புதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

கதம்பம் – புரியாத புதிர் – கத்திக்கல்ல – கீகீ சேலஞ்ச்



ஒண்ணும் கத்திக்கல்ல…

அலுவலகத்தில் இருக்கும் Coffee Board உழைப்பாளி பற்றி ஏற்கனவே ஒரு முறை எழுதி இருக்கிறேன். எந்தப் பதிவில் என்பதைத் தேட வேண்டும் – நிறைய பதிவுகள் எழுதினால் இது ஒரு பிரச்சனை! :) சமீபத்தில் எனது பக்கத்தில் எழுதிய முந்தைய பதிவுகளைப் படித்த போது எனக்கே பிரமிப்பாக இருந்தது – இவ்வளவு எழுதி இருக்கிறேனா என! சரி விஷயத்துக்கு – காஃபி போர்ட் உழைப்பாளிக்கு வருவோம்.

சனி, 4 ஆகஸ்ட், 2018

புரியாத புதிர் – சற்றே இடைவெளிக்குப் பிறகு…


சற்றே இடைவெளிக்குப் பிறகு படங்கள் கொண்டு ஒரு புதிர். இரண்டு படங்கள் இங்கே தருகின்றேன். கூடவே அதற்கான கேள்விகளும்…..

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

புகைப்பட புதிர் – ஐந்து – விடைகள் - பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா




நேற்று காலை ஐந்தாவது புகைப்படப் புதிராக இரண்டே இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம். அந்த இரண்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடம், அவை என்ன என்பதை இன்றைக்குப் பார்க்கலாம்.


படம்-1: பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?

சனி, 7 ஏப்ரல், 2018

புகைப்பட புதிர் – ஐந்து - இரண்டே இரண்டு படங்கள்




நான் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து அவை என்ன என்ற புதிர் பதிவாக இதுவரை நான்கு பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பதிவுகளின் சுட்டி கீழே….


வெள்ளி, 9 மார்ச், 2018

அடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள் - விடைகள்



புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு இருப்பதில் என்ன பலன். நான் எடுக்கும் புகைப்படங்களை மற்றவர்களும் ரசிக்கத் தருவதில் எனக்கும் மகிழ்ச்சி.  அப்படி சில புகைப்படங்கள் எடுத்த எனக்கு அவை என்ன என்று தெரியும் என்றாலும், மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள இப்படி ஒரு புகைப்படப் புதிர்! நேற்று காலை வெளியிட்ட புகைப்படங்களுக்கான விடைகள் கீழே….


வியாழன், 8 மார்ச், 2018

அடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள்



புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு இருப்பதில் என்ன பலன். நான் எடுக்கும் புகைப்படங்களை மற்றவர்களும் ரசிக்கத் தருவதில் எனக்கும் மகிழ்ச்சி.  அப்படி சில புகைப்படங்கள் எடுத்த எனக்கு அவை என்ன என்று தெரியும் என்றாலும், மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள இப்படி ஒரு புகைப்படப் புதிர்!  


ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

என்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர் விடைகள்




நேற்றைய பதிவில் மூன்றாவது புகைப்படப் புதிராக ஐந்து படங்களை வெளியிட்டு இருந்தேன். யார் யார் பதிலை சரியாச் சொன்னாங்கன்னு சொல்லப் போறதில்லை! ஆனா சரியான பதில்களை கீழே தந்திருக்கிறேன். வாங்க, நேற்று பகிர்ந்த படங்கள் என்னன்னு பார்க்கலாம்…


படம் – 1

சனி, 24 பிப்ரவரி, 2018

என்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர்



சில மாதங்களுக்கு முன்னர் புகைப்படங்களை வெளியிட்டு அவை என்ன என்ற கேள்வியைக் கேட்டிருந்தேன். இரண்டு பதிவுகளுக்குப் பிறகு வெளியிடவில்லை. இதோ இப்போது மூன்றாவது புகைப்படப் புதிர்.  வாங்க, படம் பார்த்து என்னன்னு சொல்லுங்க….


படம்-1

வெள்ளி, 29 டிசம்பர், 2017

லாலுவுக்கும் புதிருக்கும் சம்பந்தம் - புகைப்படப் புதிர் – இரண்டு – விடைகள்….



நேற்று காலை நான்கு புகைப்படங்களை வெளியிட்டு அவை பற்றிய கேள்வியைக் கேட்டிருந்தேன். அந்த படங்களில் இருப்பவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்!


புதிர் படம்-1:  இது ஒரு இயந்திரம். என்ன இயந்திரம் என்று சொல்ல முடியுமா?

