வியாழன், 31 ஆகஸ்ட், 2017

கோனார்க் – சூரியனார் கோவில் – அற்புதச் சிற்பங்கள் - அழிவின் விளிம்பில்….அரக்கு பள்ளத்தாக்குபகுதி 24

பகுதி 23 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!
கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

Bபிரஜா தேவி கோவில் தரிசனம் முடித்த பிறகு, கோவில் அமைந்திருக்கும் ஜாஜ்பூரிலிருந்து நாங்கள் தங்கியிருந்த புவனேஷ்வர் நகருக்கு வந்து சேர்ந்தோம். இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு நல்ல ஓய்வு. நாள் முழுவதும் பயணமும், அலைச்சலும் இருக்கும் போது, இரவு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்வது மிக முக்கியம். அப்போது தான் அடுத்த நாள் பயணிக்கவும், இன்னும் சில இடங்கள் பார்க்கவும் நமக்கு உடல் ஒத்துழைக்கும்.  பெரும்பால பயணிகள் இரவு வெகு நேரம் உறங்காமல் இருந்து அடுத்த நாள் திண்டாடுவார்கள் – பல குழுக்களில் பயணித்திருப்பதால் அப்படி அவதிப்படும் சிலரைப் பார்த்த அனுபவம் உண்டு! நல்ல உறக்கத்திற்குப் பிறகு நாங்கள் அடுத்த நாள் தங்க முக்கோணம் என அழைக்கப்படும் மூன்று நகரங்களில் [புவனேஷ்வர், கோனார்க், பூரி] இரண்டாம் நகரமான கோனார்க் நோக்கி பயணித்தோம்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

Bபிரஜா தேவி - விரஜா க்ஷேத்திரம் – நாபி கயா - ஜாஜ்பூர்


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 23

பகுதி 22 படிக்காதவர்கள் படிக்க.....

ராம் மந்திர் – ராஜா ராணி கோவில்


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


Bபிரஜா தேவி - முக தரிசனம்
ஜாஜ்பூர், ஒடிஷா.


Bபிரஜா தேவி - முழு அலங்காரத்தில்....
ஜாஜ்பூர், ஒடிஷா.

ஒடிஷாவின் தலைநகரான புவனேஷ்வரிலிருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கோவில் தான் எங்களுடைய அடுத்த இலக்காக இருந்தது.  ஒடிஷாவில் அமைந்திருக்கும் இந்த ஷக்தி பீடக் கோவில் மிகவும் பழமையானது. தற்போது அமைந்திருக்கும் கோவில் 13-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்று சொன்னாலும், அதனினும் பழமையான கோவில் என்றும் பல புராணங்களில் இக்கோவில் பற்றிய குறிப்புகள் உண்டு என்றும் தெரிகிறது. ஷக்தி பீடம் என்பதைத் தவிர இக்கோவிலை நா[B]பி [G]கயா என்றும் அழைக்கிறார்கள்.  வாருங்கள் கோவிலுக்குச் செல்வோம், கூடவே சில கதைகளையும் பார்க்கலாம்! வழக்கம் போல நான் எடுத்த புகைப்படங்களும் ஆங்காங்கே பார்க்கக் கிடைக்கும்!

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

மோதகம் வேணுமே....

அன்பின் நண்பர்களுக்கு,

இனிய காலை வணக்கம்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். தமிழகத்தில் அனைவரும் உற்சாகமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நான் அலுவலகம் சென்று கொண்டிருக்கிறேன்..... மோதகம் பிள்ளையாருக்கு மட்டுமல்ல எனக்கும் பிடிக்கும்.... தருவார் தான் யாருமில்லை....

எங்கும் "கணபதி  Bபப்பா மோரியா" எனும் குரல்களைக் கேட்க முடிகிறது..... நானும் குரல் கொடுக்கிறேன்......


கணபதி  Bபப்பா மோரியா....
மோதகம் ஒன்றை தாரீயா....

