திங்கள், 31 ஜூலை, 2017

மண்ணில்லை பெண் – சிறுகதைத் தொகுப்பு - நிர்மலா ராகவன்


படம்: இணையத்திலிருந்து....

பத்து சிறுகதைகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு மண்ணில்லை பெண். மலேசியாவில் வசிக்கும் நிர்மலா ராகவன் என்பவரின் எழுத்தில், 62 பக்கங்கள் கொண்ட இந்த சிறுகதைத் தொகுப்பு WWW.FREETAMILEBOOKS.COM தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்கலாம். இத்தொகுப்பின் சில கதைகலிளிருந்து எனக்குப் பிடித்த சில வரிகள் இங்கே ஒரு முன்னோட்டமாக!

ஞாயிறு, 30 ஜூலை, 2017

தக்காளி விலை – புதிய காய்கறிகள் வாங்கலாம்!தக்காளி விலை கிலோ நூறு ரூபாய்க்கு விற்கிறது தலைநகரில். வெங்காயத்தின் விலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏறுமுகத்தில்….. அப்போது தான் ஹரியானா நண்பர் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது – அது எங்கள் கிராமங்களில் தக்காளிக்கு பதில் காச்ரி என அழைக்கப்படும் காயைப் பயன்படுத்திக் கொள்வோம் என்று சொன்னது! இந்தக் காயைப் பற்றியும், அதில் செய்யப்படும் சட்னி பற்றியும் ஏற்கனவே ஒரு முறை எனது பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் – படிக்காதவர்கள் வசதிக்காக இங்கேயும் அப்பகிர்வின் இணைப்பு!

சனி, 29 ஜூலை, 2017

பழங்குடிமக்கள் அருங்காட்சியகம் – அரக்கு பள்ளத்தாக்கு


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 12

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


அருங்காட்சியகத்தின் நுழைவாயில்...
அரக்கு பள்ளத்தாக்கு.


கள் எடுப்போம்... கள் குடிப்போம்...
அரக்கு பள்ளத்தாக்கு.

பத்மாபுரம் தோட்டத்தைப் பார்த்த பிறகு நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம் பழங்குடிமக்கள் அருங்காட்சியகம். அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் பல பழங்குடி இனத்தவர்கள் இருந்தாலும், கௌடு இனத்தவர்கள் தான் இங்கே அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. பழங்குடி இனத்தவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் உடை, உணவு, நடனங்கள், பழக்க வழக்கம் என பலவற்றையும் காட்சிப்படுத்த ஒரு இடம் தேவை என்பதை உணர்ந்து இந்தப் பகுதியில் ஒரு அருங்காட்சியகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது ஆந்திர அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை. அமைக்கப்பட்ட வருடம் 1996. பல விஷயங்கள் இங்கே பார்க்க உண்டு என்பதால் அரக்கு பள்ளத்தாக்கு செல்லும் போது தவிர்க்கக் கூடாத ஒரு இடம் இந்த அருங்காட்சியகம். வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

வெள்ளி, 28 ஜூலை, 2017

ஃப்ரூட் சாலட் 202 – தேன்கூட்டில் – பேப்பர் சிலைகள் – காத்திருப்பு!

இந்த வாரத்தின் குறுஞ்செய்தி:எல்லாப் பயணங்களும் நாம் நினைத்த இடத்தில் முடிவதில்லை…..  வழி தவரும் சில பயணங்கள் தான் நமக்கு வாழ்க்கையின் பல பாடங்களை கற்றுத் தருகிறது.


வியாழன், 27 ஜூலை, 2017

மூங்கில் சிக்கன் - சாலைத் தடைகள் – அரக்கு பள்ளத்தாக்கு


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 11

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


தயாராகிறது Bamboo Chicken!
அரக்கு பள்ளத்தாக்கில்....