விடை: இந்த இயந்திரத்திற்குப் பெயர் chசாரா குட்டி! வட இந்திய கிராமங்களின் பெரும்பாலான வீடுகளில் இந்த இயந்திரத்தினை பார்க்க முடியும். chசாரா, Bபூசா என அழைக்கப்படும் மாடுகளுக்கு வழங்கும் புல், வைக்கோல் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக்க இந்த இயந்திரத்தினை பயன்படுத்துவார்கள். புல்/வைக்கோலை அதற்கான இடத்தில் வைத்து, சக்கரத்தினைச் சுற்ற, சிறு சிறு துண்டுகளாக்கும் இந்த இயந்திரம். இப்போதெல்லாம் மின்சார மோட்டார் கொண்டும் இயக்கப்படுகிறது என்றாலும் கொஞ்சம் அபாயமானது – கிராமத்தில் பலருக்கும் கை விரல்கள் வெட்டுப்பட்டிருக்கின்றன! இந்த chசாரா Gகோட்டாலா [Fodder Scam]-ல் தான் லாலு பிரசாத் யாதவ் குற்றம் செய்தவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது!


புதிர் படம்-2: இது என்ன?



விடை: பார்ப்பதற்கு வழிபாட்டுத் தலம் போல இருந்தாலும், இது அப்படி அல்ல! கிணற்றின் மேலே நான்கு பக்கங்களிலும் இப்படிச் சுவர் எழுப்பி, அதில் நான்கு புறத்திலும் தண்ணீர் எடுத்துக்கொள்ள வழி செய்திருப்பார்கள். முதலில் கொடுத்த படம் தவிர, தண்ணீர் எடுக்க வசதி செய்திருக்கும் படமும் கொடுத்திருக்கின்றேன்.



புதிர் படம்-3: இந்த இடம் என்ன இடம், எங்கே இருக்கிறது. ஒரு Clue – முன்னரே இப்படம் எனது பதிவில் வந்திருக்கலாம்!

விடை: கோனார்க் என சிலர் பதில் சொல்லி இருந்தாலும் இது கோனார்க் அல்ல! ஆனால், இதுவும் சூரியனார் கோவில் தான்! குஜராத் மாநிலத்தில் உள்ள Modhera எனும் இடத்தில் உள்ள சூரியனார் கோவில் இது. முன்பு பிரம்மாண்டமாக இருந்திருந்தாலும், இப்போது இருப்பது இவ்வளவு தான்! இந்த இடம் பற்றி விரைவில் எழுதுகிறேன்.



படம்-4: இந்த முதியவரின் பக்கத்தில் ஒரு கருவி இருக்கிறது... அது என்ன கருவி!

விடை: இந்த மாதிரி கருவியை நம் ஊரில் நிச்சயம் பார்த்திருக்க முடியாது! இந்த கருவியின் பெயர் DHதூனி. இயக்குபவர் DHதூனியா! வட மாநிலங்களில் குளிர் அதிகம் என்பதால் ரஜாய் பயன்படுத்துவது வழக்கம். ரஜாயில் இருக்கும் பஞ்சை சுத்தம் செய்ய, மீண்டும் பயன்படுத்தத் தகுந்த வகையில் ஆக்குவதற்கு இந்தக் கருவி பயன்படுகிறது! குளிர் காலங்களில் இக்கருவியைச் சுமந்து கொண்டு வருவார்கள். இந்தக் கருவியில் இருக்கும் String-ஐ மீட்ட வித்தியாசமான ஒரு இசை வெளியாகும்! அந்த String எதிலிருந்து செய்கிறார்கள் என சமீபத்தில் கேள்விப்பட்டேன் – அது ஆட்டுக் குடலிலிருந்து செய்யப்படுகிறது என்பது தான் அந்த விஷயம்! கருவியை எப்படி இயக்குவார்கள் என பார்க்க விரும்பினால் இங்கே பார்க்கலாம்!


புகைப்படங்களைப் பார்த்து புதிர்களுக்கு விடை சொல்ல முயற்சித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்.

முடிந்த போது வேறு சில புகைப்படங்களுடன் வருவேன் – உங்களுக்கும் விருப்பமிருந்தால்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


வியாழன், 28 டிசம்பர், 2017

புகைப்படப் புதிர் – இரண்டு – கண்டுபிடிங்க பார்க்கலாம்….


சில நாட்களுக்கு முன்னர் ”படமும்புதிரும் – எங்கள் பிளாக்குப் போட்டியா?” என்ற தலைப்பில் ஐந்து படங்களைத் தந்து அவை பற்றி கேள்விகள் கேட்டிருந்தேன். பங்கு கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. இப்போது மீண்டும் ஒரு புகைப்படப் புதிர்! இந்த முறை நான்கு படங்கள்.



படம்-1:  இது ஒரு இயந்திரம். என்ன இயந்திரம் என்று சொல்ல முடியுமா?