அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
********
ஓவியம் - ரோஷ்ணி கார்னர்:
மகள் சமீபத்தில் வரைந்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு.....
********
வண்ணத்துப் பூச்சி பூங்கா, மேலூர், திருவரங்கம்:
ரிலாக்ஸாக ஒரு ஞாயிறு!
கண்களுக்கு விருந்தாக வண்ண வண்ண மலர்களைப் பார்க்க யாருக்குத் தான் பிடிக்காது! ரிலாக்ஸான ஞாயிறு! சீக்கிரம் சமைச்சு வெச்சுடு! நாம காலையிலேயே கிளம்பிப் போகலாம்! என்றார் என்னவர்! தமிழகத்திலேயே வெயில் எங்கே அதிகமா இருக்குன்னா அது இங்க திருச்சியில் தாங்க! சாயங்காலமா வெயில் இல்லாத போது போகலாம்னா அந்த இடத்தை 5 மணியோடு மூடிடுவாங்களாம்! சரி! எங்கே தான் போறோம்??
ஆசியாவிலேயே வண்ணத்து பூச்சிகளுக்காக அவற்றை பராமரிக்கவும், இனப்பெருக்கத்தை உருவாக்குவதற்கும் என 25 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்ட ஒரு மிகப்பெரிய பூங்கா! இங்கே வண்ண வண்ண மலர்கள், பலவகை மரங்கள், செயற்கை நீரூற்றுகள், குளம், நட்சத்திர வனம், ராசி வனம், மூலிகை வனம், குழந்தைகளுக்கான பூங்கா என சுற்றிப் பார்க்கவும், நேரத்தை இனிமையாக செலவிடவும் நிறைய விஷயங்கள் இங்கே உள்ளது!
எங்கள் வீட்டிலிருந்து 6 அல்லது 7 கிமீ தூரத்தில் தான் இந்த அழகிய பூங்கா அமைந்திருக்கிறது! நாங்களும் இங்கே சிலமுறை சென்றிருக்கிறோம் என்றாலும், இப்போ இங்கே எதற்காக சென்றோம் என்றால் இந்த சீசனில் நிறைய மலர்கள் பூத்துக் குலுங்குவதால் வண்ணத்து பூச்சிகளின் வரவும் அதிகமாகி இருப்பதாக செய்தி வந்ததாகச் சொல்லிக் கொண்டிருந்தார் என்னவர்!
நுழைவுக் கட்டணமாக இங்கே நபர் ஒருவருக்கு 40ரூ வீதம் வசூலிக்கிறார்கள்! காலை 9மணி முதல் மாலை 5மணி வரை திறந்திருக்கும்! செவ்வாய் அன்று விடுமுறை! வார இறுதிகளில் குடும்பத்துடன் வருவோரும், வார நாட்களில் பள்ளி அல்லது கல்லூரியையோ ஆஃபீஸையோ கட் அடித்து விட்டு காதலர்களும்(!!??) அதிகமாக காணப்படுவர்!
அங்க பாருடா செல்லம் மயில்! எவ்வளவு அழகா இருக்கில்ல!
அப்பா! அதுக்கு இங்க்லீஷ்ல peacockன்னு பேரு தெரியுமா? எங்க மிஸ்ஸு சொன்னாங்க!
அப்படியாடா செல்லம்!
இப்படியாக பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்த ஒரு அப்பா மற்றும் அவரது சின்னஞ்சிறு மகளின் சம்பாஷனைகளை ரசித்த வண்ணம் நாங்களும் மெல்ல மெல்ல பூங்காவின் அழகினுள் மூழ்கிப் போனோம்! ஏராளமான அரிய வகை மரங்களும், பூத்துக் குலுங்கும் மலர்களும், ஆங்காங்கே நமக்கு காட்சித் தரும் தோகை மயிலும், ஓடி ஒளியும் அணிலும் என இயற்கையில் அழகில் கட்டுண்டோம்!