பத்மாபுரம் தோட்டத்தின் வாயிலுக்கு வந்தால் ஏதோ எரிகிற வாசம்… சாலையோரக் கடைகளில் ஒன்றரை அடி மூங்கில் குழாய்களை நெருப்பில் வைத்து எரித்துக் கொண்டிருந்தார்கள். அவற்றில் எதை வைத்து எரிக்கிறார்கள்…. என்ற சந்தேகம் எனக்குள். மூங்கில் குழாயின் ஒரு முனையில் சில இலைகள் வேறு திணிக்கப்பட்டிருக்கிறது? என்னவாக இருக்கும் என்ற நினைவு எனக்குள். என் சந்தேகத்தினைத் தீர்த்து வைப்பதற்காகவே ஒரு பெண்மணி எங்கள் பேருந்திற்குள் வந்தார். அரக்கு பள்ளத்தாக்கில் வசிக்கும் பழங்குடிப் பெண்மணி அவர். எங்கள் வழிகாட்டி அவரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்! 

புதன், 26 ஜூலை, 2017

அபலைகள் – திரு. கல்பட்டு நடராஜன்

திரு. கல்பட்டு நடராஜன் அவர்கள் ஒரு மிகச்சிறந்த புகைப்படக் கலைஞர். தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது படித்து பல விஷயங்களை அறிய வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் மறைந்த அவரது ஒரு கவிதை/கதைத் தொகுப்பினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. WWW.FREETAMILEBOOKS.COM தளத்தில் அவரது அபலைகள் கவிதை/கதைத் தொகுப்பை மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். அத்தொகுப்பினை வாசித்த அனுபவமும், மின்புததகத்திலிருந்து நான் ரசித்த சில கவிதைகளும் கதைகளிலிருந்து சில வரிகளையும் இப்பதிவில் பார்க்கலாம். 

செவ்வாய், 25 ஜூலை, 2017

அரக்கு உங்களை வரவேற்கிறது – பத்மாபுரம் தோட்டம்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 10

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


பூமழை பொழிந்தது...
அரக்கு பள்ளத்தாக்கில்....


அரக்கு இரயில் நிலையம் - அறிவிப்புப்பலகை
அரக்கு பள்ளத்தாக்கில்....

நான்கு மணி நேர இரயில் பயணம் முடிந்து நாங்கள் அரக்கு இரயில் நிலையத்தினை அடைந்தபோது காலை மணி 11.00. அரக்கு நிலையம் எங்கள் அனைவரையும் வரவேற்றது – சில்லென்ற காற்றுடன்! இரயில் நிலையத்தின் வெளியே மரங்கள் அடர்ந்திருக்க அவற்றில் இருந்த சிகப்புப் பூக்கள் எங்கள் மீது மழைபோல் பொழிந்தன! ஆஹா என்ன வரவேற்பு என்று மேலே பார்க்க, குரங்கார் உட்கார்ந்து கொண்டு மரக் கிளைகளை ஆட்டிக் கொண்டிருந்தார்! பூமாரி பொழிந்த குரங்காருக்கு நன்றி சொல்லி எங்கள் வழிகாட்டி என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கக் காத்திருந்தோம். இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கூட்டமாய் நிற்க, இரயிலில் எங்களுடன் வந்த ஆந்திரப் பிரதேச சுற்றுலா நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரும் இருந்தார்கள்.

திங்கள், 24 ஜூலை, 2017

சாப்பிட வாங்க: ஆம் கா சுண்டா – ஆதி வெங்கட்


குஜராத் பயணங்களில் தேப்லாவுடன் ஆம் கா சுண்டா சாப்பிட்டதுண்டு. ஒரு குஜராத்தி நண்பரிடம் சொல்ல, அவரது மனைவியின் கைப்பக்குவத்தில் ஆம் கா சுண்டா ஒரு பாட்டில் நிறைய தந்தார். சில நாட்கள் வரை பழேத்துப் பொட்டியில் [இந்தப் பதம் தெரியாதவர்களின் வசதிக்காக – Refrigerator என்பதே பழேத்துப் பொட்டி!] வைத்து, சப்பாத்தி, அன்று செய்த சப்ஜியுடன் இரண்டாவது தொட்டுக்கையாக ஆம் கா சுண்டா வைத்து சாப்பிட்டதுண்டு! அந்த ஆம் கா சுண்டா எப்படிச் செய்வது? கீழே இருக்கிறது சூட்சுமம்!

