தொகுப்புகள்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

ஃப்ரூட் சாலட் – 58 – சுதந்திரம் – ரோஜா - தனிமை



இந்த வார செய்தி:

சஞ்சீவ் சச்தேவா – தனது 20 வயதிலிருந்து தசை பிரச்சனைகளால் நடக்க முடியாது போக சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொள்ள வேண்டிய நிலை.  எங்கு செல்ல வேண்டுமானாலும் மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டிய சூழல். ஒரு ஒன் பாத்ரூம் போகணும்னா கூட வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு ஒருவர் கொண்டு விட வேண்டும் எனும் நிலை.  இதையெல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்தது 27 ஜுன் 2011....  [அட 27 ஜூன்..... என் பிறந்த தேதி!].

அன்று தான் இவர் ஒரு பேட்டரி மூலம் இயங்கக் கூடிய சக்கர நாற்காலியை வாங்கினாராம். அதிலிருந்து எங்கு செல்ல வேண்டுமானாலும் தன்னால் தனியாக செல்ல முடிகிறது என சந்தோஷத்தோடு சொல்கிறார். ஒரு முறை CHARGE செய்து கொண்டால் ஐந்து மணி நேரம் வரை பயணம் செய்ய முடிகிறது என்பதால் சுலபமாக நினைத்தபோது மெட்ரோவில் பயணம் செய்து தில்லியில் பல இடங்களுக்குச் சென்று வரும் இவரும் இவரைப் போன்ற 15 மாற்றுத் திறனாளிகளும் சேர்ந்து WHEELCHAIR FLYING CLUB என்ற ஒரு அமைப்பினை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் சென்ற சுதந்திர தினம் அன்று தங்களது சக்கர நாற்காலிகளில் இந்தியா கேட் பகுதிக்கு தானாகவே வந்து தங்களது சுதந்திரத்தினைக் கொண்டாடியுள்ளார்கள்.  இந்த வருடமும் சில இடங்களுக்கு சென்று வந்து இருப்பதைப் பகிர்ந்து கொள்ளும் போது அவர்களது முகத்தில் தெரியும் மகிழ்ச்சி....  அளவிற்கரியது.....

சுதந்திரமாய் காற்றை ஸ்வாசிக்கும் இவர்களைப் போலவே மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்த சுதந்திரம் கிடைக்கட்டும்.  செய்தியை ஹிந்து நாளிதழின் வலைத்தளத்தில் படித்த போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

இந்த வார முகப்புத்தக இற்றை:


DON’T FORCE ANY ONE TO LOVE YOU. FORCE THEM TO LEAVE YOU….. AND WHOEVER INSISTS TO STAY IS THE ONE WHO TRULY LOVES YOU!

இந்த வார குறுஞ்செய்தி

DON’T LET NEGATIVE AND TOXIC PEOPLE RENT SPACE IN YOUR HEAD FOR THEIR SELFISH ATTITUDE. RAISE THE RENT AND KICK THEM OUT FROM YOUR HEAD…..

ரசித்த காணொளி: 

சில விளம்பரங்களைப் பார்க்கும் போதே மனதுக்குப் பிடித்து விடும்.  ஐடியா மொபைலின் சில விளம்பரங்களைப் போல! அவர்களது நெட்வொர்க் வேலை செய்யுமா செய்யாதா என்பது வேறு விஷயம்! அதே போல இந்த விளம்பரம் பார்த்த உடன் பிடித்துப் போன ஒரு விளம்பரம்.  பாருங்களேன்! 


 


ரசித்த பாடல்:

ரோஜா படத்திலிருந்து “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றதுபாடல் நான் ரசித்த பாடல்களில் ஒன்று. இதோ உங்கள் ரசனைக்கு.... அந்த வெள்ளைப் பனிமலையில் வீழ்ந்துவிடமாட்டோமா என்று தோன்றும் பல சமயங்களில்....



