நடனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 மார்ச், 2024

ஆதி மஹோத்சவ் 2024 - சில காணொளிகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

செவ்வாய், 16 அக்டோபர், 2018

சுற்றுலா பருவம் – ஒற்றைக் குழலும் இரண்டு குச்சிகளும்

விதம் விதமாய் நடனம் - பகுதி 5

பர்யாடன் பர்வ் – 2018 – தலைநகர் தில்லியில் கடந்த மாதம் 16-27 தேதிகளில் நடந்த ஒரு நிகழ்ச்சி. இந்திய அரசின் சுற்றுலாத் துறையினர் நடத்திய நிகழ்ச்சி. தலைநகர் தில்லியின் ராஜபாட்டையில் [ராஜ்பத்] நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்றாக ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் பல மாநிலங்களிலிருந்து நடனங்கள் நடந்தன.  அப்படி நடந்த நடனங்களை நான் எடுத்த நிழற்படங்களை சில பகுதிகளாக உங்களுடன் பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இதோ ஐந்தாம் பகுதியாக வடகிழக்கு மாநிலத்திலிருந்து ஒரு நிகழ்ச்சி. 

வியாழன், 11 அக்டோபர், 2018

சுற்றுலா பருவம் – கத்திச் சண்டை போட்ட பெண் - விதம் விதமாய் நடனம் – பகுதி 3





பர்யாடன் பர்வ் - 2018, ராஜ்பத், தில்லி...

தலைநகர் தில்லியில் நடந்த பர்யாடன் பர்வ் நிகழ்ச்சியில் நான் எடுத்த படங்களின் வரிசையில் இதோ மூன்றாம் பகுதி. ஹரியான மாநில நடனத்திற்குப் பிறகு வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து வந்த கலைஞர்கள் – அவர்களின் நடனம் துவங்குவதற்கு முன்னர் நடந்த கத்திச் சண்டையின் போது எடுத்த படங்கள் தான் இன்றைய பதிவில் – அந்த வீர மங்கையின் கைகளில் இரண்டு கத்திகள் – எதிரே இரண்டு ஆண்கள் – இருவர் கைகளிலும் ஒரு கத்தியும் ஒரு கேடயமும். இரண்டு ஆண்களும் பெண்ணைத் தாக்க அப்பெண் வீரத்துடன் தீரத்துடன் தனது கத்தியால் தடுப்பது தான் அந்த நிகழ்ச்சி – அப்படியே சில நிமிடங்கள் பார்ப்பவர்களின் மூச்சே நின்றுவிடும் அளவிற்கு அப்பெண்ணின் சாகசம். பறந்து பறந்து தாக்குவதும், அந்த ஆண்களின் தாக்குதல்களை சமாளிப்பதும் என்று அதிரடி ஆட்டம்.

ஆண்களும் பறந்து பல்டி அடித்து தாக்க, பெண்ணும் நான் உங்களுக்கு சளைத்தவள் அல்ல என்று பல்டி அடித்துத் தடுப்பதும் என சில நிமிடங்கள் அப்படியே பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்தார்கள். ரொம்பவே நன்றாக இருந்தது அவர்களது கத்திச்சண்டை நடனம். வேகம் வேகம் அப்படி ஒரு வேகம் அந்த பெண்ணின் ஒவ்வொரு அசைவும். கத்திச் சண்டை நடக்கும் அதே சமயத்தில் பின்புறத்திலிருந்து இசைக் கலைஞர்கள் விதம் விதமான மேளங்களில் ஒலி எழுப்பியபடியே இருந்தது கொஞ்சம் அதிகமான விறுவிறுப்பை உண்டுபண்ணியது என்றும் சொல்ல வேண்டும்.  இந்தப் புகைப்படங்களில் சில நன்றாக வந்திருந்தாலும் எனக்கு திருப்தி இல்லை – ஒன்று நான் மேடையிலிருந்து சற்று தள்ளியே இருந்தேன் – முன்னணியில் வி.ஐ.பிக்கள் – மேலும் அதிக பார்வையாளர்கள். கொஞ்சம் தள்ளியே இருந்ததால் 55-250 zoom lens போட்டு தான் எடுக்க முடிந்தது. படங்களில் அத்தனை Sharpness இல்லை. இந்தப் படங்கள் எடுக்கப்பட்டது Sports Mode-ல் தான். படம் எடுக்க இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்….