ஞாயிறு, 23 ஜூலை, 2017

ஸ்ரீமுகலிங்கம் – சிற்பங்கள் – புகைப்படத் தொகுப்பு


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரில் பார்த்த ஸ்ரீமுகலிங்கம் பதிவு உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்பதிவில் பகிர்ந்து கொண்ட படங்கள் தவிர வேறு படங்களும் இந்த ஞாயிறில்…..

அங்கே இருந்த சிற்பங்கள் – எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள்! பார்க்கப் பார்க்க திகட்டாதவை. அப்பதிவிலேயே நிறைய படங்கள் பகிர்ந்திருந்தாலும், விடுபட்ட சில படங்கள் இப்பதிவில் உங்கள் ரசனைக்காக!


சனி, 22 ஜூலை, 2017

இரயில் ஸ்னேகம் – அரக்கு பள்ளத்தாக்கு – இரயில் காதலன்…


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 9

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...


சரக்கு இரயிலும், பாசஞ்சரும்....
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...

காலை ஏழு மணிக்கு விசாகப்பட்டினத்திலிருந்து புறப்படும் K K Line – பாசாஞ்சர், இடையில் இருக்கும் எல்லா இரயில் நிலையங்களிலும் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டும், இறக்கி விட்டும் தான் தொடர்ந்தது. பாசஞ்சர் இரயிலில் பயணிப்பது கொஞ்சம் அலாதியான விஷயம். பல விதமான மனிதர்கள், காட்சிகள், இரயிலை நம்பியே இருக்கும் விற்பனையாளர்கள், இரயிலில் போகும் நபர்களைப் பார்த்து ஏங்கி கை அசைக்கும் கிராமத்து சிறுவர்கள் என ஒவ்வொன்றும் இரசிக்க வேண்டிய விஷயம். ஒவ்வொரு நிலையத்திலும் நின்று செல்கிறதே, எவ்வளவு நேரமா இப்படியே போகும், வேகமா போனா என்ன என்று யோசிப்பவர்களுக்கு இந்த  பாசஞ்சர் பயணங்கள் சரி வராது! ஆனால் இப்படி நின்று நின்று பயணிப்பதும் ஒரு சுகம் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு ஜாலி தான்!

வெள்ளி, 21 ஜூலை, 2017

தங்க மகன் – ரஜினிகாந்த் அல்ல – பாபா….தங்க மகன், தங்கத் தாரகை என்றெல்லாம் தங்கத்தினை அடைமொழியாக வைத்து சிலரை அழைப்பது நம் ஊரில் வழக்கம் தானே… முன்னாள் முதல்வர், மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களுக்குக் கூட, தங்கத் தாரகை விருது வழங்கப்பட்டதாக நினைவு [உக்ரைன் நாட்டில் உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு, பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்து வரும் பணிகளைப் பாராட்டி அவருக்கு இந்தத் தங்கத்தாரகை விருது வழங்கியது – கொடுத்தது 2004-ஆம் ஆண்டு!]. நடிகைகள் சிலரையும் தங்கத் தாரகை என்று அடைமொழி கொடுத்து அழைப்பது நமது பத்திரிக்கைகளின் வழக்கம்! நான் இன்று சொல்லப் போவது தங்கத் தாரகை பற்றி அல்ல! தங்கத் தாரகன் என்று வேண்டுமானால் சொல்லலாம்!