என்னோட நட்சத்திரத்துக்கு என்ன மரம் தெரியுமா? வேம்பு! நம்ம வீட்டு வாசல்லயே இருக்கு! சரி! உங்களோட நட்சத்திரத்துக்கு என்னன்னு பார்ப்போமா? சிறுநாங்கு! இப்படி நட்சத்திர வனம், ராசி வனம், நீரூற்று என சுற்றி வந்து ஆங்காங்கே குடில் போல அமைத்திருக்கும் அமைப்பில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து கொண்டதும் அருகில் உள்ள மூங்கில் காட்டிலிருந்து காற்றடிக்கும் போது வரும் ஒரு ஒலி ரசிக்கவும் வைத்தது! உன்னித்து கவனிக்கவும் வைத்தது!
இந்த மாதிரி இடத்துல மனசுக்கு இதமா ஒரு பாடல் கேட்டா எப்படி இருக்கும்? இல்லன்னா ஒரு புக்கை வாசிச்சோம்னா நல்லா இருக்குமில்ல?
ம்ம்ம்! ஒண்ணு பண்ணுவோம்! முடியும் போதெல்லாம் காலையிலேயே இங்க வந்து ஒரு இடத்த பார்த்து உட்கார்ந்துப்போம்! சுத்திப் பார்க்க எல்லாம் வேணாம்! சாயந்திரம் வரைக்கும் புத்தகம் படிச்சிண்டோ, பாட்டு கேட்டுண்டோ இயற்கைய ரசிக்கலாம்! நிஜமாவே ரொம்ப ரிலாக்ஸா இருக்கும்!
ம்ம்ம்! ஆமா நல்லாருக்கும்!
வீட்டில இருந்தா இந்த ரெண்டு மணிநேரத்துல வெட்டியா ரீல்ஸ் தான் பார்த்துண்டு இருந்திருப்போம்! இல்லையா? என்றார் என்னவர்!
அன்று கால்கள் ஓயும் வரை பூங்காவினுள் வலம் வந்து நேரத்தை நாங்கள் இனிமையாக செலவிட்டோம்! மரங்கள் அடர்ந்து காணப்பட்டதால் வெயில் கூட அந்த இடத்தில் பெரிதாக தெரியவில்லை என்று தான் சொல்லணும்!
நீங்களும் வாய்ப்புக் கிடைத்தால் திருவரங்கத்தின் மேலணைக்கட்டு அருகே அமையப் பெற்றுள்ள இந்த வண்ணத்துபூச்சி பூங்காவினைக் காண வாருங்கள்!
********
ஜெயமோகன் புத்தகம் - மண் - மகளின் வாசிப்பனுபவம்:
A book always takes you to another world in a short span of time and more than that it exactly makes you a character in the story.
I recently completed reading this book "மண்" - penned by writer Jeyamohan. It consists of a list of short stories, where each story makes you reach the seat edge!
Two of the stories stayed in my heart - மண் & டார்த்தீனியம்.
மண் - a story where the whole village lives in complete drought. The way the author described how the people's appearance by time makes you feel like getting crumbled into pieces is insane.
டார்த்தீனியம் - You might have heard about the plant Parthenium. Similarly , a happy family gets destroyed by this plant. Usually , growing plants creates a good environment - but now it makes me feel a bit scared..
Do experience this book when you want to get drowned into a new world...
**********
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
19 ஆகஸ்ட் 2026














இன்றைக்கு மகள் வரைந்த ஓவியத்தை மிகவும் ரசித்தேன். ரொம்ப நல்லா வரைந்திருக்கிறாள். அந்தப் பெண் வருத்தத்தில் இருக்கும்போது கிருஷ்ணன் ஆறுதல் சொல்றானா? கண்ணில் நீர் வருதா இல்லை பெண் சோகத்தில் இருக்கிறாள் போலும் என்றெல்லாம் தோன்றியது. அருமையாக வரைந்திருக்கிறாள்
பதிலளிநீக்குவண்ணத்துப் பூச்சி பூங்காவின் மலர்களின் புகைப்படங்கள் அழகாகவும் கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கு.
பதிலளிநீக்குஆமாம் வண்ணத்துப்பூச்சி எங்கே? எனக்குத்தான் தட்டுபடலையா?
திருச்சிப் பக்கம் எந்தச் சமயத்தில் வந்தால் வெயில் இல்லாமல் இருக்கும் என்று யோசிக்கிறேன். அப்பா... என்னா வெயிலு அங்கே