தொகுப்புகள்

திங்கள், 24 டிசம்பர், 2012

கவிதை எழுதுங்க.....





மேலே கொடுத்திருக்கும் படம் சுமார் 55 வருடங்களுக்கு முன் மாதவன் எனும் ஓவியரால் வரையப்பட்டது. இந்த ஓவியம் சொல்லும் கதையை பல சரித்திர நாவல்கள் எழுதிய, புகழ்பெற்ற ஒரு ஜாம்பவான் கட்டுரையாக எழுதி இருக்கிறார். அதை வெளியிடு முன், இந்தப் படம் பார்த்து கவிதை எழுத விருப்பமுள்ளவர்கள் கவிதை எழுதி அனுப்பினால், எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இல்லையெனில் எழுதி தங்களது வலைப்பூவில் வெளியிட்டு எனக்கு தகவல் சொன்னால், எனது பக்கத்திலும் வெளியிடுகிறேன். பத்து நாட்கள் கழித்து கட்டுரை வரும் பொக்கிஷப் பகிர்வாக!  

கட்டுரையின் ஒரு பத்தி மட்டும் இங்கே முன்னோட்டமாக!


“இடை இடையே எழுந்து நின்ற கற்பாறைகளைச் சுற்றி வளைத்து ஓடிய கோதாவரியின் நீல நிறப் பளிங்கு நீரிலே உதயகால சூரியாச்மிகள் கலந்து விளையாடியதால், நீர் மட்ட்த்தில் தெரிந்த சுழல்களும் கரை ஓரத்தில் தாக்கிய சிற்றலைகளும் அநேக கண்ணாடிகளைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன. கற்பாறைகளில் பிரவாகம் வந்து தாக்கிய வேகத்தினால் ஆகாயத்தில் எழுந்த நீர்த் திவலைகளிலே ஊடுருவிய கதிரவனின் இளங் கிரணங்கள், ஜலப் பிரதேசத்தில் ஆங்காங்கு சின்னஞ்சிறு வானவிற்களின் வர்ண ஜாலங்களை சிருஷ்டித்துக் கொண்டிருந்தன. கரையோரமாக நின்ற மரங்கள் வண்ண மலர்களைத் தண்ணீரில் உதிர்த்து ‘வானவில்லின் வர்ணங்கள் அதிக அழகா, தங்கள் மலர்கள் அதிக அழகாஎன்பதை ஆராய்வன போல் கிளைகளை நன்றாகத் தாழ்த்தி நதியின் ஜல மட்டத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றன. கரைக்கு அருகே வளர்ந்திருந்த கோரைப் புற்களுக்கிடையே தங்கியிருந்த ஹம்சப் பட்சிகளும் இந்த வேடிக்கையைப் பார்த்து ஓரிரு முறை சப்தித்தன. வானவில்லின் அத்தனை வர்ணங்களும் தன் மேனியிலிருக்கும் காரணத்தால் ஆண் மயிலொன்று கரையோரமாக கர்வ நடை போட்டுக் கொண்டிருந்தது.



என்ன நண்பர்களே, கட்டுரையின் பகுதியை ரசித்தீர்களா? முழுக் கட்டுரையும் மேலே சொன்னது போல கவிதைகளைப் பகிர்ந்த பிறகு வெளியிடுகிறேன்.

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. முதலில் கட்டுரைக்கும் படத்துக்கும் வாழ்த்துகளைப் பிடியுங்கள்.கவிதையா??????????
    மேலே இருக்கும் வர்ணனை சாண்டில்யன் சாயலில் இருக்கிறது:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாண்டில்யனே தான் வல்லிம்மா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ‘வானவில்லின் வர்ணங்கள் அதிக அழகா, தங்கள் மலர்கள் அதிக அழகா’ என்பதை ஆராய்வன போல் கிளைகளை நன்றாகத் தாழ்த்தி நதியின் ஜல மட்டத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றன.

    அழகான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுமதி.

      நீக்கு
  4. எனக்கும் சாண்டில்யனின் வர்ணனை போலத்தான் தெரியுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாண்டில்யனே தான் லக்ஷ்மிம்மா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சாண்டில்யன் எழுதியதுன்னு தோணுச்சு மொதல்ல. ஆனா ஆஸ்தான ஓவியர் லதா இல்லாமலா?.. எங்கியோ இடிக்குதே :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதியது சாண்டில்யன் தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  6. நீண்ட நெடும் கற்பனைக்கெட்டா வர்ணனைகள். வஞ்சியரையும் விஞ்சி நிற்கும் கொஞ்சல் நடை. பெண்களை வர்ணிக்கும் போது அவருக்கு வயது ஐம்பது குறைந்து விடும். வாசகர்களுக்கும்தான். நிச்சயம் சாண்டியல்யனாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயது ஐம்பது குறைந்து விடும்! - என்றும் இருபத்தி எட்டான உங்கள் கற்பனை நன்று! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஈஸ்வரன் [பத்மநாபன் அண்ணாச்சி].