வியாழன், 20 ஜூலை, 2017

சிக்கு புக்கு ரயிலே – அரக்கு பள்ளத்தாக்கு நோக்கி ஒரு பயணம்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 8

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு.....
அரக்கு நோக்கிய பயணம்

இப்பயணத்தின் இரண்டாம் நாள் – இப்பயணத்திற்கான முக்கிய காரணமும் இந்த இரண்டாம் நாளில் போகப்போகும் இடம் தான் – அந்த இடம் – அரக்கு பள்ளத்தாக்கு! விசாகபட்டினம் நகரிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கும் மலைத்தொடரில் இருக்கிறது அரக்குப் பள்ளத்தாக்கு! இங்கே சாலை வழியாகவும், இரயில் பாதையிலும் செல்ல முடியும். சில தனியார் சுற்றுலா நிறுவனங்களும் இங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்றாலும் நாங்கள் தேர்ந்தெடுத்தது ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை மூலமாகத் தான் அரக்கு நோக்கிய பயணத்தினை மேற்கொள்ள தேர்ந்தெடுத்திருந்தோம்.

புதன், 19 ஜூலை, 2017

கல்யாணியைக் கடித்த கதை – பொன்வீதி – மோகன்ஜி!வானவில் மனிதன்” எனும் வலைப்பூவில் எழுதி வருபவர் மோகன்ஜி அவர்கள். வலைப்பூவில் அவர் எழுதிய கதைகள், கவிதைகள் என அனைத்துமே ஸ்வாரஸ்யமானவை. உற்சாகம் தரும் பல கருத்துப் பரிமாற்றங்களை அங்கே காண முடியும். ஒவ்வொரு பதிவு எழுதிய நாளிலிருந்து தொடர்ந்து அந்தப் பதிவுகளில் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள் பல விஷயங்களை நமக்கு எடுத்துச் சொல்லும். சுப்பு தாத்தா, சிவகுமாரன், மன்னை மைனர் RVS, பத்மநாபன், சுந்தர்ஜி, அப்பாதுரை, ஸ்ரீராம், கீதாம்மா [திருமதி கீதா சாம்பசிவம்], வை.கோ., மூவார் முத்து என மோகன்ஜி அவர்களால் அழைக்கப்படும் ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்கள், நிலாமகள் என பலரும் அங்கே அடித்து விளையாடுவார்கள் – கருத்துப் பரிமாற்றங்களில் தான்!  ஒவ்வொரு பதிவுக்கும் வரும் பின்னூட்டங்கள் நூற்றுக்கு மேல் இருக்கும்! அனைத்துமே ஸ்வாரஸ்யமானவை. படிக்கும் நமக்கு உற்சாகம் தருபவை.

செவ்வாய், 18 ஜூலை, 2017

இரவு உணவு, சங்கம் சரத் திரையரங்கம், விசாகப்பட்டினம் தமிழ் பதிவர்அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 7

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!

இந்தப் பயணத்தின் முதல் நாள், சிம்ஹாசலம், ஸ்ரீகூர்மம், ஸ்ரீமுகலிங்கம், ஸ்ரீஇராஜராஜேஸ்வரி கோவில் என பல இடங்களுக்கும் சென்று நாங்கள் விசாகப்பட்டினம் திரும்பிய போது இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. மதிய உணவினை ஸ்ரீகாகுளம் பகுதியில் சாப்பிட்டோம் என்றால் இரவு உணவு விசாகப்பட்டினம் நகரில்.  நாங்கள் தங்கியிருந்தது கோனார்க் லாட்ஜ் எனும் இடத்தில்.  இரயில் நிலையத்திற்கு சற்றே அருகில் அமைந்திருக்கும் சங்கம் சரத் திரையரங்கத்திற்கு பின் புறம் தான் இந்த கோனார்க் லாட்ஜ் இருந்தது. சுற்றிலும் நிறைய கடைகளும், பெரிய மால்களும் இருந்தன என்றாலும் உணவகம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.  சில உணவகங்களில் மக்கள் அதிக அளவில் இருக்க, ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார்கள்.

திங்கள், 17 ஜூலை, 2017

சுன்னுண்டலு! – உளுந்து உருண்டை – ஆதி வெங்கட்

உளுந்து உருண்டை....

