முத்தமிழ் வாயில் - வரவேற்கும் புதுச்சேரி.....
சென்ற மாதத்தின் மூன்றாம் வாரம் –
என்னவரின் கல்லூரி நட்புகளைச் சந்திக்க ஏற்பாடு ஆகியிருந்தது – சந்திப்பு நடந்த
இடம் புதுச்சேரி. போவதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருந்து பிறகு போவதென
முடிவு செய்து புதுச்சேரிக்குப் புறப்பட்டோம். காலையில் தெரிந்த ஓட்டுனருடன்
வாகனத்தில் சொகுசான பயணம் ஆரம்பித்தது. திருச்சியிலிருந்து விழுப்புரம் வழியாக
புதுச்சேரி செல்லப் போகிறோம். காலையிலேயே வீட்டிலிருந்து புறப்பட்டதால் காலை உணவு
வழியில் தான்! திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை டோல்கேட்
தாண்டியபிறகு இருக்கும் A2B உணவகத்தில் தான் காலை உணவு. இட்லி, தோசை, என
அவரவருக்குத் தேவையானதை சாப்பிட்ட பிறகு தொடர்ந்து பயணம். பாண்டிச்சேரி எங்களை வருக
வருகவென வரவேற்றது.