில் சாப்பாட்டிற்கு நொந்து போயிருக்கிறேன்..
    வாழைப்பழம் அல்லது வேறு பழம் சாப்பிடுவது மேல் என்று தோன்றி விடும் அவர்கள் தரும் உணவைப் பார்த்தால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  25. வணக்கம் நண்பரே,
    இதைத்தான் அடுத்தவர் வயிற்றில் அடித்து
    பிழைப்பது என்கிறார்களோ...
    கிடைக்கும் வருமானத்தையும் சுருட்டி விடுகிறார்கள்
    உணவு ஒப்பந்தத்திலும் ஊழல்
    இப்படியே போனால்
    சுகமான இரயில் பயணம்
    பெரும் சுமையாக மாறிப்போகும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவு ஒப்பந்தத்தில் பெருமளவு லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.... உண்மை தான் மகேந்திரன்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  26. அர‌சின் எந்த‌ பெரிய‌ துறையும் இப்ப‌டிப்ப‌ட்ட‌ ல‌ட்ச‌ண‌த்தில் தான்... 'ஜ‌ன‌நாய‌க‌ம்'! ப‌ய‌ண‌ங்க‌ளின் ச‌லிப்பைக் குறைப்ப‌து சுற்றிலும் நிக‌ழும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் வித்தியாச‌மான‌ ம‌னித‌ர்க‌ளுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு

  27. நான் ஒரு கால கட்டத்தில்
    தொழிலில் நிர்ப்பந்தம்
    மாதத்திற்கு பத்து நாள் ரயில்களில் அதுவும்
    வெகுதூர ரயில்களிலேயே இருக்கவேண்டி இருந்த கால கட்டத்தில்
    மோசமான, இல்லை
    படு மோசமான, இல்லை இல்லை,
    படு படு மோசமான , இல்லை இல்லை,
    இதற்கு மேல் சொல்ல வார்த்தைகளும் இல்லை.
    அந்த உணவு
    மோ சம் இல்லை,
    மோர்ந்து பார்க்கக்கூட முடியாத சமாசாரம்.
    இப்பப்ப கொஞ்ச்ம்
    இம்ப்ரூவ் ஆகியிருக்குமோ ?
    இல்லை இல்லை
    இந்தியா
    அப்படித்தான்
    இருக்கும்.

    எதுக்கும் ரயில் பிரயாணம் போகும்பொழுது
    ஹாண்ட் பாக்கேஜில் முதல் உதவிக்கு
    எலக்ட்ரால் 10 பாக்கெட், எமிசெட் 10 மாத்திரை.
    லொபரேட் 20 மாத்திரை. ( இல்லையென்றால் காடோட்ரில்)
    ஸிஃப்ரான் சி.டி. எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை
    சுத்தமான் நீர் ( எங்கே கிடைக்கும் என கேட்கக்கூடாது)
    ஒரு 20 லிட்டர்
    எடுத்து செல்லுங்கள்.

    மறந்துவிட்டேன்.
    ஒரு பத்து டாய்லெட் டிஸ்யூ பேப்பரும் .

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  28. அந்நியன் "வெப்சைட்" அட்ரஸ் கிடைச்சா தேவலாம் வெங்கட் ஜீ....என்கிட்ட நிறைய கம்ப்ளெயின்ட் இருக்கு :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லார்கிட்டயும் இதே கம்ப்ளெயிண்ட்....

      பேசாம நாம ஒரு வெப்சைட் ஆரம்பிச்சுடுவோமா!

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

      நீக்கு
  29. ரயில்வே உணவின் சுவையின்மை மட்டுமின்றி சுகாதரமின்மை குறித்தும் நிறைய புகார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.... எத்தனை புகார் கொடுத்தாலும் திருந்த முயற்சிப்பதில்லை இவர்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  30. இரயில் பயணம் பதிவு இரசிக்கவும் யோசிக்கவும் வைக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  31. அடிக்கடி செல்பவர்கள் இதை அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.எப்போதாவது செல்பவர்கள் வேறு வழியின்றி எதயாவது வாங்கித் தின்று அவஸ்தை படுகிறார்கள்.ரயில் பயணத்தில் பாதி இன்பம் பாதி துன்பம் உணர்ந்து சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //.ரயில் பயணத்தில் பாதி இன்பம் பாதி துன்பம் //

      உண்மை முரளி... இரண்டுமே கலந்தது தானே வாழ்க்கையும்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  32. //எதுக்கும் ரயில் பிரயாணம் போகும்பொழுது
    ஹாண்ட் பாக்கேஜில் முதல் உதவிக்கு
    எலக்ட்ரால் 10 பாக்கெட், எமிசெட் 10 மாத்திரை.
    லொபரேட் 20 மாத்திரை. ( இல்லையென்றால் காடோட்ரில்)
    ஸிஃப்ரான் சி.டி. எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை
    சுத்தமான் நீர் ( எங்கே கிடைக்கும் என கேட்கக்கூடாது)
    ஒரு 20 லிட்டர்
    எடுத்து செல்லுங்கள்.

    மறந்துவிட்டேன்.
    ஒரு பத்து டாய்லெட் டிஸ்யூ பேப்பரும் .

    சுப்பு தாத்தா.//

    சரியாச் சொன்னீங்க.... மாத்திரை மருந்துகளுக்குன்னு ஒரு தனி லக்கேஜ் எடுத்துக்கணும் போல....

    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  33. ரயிலில் தரும் உணவுகள் நன்றாக இருக்காது. ரயில் காப்பி அதைவிட மோசம்.காசு அதிகம் வாங்கி கொண்டாவது நல்ல உணவு தரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... காசு கொடுத்தால் எதுவும் கிடைக்கும் என்பது இங்கே பொய்த்து விடுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

  34. மாமாவும் பாசமான மனைவியும் மற்றும் கவி காளமேகம் அவர்களின் ஒரு சுவையான பாடல் அருமை.

    // எல்லாவிதத்திலும் முன்னேற வேண்டும் ரயில்வே துறை. காசு அதிகமாக வாங்கி நல்ல உணவு தந்தால் நிச்சயம் வரவேற்பிருக்கும். செய்வார்களா? // கேள்வி தான்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராசன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....