ஒவ்வொரு திங்களன்றும் “எங்கள் பிளாக்” பக்கத்தில் ”திங்க”க் கிழமை என்று தலைப்பிட்டு ஏதாவது ஒரு உணவு பற்றிய செய்முறைக் குறிப்புகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.  ‘திங்க’க் கிழமை பதிவுகளுக்கு போட்டியா இந்த ‘திங்க’க் கிழமை நீங்களும் ஒரு சமையல் குறிப்போட வந்திருக்கீங்களா என்று என்னிடம் யாரும் கேட்க வேண்டாம். It’s just a coincidence! கோவை2தில்லி வலைப்பூவில் எழுதி வந்த என்னவள் இப்போதெல்லாம் எழுதுவது குறைந்துவிட்டது. அப்படியே எழுதினாலும் அது முகநூலில் மட்டுமே! சரி அவங்க வலைப்பூவில் எழுதவில்லை என்றாலும், முகநூலில் எழுதுவதை என்னுடைய வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்திருக்கிறேன்.  அப்படி ஒரு பகிர்வு இந்த ‘திங்க’க் கிழமையில்!

ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஸ்ரீகூர்மம் – ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் - படத்தொகுப்பு


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் ஒரு பகுதியாக ஸ்ரீகூர்மம் கோவில் பற்றிய பதிவில் அங்கே எடுத்த புகைப்படங்களில் பகிர்ந்து கொள்ளாதவற்றை தனிப்பதிவாக வெளியிடுகிறேன் என்று எழுதி இருந்தேன். இதோ இந்த ஞாயிறில் முந்தைய பதிவில் வெளிவராத, ஸ்ரீகூர்மம் கோவிலில் நான் எடுத்த மற்ற புகைப்படங்கள் பதிவாக….ஸ்ரீகூர்மம் கோவில் – கருட வாகனம்....

சனி, 15 ஜூலை, 2017

ஆயிரத்து ஒன்று ஸ்ரீசக்ர மேரு – ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 6

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன்.....

ஸ்ரீமுகலிங்கம் எனும் அருமையான, புராதனமான கோவிலுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரீகாகுளம் அலுவலக ந[ண்]பர், அங்கிருந்து புறப்படும்போது ஸ்ரீகாககுளத்தில் இருக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து விசாகப்பட்டினம் செல்லலாம் என்று சொல்ல அதற்கும் சரி என்றே சொன்னோம். எப்படியும் அந்த அலுவலக ந[ண்]பரை ஸ்ரீகாகுளத்தில் இறக்கி விட வேண்டும் [அவரது பைக் நாங்கள் மதியம் சாப்பிட்ட உணவகத்தில் நிறுத்தி இருக்கிறதே!] அதனால் நாங்கள் அவர் சொன்ன இடத்திற்கும் சென்று பிறகு விசாகப்பட்டினம் நோக்கிய பயணத்தினைத் தொடரலாம் என்று சொல்ல, எங்கள் வாகனம் அவர் வழிகாட்டலில் ஸ்ரீகாகுளத்திலுள்ள ஒரு இடத்திற்குச் சென்றது.  அந்த இடம்…..

வெள்ளி, 14 ஜூலை, 2017

ஃப்ரூட் சாலட் 201 – Back Again – Big Boss – GST – பல்பு!


மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஃப்ரூட் சாலட்! ஏப்ரல் ஏழாம் தேதி அன்று ஃப்ரூட் சாலட் 200-வது பகுதி எழுதி, இத்துடன் இந்தப் பகுதியை நிறுத்திக் கொள்ளப்போவதாக அறிவித்து இருந்தேன். தொடர்ந்து ஐந்து வருடங்களாக வாரத்திற்கு ஒன்றாக எழுதி வந்த பகிர்வுகள் – ஒன்றிரண்டு வாரங்கள் தவிர மற்ற எல்லா வாரங்களிலும் இந்தப் பெயரில் பல விஷயங்களைத் தொகுத்து வந்திருக்கிறேன். கடைசி என்று சொன்னபோதே பதிவில் கருத்திடும் நண்பர்கள் – நிறுத்த வேண்டாமே, கொஞ்சம் ப்ரேக் விட்டு பிறகு தொடரலாமே என்றும் எழுதி இருந்தார்கள்.  மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இதோ மீண்டும் ஃப்ரூட் சாலட்!  இரண்டாவது இன்னிங்ஸ் தொடர்கிறது!

