தொகுப்புகள்

வெள்ளி, 23 நவம்பர், 2012

ஃப்ரூட் சாலட் – 22: – சூரிய ஒளியில் தயாராகும் உணவு – ஜப்பானில் சுஜாதா




இந்த வார செய்தி: 

 
தில்லியில் இருக்கும் அக்ஷர்தாம் கோவில் பற்றிய செய்திகளை நீங்கள் அறிந்திருக்கலாம். பிறிதொரு சமயத்தில் “தலைநகரிலிருந்துதொடரில் எழுதுகிறேன்.  இன்று சொல்லப் போவது அக்கோவிலில் தயாராகும் உணவு பற்றியது.  கோவிலில் தினமும் சுமார் 4000 பேருக்கு உணவு தயார் செய்யப்படுகிறது.  இதுவரை குழாய் மூலம் இந்திரப்பிரஸ்தா வாயு நிறுவனம் தரும் இயற்கை வாயு கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு இனிமேல் சூரிய ஒளி கொண்டு தயாரிக்கப்பட இருக்கிறது.

ARUN®100 என்று பெயரிடப்பட்டுள்ள சூரிய ஒளியைக் குவித்து நீராவி உருவாக்கி அதன் மூலம் சாதம், பருப்பு, காய்கறிகள் வேகவைத்து உணவு தயாரிக்கிறார்கள்.  இந்த சூரிய ஒளி அடுப்பின் மூலம் உணவு தயாரிப்பதால் இயற்கை வாயு, எல்.பி.ஜி போன்றவற்றால் உண்டாகும் மாசுகள் உண்டாவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.

தற்போது தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்சார தட்டுப்பாடு சமயத்தில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் சூரிய ஒளியை பயன்படுத்தினால் இருண்டிருக்கும் தமிழகத்தில் நிச்சயம் ஒளி பிறக்கும். சற்றே விலை அதிகம் என்றாலும் நிச்சயம் பலன் தரும் விஷயம் என்றே தோன்றுகிறது.

நமது தமிழகத்தில் சூரிய ஒளி பயன்படுத்தி பயன்பெறுவது எப்போது – சூரியனுக்கே வெளிச்சம்!


இந்த வார முகப்புத்தக இற்றை:

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்
அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய்
வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்
வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்
பொய்யாய் பேசினால் பெயரை இழப்பாய்
சிந்தித்துப் பேசினால் சிறப்பாய் இருப்பாய்!

இந்த வார குறுஞ்செய்தி

Earning a relation is a reward of our trust. Maintaining the same is the result of our sacrifice and strengthening the same is the result of our care.

ரசித்த புகைப்படம்:  திங்கள் முதல் ஞாயிறு வரை நமது நிலையை இதை விட அழகாய் படம் பிடிக்க முடியுமா தெரியவில்லை! நீங்களும் பார்த்து ரசியுங்களேன்!


 
ரசித்த பாடல்இமயம் படத்திலிருந்து கங்கை யமுனை இங்கு தான் சங்கமம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களின் இசையில் கானகந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் வாணி ஜெயராம் அவர்களுடன் இணைந்து பாடிய பாடல்.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் ஸ்ரீவித்யா நடிப்பில் வெளிவந்த படம். இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன்.  இதோ இப்பாடல் உங்கள் ரசனைக்காக...

.
ராஜா காது கழுதைக் காது: திருவரங்கம் ரயில் நிலையத்தில் பல்லவனுக்காக காத்திருந்த போது – ஒரு அம்மா தனது மகனிடம் “ஏண்டா நீயும் உங்கப்பா மாதிரியே பராக்கு பார்த்துட்டு நிக்கற, போய் நம்ம கோச் எந்த பக்கம் வரும்னு பார்த்துட்டு வா!


படித்ததில் பிடித்தது:

அண்மையில் ஜப்பானுக்குப் போயிருந்தேன். ஒரு வாரத்தில் அந்த வேறு உலகத்தில் எனக்கும் சுத்தமும் ஒழுங்கும் மூச்சு திணறியது. ஜப்பானில் ஜப்பானியர்களைத் தவிர வேறு ஒருவரும் தொடர்ந்து வாசம் பண்ண முடியாது. அங்கு சனநாயகமா இல்லை சர்வாதிகாரமா என்று கண்டுபிடிக்க முடியாதபடி அத்தனை மக்களும் தம்மைத்தாமே கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகை மிஷன்களாய் உலவிவரும் இந்த நாட்டின் முன்னேற்றத்தைப் பார்க்க பயமாக இருக்கிறது.

பன்னிரண்டு கோடி மக்களில் ஒன்றரைக் கோடி தொண்டு கிழவர்களும், கிழவியர்களும் செத்துப் போக மாட்டேன் என்கிறார்கள். இவர்களை பராமரிக்க அரசாங்கம் திணறுகிறது. சுபிட்சத்தை சமாளிக்கவும் திணறுகிறார்கள். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், பாத்ரூம்களை அலங்கரிப்பதிலும், பத்தாவது மாடியில் வீனஸ் டிமிலோ சிலை அமைப்பதிலும், அமெரிக்க பல்கலைக் கழகங்களை விலைக்கு வாங்குவதிலும், அமெரிக்க கம்பெனிகளில் சிறுபான்மை ஷேர் வாங்குவதிலும் செலவு பண்ணுகிறார்கள்.

