சனி, 16 செப்டம்பர், 2017

கோவை2டெல்லி – அனுபவக் கட்டுரைகள் – இப்போது மின்புத்தகமாக – ஆதி வெங்கட்

இன்றைய இரண்டாம் பதிவாக...

இல்லத்தரசியின் முதலாம் மின்புத்தகம் - அவரது வலைப்பூவில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து மின்புத்தக வடிவில் WWW.FREETAMILEBOOKS.COM தளத்தின் மூலம் வெளியாகி இருக்கிறது. அத்தளத்தினை நிர்வகிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. 

இதோ புத்தகம் பற்றிய ஒரு சிறு முன்னுரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமணம் என்பது அவளுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்கக்கூடியதாக அமைகிறது!  மிதமான தட்பவெப்பத்தில், அழகான கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த என்னை, அதிக வெயில், அதிக குளிர், பாஷை புரியாத, அழுக்கான தில்லிக்கு ஏற்றி அனுப்பியது திருமணம்!  மனதிற்குள் ஒரு வித பயத்துடனும், எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற எண்ணத்துடனும் தான் தலைநகர் தில்லிக்கு முதல் முறையாக பயணம் செய்தேன்.

அடுத்த பயணத் தொடர் – எங்கே – ஒரு புகைப்பட முன்னோட்டம்!


”அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் எழுதி வந்த பயணத் தொடர் இந்த வாரம் முடிந்திருக்கிறது. இந்தப் பயணத்திற்குப் பிறகு சென்று வந்த பயணங்களின் எண்ணிக்கை மூன்று! இதில் முதலாவதாகச் சென்றது பற்றிய பயணக்கட்டுரைகள் வரும் திங்களன்று தொடங்கும்! அப்படித் தொடங்குவதற்கு முன்னர் ஒரு புகைப்பட முன்னோட்டம் இந்த சனிக்கிழமை அன்று! வாருங்கள் சில புகைப்படங்களைப் பார்க்கலாம்! எங்கே செல்லப் போகிறோம் என்பதை யூகிக்க முடிந்தவர்கள் சொல்லலாம்! அப்படிச் சொல்லாவிட்டாலும் தவறில்லை! திங்களன்று நான் சொல்லத்தான் போகிறேன்!


ஒரு இடம் விடமாட்டோம்... எல்லா இடத்திலும் வீடு, தங்குமிடம் கட்டி ஒரு வழி பண்ணாம விடப்போறதில்ல!

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

ஃப்ரூட் சாலட் 207 – ஜிமிக்கி கம்மல் – தோலிலும் கலைவண்ணம் – தவளையாக இருக்காதீர்கள்!இந்த வார செய்தி:

மோகன் லால் அவர்களின் மலையாளப் படப் பாடலான “ஜிமிக்கி கம்மல்” பாட்டிற்கு சில பெண்கள் ஆடிய காணொளி மிகவும் வைரலாகப் பரவி இருக்கிறது…. அதில் ஆடி இருக்கும் ஷெரில் எனும் பெண்ணுக்கு ரசிகர் மன்றம் கூட வைத்திருப்பதாகத் தெரிகிறது – ஷெரில் ஆர்மி என்று சிலரும் கிளம்பியிருக்கிறார்கள்! ஓவியா ஆர்மிக்குப் பிறகு இப்போது ஷெரில் ஆர்மி! என்னவோ போங்கடே! சரி அந்த காணொளி எல்லோருமே பார்த்திருக்கலாம். ஒரிஜினல் சினிமா பாட்டு பார்த்ததுண்டா? என் நண்பர் ஒருவர் அந்த ஒரிஜினல் பாடலின் காணொளி அனுப்பி இருந்தார்.  நீங்களும் பார்த்து ரசிக்க!வியாழன், 14 செப்டம்பர், 2017

ஜில் ஜில் ஜிகிர்தண்டா – வீட்டிலே செய்யலாம் – ஆதி வெங்கட்.
என்னதான் மனைவியோட பதிவுன்னாலும், முன்னாடி நானும் கொஞ்சம் எழுதணுமே – அதுவும் என்னோட வலைப்பூவில் வெளியிடும்போது என் சார்பாவும் கொஞ்சம் எழுதித் தானே ஆகணும்.

புதன், 13 செப்டம்பர், 2017

கொலுசே கொலுசே - கல்யாண் ஜுவல்லர்ஸ் – பயண முடிவு!அரக்கு பள்ளத்தாக்குபகுதி 31

பகுதி 30 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


இந்தக் குட்டிச் செல்லத்துக்கு தான் கொலுசு!