வியாழன், 13 ஜூலை, 2017

ஸ்ரீமுகலிங்கம் – பாழடைந்த கோவிலும் அழகிய சிற்பங்களும்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 5

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - ஆதவன் மறையும் சமையத்தில்....


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - செல்லும் பாதையில் கண்ட காட்சி ஒன்று..... 

புதன், 12 ஜூலை, 2017

கதை சொல்லு பொன்னம்மா – நிலாமகளின் சுழல்

கதை கேட்டுத் தூங்கிய இரவுகளும், கதைகளால் விழிப்படைந்த பகல்களும்….

”கதை சொல்வது மற்றும் கேட்பதன் ஆதிருசியை உணர்ந்தது அவரவர் தாயின் அரவணைப்போடான தூங்கச் செய்யும் தருணங்களன்றி வேறென்ன? சிலருக்குப் பாட்டி, சிலருக்கு அத்தை, சிலருக்கு அப்பா…. எனக் கதை சொல்லும் உறவுமுறை வேண்டுமானால் சமயங்களில் மாறுபடலாம். ஆனால் கதை கேட்டுக் கேட்டுத் தூங்கிய ஆழ்மனசில் கதையின் மேலான ஈர்ப்பு நிரந்தரமாகிவிடுகிறது. ஆக நம்மில் பலருக்கு சிறுபிராயத்தில் அருகில் படுத்து, முதுகைத் தட்டி, தலையைக் கோதி, கால்களை வருடி, தூக்கத் துணையாகும் உறவொன்று நீங்காமல் நிலைத்திருக்கும் மனசின் ஆழத்தில், வாழ்தலில் நிறைந்துள்ள நல்லது கெட்டதுகளை தான் சொல்லும் கதையும் பொதிந்து கூறித் தூங்கச் செய்த அவ்வுறவின் உயிர்ப்பு நாம் வாழும் வரை வரும் இரவுகளில் வருடிச் செல்லும் நம்மை……”

செவ்வாய், 11 ஜூலை, 2017

ஸ்ரீகூர்மம் – முதலில் சிங்கம் இரண்டாவதாக ஆமை!அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 4

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


படம்: ஸ்ரீகூர்மம் நோக்கி ஒரு பயணம்


படம்: ஸ்ரீகூர்மம் - கோவிலுக்குச் செல்லும் பாதையில் நுழைவாயில்...

சிம்ஹாசலத்தில் திவ்ய தரிசனம் பெற்ற பிறகு எங்களுக்கு வழிகாட்டியாக வந்த நண்பர் பாதி வழியில் இறங்கிக் கொண்டார். நாங்கள் தொடர்ந்து பயணித்தோம். அடுத்ததாக நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எங்களை அழைத்துச் செல்ல வேறொரு நபரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரை வழியிலேயே அழைத்துக் கொள்ள வேண்டும் என ஓட்டுனருக்கு முன்னரே சொல்லி இருக்கிறார்கள் என்பதால் நேராக அந்த இடத்திற்கு வாகனத்தினைச் செலுத்தினார் ஓட்டுனர் – இளைஞராக இருந்தாலும் சிறப்பாக வாகனத்தினைச் செலுத்திக் கொண்டு வந்தார் – பேச்சே கிடையாது! வழியில் ஒரு உணவகத்தில் அந்த நபர் தனது இரு சக்கர வாகனத்துடன் காத்திருக்க, வண்டியை அந்த உணவகத்தில் விட்டுவிட்டு, மதியம் ஆனதால் அதே உணவகத்தில் அனைவரும் மதிய உணவினை முடித்துக் கொண்டோம். நல்ல ஆந்திரா காரத்தோடு தாலி மீல்ஸ்!

திங்கள், 10 ஜூலை, 2017

ஏழு கடல், ஏழு மலை தாண்டி – எம்டி என்.எல்ஏழு கடல், ஏழு மலை தாண்டி....
படம்: இணையத்திலிருந்து.....

