தினம் தினம்
அலுவலகத்திற்கு செல்லும்போது, வெளியே சுற்றும்போதும் பல காட்சிகளைப் பார்க்கிறோம்.
அப்படி பார்க்கும் காட்சிகளில் பல ரசனையானவை. அப்படி ரசித்துப் பார்த்த சில
காட்சிகளை அவ்வப்போது வெளியிட நினைத்திருக்கிறேன். அப்படி ரசித்த காட்சிகளில்
முதல் காட்சியாக இன்று இதோ ஒரு இளம் யுவதியை பற்றிய காட்சி.....
மெட்ரோ ரயில்
நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தேன். அருகிலேயே ஒரு யுவதி - பதினெட்டு
வயது இருக்கலாம் – கூடவே நடந்து வந்து கொண்டிருந்தாள். ‘தலையைக் குனியும் தாமரையை’ போல குனிந்த தலை நிமிர வில்லை.
இப்போதைய பழக்கமான முதுகுச் சுமையோடு இருந்தாள். என் நடையோடு போட்டி போட்டு ஒரு
நடை. அட ரொம்ப நேரமா நம்ம கூடவே நடந்து வராளேன்னு திரும்பி பார்த்தேன். நடந்து
கொண்டே கார் ஓட்டிக் கொண்டிருந்தாள்.
சாலையில் மேடு பள்ளம், தடைகள் என எல்லாவற்றையும் அநாயாசமாக தாண்டியது கார் – அவளது
கை விரல்களின் வழியே. அந்தக் கார் மட்டுமல்ல, அவளும் தான் - வழியில் இருக்கும்
படிகளில் ஏறி இறங்கி சாலைக்கு வந்து தன் வழியே, என் அருகிலேயே நடந்து வந்து
கொண்டிருந்தாள் – கார் ஓட்டிய படியே. எதிரே வருபவர்கள் தான் அவள் மீது முட்டிக்
கொள்ளாது தள்ளி நடக்க வேண்டும். முட்டி விட்டாலும் கவலை இல்லை போல!
அப்படி எதிரே வந்த ஒரு பெண்மணியின் தோள் பட்டை இந்த யுவதியின் தோள்பட்டையில்
உரச, கைவிரல்கள் சற்றே அதிர, அவள் நடந்தபடியே ஓட்டிக்கொண்டிருந்த கார் ஒரு
தடைக்கல் மீது மோதி தலைகீழே திரும்பிய தவளை போல ஆனது.
அவள் வாயிலிருந்து “ஷிட்” என்றதோர் கூச்சல். இதுவரை
பேசாது அவள் கூடவே [என் வழியும் அவள் வழியும் ஒன்றுதான்!] நடந்து, அவளின்
விரல்களின் ஓட்டத்தை ரசித்து வந்த நான் “நடு ரோடுல எல்லாம் கக்கா போகக் கூடாது
கண்ணு!” என்று சொல்ல, தலையைக்
குனிந்து வந்த தாமரை மேலே பார்த்தது.
”ஓகே அங்கிள்” எனச் சொல்லி கைவிரலாலே அவளது டச்
ஸ்க்ரீன் மொபைலில் கார் ஓட்டும் பணியை தொடர்ந்தாள் அந்த யுவதி. நானும் மனதில்
நினைத்தபடியே – அட அந்த பெண்ணைப் பற்றி நினைக்கலை – இந்த மொபைல் மோகம் பற்றி
நினைத்தபடியே எனது இலக்கை நோக்கி நடந்தேன்.
மீண்டும் வேறொரு சுவாரசியமான காட்சியோடு உங்களைச் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
ரசனையான கார் ஓட்டும் பணி..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குபின்னாளில் விபத்துகள் அதிரிக்க இதுவும் ஒரு காரபமாக இருக்கலாம்... உண்மையிலேயே சுவாரஸ்யம் தான்...
பதிலளிநீக்குபல விபத்துகளுக்கு இது காரணமாகவும் இருக்கிறது.......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை. சரவணன்.
ஐடியா சூப்பர்! உலகம் முழுசும் விதவிதமான ரசனைகள்தான்.!
பதிலளிநீக்குநாம் கண்ணைத்திறந்து வச்சுக்கிட்டால் போதும். தானாய் வந்து விழும்.. ஐடியாவைச் சொல்ரேன்:-))
தானாய் வந்து விழும்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
எப்படி இந்தப் பிள்ளைகளுக்குப் புரியவைப்பது
பதிலளிநீக்குஇதன் பின் இருக்கும் விளைவுகள் பற்றி ?
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 2
பதிலளிநீக்குதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குசாலையில் கவனமற்று மொபைலில் மூழ்கிப் போகிற மோகம் பல நேரங்களில் விபத்துகளுக்கும் காரணமாகின்றன. சுவாரஸ்யமான பகிர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குநான் பவுன்ஸ் பால் விளையாட்டுக்கும், ஸ்னேக் விளையாட்டுக்கும் அடிமை. நேரம் காலம் கிடையாது விளையாட!!