On a different note, இந்தப் பெண் மாதிரி அனைத்து பெண்களும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டால் அவர்களுக்கு எதிராக நடக்கும் பல அநீதிகளைத் தடுக்கலாம். எத்தனை எத்தனை வன்புணர்வுகள் இங்கே….










































என்ன நண்பர்களே நிழற்படங்களை ரசித்தீர்களா? நடனம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…

வியாழன், 4 அக்டோபர், 2018

சுற்றுலா பருவம் – விதம் விதமாய் நடனம் – பகுதி 1



தலைநகர் தில்லியில் நடந்த சுற்றுலா பருவம் [பர்யாடன் பர்வ்] நிகழ்ச்சி பற்றி ஏற்கனவே சில பதிவுகள் எழுதி இருக்கிறேன். இன்னும் சில பதிவுகள் இது பற்றி வரப் போகின்றன – குறிப்பாக பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த கலைஞர்கள் ஆடிய நடனங்களின் போது நான் எடுத்த படங்களும், நண்பர் எடுத்த சில காணொளிகளும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணம். நாங்கள் ரசித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள். உங்களுக்கும் இந்தப் படங்களை, காணொளிகளைப் பார்க்க விருப்பம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன், இதோ இந்த வரிசையில் முதலாம் தொகுப்பு – மத்தியப் பிரதேசத்தின் Bபதாய் நடனத்தின் சில காட்சிகள்.


செவ்வாய், 2 அக்டோபர், 2018

வெள்ளி, 2 மார்ச், 2018

எத்தனை நாள் ஆசையோ – சில காணொளிகள்



நடனம் ஆட வேண்டும், பாட்டு பாட வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என ஒவ்வொருக்கும் எத்தனையோ ஆசைகள். ”அத்தனைக்கும் ஆசைப்படு!” என யாரும் சொல்லாமலேயே ஆசைப்படுவது தானே மனித இயல்பு.  உதாரணத்திற்கு நடனத்தினையே எடுத்துக் கொள்ளுங்களேன். சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறோம். எதிரே ஒரு கல்யாண ஊர்வலம் – கால்களைத் தன்னால் ஆட வைக்கும் ஒரு டோல் இசைக்கிறது! ஆனால் ”அட சாலையில் இருக்கும்போது ஆட முடியுமா?” என்ற நினைவு வர, நம்மைக் கட்டுப் படுத்திக் கொள்கிறோம். ஆசைப்பட்டவுடன் ஆட முடிவதில்லை! அப்படி ஒருவர், யாரைப் பற்றியும் கவலை இன்றி களத்திலிறங்கி ஆடினால் எப்படி இருக்கும்?

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

என்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர் விடைகள்




நேற்றைய பதிவில் மூன்றாவது புகைப்படப் புதிராக ஐந்து படங்களை வெளியிட்டு இருந்தேன். யார் யார் பதிலை சரியாச் சொன்னாங்கன்னு சொல்லப் போறதில்லை! ஆனா சரியான பதில்களை கீழே தந்திருக்கிறேன். வாங்க, நேற்று பகிர்ந்த படங்கள் என்னன்னு பார்க்கலாம்…


படம் – 1

வியாழன், 22 பிப்ரவரி, 2018

ஷிவ் ஜெயந்தி – சத்ரபதி ஷிவாஜி – புகைப்பட உலா





சத்ரபதி ஷிவாஜி அவர்களின் பிறந்த நாள் இந்த முறை பல இடங்களில் கொண்டாடப்பட்டது – ஃபிப்ரவரி 19-ஆம் தேதி தலைநகரிலும் ஷிவ் ஜெயந்தி 2018 என்ற பெயரில் திருவிழா நடக்கப்போவது பற்றி 18-ஆம் தேதி தான் தெரிந்தது. 18-ஆம் தேதி வேறு ஒரு விழாவிற்குச் சென்றபோது தான் விழா பற்றிய பதாகை பார்த்தேன். நான் 18-ஆம் தேதி சென்ற போது கோல்ஹாபூர் [மஹாராஷ்ட்ரா]விலிருந்து வந்திருந்த இளைஞர்கள் டோல் எனப்படும் கருவியை இசைத்தபடி வீர முழக்கங்கள் எழுப்புவதைப் பார்த்தபோது அடுத்த நாள் மாலை விழாவிற்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன் – நாம் முடிவு எடுத்துவிட்டால் போதுமா? அடுத்த நாள் பார்க்க முடிந்ததா?

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

கத்புத்லி – ஹேமமாலினி நடனம் – புகைப்படங்களும் காணொளியும்



சென்ற ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணம் – ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜர் எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு! அங்கே சென்ற போது பார்த்த கத்புத்லி என்று இங்கே அழைக்கப்படும் பொம்மலாட்டம் பார்க்க முடிந்தது. அப்போது நான் எடுத்த புகைப்படங்களும், குழுவில் இருந்த நண்பரின் மகள் எடுத்த காணொளியும் இந்த ஞாயிறில் உங்கள் பார்வைக்கு.


செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

மதிய உணவு - திம்சா நடனம் – அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 13

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!