ராஜா காது கழுதை காது:

நேற்று ஒரு இசை விழாவிற்குச் சென்றிருந்தேன். கார்த்திக் ஞானேஸ்வர் எனும் இளைஞர் சென்னையிலிருந்து வந்து பாடல்கள் பாடினார். மிகச் சிறப்பாக பாடினார். எனது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பல்லில்லாத பாட்டி, மேடைப் பக்கத்திலிருந்து வருபவர்கள் அனைவரிடமும் சொன்னது “புரந்தரதாசரோட புரந்தர விட்டல் பாட்டு பாடச் சொல்லும்மா......  சொல்லுப்பா...ஒருவரும் சொல்லாதுவிட, அவரே சத்தமாக புரந்தர விட்டலா எனப் பாட ஆரம்பித்து விட, பாடகரும் பாண்டுரங்கா விட்டலா எனப் பாடி அவரை சந்தோஷப் படுத்தினார். பாண்டுரங்கா கோஷம் அதிகமாக அதிகமாக, பாட்டி அப்படியே இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்கிவிட்டார். பாட்டிக்கு எவ்வளவு வயசு இருக்கும்னு நினைக்கறீங்க? ரொம்ப அதிகமில்லை...  90 வயசு தான்!   

படித்ததில் பிடித்தது!:

உறவு என்பது வெப்பம். தனிமை குளிருக்கு எதிராய், இதமாய் கிடைத்த வெப்பம். பனி நேரத்தில் நெருப்பு மீட்டி சுற்றி உட்கார பேசாது பாடாது இருக்க முடியாது. குரல் எழுப்பாமல் இருக்க இயலாது.

ஆனால் குளிர் பழகியவனுக்கு, குளிரே சுகம் என்பவனுக்கு பேசத் தோன்றியதில்லை. தானும் தன்னில் உணரும் குளிரும் அவனை இறுக்கமாக்கி விடுகின்றன. _______ தனிமைக் குளிர் பழகியவன். இளமையிலிருந்தே அந்த சுகம் தெரிந்தவன். இடையே பன்னிரண்டு வருடங்கள் அது பழக்கமாகி, பழக்கம் சாதாரணமாகவும் போய்விட்டது. இரண்டு மூன்று நாட்கள் யாரோடும் எது பற்றியும் பேசாது இருந்ததுண்டு. எந்த வன்முறையும் மனசுள் இல்லாமல், கட்டாயமில்லாமல் மௌனமாய் இருந்ததுண்டு.” 

இப்படிப் பட்ட தனிமையை அனுபவித்தது உண்டா?.....  அது சரி இந்த வரிகள் ஒரு நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. நாவலின் பெயரோ, எழுத்தாளர் பெயரோ சொல்ல முடியுமா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
  
என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

58 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  3. அருமையான காணொளி, அருமையான பாடல். ரசித்தேன். நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

      நீக்கு
    2. Dear kittu,

      Indraya kuruncheidhi arumai.

      Varigal Balakumaranudaiyadhu yendru ninaikkiren.

      நீக்கு
    3. சாலட் மிக மிக அருமை
      காணொளி இறுதிக் காட்சி
      கண்கலங்கச் செய்தது
      மனம் கவர்ந்த பதிவு
      வாழ்த்துக்கள்

      நீக்கு
    4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
    5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
    6. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  4. சுதந்திரமாய் காற்றை ஸ்வாசிக்கும் இவர்களைப் போலவே மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்த சுதந்திரம் கிடைக்கட்டும்.//


    ஐடியா மொபைலின் காணொளி ரசிக்கவைத்தது ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி ஐடியா மொபைலின் காணொளி அல்ல...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  5. திரும்பவும் DeccanAirways வந்து விட்டதா?
    விளம்பரத்தை மிகவும் ரசித்தேன் .
    ரோஜா பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. கேட்டுக் கொண்டே தான் கருத்து எழுதுகிறேன்.
    நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய விளம்பரம் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  6. நாங்கள் காஷ்மீர் சென்ற போது குல்மார்க்கில் புது வெள்ளை புயல் அடித்து பாட்டு பாட முடியாம போச்சு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

      நீக்கு
  7. ரொம்ப அதிகமில்லை... 90 வயசு தான்! //

    இப்பல்லாம் இந்த வயசுல இருக்கறவங்கள நிறைய பேர பாக்க முடிகிறது. கலைஞருக்கும் 90 ஆகிவிட்டதே! எவ்வளவு ஆக்டிவ்வா இருக்கார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி...

