சனி, 29 ஜூலை, 2017

பழங்குடிமக்கள் அருங்காட்சியகம் – அரக்கு பள்ளத்தாக்கு


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 12

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


அருங்காட்சியகத்தின் நுழைவாயில்...
அரக்கு பள்ளத்தாக்கு.


கள் எடுப்போம்... கள் குடிப்போம்...
அரக்கு பள்ளத்தாக்கு.

பத்மாபுரம் தோட்டத்தைப் பார்த்த பிறகு நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம் பழங்குடிமக்கள் அருங்காட்சியகம். அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் பல பழங்குடி இனத்தவர்கள் இருந்தாலும், கௌடு இனத்தவர்கள் தான் இங்கே அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. பழங்குடி இனத்தவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் உடை, உணவு, நடனங்கள், பழக்க வழக்கம் என பலவற்றையும் காட்சிப்படுத்த ஒரு இடம் தேவை என்பதை உணர்ந்து இந்தப் பகுதியில் ஒரு அருங்காட்சியகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது ஆந்திர அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை. அமைக்கப்பட்ட வருடம் 1996. பல விஷயங்கள் இங்கே பார்க்க உண்டு என்பதால் அரக்கு பள்ளத்தாக்கு செல்லும் போது தவிர்க்கக் கூடாத ஒரு இடம் இந்த அருங்காட்சியகம். வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.இட்லிப்பூ...
அரக்கு பள்ளத்தாக்கு. 


என்னை மட்டும் தனியா ஃபோட்டோ எடுக்கறானோ?
அரக்கு பள்ளத்தாக்கு.


நடனமும் ஆடுவோம்!
அரக்கு பள்ளத்தாக்கு.

நுழைவாயில் அருகே சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, நாங்கள் உள்ளே நுழைந்ததும் கண்ட காட்சி ஒரு செய்ற்கை நீர்நிலை. அதைச் சுற்றிலும் இட்லிப்பூ செடிகள், பூச்செடிகள் என அழகாய் இருந்தது. எங்கள் வாகனத்தினைப் பார்த்தவுடன், அருங்காட்சியகத்தில் ஆங்காங்கே அமர்ந்திருந்த மஞ்சள் புடவை அணிந்த சில பழங்குடிப் பெண்கள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி வர ஆரம்பித்தார்கள். தூரத்தில் வரும்போதே Zoom செய்து சில படங்களை எடுத்தேன். அவர்கள் வருவதே, புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினால் எடுத்துக் கொள்வதற்காகத் தான் என்பது பிறகு தான் தெரிந்தது. பெரும்பாலும் பெண்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். நண்பரின் மனைவியுடன் பழங்குடிப் பெண்கள் [முதியவர்கள்] சேர்ந்து நிற்க சில புகைப்படங்கள் எடுத்தேன் – சேர்த்தும், பழங்குடிப்பெண்களைத் தனியாகவும்! பிறகு நாம் கொடுக்கும் பணத்தினை வாங்கிக் கொள்கிறார்கள்!புகைப்படம் எடுத்துக்கொள்ள நாங்க ரெடி!
அரக்கு பள்ளத்தாக்கு.


அப்படியே மாட்டிக்கொண்டு ஒரு ஆட்டம் போடலாம்!
அரக்கு பள்ளத்தாக்கு. 


பெண்களுக்கானது....
அரக்கு பள்ளத்தாக்கு.

ஒரு திறந்தவெளித் திரையரங்கம், பல்வேறு அரங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் பழங்குடி மக்களின் பொருட்கள், அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள், உடைகள் என பல்வேறு மண் வீடுகளில் பராமரித்து வைத்திருக்கிறார்கள். ஒரு மண் வீட்டில், பழங்குடிப் பெண்களும், ஆண்களும் நடனமாடும்போது அணிந்து கொள்ளும் அணிகலன்கள், முகமூடிகள் ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள். அந்த முகமூடிகளை அணிந்து பார்க்கலாம் என்றால் அவை சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டதோடு, “தொடாதே!” என்று எழுதி வைக்கப்பட்டிருக்க, கூடவே மெல்லிய கயிறு ஒன்றால் தடை ஒன்றும் அமைத்திருக்க, நல்ல பிள்ளையாக புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்.


அரங்குகளில் ஒன்று....
அரக்கு பள்ளத்தாக்கு.

