தொகுப்புகள்

வெள்ளி, 31 மே, 2013

ஃப்ரூட் சாலட் – 48 – நேஹா – இதயம் – படுபாவி!



இந்த வார செய்தி:

நேஹா மெஹந்திரத்தா – 18 வயது பெண் – சமீபத்தில் வெளியான CBSE Class XII தேர்வில் 50.26 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 95 சதவீதத்திற்கும் மேல் பலர் மதிப்பெண் பெறும் இந்நாட்களில் இந்த தேர்ச்சி என்ன பெரிய விஷயம் என நினைக்கிறீர்களா! மேலே படியுங்கள்.

நேஹாவிற்கு ஒரு வினோதமான சுவாசம் சம்பந்தமான பிரச்சனை – ஆங்கிலத்தில் இதை Old Pulmonary Koch’s disease with bronchitis, bronchial hyper-reactivity with type II respiratory failure எனச் சொல்கிறார்கள். இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு இயற்கையாக பிராண வாயு கிடைப்பதில்லை – செயற்கையாக அவர்களுக்கு பிராண வாயுவை ஒரு உபகரணம் மூலம் கிடைக்கச் செய்தால் தான் அவர்களால் சீராக சுவாசிக்க முடியுமாம்.

செயற்கையாக பிராண வாயு இருந்தும் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் தேர்வு எழுத முடியாது.  உடலில் ஏற்படும் பலவீனம் அவர்களை ரொம்பவே படுத்தும் எனவும், அதன் காரணமாக தேர்வில் ரொம்பவும் சிரமப்பட்டு 60 சதவீத கேள்விகளையே அவரால் எழுத முடிந்தது எனச் சொல்கிறார் நேஹா. படிப்பதில் ஆர்வமும் மனோ பலமும் கொண்ட காரணத்தினாலேயே இவர் விடா முயற்சியுடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

இவரது தேர்ச்சிக்கு இவரை மட்டுமே பாராட்டுவதும் சரியல்ல – இவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர் – நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் தலைவர். தனது மகளின் நிலை கண்டு தளர்ந்து விடாது தொடர்ந்து உழைத்து தனது மகளுக்குத் தேவையான உபகரணத்தினை வாங்கி தனது வீட்டிலே வைத்திருக்கிறார். உபகரணத்தின் விலை – 38000/-. ஒவ்வொரு முறையும் பிராணவாயு சிலிண்டர் நிரப்ப இவருக்கு ஆகும் செலவு 180/- ரூபாய். ஆகவே தொடர்ந்து செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

நேஹா பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆரம்பித்த பிரச்சனை – பல்வேறு மருத்துவமனைகள் – பல்வேறு மருத்துவர்கள் என தொடரும் சிகிச்சை – இப்போது வாழ்நாள் முழுதும் இப்படி செயற்கையாக பிராணவாயு கிடைத்தால் தான் உயிர் வாழ முடியும் எனும் நிலை – இருந்தாலும் மனோபலத்துடன் மேலும் படிக்க ஆசைப்படுகிறார் இவர். மேலும் படித்து ஒரு ஆசிரியராகவோ அல்லது காவல்துறையிலோ பணி புரியவேண்டுமென்ற உத்வேகம் இருக்கிறது இவரிடம்.

இவரது மனோபலத்தினையும் இவரது தந்தையின் விடாமுயற்சியையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்......
    
இந்த வார முகப்புத்தக இற்றை:

மூன்று விஷயங்கள் நமக்கு வேண்டும் – உணர்வதற்கான இதயம், சிந்தனைத் திறனுள்ள மூளை மற்றும் வேலை செய்யக்கூடிய கைகள் – ஸ்வாமி விவேகானந்தர்.

இந்த வார குறுஞ்செய்தி

மன அழுத்தத்தினையும், கவலைகளையும் சேர்த்து வைக்கும் கூடையல்ல உங்கள் இதயம்!  மகிழ்ச்சியை சேமித்து வைக்கும் தங்க பெட்டகம் உங்கள் இதயம்.... உங்கள் இதயத்தினை என்றும் சந்தோஷமாகவே வைத்திருங்கள்....

