அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 19
அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்
“அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!
அன்னவரத்திலிருந்து திரும்பிய நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம் விசாகப்பட்டினம் நகரின் புருஜுபேடா எனும் இடத்தில் இருக்கும் ஒரு கோவில். வரும் வழியில் தான் விசாகப்பட்டினம் நகரத்தின் பிரதான தொழிற்சாலையான SAIL. அதன் வழியே பயணிக்கும்போது மீண்டும் விசாகப்பட்டினம் பதிவர் மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் நினைவுக்கு வந்தார். அவருக்கு இருந்த பணிச்சுமைகளுக்கு நடுவே, எங்களால்
அவரைச் சந்திக்க இயலவில்லை! ஆனாலும் இரண்டு மூன்று முறை அவருடன் அங்கிருந்தபோது பேசினேன். அன்னவரத்தில்
சத்யநாராயண ஸ்வாமியை தரிசனம் செய்து கொண்ட நாங்கள் அடுத்ததாய் தரிசனம் செய்தது கனக மஹாலக்ஷ்மி அம்மவாரியை!