தௌலிகிரியில் அமைந்திருக்கும் ஷாந்தி ஸ்தூபா பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் ஒரு கடை! அந்தக் கடை புவனேஷ்வர் நகரில் இருக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் கிளை! தலைநகர் தில்லியில் இல்லாத நகைக்கடையா? அதை விட்டு, ஒடிஷா மாநிலத் தலைநகர் புவனேஷ்வர் சென்று நகை வாங்குவீர்களா? என்றெல்லாம் கேட்பதற்கு முன்னரே பதில் சொல்லி விடுகிறேன்! எங்களுக்காக அங்கே செல்லவில்லை. இரண்டு நாட்கள் புவனேஷ்வர் நகரில் தங்கி அங்குள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்கும்போது எங்களுக்கான வாகன ஏற்பாடு செய்ததோடு, சில வேளைகள் உணவளித்த திருப்பதி தேவஸ்தானத்தின் திருமண மண்டபம் மற்றும் கோவிலில் பூஜை செய்பவருக்கு ஏதாவது மரியாதை செய்ய வேண்டும் என்பதால் தான் நகைக்கடை பயணம்! அந்த இளைஞருக்கு ஒரு வயது ஆகப்போகும் சிறு பெண் உண்டு என்பதால், குழந்தைக்கு ஒரு கொலுசு வாங்கலாம் என நினைத்தோம்! கடைக்குச் சென்றோம்.

திங்கள், 11 செப்டம்பர், 2017

ஒடிசா – தௌலிகிரி – ஷாந்தி ஸ்தூபா – புவனேஷ்வர்


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 30

பகுதி 29 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


தௌலி ஷாந்தி ஸ்தூபா, தௌலிகிரி, புவனேஷ்வர்....


காற்றில் அசைந்தாடும் தென்னை மரங்கள்...
ரகுராஜ்பூரிலிருந்து புவனேஷ்வர் வரும் சாலையோரத்தில்....


வறுமையும் ஒடிஷாவும்.....
ஒரு சாலைக் காட்சி....

ரகுராஜ்பூரில் ஓவியக் கலைஞர்களிடம் பேசி, அவர்களது திறமையைக் காண்பித்து வரைந்த சில ஓவியங்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்து புவனேஷ்வர் நோக்கிய பயணத்தினைத் துவங்கினோம். சாலையின் இரு மருங்கிலும் நிறைய தென்னை மரங்கள்! கடற்கரையிலிருந்து வரும் காற்றில் தென்னை மரங்கள் ஆடிக்கொண்டிருக்க, சுகமான பயணமாக இருந்தது. ஒடிசாவில் நான் பார்த்த இன்னுமொரு விஷயம் அங்கே இருக்கும் வறுமை. பார்த்த பல ஆண்கள், சிகப்பு வண்ணத்தில் இருக்கும் துண்டு கட்டிக்கொண்டு தான் இருந்தார்கள். குறிப்பாக கிராமங்களில்! நிறைய கிராமங்கள் சுதந்திரம் கிடைத்து 68 ஆண்டுகளுக்குப் பிறகும் வறுமையில் தத்தளிப்பது சோகமான ஒரு விஷயம். எல்லாம் அரசியல், எங்கும் அரசியல்! என்ன சொல்ல!

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்….பனிபடர்ந்த மலைகளைக் கண்டாலே ஒரு ஆனந்தம் நமக்குள் உண்டாவது, அற்புத உணர்வு இல்லையா? மலைப்பகுதிகள், ஆற்றங்கரை, இயற்கை எழில் கொஞ்சம் பூங்காக்கள், மரங்களடர்ந்த வனப்பகுதி என எங்காவது செல்லும்போது நம்மை நாமே இழந்து இயற்கையில் ஒன்றிவிட முடிகிறது. பல சமயங்கள், என்னுடைய பயணங்களின் போது, அங்கேயே தங்கிவிட மாட்டோமா என்ற உணர்வு வரும். ஆனால் அங்கே இருந்து விட முடிவதில்லையே.  நினைவுகளோடு திரும்பித் தானே ஆக வேண்டியிருக்கிறது.