மீண்டும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

மகள் வரைந்த விநாயகர் ஓவியம் கீழே....


நட்புடன்...

வெங்கட்
புது தில்லி.


வியாழன், 24 ஆகஸ்ட், 2017

ராம் மந்திர் – ராஜா ராணி கோவில்


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 22

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


படம்: ராஜா ராணி கோவில், புவனேஷ்வர்

ஒடிஷா மாநிலத்தில் பல பழமையான கோவில்கள் உண்டு. கொஞ்சம் வித்தியாசமான கட்டிடக் கலை, நிறையவே சிற்பங்கள் என கோவில்கள் அதிகம். புவனேஷ்வர் நகரத்தின் உண்மையான பெயர் திரிபுவனேஷ்வர் – அதாவது மூன்று புவனங்களையும் [லோகங்களையும்] ஆண்ட ஈஸ்வரன் பெயரிலிருந்து உருவானது. 600-க்கும் மேற்பட்ட கோவில்கள் புவனேஷ்வர் நகரில் இருப்பதால் ”கோவில் நகரம்” என்ற பெயராலும் அழைக்கிறார்கள். கலிங்கத்து பாணி என்று சொல்லப்படும் பாணியில் தான் கோவில்கள் அமைத்திருக்கிறார்கள். ஸ்வர்ண த்ரிபுஜா என அழைக்கப்படும் மூன்று நகரங்களில் புவனேஷ்வர் நகரமும் ஒன்று – மற்ற இரண்டு நகரங்கள் – பூரி மற்றும் கோனார்க். மூன்றுமே அருகருகே தான் இருக்கின்றன. நாங்களும் ஒடிஷா மாநிலத்தில் ஒரு சில கோவில்கள் பார்த்தோம்.

புதன், 23 ஆகஸ்ட், 2017

நேரம் பொன்னானது – ராஜ பரம்பரை கடிகாரங்கள்


நெய்வேலி ஜவஹர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஜூனியர் ஜேசீஸ் என அழைக்கப்படும் Junior Chamber of India கழகத்தின் மாணவர் பிரிவில் இரண்டு வருடங்கள் இருந்தேன் – அதுவும் Chairman பொறுப்பில். சில நிகழ்வுகளை நடத்தியதில் பங்கு வகித்து இருக்கிறேன். கூடவே ஒன்றிரண்டு நாடகங்களில் பங்கு பெற்றதோடு, எங்கள் கல்லூரி சார்பாக திருச்சி REC-ல் நடந்த ஒரு விழாவிற்கும் நண்பர்களுடன் சென்றதுண்டு.  ஜூனியர் ஜேசீஸ்-ல் இருந்தபோது நிறைய வகுப்புகள் – நேரக் கட்டுப்பாடு, பொது சேவை போன்ற தலைப்புகளில் வகுப்புகள் எடுப்பார்கள்.  அதில் நேரக் கட்டுப்பாடு சம்பந்தமான ஒரு வகுப்பு இன்றளவும் நினைவில் இருக்கிறது. அதற்குக் காரணம் உண்டு. அந்த வகுப்பில் காட்டப்பட்ட ஒரு வரைபடமும், அதன் கதையும் தான் காரணம்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ஒடிஷா – முதல் நாள்!அரக்கு பள்ளத்தாக்குபகுதி 21