ஜப்பானில் நான் இருந்த பத்து நாட்களில் மொத்தம் மூன்று போலீஸ்காரர்களைத் தான் பார்த்தேன்.

திரும்பியபோது சென்னைக்கு வெங்கடராமன் வரப் போகிறார் என்று விமானநிலையத்திலிருந்து துவங்கி மவுண்ட் ரோடு வரை மரத்துக்கு மரம் போலீஸ்காரர்கள்.

-          சுஜாதா, கணையாழியின் கடைசி பக்கம், அக்டோபர், 1989.



மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை


நட்புடன்


வெங்கட்.
புது தில்லி.  

48 கருத்துகள்:

  1. நானும் வீட்டுக்கு சோலார் பேனல் போடலாமென்று இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  3. எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் சூரிய ஒளியை பயன்படுத்தினால் இருண்டிருக்கும் தமிழகத்தில் நிச்சயம் ஒளி பிறக்கும். சற்றே விலை அதிகம் என்றாலும் நிச்சயம் பலன் தரும் விஷயம் என்றே தோன்றுகிறது.

    சத்தும் சாரமும் ஒருங்கே கொண்ட ஃப்ரூட்சாலட் .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  4. //திரும்பியபோது சென்னைக்கு வெங்கடராமன் வரப் போகிறார் என்று விமானநிலையத்திலிருந்து துவங்கி மவுண்ட் ரோடு வரை மரத்துக்கு மரம் போலீஸ்காரர்கள்.//

    ha..ha..

    intha varikalai face book il paarththuttu ivlo naal kaliththu unga thalam vanthullen

    nalla pakirvukal

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆச்சி.

      நீக்கு
  5. எல்லாமே அருமை. பாடல் சுகம். சுஜாதா சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  7. வீட்டுக்கு வீடு இனி சோலார் பேனல் தான்... வேறு வழி(லி) இல்லை...

    பிடித்த பாடல்...

    மற்ற ஃப்ரூட் சாலட் அனைத்தும் அருமை...
    tm4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. ஃப்ரூட் சாலட் சத்துள்ளதா இருக்கு. வீணாகும் வளங்களை உபயோகப்படுத்தக் கற்றுக்கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  9. சமையல் எரிவாயுவுக்கும் சேர்த்து சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டியதுதான் .
    ஒருவாரத்து உணர்வுகள் அருமை.
    சுஜாதாவின் எழுத்துக்கள் எல்லாம் 'எவர் கிரீன்'.
    முகப்புத்தகம், குறுஞ்செய்தி அனைத்திலும் உபயோகமானதை ஆகர்ஷித்துக் கொள்ளும் கழுதைக் காது ராஜாவுக்கு ஜே! ரசனைக்காரரின் ப்ரூட் சாலடும் ரசிக்கத் தக்கதாகவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  10. இன்றிருக்கும் சூழலில்
    சூரிய சக்தியை
    பயன்படுத்த முனைய வேண்டும்....

    மனம் கவர்ந்த பதிவு நண்பரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  11. கங்கை யமுனை பாடல் உண்மையில் எப்போது கேட்டாலும் இனிமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுமதி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்குமார்.

      நீக்கு
  14. வணக்கம்!
    தாமதத்திற்கு மன்னிக்கவும்! தங்களது இரு பதிவினை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்! தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வலைச்சரம் வரும்படி அன்போடு அழைக்கிறேன்!
    http://blogintamil.blogspot.in/2012/11/5_23.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய பகிர்வுகளை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி யுவராணி தமிழரசன் அவர்களே.

      நீக்கு
  15. அட கலக்கல்.. குழந்தை படங்கள் சூப்பர் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹாரி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை. மிக்க மகிழ்ச்சி மாதவன்.

      நீக்கு
  17. இன்னும் சில வருடங்களில் இப்போது வீட்டுக்கு வீடு மொட்டை மாடியில் டிஷ் ஆன்டனா உள்ளது போல், ஸோலார் பேனல்கள் துணைக்கு வந்து விடும்.

    சுஜாதா பக்கம் சுவையோ சுவை!


    (//இந்த சூரிய ஒளி அடுப்பின் மூலம் உணவு தயாரிப்பதால் இயற்கை வாயு, எல்.பி.ஜி போன்றவற்றால் உண்டாகும் மாசுகள் உண்டாவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.//

    எப்படியும் இயற்கை வாயுவினால் ஏற்படும் மாசினை தவிர்க்க முடியாது. ஏனெனில் 4000 பேர் அந்த உணவினை உண்ணப்போகிறார்கள். அதிலும் தில்லியில் உருளைக்கிழங்கு இல்லாமல் சமையலா!))