      நீக்கு
  8. ஃப்ரூட் சாலட்டில் அந்தக் கனிந்த பழத்தை.. அதான் பாட்டியை மிகவும் ரசித்தேன் :-)

    மற்ற அயிட்டங்களும் இனிமையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. இல்லை...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா....

      நீக்கு
  10. மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைத்த சுதந்திரம் மனதை தொட்டது.
    விளம்பரமும் அருமை.
    தனிமை பற்றி பேசியிருப்பது பாலகுமாரன்? லா.ச.ரா? தி.ரா?
    கழுதைக் காதில் வரும் பாட்டிக்கு 9௦ வயதில் இத்தனை நன்றாக காது கேட்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலகுமாரன் தான்.. கதை - ஸ்நேகமுள்ள சிங்கம்....


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

      நீக்கு
  11. இனிப்பான,குளிர்ச்சியான பழக்கலவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  12. // அவர்களது நெட்வொர்க் வேலை செய்யுமா செய்யாதா என்பது வேறு விஷயம்!// ஹா ஹா ஹா ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

      நீக்கு
  13. //அவர்களது நெட்வொர்க் வேலை செய்யுமா செய்யாதா என்பது வேறு விஷயம்! அதே போல இந்த விளம்பரம் பார்த்த உடன் பிடித்துப் போன ஒரு விளம்பரம். பாருங்களேன்! //

    பார்த்தேன், ரஸித்தேன். நல்லாயிருந்தது. நன்றி வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  14. ரோஜா பாட்டு என் ஆல்டைம் ஃபேவரிட். அப்புறம் மாற்று திறனாளிகளுக்கு என் சல்யூட். ராஜா காது இல்ல ராணி காதுதான் இங்க கிரேட்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  15. முதல் தகவல் கம்பீரம்!

    விட்டலைனை போற்றித் துதிக்காத பஜனை நிறைவுறுவதில்லை.

    எனக்கும் பாலகுமாரன் தானோ எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  16. அலுவலக வராந்தாவில் மாற்றுத் திறனாளிகள் சிலபேர் தங்கள் மின்விசை சக்கர நாற்காலியில் நம்மை முந்தி சல்லென்று செல்லும் போது அவர்களுக்கும் சந்தோஷம். நமக்கும் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  17. முதல் செய்தி சந்தோஷம் தந்தது. எல்லாச் செய்திகளுமே சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  18. பழக்கலவை பிரமாதம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
  19. சாலட் சிறப்பு அண்ணா....
    புதுவெள்ளை மழை எனக்கு மிகவும் பிடித்த பாடல்... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

      நீக்கு
  21. காணொளி, பாடல், தகவல்கள் என அனைத்தும் சுவைத்தன.
    பாட்டியின் ரசனை மகிழ்ச்சி தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  22. ஃப்ரூட் சாலட் – 58 – சுதந்திரம் – ரோஜா - தனிமை - பதிவில்

    இந்த வார செய்தி:சூப்பர்

    ரசித்த காணொளி: டாப்பு நைனா

    ரசித்த பாடல்:நல்லா இருக்கு மாமு

    ராஜா காது கழுதை காது: அருமைப்பா


    விஜய்/டெல்லி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  23. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  24. காணொளி அருமை.

    பாடல் பகிர்வும் நன்றாக இருக்கிறது.
    சாலட் சுவையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  25. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  26. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....