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!இந்தப் பயணத்தின் முக்கியமான நோக்கம் அரக்கு பள்ளத்தாக்கு செல்வது என்றாலும், கூடவே அருகில் உள்ள மற்ற இடங்களுக்கும் செல்லும்படி தான் திட்டமிருந்தார் நண்பர். ஆந்திரப் பிரதேசத்தில் சிம்ஹாசலம், அன்னவரம், ஸ்ரீகூர்மம், ஸ்ரீமுகலிங்கம் என பல இடங்கள் பார்த்த பிறகு நாங்கள் ஆந்திரப் பிரதேசத்தின் அடுத்த மாநிலமான ஒடிஷாவின் தலைநகரான புவனேஷ்வர் நோக்கியே பயணித்தோம். விசாகப்பட்டினத்திலிருந்து புவனேஷ்வர் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இரவு நேர இரயில் ஒன்றில் முன்பதிவு செய்திருந்ததால் நிம்மதியாக உறங்கி, காலையில் விழித்தெழ புவனேஷ்வர் வந்து சேர்ந்திருந்தோம். இரயில் நிலையத்திற்கே எங்களை அழைத்துச் செல்ல வண்டி காத்திருந்தது.

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

தொலைபேசியில் பூதம் – வண்ட்டூ மாமா – மண்சட்டி சமையல்

முகப் புத்தக இற்றைகள் – ஆதி வெங்கட்

இந்த திங்கள் கிழமையில் “சாப்பிட வாங்க” பதிவுக்கு பதிலாக என்னவளின் முக நூல் இற்றைகள் சில இங்கே உங்கள் பார்வைக்கு….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பறவைப் பார்வையில் – புகைப்படத் தொகுப்பு


நேற்று புகைப்பட தினம் என்பதால் “முகங்கள்” என்ற தலைப்பில் சில படங்களைப் பகிர்ந்து கொண்டேன்.  வழக்கமான ஞாயிறு புகைப்படத் தொகுப்பாக இன்று “பறவைப் பார்வையில்” எடுத்த சில புகைப்படங்கள், இதோ உங்கள் பார்வைக்கும், ரசனைக்கும்…..

சனி, 19 ஆகஸ்ட், 2017

முகங்கள் - உலக புகைப்பட தினம் – சிறப்புப் பதிவு


ஆகஸ்ட் 19 – இன்று World Photography Day என்று இணையத்திலும், முகப் புத்தகத்திலும் வந்து கொண்டிருக்கிறது. இன்று வர வேண்டிய பயணக் கட்டுரைக்குப் பதிலாக “முகங்கள்” என்ற தலைப்பில் சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்கள் தொகுப்பாக இந்த தினத்தில்…..


படம் - 1 

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

சாப்பிட வாங்க – காந்த் – சேப்பங்கிழங்கின் அண்ணன்!


 காந்த் பொரியல்!

காய்கறிகள் நாம் இருக்கும் இடத்தினைப் பொறுத்து தான் விளைகின்றன. தமிழகத்தில் கிடைக்கும் சில காய்கறிகள் வடக்கில் கிடைக்காது. இங்கே கிடைக்கும் சில காய்கறிகள் தமிழகத்தில் கிடைப்பதில்லை. தலைநகர் வந்த புதிதில் உணவகம் செல்லும்போது “டிண்டா” சப்ஜி என்று சொல்ல, இப்படி ஒரு காய்கறி நம் ஊரில் பார்த்ததே இல்லையே, இது என்ன, என்ன சுவை இருக்குமோ என்ற நினைவில் ஒதுக்கி விடுவேன். கொஞ்சம் விலை குறைவு என்பதால், பெரும்பாலான தென்னிந்திய உணவகங்களிலும் சாம்பாரில் டிண்டாவை போட்டு விடுவார்கள்! அப்படியே தள்ளி வைத்து தான் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது! எப்படி இருக்குமோ என்று ஒரு பயம்!  

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

மலையிலிருந்து கடல் காட்சி - கைலாசகிரி


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 20

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


கைலாசகிரி மலையுச்சியிலிருந்து கடல்....

