ஞாயிற்றுக்
கிழமைகளில் நான் எடுத்த புகைப்படங்களையோ அல்லது ரசித்த புகைப்படங்களையோ எனது
வலைப்பூவில் பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்த வழக்கத்தை கடந்த சில வாரங்களாக தொடர
முடியவில்லை. இன்று மீண்டும் ஒரு புகைப்படத் தேரோட்டம்.
சமீபத்தில்
சென்னையில் ஒரு திருமணத்திற்காக வந்தபோது எனது சித்தப்பாவும் பதிவருமான திரு ரேகா
ராகவன் அவர்களது வீட்டில் தான் தங்கினேன். அவரது பொழுது போக்கில் ஒன்று தோட்டத்தினைப்
பராமரிப்பது. அவரது வீட்டில் இருக்கும் பூச்செடிகளிலிருந்து சுட்ட [பூக்கள்]
படங்கள் இன்றைய ஞாயிறில் – உங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாய்.....
இதோ
பூக்கள்..... வாசத்துடன் உங்களுக்காக....
பாரிஜாதம்: இந்தப் பூவினை
பாரிஜாதம் என்று தான் சொல்கிறார்கள் – ஆனால் இணையத்தில் பாரிஜாதம் என்று தேடினால் பவளமல்லியைக்
காண்பிக்கிறது. பதிவர் கீதா சாம்பசிவம் கூட இதே பூவினை தனது ஒரு பதிவில்
குறிப்பிட்டு இருக்கிறார். :) சந்தேகம் தீர்த்து வைப்பவர்களுக்கு ஆயிரம் பூக்கள்
பரிசு!
செம்பருத்தி: ”இந்த பேர்ல ஒரு சினிமா படம் வந்தது – அதுல ரோஜா நடிச்சாங்க” அப்படின்னு உடனே சொல்லக் கூடாது! இந்த
பூவிற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொல்வார்கள். இரத்த அழுத்தம், முடி
உதிர்தல், இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு செம்பருத்தி ஒரு அருமருந்து.....
செவ்வரளி: ”செவ்வரளி தோட்டத்திலே உன்னை நினைச்சேன்” அப்படின்னு ஒரு பாட்டு
கேட்டுருக்கீங்களா? கேட்க நல்லா இருக்கும்....
:)
விருட்சிப் பூ: இட்லி பிரியர்களுக்கு இந்த பூவையும் பிடிக்கலாம் –
ஏன்னா இதை இட்லிப் பூ என்றும் சிலர் சொல்வார்கள்......
கனகாம்பரம்: நெய்வேலியில் இருந்தவரை எல்லா நாட்களும் பூக்கள்
வாசம் தான். கனகாம்பரம் செடிகள் – ஒவ்வொரு செடியிலும் வேறு வேறு வண்ணங்களில்
கனகாம்பரம் பூ பூக்கும். தொடுத்து
வைத்தால் பார்க்கவே அழகு. அதுவும் பெண்களின் தலையில் அடர்த்தியாகத் தொடுத்த அந்த
பூக்களை வைத்துக் கொண்டால் பேரழகு....
இப்பல்லாம் கிடைக்குதோ தமிழகத்தில்?
என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் பூக்களின் வாசம் புறப்பட்டதா?
மீண்டும் சந்திக்கும் வரை......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
முதல்படம் அடுக்கு நந்தியாவட்டை .
பதிலளிநீக்குமற்ற எல்லா பூக்களும் அழகு.
இப்பல்லாம் கிடைக்குதோ தமிழகத்தில்?//
கிடைக்கிறது.
பலவண்ணத்தில் இப்போது தமிழகத்தில் கிடைக்கிறது,
கனகாம்பரம், பச்சை கலரில் என் தங்கை வீட்டில் இருக்கிறது,
அப்புறம் டெல்லி கனகாம்பரம், எல்லாம் எப்போதும்
பூத்துக் கொண்டு இருக்கிறது..
பூக்கள் படங்கள் எல்லாம் மிக அழகு.