      நீக்கு
  7. எனக்கும் சாண்டில்யன் வாசம்தான் அடிக்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாண்டில்யனே தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. போட்டியெல்லாம் இல்லை புலவர் ஐயா.... கவிதை எழுத ஒரு அழைப்பு தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  9. படம் வரைந்த ஓவியர் யார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.... மனசுக்குள் நிற்கிறது பெயர்...

    "நீர் தழுவும்
    என்னை
    நீ தழுவுவது எப்போது?"

    கவிதைதான்... நம்புங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாவ்... மூன்று வரியில் ஒரு சூப்பர் கவிதை.... பாராட்டுகள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. படம் அழகு.இலக்கிய நடையில் வர்ண்ணை மிக அருமை.பெரும்பாலானோர் ஊகித்துள்ளது போல் சாண்டில்யனாகத்தான் இருக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாண்டில்யன் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  11. கவிதை எழுதுங்க சார் !!
    காதலன் முன்னே கனவெனத்தோன்றிய‌
    கன்னியைப் பாருங்க சார் ! அவள் விழியில்
    காதலைப் பாருங்க சார் !!

    நீரினில் உதித்தாயோ ! என் வானில்
    நிலவெனப் பரந்தாயோ !
    வானத்து ஊர்வசியோ ! என்
    மனம் கவரும் மேனகையோ ?

    (டேய்! இன்னிக்கு வைகுண்ட ஏகாதசிடா ! கொஞ்சம் சைவமா சொல்லுடா ! )




    செவ்வந்தி சிரித்ததுவோ ?
    செந்தாமரை மலர்ந்ததுவோ ?! நின்
    செவ்விதழின் ஈரம் போலே
    சுவைக்குமோ தேனும் பாகும் ?

    வண்ண வண்ண மயில்களாங்கே
    ஒய்யார உன் நடையை இடையை
    பையாரப்பார்த்தபின்னே
    நாணியே மறைந்தனவோ ?

    பங்கயம் போற்தண்டினும் மெலிதாய்
    சங்கதிகள் பலவே சொல்லும் உன்
    பின்புற பூ பஞ்சு எல்லாம்
    இன்புறவே இனி எனக்கே .

    கால நேரம் பாராது
    காத்திருக்கும் எனை விடுத்து
    கற்பாறை மீதா நீ
    காரிகையே அமர்ந்திருப்பாய் ?

    பஞ்சை விட மேலாமென்
    விஞ்சு புகழ் மார்பினிலே
    நெஞ்சோடு புரண்டிடவே
    வஞ்சிக்கொடியே என் வசந்தமே
    வா !! வந்துன்னிதழைத்
    தா !! தந்தேன் எனச்சொல்லி
    முந்தி வா. உன்னை நானொரு
    முத்தமிட வா ?

    சுப்பு ரத்தினம்.
    ( இது சாண்டில்யன் சமாசாரம் . அப்ப எனக்கும் இருபதே வயசுதான். தெரியுமில்ல.!!)


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலக்கிட்டீங்க! கவிதை நல்லா இருக்கு......

      இப்பவும் உங்களுக்கு இருபதே வயசு தான் - மனதளவில்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

      நீக்கு
    2. உங்களைப் போலவே நானும் சுப்பு தாத்தாவின் கருத்தினை ரசித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  12. அழகான படம்...
    சாண்டில்யனின் எழுத்து...

    ஆஹா...
    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு

  13. வணக்கம்!

    படமும் படா்தமிழ்ப் பாட்டும் படைத்தால்
    சுடரும் இனிமை சுரந்து! - தொடருகிறேன்
    உன்றன் வலையை! உயா்தமிழ் ஆசையால்
    என்றன் கவியை இசைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன்.

      நீக்கு
  14. அருமையான பகிர்வு. அதுவும் ஓவியம் பார்த்ததும் அந்த நாடகளில் மிகவும் சிலாகிக்கப்பட்ட ஓவியரின் கைவண்ணம் ஈண்டும் பார்க்கக் கிடைத்த சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  15. அருமையான ஓவியத்துடன் இனிமையான பகிர்வு. ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....