சனி, 9 செப்டம்பர், 2017

ஒடிசா – ரகுராஜ்பூர் – ஓவியங்கள்


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 29

பகுதி 28 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!பூரி ஜகன்னாத் தரிசனம் முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் தங்கியிருந்த இடமான புவனேஷ்வர் நோக்கிய பயணத்தினைத் துவங்கினோம். ஆனால் நேரடியாக புவனேஷ்வர் செல்லாமல், வழியில் ஒரு கிராமத்திற்குச் சென்ற பிறகு செல்ல வேண்டும் என்று எங்கள் நண்பர், ஓட்டுனரிடம் சொன்னார். அந்த கிராமம், ரகுராஜ்பூர் எனும் கிராமம். கோவிலிலிருந்து புவனேஷ்வர் செல்லும் நெடுஞ்சாலை வழியே சென்றால் 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ரகுராஜ்பூர் கிராமம் இருக்கிறது.  சிறிய ஊர் என்றாலும், அந்த ஊர் மிகவும் பிரசித்தமான ஒரு ஊர். அந்த ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலும் கலைஞர்கள் மட்டுமே. வீட்டுக்கு வீடு கலைஞர்களின் கைவண்ணங்களைக் காண முடியும்!

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

ஃப்ரூட் சாலட் 206 – Temporary கணவன் – இழந்த உறவுகள் – Blue Whale - மின்புத்தகம்


இந்த வார செய்தி:சில நாட்களுக்கு முன்னர் தீவிரவாதிகளால், அனந்த்நாக் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி துணை ஆய்வாளர் அப்துல் ரஷீத் அவர்களின் உடலைப் பார்த்த அவரது மகள் ”ஜோரா” கண்ணீர் விடும் படம் மனதை மிகவும் கலக்கிய ஒன்று.  இன்னும் எத்தனை இழப்புகளைத் தாங்கப் போகிறோம்……


வியாழன், 7 செப்டம்பர், 2017

பூரி ஜகன்னாத் – ஆனந்த பஜார் – உலகின் மிகப்பெரிய உணவகம்…


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 28

பகுதி 27 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


மஹாபிரசாதம் - மண்பாண்டங்களில்....
பூரி ஜகன்னாத் மந்திர்....

கடந்த மூன்று பகுதிகளாக, பூரி ஜகன்னாத் கோவில் பற்றிய சில சிறப்புத் தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. கோவிலுக்குச் சென்றபோது எங்களுக்குக் கிடைத்த அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் சற்றே விவரமாக எழுதி இருக்கிறேன் என்றாலும் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். கோவிலில் தரிசனம் செய்து கொண்ட பிறகு கோவிலின் ஒரு பகுதியாக, வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கும் ஆனந்த பஜார் எனும் இடத்திற்குச் சென்றோம். இந்த ஆனந்த பஜார் எனும் பகுதியை உலகின் மிகப்பெரிய உணவகம் என்று அழைக்கிறார்கள்! ஏன் அப்படி? ஒரு லட்சம் பேர் வந்தாலும் இங்கே உணவு கிடைக்கும் – அதுவும் வந்த சில மணி நேரங்களில்! கோவில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பலர், தங்கள் வீட்டு விசேஷங்களுக்குக் கோவிலிலிருந்தே உணவு பெற்றுக்கொள்ள முடியும் என்றால் பாருங்களேன்.

புதன், 6 செப்டம்பர், 2017

பூரி ஜகன்னாத் – சிலை மாற்றமும் ரத யாத்திரையும்…

அரக்கு பள்ளத்தாக்குபகுதி 27

பகுதி 26 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!

நிகழ்வு பற்றிய மணல் சிற்பம்
படம்: இணையத்திலிருந்து....

சென்ற பகுதியில் பூரி ஜகன்னாத் கோவில் பற்றிச் சொல்லும் போது இக்கோவிலில் இருக்கும் மரச் சிலைகள் ஏன் என்ற காரணத்தினையும் கதையையும் பார்த்தோம்.  இந்தப் பகுதியில் மரச்சிலைகள் மாற்றப்படுவது பற்றியும் வருடா வருடம் நடக்கும் ரத யாத்திரை பற்றியும் சில தகவல்களைப் பார்க்கலாம்.  

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

பூரி ஜகன்னாத் – மரச் சிலைகளின் கதை…


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 26

பகுதி 25 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


பூரி ஜகன்னாத் - ஒரு ஓவியமாக....

சென்ற பகுதியில் பூரி ஜகன்னாத் கோவில் பற்றிச் சொல்லும் போது இக்கோவிலில் இருப்பது மரத்திலால் ஆன சிலைகள் என்று குறிப்பிட்டிருந்தேன்.  ஏன் மரச் சிலைகள் என்பதற்கும் ஒரு காரணமும் கதையும் உண்டு.  அக்கதையையும் மற்ற சில விவரங்களையும் இப்பகுதியில் பார்க்கலாம்.  