ரசித்த T-SHIRT வாசகம்

திருவரங்கத்தில் ஒரு கடையில் இருக்கும்போது சமீபத்தில் கல்யாணம் ஆன தம்பதிகள் – பையனுக்கு இருபத்தியோரு வயதிருக்கலாம் – அவர் அணிந்திருந்த T-SHIRT-ல் இருந்த வாசகம் – “I DON’T NEED GOOGLE, MY WIFE KNOWS EVERYTHING அதை உண்மையாக்கவோ என்னமோ எல்லாவற்றிற்கும் மனைவியைக் கேட்டுக் கொண்டிருந்தார்!

ராஜா காது கழுதை காது:

திருவரங்கத்தில் “ரங்கா ரங்காகோபுரத்தினை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மூதாட்டி வந்து யாசகம் கேட்டார் – எப்போதும் இருக்கும் மக்கள் கடலில் நின்று தத்தளித்தபடியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததால் அவரைக் கவனிக்காது இருந்தேன். இரண்டு முறை யாசகம் கேட்டபிறகு ஒன்றும் தராததால் புகைப்படம் எடுப்பதிலேயே முனைப்போடு இருந்த என்னைப் பார்த்து அவர் சொல்லிச் சென்றது – “பாவி, பாவி, படுபாவி!

ரசித்த காணொளி:

இந்தக் காணொளியைப் பாருங்களேன் – நீங்களும் நிச்சயம் உங்கள் குழந்தைப் பருவத்திற்குச் செல்வீர்கள்!



என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: ஏனோ என்னுடைய சென்ற இரு பதிவுகளுமே என்னைத் தொடர்பவர்களின் டாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை! இருபதிவுகளின் சுட்டி கீழே.





66 கருத்துகள்:

  1. திருவரங்கத்தில் ஒரு கடையில் இருக்கும்போது சமீபத்தில் கல்யாணம் ஆன தம்பதிகள் ரசிக்கவைத்தார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  2. நேஹாவுக்குப் பாராட்டுகள்.

    இற்றை, குறுஞ்செய்தி எல்லாமே ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. என்னாது அவர் பொண்டாட்டிக்கு எல்லாமே தெரியுமாமா ஹா ஹா ஹா ஹா முடியல...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  4. முந்தைய பதிவை சற்று நேரத்திற்கு முன்தான் படித்தேன்.
    நோயின் கொடுமையை மீறி சாதித்த அந்த பெண்ணை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நீங்கள் சொல்வது போல் மனம் தளராது ஊக்கப் புத்திய பெற்றோர்களை பாராட்டத்தான் வேண்டும். நெஞ்சம் நெகிழ வைத்த செய்தி.
    டி ஷர்ட் வாசகம் சுப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  5. எல்லாவற்றையும் விட நேஹா அவர்களின் மன உறுதி அசர வைத்தது... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. அனைத்தும் அருமை. நேஹா அவர்களின் மன உறுதி அசர வைத்தது.பாராட்டுக்கள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  7. நேஹாவை எவ்வ‌ள‌வு பாராட்டினாலும் த‌கும். அவ‌ரின் பெற்றோர்க‌ளையும் தான். T-Shirt வாச‌க‌ம் too much :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தியானா.....

      நீக்கு
  8. இந்தக் காணொளியைப் பாருங்களேன் – நீங்களும் நிச்சயம் உங்கள் குழந்தைப் பருவத்திற்குச் செல்வீர்கள்!
    சிறப்பான பகிர்வு மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.....

      நீக்கு
  9. நேஹா மேலும் சிகரங்களைத்தொட இனிய வாழ்த்துக்கள்!!
    காணொளி மூலம் சில நிமிடங்கள் உண்மையிலேயே புன்னகைக்க வைத்ததற்கு அன்பு நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

      நீக்கு
  10. அனைத்தும் அருமை. Neha breaks my heart :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி Bandhu ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  12. முயலாது காரணம் சொல்லித் திரிவோருக்கு
    முதல் செய்தி ஒரு நல்ல மருந்து
    காணொளி கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  13. பதில்கள்
    1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  14. ‌நேஹாவுக்கு வாழ்த்துக்கள், இற்றை, டிஷர்ட் வாசகம், ராஜா காது எல்லாமே (வழக்கம் போல) அருமையாக அமைந்து ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  15. விடியோ அட்டகாசம். இது போல ஒரு மாயக்கண்ணாடி மட்டும் எனக்குக் கிடைச்சுதுனு வையுங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை....