பதிலளிநீக்குரோடுல போகும் போது விளையாடாதீங்க..... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
இங்கே பலமுறை நான் இடி வாங்கி இருக்கிறேன், ரோட்டிலும் மொபைலில் சாட் செய்பவர்களிடம் இருந்து....என்ன செய்ய அண்ணே மொபைல் மோகம் யாரையும் விட்டு வைக்கவில்லை போலும்...!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.
நீக்குசுவைபட எழுதியுள்ளதை ரஸித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குநான் என்னமோன்னு நினைச்சேன்! :))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஹேப்பா வெங்கட். செம்ம சுவாரஸ்யமா சொல்லிக்கிட்டே போனீங்க... படிக்கும்போது. ஹுஹும் உங்களோடும் அந்த பெண்ணோடும் சேர்ந்து நாங்களும்ல கார் ஓட்டிக்கிட்டே வந்தோம்.. அந்தப்பெண் உதிர்த்த வார்த்தைகளை சமர்த்தா நீங்க அப்டி எல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க பாருங்க. அப்பாவுக்கே உரிய அந்த பொறுப்பான வார்த்தை... ஹாட்ஸ் ஆஃப்.. ஆமாம் அந்தப்பொண்ணு நல்லா தானே கார் ஓட்டிக்கிட்டே இருந்தா.. நீங்க தான் ப்ரமாதமா சொன்னீங்களேப்பா.. அப்புறம் பத்திரமா ஸ்கூல் போய் சேர்ந்தாள குழந்தை? :) ரசித்து வாசித்தேன்பா வெங்கட். அன்பு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎனது கிறுக்கல்களையும் ரசித்து வாசித்த உங்களுக்கு மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.
நீக்குமொபைல் மோகம் எப்போ தணியுமோ.
பதிலளிநீக்குகாதில்,கையில் இருக்கும் போது கண் குருடாகிவிடுகிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
நீக்குஹூம், இந்த மொபைலைக் கண்டு பிடிச்சது யாராம்? அவங்களைக் கட்டி வைச்சு உதைக்கணும். :)
பதிலளிநீக்குகட்டி வைச்சு உதைக்கணும்.... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..
ஹா ஹா ஹா செம போங்க.... என்னடா லூசா இருப்பா போலன்னு நினைச்சேன் .. கொஞ்சம் ஸ்மாடான லூசு போல :-)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.
நீக்குஅவங்க லூசு இல்லைப்பா.... மத்தவங்களை லூசாக்கிடுவாங்க! :)
ரசனைகள் பலவிதம்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குரசித்தேன். காலம் என்னவெல்லாம் செய்கிறது?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்குஹா ஹா ஹா ... கண்முன் அந்த காட்சி தோன்றியது ...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.
நீக்குநடந்து கொண்டே கார் ஓட்டிக் கொண்டிருந்தாள்.//
பதிலளிநீக்குபடமும். செய்தியும் அருமை..
நமக்கு தான் இப்படி சாலையில் போகும்
போது இவர்கள் விளையாடுவது
பயமாய் இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குமற்றவர்களைப் பற்றி கவலையில்லாமல் இன்றைக்கு எல்லோருமே இப்படித்தான் 'விளையாடுகிறார்கள். தொழில் நுட்ப முன்னேற்றத்தை எண்ணி மகிழ்வதா? சரியான முறையில் பயன்படுத்த தெரியாதவர்களின் கையில் குரங்கு கைப் பூமாலையாக தொழில்நுட்பம் படும்பாட்டை எண்ணி வருந்துவதா?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....
நீக்குநன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஉங்கள் மனைவி ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார்களோ? சும்மா தான் கேட்டேன்!
//உங்கள் மனைவி ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார்களோ? சும்மா தான் கேட்டேன்!//
நீக்குஆஹா... போட்டுக் கொடுத்துட்டீங்களே! :)))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
படமும் செய்தியும்அருமை. இன்றைய நிலைமையினைஅப்படியே படம் பிடித்திருக்கிறீர்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குDear Kittu,
பதிலளிநீக்குYendru thaniyum Indha mobile phone in dhagam. ?
தணியாது இந்த மோகமும் தாகமும்.... அடுத்து ஒன்று வரும்வரை...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
ஆஹா :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.....
நீக்குநலம் தானே?
athu sari....!!
பதிலளிநீக்குnantri anne...!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குமஞ்சு சொன்னதையே நானும் ஆமோதிக்கிறேன்.அப்பாவுக்கே உரிய அந்த பொறுப்பான வார்த்தை... ஹாட்ஸ் ஆஃப்.// உண்மை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.....
நீக்கு