    (எதுக்கு உண்மையச் சொன்னா உதைக்க வர்றீங்க!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்]

      நீக்கு
  18. ஒரு சமயம் கோவா போனப்போ அங்கயும் சோலார் சக்தியின் மூலமாகத்தான் கீசர், அடுப்பு மற்ற உபகரணங்களும் வேலை செய்வதைப்பார்த்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

      நீக்கு
  19. அருமையான ஃப்ரூட் சாலட்.

    சூரிய சக்தியை பயன்படுத்துவது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  20. அக்ஷர்தாம் பார்த்து, ரசித்து, உணவையும் ருசித்திருக்கிறோம். செய்தி புதிது.

    சூர்ய சக்திதான் இனி எதிர்காலம்ன்னு தோணுது.

    புகைப்படம் புன்சிரிப்பை வரவழைத்தது.

    பாடல் காட்சி அருமை. ஸ்ரீவித்யா மனதில் நெடு நேரம் உலா வந்தார்.

    சிலரது வீடுகள் கூட மிகத் தூய்மையாக இருக்கும். எனக்கு எப்போது கிளம்பப் போகிறோம் என்று இருக்கும்!

    அருமையான ப்ரூட் சாலட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  21. அக்ஷர்தாம் கோவிலில் தயாராகும் உணவு பற்றிய அருமையான தகவல். உங்கள் புகைப்பட ரசனையும், பாடல் ரசனையும் சூப்பர்..

    இனிமையான ஃப்ரூட் சாலட் :-)

    த.ம.12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால் ஹனுமான் ஜி!

      நீக்கு
  22. தெவிட்டாத ஃப்ரூட் சாலட் ! பகிர்விற்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  23. அட இது ஆச்சர்யத் தகவல்பா....

    சூரிய ஒளியில் இத்தனை பெற முடியும் என்றால் மின்வெட்டுக்காக மக்கள் இனி கலங்கும் அவசியம் இல்லை. அந்த காலம் வெகு தூரத்தில் இல்லைன்னு சொல்லுங்க....

    கோபமாய் அதிகமாய் வெட்டியாய் வேகமாய் ஆணவமாய் பொய்யாய் பேசி இழப்பதைவிட...

    சிந்தித்துப் பேசினால் சிறப்பாய் இருப்பாய்! ஹை இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா...

    உண்மையேப்பா... ஒரு உறவைப்பெறுவது நம் நம்பிக்கையின் அடிப்படையில் எனும்போது அதை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் செய்யும் நல்லவை அத்தனையும் நம் உறவை பலப்படுத்தும்... நிலைத்தும் நிற்கும்... ரசித்து வாசித்தேன்...

    ஹாஹா.. ஹை எப்படிப்பா இவ்ளோ கரெக்டா சொல்லிட்டீங்க? சாரி படம் போட்டுட்டீங்க? சண்டே நைட் கரெக்டா டெரரா இருப்பது போல தான் எங்களுக்கு இங்கே சாட்டர்டே நைட்... சண்டே எங்களுக்கு வார முதல் நாளாச்சே... கொடுமைடா சாமி....

    //“ஏண்டா நீயும் உங்கப்பா மாதிரியே பராக்கு பார்த்துட்டு நிக்கற, போய் நம்ம கோச் எந்த பக்கம் வரும்னு பார்த்துட்டு வா!”//

    அந்தம்மா சொன்னது படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது....

    ஜப்பானின் அசுரவளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அங்கிருக்கும் மக்கள் அளிக்கும் ஒற்றுமையும், செயல்படும் விதமும், சுத்தமும், நமக்கென்னாச்சு எவன் எங்க துப்பினால் என்ன என்று இருக்காமல் சுத்தத்தை இன்னும் சுத்தப்படுத்தவும் இருப்பதால் தான் நமப்ர் ஒன்.. தவறு செய்யாத இடத்தில் போலீஸ்காரர்கள் அனாவசியம்.. இங்கே ஹாஹா.. படித்து ரசித்தேன்பா...

    ஃப்ரூட்சாலட்ல இனிமை, புதுமை, பழமை, நகைச்சுவை எல்லாமே செம்மத்தூக்கல் சுவையாக ருசியாக இருந்தது...

    அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு....

    பதிலளிநீக்கு
  24. அவ்வப்போது எனது பதிவிற்கு வந்து இப்படி ஒவ்வொரு பகுதியையும் படித்து, ரசித்து கருத்திடும் போது மனதுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி. நேரம் கிடைக்கும்போது வாருங்க இந்தப் பக்கம்....

    பதிலளிநீக்கு

  25. (1) இந்த வார முகப்புத்தக இற்றை சூப்பர்ப்பா !!!
    (2) குறுஞ்செய்தி wonderful
    (3) ரசித்த புகைப்படம் - டாப் டக்கர் ப்பா !!!
    (4) படித்ததில் பிடித்தது - அருமைய்யா !!! (உமக்கும் நன்றி சுஜாதா அய்யாவுக்கும் நன்றி)
    மொத்ததில் ப்ரூட் சால்ட் ரொம்ப இனிப்பு.
    தாமத்திற்கு மன்னிக்கவும்
    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....