மே 1, 1919 அன்று பிறந்த பிரபோத் சந்த்ர டே… பின்னாளில் திரையுலகில் பின்னணிப் பாடகராக கொடிகட்டி பறந்த போது வைத்துக் கொண்ட பெயர் மன்னா டே….. சென்ற வாரத்தில் 93 வயதில் காலமானார். பிறப்பினால் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் என்றாலும், ஹிந்தி முதற்கொண்டு 16 இந்திய மொழிகளில் சினிமா பாடல்கள் பாடியவர். ஏன் மலையாளத்தில் கூட இரண்டு பாடல்கள் பாடியிருப்பதாக – செம்மீன் மற்றும் நெல்லு எனும் இரண்டு படங்களில் தலா ஒரு பாடல் பாடி இருக்கிறார்.
ஹிந்தியில் எண்ணற்ற பல பாடல்களைப் பாடி இருக்கும் இவரது பாடல்களில் ஒரு சில பாடல்கள் நான் விரும்பிக் கேட்ட பாடல்கள் – ரசித்த பாடல்கள். பாடல்கள் பாடுவது
மட்டுமல்லாது சிறு வயதிலேயே குத்துச் சண்டையிலும் சிறந்து விளங்கினாராம் மன்னா டே!
தனது திறமைக்கு அடையாளமாய் பத்மஸ்ரீ,
பத்மபூஷன் போன்ற பல விருதுகளைப் பெற்ற மன்னா டேயின் மனைவி சுலோசனா குமரன் –
கேரளத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு குழந்தைகள். தனது இசைப்பயணத்தை 1943-ஆம்
ஆண்டு வெளிவந்த “தமன்னா” படத்தின் மூலம் தொடங்கிய
மன்னா டே பல சிறப்பான பாடல்களை பாடி இருக்கிறார்.
சினிமா பாடல்கள் மட்டுமல்லாது ஹிந்துஸ்தானி பாடல்களும் பாடுவது இவருக்கு
பிடித்தமான ஒன்று.
சமீபத்தில் இவர் காலமானாலும்
இவரது பாடல்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவரது
பாடல்களில் – நான் ரசித்த பாடல்கள் சில உங்களின் ரசனைக்கும் இங்கே......
தில் தோ ஹே.... படத்திலிருந்து “லாகா சுன்ரி மே தாக்”
ஆனந்த் படத்திலிருந்து “ஜிந்தகி கைசி ஹே பெஹ்லி”
ஸ்ரீ 420 படத்திலிருந்து “தில் கா ஹால் சுனே தில்வாலா...”
அதே படத்தில் மன்னா டே, ஆஷா போன்ஸ்லே அவர்களுடன் இணைந்து
பாடிய பாடல் – “முட் முட் கே நா தேக் முட்முடுக்கே!”
”சல்தி கா நாம் காடி” படத்தில் சம காலத்திய பாடகரான கிஷோர் குமார்
அவர்களுடன் இணைந்து மன்னா டே பாடிய ”சம்ஜோ இஷாரே.... ஹாரன்
புக்காரே....”
”து ப்யார் கா சாஹர் ஹே..” பாடல் சீமா படத்திலிருந்து
என்ன நண்பர்களே, பாடல்களை
ரசித்தீர்களா?
மீண்டும் வேறொரு பகிர்வில்
உங்களைச் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.