சிறு வயதில் கேட்ட/படித்த மாயாஜாலக் கதைகளில் அரக்கன் தூக்கிக் கொண்டு போன இளவரசியைக் காப்பாற்ற யாருமே இல்லையா என நாட்டு மன்னர் கதறியபடியே “இளவரசியை அரக்கனிடமிருந்து காப்பாற்றி யார் அழைத்து வருகிறாரோ, அவருக்கு தனது தேசத்தில் பாதியைத் தந்து, தனது ஆசை மகளான இளவரசியையும் திருமணம் செய்து தருகிறேன்” என்று தண்டோரா போடச் செய்வார். தன் மீது அதீத நம்பிக்கை கொண்ட இளைஞன் ஒருவன் ”இதோ வந்தேன் மஹாராஜா”, என குதித்துக் கொண்டு புறப்படுவான் – அவனுக்குத் தெரியாது அரக்கனை அழிப்பது அத்தனை சுலபமல்ல என்பது.

ஞாயிறு, 9 ஜூலை, 2017

பேட் துவாரகா – படகுப் பயணம் ஒரு காணொளி….
பஞ்ச துவாரகா பயணத் தொடரில் பேட் துவாரகாவிற்கு பெரிய படகுகள் மூலம் சென்று வந்ததை முன்னரே எழுதி இருக்கிறேன். அந்த சுட்டி கீழே.


சனி, 8 ஜூலை, 2017

சிம்ஹாசலம் சிங்கம் – ஸ்ரீ வராஹ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 3

முந்தைய பகுதிகள்: பகுதி 2 பகுதி 1


படம்: சிம்ஹாசலம் கோவில் புறத்தோற்றம்

தங்கும் விடுதியிலிருந்து தயாராகி புறப்பட்டோம். எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில், சிம்ஹகிரி என அழைக்கப்படும் சிறிய மலை மீது அமைந்திருக்கும் ஸ்ரீ வராஹ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி குடிகொண்டிருக்கும் சிம்ஹாசலம் தான் இந்தப் பயணத்தில் நாங்கள் சென்ற முதல் இடம். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கோவில் என சில தகவல்கள் உண்டு. மஹாராஜா கிருஷ்ணதேவராயர் காலத்தில் இக்கோவிலுக்கு செய்த தானதர்மங்கள், இறைவனுக்கு அணிவித்த நகைகள், நிவந்தங்கள் என பல தகவல்கள், கல்வெட்டுகள் உண்டு. 

வெள்ளி, 7 ஜூலை, 2017

Toll Free Traveller – இப்படி பயணிக்க ஆசை!


We two – Me and my RE Thunderbird 500 – Toll Free Traveller

படம்: இணையத்திலிருந்து.....

பயணங்கள் எனக்குப் பிடித்தவை என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். பயணங்கள் மட்டுமல்ல, பயணம் செய்பவர்களையும் எனக்குப் பிடிக்கும். பயணம் செய்வதை மிகவும் விரும்பும் ஒருவர் பற்றிய தகவல் தான் இன்றைய பகிர்வு.


வியாழன், 6 ஜூலை, 2017

விமானத்தில் விசாகா – அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 2முதல் பகுதி இங்கே….


படம்: இணையத்திலிருந்து....

அரக்கு பள்ளத்தாக்கு சென்று வர வேண்டும் என முடிவு செய்தவுடனேயே நண்பர் தனது அலுவலகம் மூலமாக ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்திருந்தார். விமானத்திலும், அரக்கு பள்ளத்தாக்கு சென்று வர இரயில்/பேருந்து முன்பதிவு, அங்கே தங்க வேண்டிய இடங்கள், பார்க்க வேண்டிய இடங்கள் என எல்லாம் அவர் பொறுப்பில்! என் வேலை அவர்களுடன் சென்று சுற்றிப் பார்த்து வருவது மட்டுமே! எவ்வளவு சுலபமான வேலை இல்லையா! அதனால் பயணிக்க வேண்டிய நாள் வரை எந்தக் கவலையும் இல்லாமல் “எல்லாம் அவர் சித்தம்!” என்று சுகமாக இருந்தேன்.  பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை அவர் பார்த்துக் கொள்ள, புறப்படும் நாளிற்கு முதல் நாள் தேவையான உடைகள் மற்றும் செல்லப்பெட்டி – நமக்குச் செல்லப்பெட்டி நமது கேனன் கேமரா தானே! எடுத்துக் கொண்டு நான் தயார்! வாங்க விமானத்தில் விசாகபட்டினம் நோக்கி பயணிக்கலாம்!

