எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, October 24, 2013

கிச்சு கிச்சு

சாலைக் காட்சிகள் பகுதி – 2

இளம் யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே.அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் நேரம். இருக்கும் ஆணிகளைப் பிடுங்கி முடித்து வெளியே வரும்போது மாலை 07.30 மணி. குளிர்காலம் ஆரம்பிக்க இருப்பதால் சீக்கிரமே இருட்டி விடுகிறது. ஜில்லென்று காற்று அடித்துக் கொண்டிருக்க சூழலை ரசித்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தேன். நடந்து வந்து கொண்டிருந்த சாலை – ரகாப்கஞ்ச் சாலை.

குருத்வாரா ரகாப்கஞ்ச் [வேற ஒண்ணும் இல்லை கொஞ்சம் விளம்பரம் – லிங்க்கில் இருக்கும் பதிவையும் படிக்க ஏதுவாய்!] இருக்கும் சாலை தான் ரகாப்கஞ்ச் சாலை. சாலையின் இருமருங்கிலும் புளிய மரங்கள். இப்போது தான் புளியம்பூக்கள் பிஞ்சுகளாக மாறி மரத்தில் தொங்குவது மட்டுமல்லாது கீழேயும் விழுந்து சாலை வழியே போகும் வாகனங்களின் சக்கரங்களில் மாட்டி நடுத்தெருவில் சட்னியாகின்றன. 

சிறு வயதில் நெய்வேலி வீட்டில் இருந்த புளியமரத்திலிருந்து புளியங்காய் பறித்து உப்பு, மிளகாய் வைத்து கல்லில் நசுக்கி வாயில் போட்டு சப்புக் கொட்டிய நினைவுகள் மனதில் வந்து போனது. சக்கரங்களில் நசுங்குவதற்கு முன் எடுத்து உண்ண நினைத்தாலும் சாலையில் செல்லும் மற்றவர்களைப் பார்த்து நினைவிற்குக் கடிவாளம் போட்டு நடந்து சென்று கொண்டிருந்தேன்.

மனதில் நினைவுகளை அசை போட்ட படியே சென்று கொண்டிருந்தபோது திடீரென யாரோ என்னை கிச்சு கிச்சு செய்வது போல தோன்றவே என்ன ஏது என யோசிக்க வேண்டியதாயிற்று. பக்கத்தில் யாருமில்லை – புளிய மரத்தினைத் தவிர.  சாதாரணமாகவே புளியமரத்தில் பேய் இருக்கும் என்பார்களே, ஒரு வேளை ஏதாவது பெண் பேய் என்னைக் கிச்சு கிச்சு மூட்டி பயமுறுத்துகிறதோ…..  கொஞ்சம் கலக்கம். ”தில்லியில் சாதாரணமா உயிருள்ள சிலரைப் [தலைவிரி கோலமாகச் செல்லும் பெண்களைச் சொன்னேன் என யாரும் சண்டைக்கு வந்துடக் கூடாது!] பார்த்தாலே பேய் மாதிரி தான் இருக்கு, இதில் நிஜப் பேய் வேற வந்து பயமுறுத்தணுமா?” என நினைத்தபடியே புளிய மரத்தினை அண்ணாந்து பார்த்தேன். எந்த சலனமும் இல்லை.

அப்போது தான் என்னைக் கடந்து சென்று இருசக்கர வாகனம் நினைவுக்கு வந்தது. ஒரு வேளை அந்த வண்டியில் இருந்தவர் ஏதாவது செய்திருப்பாரோ….. 

கடந்து சென்ற வாகனம் என்னைத் தாண்டி சென்று சற்றே இடைவெளிக்குப் பின் இருந்த ஒரு தேநீர் கடையில் நின்றது. வண்டியிலிருந்து வண்டியோட்டி இறங்கவும் நான் அங்கு செல்லவும் சரியாக இருந்தது. இறங்கியவரை சந்தேகத்தோடு பார்த்தேன் – சற்றே வயதான சர்தார் ஒருவர்.  தலையின் தங்க நிறத்தில் ஒரு பகடி [தலைப்பாக்கட்டு], ஆங்காங்கே அந்த பகடியை நிறுத்த மணிக்கொண்டை கொண்ட குண்டூசிகள் குத்தி அலங்காரம் செய்திருந்தார்.