இங்கே உள்ள பெரிய குறை என்று சொன்னால், ஆங்காங்கே தகவல் பலகைகள் இருந்தாலும், விவரங்கள் சொல்வதற்கு அங்கே அருங்காட்சியகப் பணியாளர்கள் ஒருவருமே இல்லை. எழுதி இருக்கும் குறைவான விஷயங்களைப் படித்தாலும், அப்பகுதியின் சிறப்புகளைப் பற்றி சொல்லக் கேட்பது தான் எப்போதுமே சிறந்ததாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. சில இடங்களில் இப்படிச் சொல்பவர்கள் அப்பகுதியைச் சேர்தவராகவே இருந்தால் நிறைய நடந்த கதைகளைச் சேர்த்து சுவைபடச் சொல்வார்கள் அல்லவா! குவாலியர் சென்றிருந்த சமயத்தில் அங்கேயே வசித்த ஒருவர் மூலம் கேட்ட கதைகள் பல – சில வெளியே சொல்ல முடியாதவை என்றாலும்! இங்கே அப்படி யாரும் இல்லை. இந்த அருங்காட்சியகத்தினைப் பராமரிக்கும் சுற்றுலாத் துறையே மாற்று ஏற்பாடுகளைச் செய்தால் நல்லது.


கூரையிலும் கைவேலைப்பாடு....
அரக்கு பள்ளத்தாக்கு.

சில உணவுக் கடைகளும், நிறைய கைவினைப் பொருட்கள் கடைகளும் இங்கே அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலான கடைகள் பழங்குடி மக்களே வைத்திருக்கிறார்கள் என்றாலும், அங்கேயும் சில கடைகள் மற்றவர்களால் நடத்தப்படுகிறது – சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க, பல யுத்திகளையும் கையாளுகிறார்கள். வழக்கமான சுற்றுலாத் தலங்கள் போலவே, விலையை அதிகமாகவே சொல்கிறார்கள். மூங்கிலால் ஆன பொருட்கள் நிறையவே இருந்தன. தொப்பிகள், பெண்களுக்கான அணிகலன்கள் என விற்பனைக்கு நிறையவே உண்டு. மகளுக்கும் மனைவிக்கும் சிலவற்றை வாங்கிக் கொண்டு, மற்ற கடைகளை வேடிக்கை பார்த்தபடி நடந்தேன். 


நாந்தேன்.....!
அரக்கு பள்ளத்தாக்கு.

இங்கே சில பழங்குடியினரின் முழு உருவ பொம்மைகள் இருக்க, அவற்றுடன் நானும் நண்பரும் தனித்தனியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்! குறிப்பாக ஆறு பழங்குடிப் பெண்கள் நடனமாடுவது போன்ற முழு உருவ பொம்மைகளின் சிலைகளுக்கு நடுவே நின்று நானும் நண்பரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள, எங்களைப் பார்த்து பலரும் அங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்! ஒரு புது மணத் தம்பதியினர் அவர்கள் கையிலிருந்த கேமராவில் செல்ஃபி எடுக்க முடியவில்லையே என விசனப்பட, அவர்கள் கேமராவை வாங்கி நான் ஒரு புகைப்படம் எடுத்துக் கொடுத்தேன்! மனைவியின் தோளில் ஒரு கையும், பழங்குடிப் பெண்ணின் இடுப்பில் மற்ற கையுடன் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படம் பார்த்து புதுமணத் தம்பதிக்குள் சண்டை வந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!


தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்......
அரக்கு பள்ளத்தாக்கு.


தனியாக நான் போக... துணையொன்று கண்டேன்!
அரக்கு பள்ளத்தாக்கு.

நான்கு ஐந்து பாத்திரங்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து அவற்றைத் தலைமீது வைத்துக் கொண்டு நடப்பதைப் போன்ற ஒரு சிற்பமும் இருந்தது. இப்படி பல இடங்களுக்கும் சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அரங்குகளைப் பார்த்து நாங்கள் வெளியே வர, பேருந்து காத்திருந்தது. பக்கத்திலேயே மூங்கில் சிக்கனுக்கு ஆர்டர் வாங்கிப் போன பெண்மணியும் – சுடச்சுட சிக்கன் – இலைகளில் மடித்து - பிளாஸ்டிக் பையில்! எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக்! ஆர்டர் கொடுத்தவர்கள் வாங்கிக் கொண்டு பேருந்தில் ஏறிக்கொள்ள பேருந்து புறப்பட்டது – சிக்கன் வாசத்தோடு! அடுத்ததாய் மதிய உணவு தான் என்றாலும் சிலருக்கு பொருக்கவில்லை! பேருந்திலேயே மூங்கில் சிக்கனைத் தனியாக சுவைக்க ஆரம்பித்து இருந்தார்கள்!