திங்கள், 4 செப்டம்பர், 2017

பூரி ஜகன்னாத் – மூன்று மரச்சிலைகள் – பிரம்மாண்டமான கோவில்!

அரக்கு பள்ளத்தாக்குபகுதி 25

பகுதி 24 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


பூரி ஜகன்னாத் மந்திர்
வெளிப்புறத் தோற்றம்

கோனார்க்-இல் அமைந்திருக்கும் சூரியனார் கோவில் பார்த்த பிறகு, சிற்பங்களின் அழகையும், அதைச் செதுக்கிய சிற்பிகளின் உழைப்பு, கலைநயம், நளினம் ஆகியவற்றை எண்ணி அதிசயத்தபடியே அங்கிருந்து மனமே இல்லாமல் புறப்பட்டோம். ஒவ்வொரு சிற்பங்களையும் பார்ப்பதற்கே அரை மணி நேரமாவது வேண்டும் – அத்தனை நெளிவு-சுளிவு, நுணுக்கமான வேலைப்பாடு! கோனார்க் நகரிலேயே தங்கிக் கொண்டு சில நாட்கள் சிற்பங்களைப் பார்த்து வியக்க வேண்டும்! வெகு சிலர் மட்டுமே இப்படி சிற்பங்களைப் பார்த்துப் பார்த்து ரசிக்கவே ஒரு வார காலம் இங்கே தங்குவதுண்டு! குறிப்பாக வெளிநாட்டவர்கள்! நம்மவர்கள் சிலர் “என்ன இங்கே இருக்கு! உடைந்து போன சிலைகள் தானே!” என்று சொல்கிறார்கள். அழிவுக்குக் காரணம் மனிதர்களும் தானே…. எதனையும் ரசிக்க ஏதுவாய் மனது வேண்டும். அது எல்லோரிடமும் இருப்பதில்லையே!

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

ஒட்டக எலும்பில் ஆபரணங்கள்…சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு நான்கு நாட்கள் பயணம் சென்றிருந்தேன். ராஜஸ்தான் என்றாலே ஒட்டகங்கள் நினைவுக்கு வருமே உங்களுக்கு! ராஜஸ்தான் மட்டுமல்லாது குஜராத் மாநிலத்தில் கூட நிறைய ஒட்டகங்கள் உண்டு.  சில மாதங்களுக்கு முன்னர் ஆடு மாடு மேய்ப்பது போலவே, நிறைய ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டு போன காட்சியைப் பார்த்ததோடு, அதை காணொளியாகப் படம் பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம்! பார்க்காதவர்கள் வசதிக்காக, நூற்றுக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் சாலையைக் கடக்கும் காட்சியைப் பகிர்ந்து கொண்ட பதிவின் சுட்டி கீழே.

சனி, 2 செப்டம்பர், 2017

மேகம் கருக்குது டக்குசிக்கு டக்குசிங்!Clicks and Colours என்ற முகநூல் குழுமம் ஒன்று உண்டு. ஒவ்வொரு வார இறுதியிலும் அவர்கள் சொல்லும் கருவிற்கு ஏற்ற படங்களை, குழுவின் உறுப்பினர்கள் முகநூலில் பகிர்ந்து கொள்வார்கள். நானும் அங்கே ஒரு Silent உறுப்பினர்! மற்றவர்களின் படங்களை ரசிப்பதோடு சரி. வெகு குறைவாகவே எனது படங்களை அங்கே பகிர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஒரு கரு கொடுத்து, அதற்குத் தகுந்த ஐந்து படங்களை பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுடைய முந்தைய கருக்களில் ஒன்றான ”மூன்று” என்பதற்கு ஏற்ற சில படங்களை எனது வலைப்பூவிலும் பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான சுட்டி கீழே.

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

ஃப்ரூட் சாலட் 205 – காதல் அன்றும் இன்றும் – எழுத்தோவியம் – யார் புத்திசாலி

இந்த வார புகைப்படம்:

மாலை நேரச் சூரியனை படம் எடுப்பதில் ரொம்பவே ஆர்வம் அதிகமா? இல்லை, மாலை நேரத்தில் மட்டுமே சூரியனை படம் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பது புரியாத புதிர்.  மாலை நேரச் சூரியனை நிறைய படம் பிடித்திருக்கிறேன். பல முறை பயணங்களில், சாலையில் பயணித்தபடியே சூரியனை படம் பிடிக்க முயல்வேன். அப்படி சமீபத்திய பயணத்தில் எடுத்த சூரியன் புகைப்படம்!