புதன், 5 ஜூலை, 2017

கேக் வாங்கலையோ கேக்….. – இணையத்தில் உங்கள் தகவல்கள்!வலையுலகம் பக்கம் வராததால் இங்கே எனது பிறந்த நாளுக்கு முன் தினம் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. பிறந்த நாள் – அது வருடா வருடம் வரும் ஒரு நாள் என்பதாகத் தான் எனக்குத் தோன்றும். சிறு வயதிலிருந்தே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என பெரிதாக ஒன்றும் இருந்ததில்லை. பிறந்த நாள் அன்று கோவிலுக்குச் சென்று வரச் சொல்வார்கள். அம்மா முடிந்தால் ஒரு பாயசம் வைத்துக் கொடுப்பார் அல்லது மைசூர்பாக் செய்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடுவோம்! வெளியே யாருக்கும் இனிப்பு கொடுத்ததாகவோ, கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியதாகவோ நினைவில்லை.

செவ்வாய், 4 ஜூலை, 2017

போவோமா ஒரு பயணம் - Arakku Valley….


அடுத்த பயணம் போகலமா?
அரக்கு பள்ளத்தாக்கு நோக்கி ஒரு பயணம்....

ஹனிமூன் தேசம் பயணத் தொடர் முடித்து இரண்டு மாதம் ஆகிறது! அந்தப் பயணத் தொடர் எழுதி முடித்த இரண்டாம் நாளே இனிமேலும் பயணம் பற்றிய கட்டுரைகள் எழுத வேண்டுமா என்ற கேள்வி கேட்டு, ஒரு பதிவும் எழுதினேன். பெரும்பாலான நண்பர்கள் விரைவில் அடுத்த பயணத் தொடரை ஆரம்பிக்கச் சொல்லி ஆதரவு தந்தாலும், பயணத் தொடரை ஆரம்பிக்கவே இல்லை! நடுவே ஒரு மாதம் எந்தப் பதிவுகளும் எழுதாமல், மற்ற நண்பர்களின் பதிவுகளை படிக்காமல் நீண்ட இடைவெளி! இடைவெளிக்குப் பிறகு மூன்று பதிவுகள் எழுதிய போதும், அடுத்த பயணத் தொடர் எப்போது என்ற கேள்வி தான் நண்பர்களிடமிருந்து. இதோ அடுத்த பயணம் இனிதே துவங்குகிறது!

திங்கள், 3 ஜூலை, 2017

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! – பதிவர் சந்திப்பு – அடுத்த பயணத்தொடர்…

வந்துட்டேன்னு சொல்லு….  திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பதிவுலகம் பக்கம் வருகிறேன். வருடத்தின் ஆரம்பத்திலும், மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் தினம் தினம் ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேன். மே மாதம் ஏழே ஏழு பதிவுகள், ஜூன் மாதத்தில் மூன்று பதிவுகள் என கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை! நடுவில் ஒரு மாதம் குடும்பத்தினருடன் முழுக்க முழுக்க நேரம் செலவு செய்ய வேண்டும் என ஒதுங்கி இருக்க, தலைநகர் வந்த பிறகு அலுவலகப் பணி எழுத விடாது தடுத்தது! பிறகு இணையத்தொடர்பில் சில சிக்கல்கள் – அது பற்றி தனியாக பதிவே எழுதலாம்! பதிவுகள் எழுதுகிறேனோ இல்லையோ, மற்றவர்களின் பதிவுகளைக் கூட படிக்க இயலாத நிலை! இதோ இப்போது மீண்டும் வந்தாயிற்று!