பழங்குடி மக்களின் அருங்காட்சியகத்தினைப் பார்த்த பிறகு பேருந்து எங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது! அது அடுத்ததாய் நின்ற இடம் ஆந்திரப் பிரதேசம் சுற்றுலாத் துறை நடத்தும் ஒரு தங்குமிடம்/உணவகம் – புன்னாமி ரிசார்ட்/மயூரி ஹோட்டல்.  அங்கே எங்களுக்காக மதிய உணவு தயாராக இருந்தது.  ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையின் மூலமாக இப்பயணத்தினை ஏற்பாடு செய்யும்போது இரயில்/சாலை பயணங்கள், உணவு, என பலவும் அந்த செலவிலேயே முடிந்து விடுகிறது. காலையில் புறப்படும்போதே காலை உணவு இரயிலில் கொடுத்தது பற்றி எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம்.  மதிய உணவு – சைவ உணவு – ஆந்திரா காரத்துடன் தென்னிந்திய உணவு! Buffet தான் – யாருக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிச் சாப்பிடலாம்.

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ABCD - Any body can dance - ஒரு காணொளி

வடக்கே ஒரு பழக்கம். பெரும்பாலான திருமணங்களில், விழாக்களில் டோல் எனப்படும் மேளம் முழுங்குவதுண்டு. ஒரே மாதிரியான இசை, ஒரே மாதிரியான நடனம் – கைகளை மேலே தூக்கியபடி நடனம் ஆடுவது வழக்கம்.  திருமணங்களில் மாப்பிள்ளையானவர் குதிரை மேல் அமர்ந்து வர, அவருக்கு முன்னே மேளதாளங்கள் முழங்க, திருமணத்திற்கு வந்திருக்கும் ஆண்களும் பெண்களும் ஆடியபடியே வருவார்கள். இது திருமணம் தவிர, எங்கே மேளம் முழங்கினாலும் களத்தில் குதித்து நடனமாடும் ஆண்களும் பெண்களும் பார்க்க முடியும்….. 

சூரஜ்குண்ட் மேளா சென்ற போது ஹரியானாவின் பாரம்பரிய இசை மற்றும் மேளத்துடன் வாசித்துக் கொண்டிருக்க, அங்கே களத்தில் சிலர் குதிக்க, அதை காணொளியாக எடுத்த பலரில் நானும் ஒருவன்.  அந்த காணொளி இந்த ஞாயிறில் உங்களுக்காக….


நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

வட இந்திய நடனங்கள் – புகைப்படங்கள்



இந்த ஞாயிறில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவது சில புகைப்படங்கள் – வழக்கம் போல ஞாயிற்றுக் கிழமை என்றால் புகைப்படங்கள் தானே! இந்த புகைப்படங்கள் எடுத்து சில மாதங்கள் ஆகிவிட்டன என்றாலும் இப்போது தான் பகிர்ந்து கொள்கிறேன். தலைநகர் தில்லியில் நடந்த இரண்டாவது கலாச்சாரத் திருவிழா சமயத்தில் தினமும் மாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பதைப் பற்றி சில பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்தப் புகைப்படங்களும் அத் திருவிழாவில் எடுக்கப்பட்டவையே. நடனங்கள் பெரும்பாலும் உத்திரப் பிரதேசம், உத்திராகண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவை.  நடனங்களின் பெயர்கள் மறந்து விட்டாலும் நடனம் மறக்க வில்லை! நடனத்தின் போது எடுத்த சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு!


படம்-1:  நம்மளா இருந்தா கைகளை விழாமல் பார்க்கவே சிரமப்பட்டிருப்போம்! இவர் பத்து கைகளோடு ஆடினார் - அதுவும் பாட்டுப் பாடியபடியே!



படம்-2:  உத்திரப் பிரதேசத்தின் ஒரு நடனம்.. 
ஆண்களின் உடை சாதாரணமாக இருக்க, பெண்களுக்கு மட்டும் ஜிகுஜிகு உடைகள்!



படம்-3:  நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.....



படம்-4:  வட இந்திய நடனம் என்றாலே கைகளில் ஒரு துணியைக் கொடுத்து விடுவது ஏன்!


படம்-5:  ஒயிலாய் ஒரு நடை....


படம்-6:  முன்னும் பின்னும்! 


படம்-7:  என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா....


படம்-8:  சுற்றிச் சுற்றி நடனம்....


படம்-9:  குச்சிகளில் நின்று நடனமும் புல்லாங்குழல் வாசிப்பும்!


படம்-10:  ஒரு வித பிரமீடு! கொஞ்சம் அசைந்தாலும் விழ வேண்டியது தான்!


படம்-11:  மலையால் ஒரு குடை - காட்சி!


 படம்-12:  மேலே ஒருவரைச் சுமந்தபடி, குச்சிகளின் மீது நின்று கொண்டு குச்சியால் நடக்கவும் செய்கிறார்! என்ன ஒரு திறமை!


