தொகுப்புகள்

திங்கள், 17 ஜூன், 2013

ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேய ஸ்வாமி திருக்கோவில்






ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேய ஸ்வாமி




திருவரங்கம் 194, கீழ உத்திர வீதியில் உத்திர மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாவபோத ஆஞ்சனேய ஸ்வாமி திருக்கோவில் இருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மிகவும் பழமையான கோவில். கோவில் என்றதும் பெரிய கோபுரங்களோ, கொடிமரம், பலிபீடம் என்றெல்லாம் இருக்கும் என நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். வெளியிலிருந்து பார்க்கும்போது ஒரு வீடு போலவே தோற்றம் அளிக்கிறது. கோவிலின் வரலாற்றினைச் சற்றே பார்க்கலாம்…..




கோவிலின் வெளிப்புறத் தோற்றம்




மத்வாச்சாரியர்களில் ஒருவர் திருக்கோவிலூர் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் [1537-1595] என்பவர். ஸ்ரீ உத்தராதி மடத்தின் 13-ஆவது மடாதிபதி. திருவரங்கத்தில் அரங்கனின் கோவில் அருகிலேயே இருந்து ஐந்து பாவபோத கிரந்தங்களை எழுதினார். அவை ப்ருஹதாரண்ய பாவபோத, ந்யாய விவரண பாவபோத, கீதாபாஷ்ய பாவபோத, விஷ்ணுதத்வநிர்ணய பாவபோத மற்றும் தத்வப்ரகாஷிக பாவபோத என்பவை.




ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேய ஸ்வாமி ஓவியம் 




திருவரங்கம் கோவிலின் ப்ரணவாகார விமானத்தினைப் பார்த்தபடியே ஒவ்வொரு கிரந்தங்களை எழுதும்போதும், ஆஞ்சனேயர் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தரின் பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டிருக்க, தான் எழுதுவது சரியா என ஆஞ்சனேயரிடம் கேட்டு அவர் சரியென தலையை அசைத்து ஆமோதித்தபின்னரே மேலே எழுதுவாராம். அதனாலேயே, இந்த இடத்தில்பாவபோத ஆஞ்சனேயர்எனப் பெயரிட்டு ஒரு ஆஞ்சனேயர் சிலையை பிரதிஷ்டை செய்தாராம் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர். பாவபோத க்ரந்தங்களை எழுதும்போது சாக்ஷியாக ஆஞ்சனேயர் இருந்தமையால் இவருக்குக்ரந்த சாக்ஷி ஆஞ்சனேயர் என்ற பெயரும் உண்டு.




ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேய ஸ்வாமி





சாதாரணமாக ஆஞ்சனேயர் சிலைகள் கையில் சஞ்சீவி மலையைத் தூக்கியபடியோ, இரு கைகளைக் கூப்பியபடியோ இருப்பதைப் பார்த்திருக்கிறோம். இங்கே இருக்கும் பாவபோத ஆஞ்சனேயர் ஒரு கையை மேலே தூக்கியபடி இருக்க, மற்றொரு கையில் ஒரு மலரைப் பிடித்தபடி இருக்கிறார். உத்திர மடத்தின் கட்டுப்பாட்டில் தற்போது இருக்கும் இந்த கோவில் ஒரு வீட்டிற்குள் இருக்கிறது.

கீழ உத்திர வீதியிலிருந்து பார்க்கும்போது பழைய கால வீடுகளில் இருக்கும் நீண்ட அறைகள் தெரிகிறது. அவற்றை கடந்து சென்றால் உள்ளே தோட்டம். தோட்டத்தில் பல மரங்கள் உள்ள இயற்கைச் சூழல். ஒரு பக்கத்தில் பெரிய துளசிமாடம். தினம் அங்கே பூஜை செய்யப்படுவது அதன் பராமரிப்பிலேயே தெரிகிறது. தோட்டத்தினைச் சுற்றி பல அறைகள். அதிலே சில கன்னடக் குடும்பங்கள் வசிக்கிறார்கள். வீட்டிற்குள் நுழைந்து தோட்டத்தின் வழியே சென்றபின் பத்து-பன்னிரண்டு படிகள் மேலேறிச் சென்றால் ஒரு அறையில் ஆஞ்சனேயர் கோவில் கொண்டிருக்கிறார்.




ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் க்ரந்தம் எழுத 
பக்கத்திலே நின்றிருக்கும் ஆஞ்சனேயர் ஓவியம்




அந்த அறையிலேயே ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் கிரந்தங்களை எழுத, பக்கத்திலே ஹனுமான் இருந்தது போலே ஒரு ஓவியத்தினை வரைந்து வைத்திருக்கிறார்கள். பாவபோத ஆஞ்சனேயரின் சிலையையும் ஓவியமாக வடித்து வைத்திருக்கிறார்கள். கோவிலில் காலை நேரத்தில் மட்டும் பூஜைகள் செய்துவிட்டு அர்ச்சகர் சென்று விட மற்ற நேரங்களில் கோவில் பூட்டியே இருக்கிறது. அறையின் உள்ளே சென்று, பூட்டியிருக்கும் கம்பிக் கதவுகளின் வழியே ஆஞ்சனேயரை தரிசிக்க முடியும். ராமநவமி, ஹனுமத் ஜெயந்தி போன்ற விசேஷ தினங்களில் சிறப்பான பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறதாம்.