      பார்க்கும்போது அனைவரும் நிச்சயம், தனது மனதுக்குள் அந்த கண்ணாடி முன் தன்னை வைத்துப் பார்த்திருப்பார்கள் :)))

      நீக்கு
  16. நேஹா மேலும் பல இமயங்களைத் தாண்ட இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  17. நேஹாவை பாராட்ட வேண்டும். மற்ற தகவல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  18. சிரமமான தருணங்களில் நேஹா நிச்சயம் கவனத்தில் கொள்ளவேண்டியவள்....

    அந்தக் கண்ணாடி எங்கங்க கிடைக்கும்.... கொஞ்ச நேரம் நாமளும் சந்தோசமா இருக்கலாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுரை தமிழன்.

      நீக்கு
  20. மனம் தொட்ட பதிவு சகோ!
    அத்தனையுமே அருமை. வாழ்த்துக்கள்!

    த ம. 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இளமதி. தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கும் தான்!

      நீக்கு
  21. நேஹாவுக்குப் பாராட்டுகள் அவரின் மன உறுதி சிலிர்க்க வைக்கிறது.
    வீடியோ அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  22. உடல் குறை இருந்தாலும் உள்ளத்தில் நிறை இருக்கும் நேஹாவுக்கு வாழ்த்துக்கள்.
    T- ஷர்ட் வாசகம் சூப்பர் ஆனால் அவரது வயதுதான் (21) இடிக்கிறது!
    காணொளியின் நடனமும் வாசகங்களும் ரசிக்க வைத்தன.
    ப்ரூட் சாலட் ரொம்ப டேஸ்டி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

      நீக்கு
  23. Neha should be a good lesson to all of us..let god bless her and make her achieve something great in her life..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மல்லி!

      முதல் முறை எனது தளத்தில் உனது கருத்துரை! மகிழ்ச்சி!

      நீக்கு
  24. நேஹா நோய் குணமாக மருந்து வரவேண்டும்.அவள் இன்னும் சாதிக்க வேண்டும்.
    ஸ்ரீரங்கத்துப் பாட்டி திட்டினால் பலிக்காது:)
    வீடியோவை எங்கயோ பார்த்தேன். அருமை வெகு அருமை.
    இருபத்தியொரு வயசில் திருமணமா.!!!!
    டி ஷர்ட்டுக்காகப் பண்ணிக் கொண்டிருப்பாரோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா... 21 வயதில் கல்யாணம் - என்ன காரணமோ தெரியவில்லை!

      //ஸ்ரீரங்கத்துப் பாட்டி திட்டினால் பலிக்காது :)// அப்படி நினைத்து மனதைத் தேற்றிக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது!

      நீக்கு
  25. பழக் கலவை ரொம்ப சுவையாகவும் அருமையாகவும் இருந்தது. உங்கள் பதிவு எனக்குள் புது உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. அருமையான பதிவு. ஒரு வேண்டுகோள் தோழரே. எழுத்துக்க்களின் அளவும் தடிப்பும் அதிகம் என்று உணர்கிறேன். நீங்கள் விரும்பினால் (மட்டும்) மாற்றுங்கள். மீண்டும் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதி.....

      தொடர்ந்து சந்திப்போம்.

      நீக்கு
  26. டி ஷர்ட் வாசம் நல்லாதான் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  27. நேஹாவின் சாதனை வியக்க வைத்தது. T -Shirt வாசகம் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.

      நீக்கு
  28. நேஹாவுக்கு வாழ்த்துகள்.

    பலதகவல்களுடன் சுவைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  29. நேஹா! ஆஹா! ஓஹோன்னு வர வாழ்த்துக்கள்.

    (T-Shirt வாசகம் படிக்கும் பழக்கம் இன்னும் போகலியா!- தில்லிப் பழக்கம் திருவரங்கம் மட்டும்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //T-Shirt வாசகம் படிக்கும் பழக்கம் இன்னும் போகலியா!- //

      இப்படிப் போட்டுக் குடுக்கறீங்களே அண்ணாச்சி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  30. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  31. நேஹாவின் சாதனை அபாரம்... இன்னும் அவர் வளர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி “இரவின் புன்னகை”.....

      நீக்கு
  32. நேகாவிற்கு இருக்கும் மனோ பலம் ஆச்சரியப் பட வைக்கிறது...

    டி ஷர்ட் வாசகமும் அந்த கணவனும் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.......

      நீக்கு
  33. நல்ல பதிவுதொடர தொடர வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனந்து.....

      முதல் வருகை..... மகிழ்ச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....