இந்த பூ அடுக்கு நந்தியாவட்டை இல்லைம்மா.... பார்ப்பதற்கு அது போலவே இருக்கிறது. ஆனால் அது இல்லை!
நீக்குகனகாம்பரம் பற்றிய தகவலுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
அருமையான படங்கள்.... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.
பதிலளிநீக்குரசிக்க வைக்கும் மலர்கள்...
பதிலளிநீக்குதலைப்பு - அருமையான பாடல் வரியும் கூட...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குமனம் நிறைக்கும் மலரின் வாசம்..
பதிலளிநீக்குபடங்கள் கண்களை நிறைத்து நிற்கின்றது...
அத்தனை படங்களும் பிக்சர்போஸ்ட் கார்ட் போல அருமையாக தத்ரூபமாக இருக்கிறது.
உண்மையில் நீங்கள் கைதேர்ந்த போட்டோ க்ராபர் தான். உங்கள் படக்கருவியும் சூப்பர்!
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே!
த ம.3
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குபுகைப்படத் தேரோட்டம். ரசிக்கவைத்தது.. பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குபாரிஜாதம் பரவசம் தந்தது, பார்க்க!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குஅத்தனையும் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
நீக்குகண்கொள்ளா காட்சி.. எனக்குத் தெரிந்து பாரிஜாதம் என்றால் பவழமல்லியைத்தான் சொல்வார்கள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்.
நீக்கு# சந்தேகம் தீர்த்து வைப்பவர்களுக்கு ஆயிரம் பூக்கள் பரிசு!#
பதிலளிநீக்குஇருக்கும் போதா ...அல்லது ....?சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் பாஸ் !
படங்கள் அருமை !
இருக்கும்போதே.... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
வாசமிகு பூக்கள் வழங்கியதற்கு நன்றிகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!
நீக்குபாரிஜாதப் பூவுக்கு என் பாடல் சிபாரிசு : "பாரிஜாதம் பகலில் பூத்தது..."
பதிலளிநீக்குபாரிஜாதம் பகலில் பூத்தது... - கேட்டு விட வேண்டியது தான்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
Dear Kittu,
பதிலளிநீக்குOvoru pookalume solgiradhe....kittuvin pugaipada kaivannathai.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குஅனைத்தும் அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஇந்தப் பூப் பூக்கும் செடி எங்க வீட்டிலேயும் இருந்தது. இது அடுக்கு நந்தியாவட்டை அல்ல. அதுவும் எங்க வீட்டிலே இருந்தது. இதற்கு மணமும் உண்டு. ஒரு சிலர் பிரம்ம கமலம் என்றும் சொன்னார்கள். ஆனால் பொதுவாகப் பூக்காரங்க கிட்டேக் கேட்டதுக்குப் பாரிஜாதம் என்றே சொன்னார்கள். பவளமல்லி வேறு, பாரிஜாதம் வேறுனும் சொல்கிறார்கள். பருத்திப் பூவோனு கூட நினைச்சோம். ஆனால் அப்புறம் காய்க்கலை. அதனால் பருத்திப் பூ இல்லைனு தெரிஞ்சது. அடுக்கு நந்தியாவட்டையை விட இது பெரிதாகவும் இருக்கும்.
பதிலளிநீக்குஇங்கேயும் அடுக்கு நந்தியாவட்டை இருந்தது.... பிரம்ம கமலம் - உங்கள் பதிவிலும் படித்தேன்....
நீக்குபார்க்கலாம் என்ன பூன்னு யாராவது சொல்றாங்களான்னு....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
எங்க வீட்டுப் பாரிஜாதப் படம் முன்னே போட்டதையும், பிரம்மகமலம்னு சொல்றதையும் பதிவிலே பகிர்ந்துக்கறேன். :))))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..
நீக்குசிரிக்கும் மலர்கள்! செம்மை கலர்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா....