திருவரங்கம் கோவில் பிரணவாகார விமானம்






வெள்ளை கோபுரம்




கோவிலின் வெளியே வந்து, இன்னும் சில படிகள் மேலே ஏறிச் சென்றால், அங்கிருந்து இப்போதும் வெள்ளை கோபுரத்தினையும், அரங்கனின் பிரணவாகார விமானத்தினையும் நன்றாக பார்க்க முடிகிறது.

கீழே ஒரு வீட்டில் குடியிருக்கும் நபர் ஒருவர் கோவிலின் பழமையைப் பற்றிச் சொன்னது மட்டுமல்லாது மிகவும் பழமையான ஒரு புகைப்படத்தினையும் தந்தார்.  தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் இருந்த ஒரு வீடு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலமாக பூட்டப்பட்டு கிடக்க, சமீபத்தில் அந்த வீட்டினை திறந்து சுத்தம் செய்தபோது அங்கே இருந்த புகைப்படங்களை அருகில் உள்ள வீடுகளில் கொடுத்து இருக்கிறார்கள். அதில் ஒரு புகைப்படம் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தருடையது. அந்தப் புகைபடத்தினை எடுத்து வந்து மீண்டும் சில நகல்கள் எடுத்து வைத்து எல்லோருக்கும் தருவதாகவும் சொன்னார் அந்த நபர். அந்தப் படம் தவிர வெள்ளிக் கவசம் அணிந்த பாவபோத ஆஞ்சனேயர் படமும் இன்னும் சில படங்களும் அளித்த அந்த நல்ல மனதுக்கு நன்றி கூறி அங்கிருந்து விடைபெற்றேன்.

இக்கோவில் பற்றிய தகவல் அளித்து நான் அங்கே சென்று வர காரணமாகயிருந்த திரு கோபாலகிருஷ்ணன், தில்லி அவர்களுக்கு என மனமார்ந்த நன்றி.

மீண்டும் வேறொரு கோவில் பற்றிய பகிர்வுடன் உங்களைச் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



குறிப்பு 1: படங்கள் எடுத்தது.....  நாந்தேன்!
குறிப்பு 2: இப்பகிர்வு இந்த வருடத்தின் நூறாவது பதிவு. தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.

24 கருத்துகள்:

  1. ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேயரின் சிறப்பு தகவலுக்கும், படங்களை அளித்தவருக்கும் நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேயர் கோவில் பற்றிய தகவல் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  3. புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    இதோன்னு கிளம்ப ரெடியா இருக்காரே நம்ம நேயடு!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  4. படங்களும், விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள், ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

      நீக்கு
  5. எனது உள்ளம் கவர்ந்த ரங்கனை பல முறை சேவிக்க சென்று இருக்கிறேன்..ஆனால் தாங்கள் கூறியுள்ள ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேயர் கோவிலுக்கு சென்றதில்லை. ..புதிய செய்தி...மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாஜி!

      நீக்கு
  6. நல்ல பகிர்வு. ஸ்ரீரங்கம் கோபுரம் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேயரின் சிறப்புகள் அறிந்துகொண்டோம்.

    இந்த வருடத்தின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  8. 100 வது பதிவுக்கு வாழ்த்துகள் !

    ஸ்ரீ பாவபோத ஆஞ்சநேய ஸ்வாமி தரிசனம் கிட்டியது. ரொம்பவே மகிழ்ச்சி. நிறைய தகவல்கள் தந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  9. அருமையான படம். ஆஞ்சநேயர் கண்முன்னே நிற்கிறார் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  10. நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் வெங்கட்.. இந்த வருட முடிவுக்குள் ஐந்நூறு பதிவுகளுக்கு வாழ்த்துகிறேன்.. :‍))..ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேயர் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

      ஐந்நூறு பதிவுகளுக்கு இன்னும் 29 பாக்கி இருக்கிறது! இந்த வருடத்திற்குள் அடைந்து விடுவேன் என நினைக்கிறேன்! :)

      நீக்கு
  11. ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேயரின் படங்கள் அவரைப்பற்றிய செய்திகள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. பாவபோத கிரந்தத்தில் எழுதப்பட்ட விஷயம் என்ன தெரியுமா சகோ... இன்னும் அன்னூல் வழக்கத்தில் உள்ளதா?

    'நாந்தேன்' என்றது வீட்டம்மா ஊரை ஞாபகப் படுத்துகிறது.

    இந்த ஆண்டின் நூறாவது பதிவுக்கு மகிழ்வான வாழ்த்துக்கள்.மேலும் பெருகட்டும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரந்தத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பது தெரியவில்லை சகோ. தெரிந்தவர்களிடம் கேட்டு தான் சொல்லவேண்டும்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....