சாதாரணமாக சர்தார்ஜிகள் தங்களது நீண்ட தாடியை SIMCO HAIR FIXER கொண்டு அழகாய் தாடையோடு ஒட்டி வைப்பார்கள். ஒவ்வொரு நாளும் சர்தார்ஜிகள் இந்த பகடி கட்டுவதற்கும் நீண்ட தாடியை தாடையோடு ஒட்டுவதற்கும் செலவு செய்யும் நேரம் நிறையவே. நான் பார்த்த தங்க நிற சர்தார்ஜிக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை போல! வயிறு வரை நீண்ட வெள்ளைத் தாடி. வண்டியை விட்டு இறங்கியவுடனேயே கை தானாக தாடியை நீவிவிடச் செல்கிறது.நீண்ட தாடி காற்றில் அசைந்து கொண்டிருந்ததைப் பார்த்த போது தான் எனது சந்தேகமும், பேயோ என நினைத்த நினைவும் தவறென்று புரிந்தது.  என்னைத் தாண்டியபோது என்னைக் கிச்சுக் கிச்சு மூட்டியது காற்றில் இரு பக்கமும் பறந்த அவரது வெள்ளைத்தாடி என்று!  இந்த விஷயம் புரிந்தவுடன் எனது முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை. அதைப் பார்த்த சர்தார்ஜியும் என்னை நேசத்தோடு பார்த்து ஒரு புன்னகை புரிந்தார் – அவரைப் பார்த்து நான் புன்னகைத்தேனோ என – கூடவே “சத் ஸ்ரீ அகால்” என பொதுவாக இரண்டு சர்தார்ஜிகள் பார்த்துக் கொள்ளும் போது சொல்வது போல என்னிடமும் சொன்னார். இதன் அர்த்தம் – கடவுளே உண்மையின் உச்சம்.  நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லி அங்கிருந்து புன்னகைத்தபடியே நகர்ந்தேன்.

மீண்டும் வேறொரு சாலைக்காட்சியோடு உங்களைச் சந்திக்கும் வரை……

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

42 comments:

 1. பழைய நினைப்பை அசை போட வைத்த சர்தாஜி வாழ்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 2. சாலைக்காட்சி மிக அருமை.
  “சத் ஸ்ரீ அகால்” அர்த்தம் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 3. நீங்கதானே பக்கத்து பிளாட்டுல சர்தார் முடி காயப்போட்டுட்டு இருந்ததை பார்த்து ஃபிகர்னு நினைச்சதுன்னு நினைக்கிறேன் ஹி ஹி...

  ReplyDelete
  Replies
  1. அதைப் பற்றி எழுதியது மட்டுமே நான். பெண் என நினைத்தது ஒரு கடலூர் வாசி - எனது அறை நண்பர்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 4. சுவாரஸ்யமான காட்சிகளைப் பதிவாக்கி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. சிறு வயதில் நெய்வேலி வீட்டில் இருந்த புளியமரத்திலிருந்து புளியங்காய் பறித்து உப்பு, மிளகாய் வைத்து கல்லில் நசுக்கி வாயில் போட்டு சப்புக் கொட்டிய நினைவுகள் மனதில் வந்து போனது....//

  எனக்கும் ..எனக்கும் வந்து இனிக்கவைத்தது நினைவுகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. கிச்சு கிச்சு பயணம் ரசிக்க வைத்தது... பயணம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

  சத் ஸ்ரீ அகால்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. விழுப்புரத்தின் அருகே விக்கிரவாண்டியில் வசித்த நாட்களில் சாலையோரப் புளியமரங்களிலிருந்து விழும் புளியங்காய்களைப் பொறுக்கித் தின்றதும், வயல்களில் கடலைச் செடிகளைப் பிடுங்கி (நிலஉரிமையாளர் பார்த்தால் கம்போடு துரத்துவார்) ஃப்ரெஷ்ஷாய் கடலை சாப்பிட்டதும் நினைவில் உலா வந்தது அதேமாதிரி சின்ன வயசுல சர்தார்ஜிக்களைப் பாரத்தாலே ரொம்பவும் பயம் எனக்கு. படத்தோட பல சுவாரஸ்யமான நினைவுகளை எனக்குள் எழுப்பிட்டீங்க...! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பார்க்க பயமாக இருந்தாலும், பல சர்தார்ஜிகள் மென்மையானவர்கள்...... பல நண்பர்கள் இருக்கிறார்கள்....