நீக்குகனகாம்பரம் பூ இப்பவும் கிடைக்குது, ஆனா, அதுலாம் பட்டிக்காட்டு பொண்ணுங்கதான் வச்சுக்குவாங்கன்னு நம்ம பசங்க நம்ப ஆரம்பிச்சுட்டதால அந்த பூவை யாரும் வைச்சுக்குறதில்ல
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குஐ - அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி.
நீக்குமயக்கும் பூவாசம் அருமை. அழகிய படங்கள்.
பதிலளிநீக்குgardinia என்னும் பூ நல்ல நறுமணம் உடையது முதல்படம் அது என்றே நினைக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குநம்ம ஊர் தோட்டக்கலைத் துறையில் கூட முதல் பூவை பாரிஜாதம்ன்னு தான் சொல்றாங்க. அடுக்கு நந்தியாவட்டையை விட இருமடங்கு பெரியது விரிந்தால். மயக்கும் நறுமணமும் உண்டு. செடியில் விட்டு வைத்தால் 3 நாளுக்கு வாடாது.
பதிலளிநீக்குசெம்பருத்திப்பூ இருமலுக்கா?! எப்படிப் பயன்படுத்தணும்?
அந்தக்காலப் போர்முறையில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என ஒவ்வொரு கட்டத்துக்கும் வீரர்கள் இத்தகைய மலர்களைச் சூடிச் செல்வார்களாம். 'ஆநிரை கவர்தல்' எனும் முதல் கட்டத்துக்கு 'வெட்சி' என்று பெயர். அதுதான் இந்த விருட்சிப்பூ.
பச்சைக் கனகாம்பரம் இங்கே பரவலாக காண முடிகிறது. தொடுத்து வைத்துக் கொள்ள ஆளில்லை.
தங்களது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி நிலாமகள். மருத்துவக் குறிப்புகளோடு ஒரு பதிவு எழுதிடுவோம்! :)
பதிலளிநீக்குபூ வாசம் மிக்க பதிவை படித்து வாசனையையும் பிடித்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நீக்குgardenia flower
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோபி கோபி.
நீக்குஎங்க வீட்டிலேயும் பவள மல்லி மரம் பாரிஜாதம் செடி இருக்கின்றன, ஆனால் இன்றுதான் நான் குழம்பியுள்ளேன் எதற்கு, என்ன பெயர் என்று!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வனிதா.....
நீக்குஅது பாரிஜாதம் தான்.சந்தேகம் வேண்டாம் சகோதரரே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயலக்ஷ்மி ஜி!
நீக்குmuthali kaatiya poo & adukku nanthiyavattam aagiyavai en veetil ullathu .pookadiyil paarijatham enruthan koorinarkal
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தர்மராஜா ஜி!
நீக்குஇப்பூவானது மல்லிகையினைப் போன்று மிகுந்ந நறுமணத்துடன் காணப்படின் இது வடமொழியில் "கந்த்ராச்" என அறியப்படுகிற காபி செடிக் குடும்பத்தைச் சேர்ந்தப் பூச்சேடியாகும். இதன் குடும்பத்தின் அறிவியல் பெயர் "Gardenia" என்பதாகும். நூறுக்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் மிக்க நன்றி சுரேஷ் ஜி!
நீக்குஉங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.
வணக்கம் ஐயா....இந்த மலர் பாரிஜாதம் தான். திக்க மல்லி, குடமல்லி எனப்படும் இப்பூவின் காம்பு பச்சையாக இருப்பதாலும் ஜாதிமல்லி மணத்தை ஒருசேரக்கொண்டிருப்பதாலும் மரகத பாரிஜாதம் என்பதே இதன் முழுமை.
பதிலளிநீக்குபவளமல்லிகை பவளப்பாரிஜாதம் என்றழைக்கப்படும். பவளமல்லிகை அதிகளவில் மக்களுக்கு பரிச்சயமானதால் அப்பெயர் மாத்திரம் நிலைத்துவிட்டது...
மலர் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே.
நீக்குமுதல் பூ பாரிஜாதம் தான் என்பதில் சந்தேகமே இல்லை. எல்லோருக்கும் இது பற்றித் தெரிந்தும் இருக்கிறது.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்கு