படம்-13:  மனிதர்கள் கொண்டு ஒரு வண்டி!


படம்-14:  ஓட்டமாய் ஓடும் வண்டி...


படம்-15:  தோகை விரித்தாடும் மயில்....

என்ன நண்பர்களே, படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

புதன், 2 நவம்பர், 2016

கச்சி கோடி - ராஜஸ்தானின் பொய்க்கால் குதிரை நடனம்.....



தமிழகத்தின் தஞ்சைப் பகுதிகளில் பொய்க்கால் குதிரை நடனம் மிகவும் பிரபலம். கால்களில் மரக்கட்டைகளைக் கட்டிக்கொண்டு, குதிரை உருவத்தினை சுமந்தபடி ஆடும் பொய்க்கால் குதிரை நடனத்தினை நம்மில் பலரும் பாத்திருக்க வாய்ப்புண்டு.  இதே மாதிரி குதிரை நடனம் ராஜஸ்தானிலும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?  ராஜஸ்தானிலும் இப்படி குதிரை உருவத்தினை தனது இடுப்பில் மாட்டிக்கொண்டு, அலங்கார உடைகள் அணிந்து பாரம்பரிய இசை இசைக்க, சுற்றிச் சுற்றி நடனமாடுவார்கள்.  அந்த நடனத்திற்குப் பெயர் கச்சி கோடி [Kachhi Godi] நடனம்.



சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது தேசிய கலாச்சாரத் திருவிழா சமயத்தில் ராஜஸ்தானிலிருந்து ஒரு குழு தலைநகரின் IGNCA-வில் தொடர்ந்து இந்த கச்சி கோடி நடன்ம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.  நடனம் ஆட மூன்று பேர், இசைக்குழுவில் நான்கு-ஐந்து பேர் என சுமார் பத்து பேர் கொண்ட குழு. அவ்வப்போது இடைவெளி கொடுத்து நாள் முழுவதும் ஆடியபடியே இருந்தார்கள் அந்த மூன்று பேரும். அதில் ஒருவர் பொய்க்குதிரையைச் சுமந்தபடி ஆட, மற்ற இருவரும் [ஒரு பெண், ஒரு ஆண்] முக்கிய ஆட்டக்காரருடன் ஆடுகிறார்கள். 



ராஜஸ்தானின் ஷேகாவத்தி பகுதியில் தான் இந்த நடனம் முதன் முதலாக ஆடினார்கள் என்றும் அங்கே இருந்த கொள்ளைக்காரர்களின் வீர பராக்கிரமங்களை பாடல் மூலம் தெரிவிக்க நடனம் ஆடுபவர்கள் கைகளில் கத்திகளோடு நடனமாடுவார்கள் எனத் தெரிகிறது.  ஆனால் நான் பார்த்த நாட்டியக்காரர்கள் கத்தியுடன் ஆடவில்லை. ஒரே ஒருவர் மட்டுமே குதிரை வேடமிட்டிருந்ததால் கத்தியுடன் ஆடவில்லை போலும்.  ஆனாலும் சுற்றிச் சுற்றி மூவரும் ஆடுவதைப் பார்க்கும் நமக்கே தலைசுத்துகிறது. ஆனால் சுற்றும் அவர்களோ எந்தவித தயக்கமோ, சோர்வோ இல்லாது தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். 











குதிரையின் உருவம் மூங்கில் குச்சிகள் மற்றும் பேப்பர் கூழ் கொண்டு அமைக்கப்படுகிறது. அதன் மேல் வண்ண வண்ண உடைகளும், அந்த உடைகளில் இருக்கும் வேலைப்பாடும், சுற்றிச் சுற்றி ஆடும்போது அந்த ஆடையில் மின்னும் கண்ணாடிகளும் என அனைத்துமே பார்க்கும் உங்களை நிச்சயம் கவரும்.

நடுநடுவே இடைவெளி என்றாலும் தொடர்ந்து நாள் முழுவதும் இப்படி ஆடுவது, அதுவும், தொடர்ந்து எட்டு நாள் விழாவிலும் இப்படி ஆடுவது பிரமிக்க வைக்கிறது. நடனமாடிய மூவருமே ஒருவருக்கொருவர் சளைக்காது ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.  

வழக்கம் போல, நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். இந்த முறை காமிரா உள்ள அலைபேசியும் எடுத்துச் சென்றிருந்ததால் காணொளியும் எடுத்தேன்.  Youtube-லும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  இங்கேயும் உங்கள் பார்வைக்காக, இரண்டு காணொளிகளைச் சேர்த்திருக்கிறேன்.  நீங்களும் பார்த்து ரசிக்க இதோ கச்சி கோடி நடனம்....






மீண்டும் ச[சி]ந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.....