அடுத்ததாய் எங்கே சென்றோம், அங்கே கிடைத்த அனுபவம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


38 கருத்துகள்:

 1. ஆகா.. அழகான படங்கள்.
  அரக்குப் பள்ளத்தாக்கில் சுற்றித் திரிவது போல இருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 2. படங்களுடன் பதிவு சுவாரஸ்யம். உங்கள் நாட்டிய போஸும் ஸூப்பர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 4. பத்மாபுரம் அரண்மனையைப் // வெங்கட்ஜி அரண்மனை?!!! கார்டனை அப்படிச் சொல்லியிருக்கிறீர்களோ?!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. மாற்றி விட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 5. சில உணவுக் கடைகளும், நிறைய கைவினைப் பொருட்கள் கடைகளும் இங்கே அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலான கடைகள் பழங்குடி மக்களே வைத்திருக்கிறார்கள் என்றாலும், அங்கேயும் சில கடைகள் மற்றவர்களால் நடத்தப்படுகிறது – சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க, பல யுத்திகளையும் கையாளுகிறார்கள். வழக்கமான சுற்றுலாத் தலங்கள் போலவே, விலையை அதிகமாகவே சொல்கிறார்கள். மூங்கிலால் ஆன பொருட்கள் நிறையவே இருந்தன. // ஆம் ஜி! விலை ரொம்பவே அதிகம்...அதனால் விண்டோ ஷாப்பிங்க் தான் செய்தோம்...பெண் குழந்தைகள் என்றால் அங்கு வாங்குவதற்கு நிறையவே இருக்கின்றன!!!!!!

  கள் எடுக்கும் உங்கள் புகைப்படம் அருமையாக வந்துள்ளது. நான் எடுத்தது இந்த அளவிற்குத் தெளிவாக வரவில்லை. எடுத்த கோணம் சரியாக இல்லாததால்...இன்னும் சுற்றி புல்தரையில் இறங்கி எடுக்க நினைத்தேன்...ஆனால் எடுக்க முடியவில்லை..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண் குழந்தைகளுக்கு வாங்குவதற்கு நிறையவே இருக்கின்றன. உண்மை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 6. இந்த அருங்காட்சியகம் பார்க்க வேண்டிய ஒன்று. அரங்கிற்குள் நிறைய மாடல்கள் மிக அழகாக வைத்திருக்கிறார்கள் என்றாலும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லையே..முதலில் நான் தெரியாமல் எடுத்துவிட்டேன். அப்புறம் அங்கு இருந்த அறிவிப்பைப் பார்த்ததும் எடுக்கவில்லை....என்னுடன் வந்தவர்களிடமிருந்து எனக்குத் திட்டு விழுந்தது வேறு விஷயம்!! அறிவிப்பைப் பார்க்காமல்....ஹிஹிஹிஹி...

  உங்கள் படங்கள் மிக அழகாக இருக்கின்றன..வெங்கட்ஜி!!! உங்கள் டான்ஸ் ஹஹஹ நல்லாருக்கே இந்த போஸும்!!!! தொடர்கிறோம்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் சென்றபோது படம் எடுக்கக்கூடாது என்ற அறிவிப்பு இல்லை! அங்கே பணிபுரிபவர்களும் இல்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 7. இட்லிப்பூ கீழிருந்து மூன்றாவது படம் ரசித்தேன் ஜி

  தமன்னா இணைப்பு தவறு ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது இணைப்பினைச் சேர்த்து விட்டேன் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 8. காட்சிகளும், காட்சி படுத்தப்பட்ட விசயங்களும் ...சுவாரஸ்யம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 9. ஆதி அண்ணி....... இங்க பாருங்க அண்ணன் ரெண்டு பொண்ணுங்கக்கூட டான்ஸ் ஆடுதாப்புல. டில்லில இருந்து கூப்பிட்டுக்கோங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா கிளம்பிட்டாய்ங்கய்யா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. அழகான படங்கள்.
  படக்காட்சிகளுக்கு காட்சி விவரிப்பு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

   நீக்கு
 13. இந்த டூரில் நீங்க மட்டும் போனீங்க ....சரியா ,இல்லைன்னா இப்படி போஸ் கொடுக்க தைரியம் வருமா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலான பயணங்கள் தனியே தான்! மனைவியுடன் செல்வது குறைவு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 15. புகைப்படங்களுடன் வர்ணித்த விதம்
  முழுமையாக அந்தச் சூழலை உணர வைத்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 16. அனைத்து புகைப்படங்களும் அருமை! வெங்கடகிருஷ்ணன் ஆன வெங்கடராமன் புகைப்படமும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கடகிருஷ்ணன் ஆன வெங்கடராமன்! :) அட வெறும் சிலைதாம்பா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 17. இவையெல்லாம் அண்மைக் கால சேர்க்கைகளா நாங்கள் 1977ம் ஆண்டு வாகில் ஒரு
  பிக்னிக்காகச் சென்றோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவிலேயே எழுதி இருக்கிறேன் ஐயா - 1996-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 18. நேரில் பார்ப்பது போல் இருக்கிறது தங்களின் புகைப்படங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....