   உங்கள் நினைவுகளையும் இப்பதிவு தூண்டிவிட்டது என தெரிந்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ் அண்ணே!

   Delete
 8. அழகாகப் போஸ் கொடுக்கிறார்
  சர்தார்ஜி.
  புளியங்காய் பறிப்பு விஷயம் நம் போன்று
  கிராம சூழலில் வளர்ந்தவர்களுக்கு
  நிச்சயம் சுவாரஸ்யமான நினைவுகள்தான்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 9. Replies
  1. தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 10. சர்தார்ஜிகளின் தாடியும் , அந்த டிரெஸ்ஸிங்கும் ஒரு பய உணர்வு கொடுப்பது போல் எண்ணிக்கொள்வேன். எல்லா மனிதருள்ளும் ஒரு இனிமையான பக்கம் இருக்கத்தான் செய்கிறது... இனிமையான நினைவுகள் ... நன்றி

  ReplyDelete
  Replies
  1. உருவத்தினைப் பார்த்து எடை போடக் கூடாது என பல முறை படித்தாலும் அது ஏனோ சமயத்தில் நினைவுக்கு வருவதில்லை எழில்........

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 11. புளியங்காய்....நினைவுகள் மறக்கமுடியாதவை....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை நேரம் ஜீவா.

   Delete
 12. நினைவுகளையும், சில விடயங்களையும் தந்தது இந்த பதிவு .. இது போல் அடிக்கடி எழுதவும் ஸார்

  ReplyDelete
  Replies
  1. சத் ஸ்ரீ அகால்”ன்னு நம்ம கவுண்டமணிகிட்டேசொல்லி இருந்தா ...ஏண்டா நாயே ,என்னையே பார்த்து அந்த வார்த்தையை சொன்னேன்னு கேட்டிருப்பார் ...உங்களிடம் சொன்ன காரணம் ,எங்களுக்கும் தெரியட்டும் என்பதற்காகவா ?
   த.ம 6

   Delete
 13. அருமை. புளியங்காய் இன்று நினைத்தாலும் இனிக்கிறது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 14. சத் ஸ்ரீ அகால்”ன்னு நம்ம கவுண்டமணிகிட்டேசொல்லி இருந்தா ...ஏண்டா நாயே ,என்னையே பார்த்து அந்த வார்த்தையை சொன்னேன்னு கேட்டிருப்பார் ...உங்களிடம் சொன்ன காரணம் ,எங்களுக்கும் தெரியட்டும் என்பதற்காகவா ?
  த.ம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 15. Dear Kittu,

  Puliyangai, vuppu, milagai ....kalavai nakkil yechil voorugiradhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 16. மலரும் புளியங்காய் நினைவுகள்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 17. சுவாரசியமான அனுபவத்தை அழகாகப் பகிர்ந்துள்ளீர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 19. நானும் தலைப்பைப் பார்த்து அதிர்ந்தேன்.யாரோ ஒரு யுவதியின் தாவணி மேல் பட்டு கிசுகிசு மூட்டியதோ என்று?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

   Delete
 20. அவ்வளவு நீளமா தாடி இருக்கும்! வியப்பே!

  ReplyDelete
  Replies
  1. வயதான சர்தார்ஜி..... அவர்கள் முடியை வெட்டுவது கிடையாது புலவர் ஐயா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....

   Delete
 21. சர்தாஜியின் போட்டோவா அல்லது பழங்காலக் கோட்டையில் உள்ள ஓவியமா என்று நினைக்க வைக்கிறது. அவ்வளவு நுணுக்கம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....