தொகுப்புகள்

திங்கள், 8 ஏப்ரல், 2013

கற்றுக் கொடேன் – தமிழ் முகில் [அன்னம் விடு தூது – 9]


அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். முகிலின் பக்கங்கள் எனும் வலைப்பூவில் எழுதி வரும் பி. தமிழ் முகில் எழுதிய கவிதையினை இன்று பகிர்ந்துள்ளேன்.

இதோ அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் அடுத்த கவிதை!


பிரித்தறிய முடியாத
பால் நீர்க் கலவையினின்று
நீரைப் பிரித்தெடுத்து
தூய்மையான பாலை
பருகும் அன்னப் பட்சியே
உலக    மாந்தருள்
பிரித்தறிய இயலாதவாறு
விரவிக் கிடக்கும்
நல்லவர்  தீயவர்
இனம் காண
நல்லதொரு உத்தியை
கற்றுக் கொடேன் !!!

-          பி. தமிழ்முகில்.


என்ன நண்பர்களே, தமிழ் முகில் அவர்கள் எழுதிய கவிதையை ரசித்தீர்களா? கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! கவிதை எழுதிய தமிழ்முகில் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!



அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

41 கருத்துகள்:

  1. சுருக்கமாக ஆயினும்
    கருத்துடன் கூடிய அருமையான கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  2. நல்ல கருத்தை கேட்கும் வரிகள். நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  3. பிரித்தறிய இயலாதவாறு
    விரவிக் கிடக்கும்
    நல்லவர் – தீயவர்
    இனம் காண
    நல்லதொரு உத்தியை
    கற்றுக் கொடேன் !!!//

    அருமையான வரிகள்.
    தமிழ்முகில் கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. படித்தேன். கவிதை எனக்கு அலெர்ஜி.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு உத்தியை
    கற்றுக் கொடேன் !!!

    அருமையான கருத்து..!

    பதிலளிநீக்கு
  6. அருமையான வரிகள்...

    பி. தமிழ் முகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. நல்ல சிந்தனைக் கவிதை. சிறப்பு. தமிழ்முகிலுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. சுருக்கமான, ஆனால் தமிழ் மண‌ம் வீசும் கவிதை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமார்ந்த நன்றிகள் மனோ சாமிநாதன் அவர்களே !!!

      நீக்கு
  9. //உலக மாந்தருள்
    பிரித்தறிய இயலாதவாறு
    விரவிக் கிடக்கும்
    நல்லவர் – தீயவர்
    இனம் காண
    நல்லதொரு உத்தியை
    கற்றுக் கொடேன் !!!//

    நல்லாச் சொன்னீங்க... தமிழ் முகில் அய்யா...

    இன்னிக்கு முக நூல் லிலே யாரு நல்லவங்க.யாரு கெட்டவங்க...
    யாரு லொல்லு யாரு ஜொல்லு
    புரியாத லெவெலுக்கு போய்விட்டதே !!

    உத்தி என்ன சொல்ல முடியும்னேன்...
    அவகவக முட்டி மோதி கத்துக்க வேண்டியது தான்னேன்.

    சுப்பு தாத்தா.
    What is tha.ma 2 ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துக்கு மிக்க நன்றி சுப்பு தாத்தா அவர்களே !!!

      நீக்கு
  10. எனது கவிதையை வெளியிட்டு எனக்கு ஊக்கமளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா.

    @Ramani S தங்களது வாழ்த்துகட்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில்.

      தங்களது கவிதையைப் பாராட்டிய நண்பர்களுக்கு நீங்களே பதில் அளித்தமைக்கும் நன்றி தமிழ்முகில்.

      நீக்கு
  11. மிகச் சரியான நபரிடம் சரியான கேள்வியைக் கேட்டிருக்கிறார் தமிழ் முகில்!பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பான கருத்துக்கும்,பாராட்டுகட்கும் என் மனமார்ந்த நன்றிகள் ரஞ்சனி நாராயணன் அவர்களே !!!

      நீக்கு
  12. அழகிய கவிதை அளித்த தமிழ் முகில் அவர்களுக்கும்
    அதை வெளியிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
    2. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் மனமார்ந்த நன்றிகள் அருணா செல்வம் அவர்களே !!!

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார்.

      நீக்கு
    2. தங்களது கருத்துப் பதிவிற்கு நன்றி ஐயா !!!

      நீக்கு


  14. கவிதை தந்தவருக்கும் அதை வாங்கித் தந்தவருக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
    2. மனமார்ந்த நன்றிகள் ஐயா!!!

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேடந்தாங்கல் கருண்.

      நீக்கு
    2. தங்களது வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் வேடந்தாங்கல் கருண் அவர்களே !!!

      நீக்கு
  16. வாழ்த்துக்கள் தமிழ் முகில்.

    பூங்கொத்து அளித்தவருக்கும், பெற்றுக் கொண்டவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி!

      நீக்கு
    2. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....