ஒற்றைக் கை அம்மன் கோவிலிருந்து புறப்பட்டு உணவகம் – வேறெங்கு – தஸபல்லா தான்! – மதிய உணவு சாப்பிட்ட பிறகு எங்கள் அடுத்த இலக்கு நோக்கி பயணித்தோம் – அந்த இடம் – விசாகப்பட்டினம் கடலருகே அமைந்திருக்கும் கைலாச கிரி!  360 அடி மலை உச்சியிலிருந்து கடற்கரை, விசாகப்பட்டினம் நகரம் ஆகிய இரண்டையும் கழுகுப் பார்வையில் பார்க்க ஒரு சிறப்பான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க இந்த கைலாச கிரி மலைக்குச் செல்லலாம். விசாகப்பட்டினம் வரும் அனைத்து சுற்றுலா பயணிகள் தவிர, பெரும்பாலான விசாகப்பட்டின நகரவாசிகளும் தங்களது மாலைப் பொழுதுகளை இனிமையாகக் கழிக்க தேர்ந்தெடுக்கும் இடம் இந்த கைலாச கிரி. அழகிய பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு வசதிகள், பாரா கிளைடிங், மலையைச் சுற்றிவர ஒரு சிறு இரயில் வண்டி, என பல விஷயங்கள் இங்கே மக்களை மகிழ்ச்சிப்படுத்த அமைத்திருக்கிறார்கள். குதிரை சவாரி செய்யவும் இங்கே வசதிகள் உண்டு.  

புதன், 16 ஆகஸ்ட், 2017

புவியிலோரிடம் – பா. ரா. – வாசிப்பனுபவம்"வாழ்க்கை விடுக்கும் சவால்களிலேயே ஆகப் பெரியதும் தீவிரமானதும் எது?

பிரத்யட்சமாக நேரும் அவமானங்களைத் தீரமுடன் எதிர்கொள்வதும் அதனைக் கொன்று மீள்வதும்தான் என்று கருதுகிறேன். அப்படியொரு தருணத்தில் என் மீட்சிக்கு எழுத்தை மட்டுமே உபாயமாக நம்பிச் செயல்படத் தொடங்கியபோது உதித்தது இந்த நாவலின் கரு" என்று முன்னுரையில் சொல்கிறார் நாவல் ஆசிரியர் திரு பா. ராகவன்.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

கனக மஹாலக்ஷ்மி – ஒற்றைக்கை அம்மன்

அரக்கு பள்ளத்தாக்குபகுதி 19

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!அன்னவரத்திலிருந்து திரும்பிய நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம் விசாகப்பட்டினம் நகரின் புருஜுபேடா எனும் இடத்தில் இருக்கும் ஒரு கோவில். வரும் வழியில் தான் விசாகப்பட்டினம் நகரத்தின் பிரதான தொழிற்சாலையான SAIL. அதன் வழியே பயணிக்கும்போது மீண்டும் விசாகப்பட்டினம் பதிவர் மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் நினைவுக்கு வந்தார். அவருக்கு இருந்த பணிச்சுமைகளுக்கு நடுவே, எங்களால் அவரைச் சந்திக்க இயலவில்லை! ஆனாலும் இரண்டு மூன்று முறை அவருடன் அங்கிருந்தபோது பேசினேன். அன்னவரத்தில் சத்யநாராயண ஸ்வாமியை தரிசனம் செய்து கொண்ட நாங்கள் அடுத்ததாய் தரிசனம் செய்தது கனக மஹாலக்ஷ்மி அம்மவாரியை!

சுதந்திரம் ஒரு நாள் மட்டுமா?


அன்பின் நண்பர்களுக்கு,

வணக்கம்.  இன்று 15 ஆகஸ்ட் 2017…. நமது இந்திய தேசத்தின் சுதந்திர தினம். நமது முன்னோர்கள் பலரும் பாடுபட்டு பெற்ற சுதந்திரம். “ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று” பள்ளு பாடுகிறோமோ இல்லையோ, சுதந்திரத்தினை நன்றாகவே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  இந்த சுதந்திர தினத்தில் நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.


திங்கள், 14 ஆகஸ்ட், 2017

ரேடியோ பெட்டி – கதை மாந்தர்கள்

அந்த மனிதரை பெரும்பாலான நாட்கள் நான் பயணிக்கும் பேருந்தில் பார்க்கிறேன். அசாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் வங்காளத்தினைச் சேர்ந்தவர். தில்லியில் பல வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறவர். இப்படி மூன்று மாநிலத் தொடர்பு இருப்பதால் மூன்றுக்கும் மேலான மொழிகள் தெரிந்தவர். பார்க்கும் எல்லா சமயத்திலும் வாயில் பான் பீடா! பெங்காலிகள்/அசாம் மாநிலத்தவர் தூங்கும் போது கூட பான்/பீடா வாயில் வைத்திருப்பார்களோ என ஒரு சம்சயம் எனக்குண்டு! கண்களில் எப்போதும் கண்ணாடி. படிப்பதற்கும், பார்ப்பதற்கும் கண்ணாடி நிச்சயம் தேவை.  நிரந்தரமாக வாயில் பான் பீடா இருப்பவர் பேசினால்....  எனக்கு பத்தாம் வகுப்பு எடுத்த ஆங்கில ஆசிரியர் இப்படித்தான் – எதிரில் இருப்பவர் மேலே ஸ்ப்ரே தான்.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

விசாகா – சில காட்சிகள் – புகைப்படத் தொகுப்புவிசாகப்பட்டினம் சென்ற போது சாலையில் பயணித்தபடி எடுத்த சில புகைப்படங்கள், இந்த ஞாயிறில் ஒரு தொகுப்பாக…விசாகப்பட்டினம் நெடுஞ்சாலை ஒன்றில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட லாரி.... மடித்துக் கட்டிய கைலியுடன் ஓட்டுனர்....


சனி, 12 ஆகஸ்ட், 2017

ஹரியும் சிவனும் ஒண்ணு – கலெக்‌ஷனில் இரண்டாம் இடம் - அன்னவரம்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 18

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


அன்னவரம் - கோவில் வளாகம்

பயணத்தின் மூன்றாம் நாள் காலை சீக்கிரமாகவே எழுந்து தயாரானோம். அன்று தான் விசாகப்பட்டினத்தில் கடைசி நாள். அன்றைய தினம் பார்க்க வேண்டிய இடங்களாக சிலவற்றை நினைத்திருந்தோம். காலையிலேயே வண்டி ஏற்பாடு செய்திருந்தோம். முதல் நாள் வந்த அதே வண்டி – ஓட்டுனர் மட்டும் வேறு. தங்குமிடம் அருகே இருந்த ஒரு உணவகத்தில் காபி மட்டும் குடித்து நேரே தசபல்லா! காலை உணவை முடித்துக்கொண்டு அன்றைய பயணத்தினைத் துவக்கினோம்.  அன்று முதலாவதாகச் செல்ல நினைத்தது விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் கொல்கத்தா விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் அன்னவரம். அட விஜயவாடா வந்துருமோ, அப்படியே பயணித்து, சென்னை சென்று திருச்சி சென்றுவிடலாமா என்று தோன்றியது!

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

ஃப்ரூட் சாலட் 204 – லைலாகமே…. – தரமான அரசுப்பள்ளி – வார்த்தை விளையாட்டு


தனியார் பள்ளி மாணவர்களையும் ஈர்க்கும் அதிசயம்: தரமான கல்வியால் வளரும் செல்வநாயகபுரம் அரசுப் பள்ளி:

ராமநாதபுரம் மாவட்டத்தின் சிறந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான விருது (2014), சிறந்த அரசுப் பள்ளிக்கான காமராசர் விருது (2015) என பல விருதுகளையும், பரிசுகளையும் தொடர்ந்து பெற்று வருகிறது ராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூர் ஒன்றியம் செல்வநாயகபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப் பரிசுகளையெல்லாம் விட மேலாக, சிறந்த பள்ளிக்கூடம் என்று கிராம மக்கள் மனதார இப்பள்ளியை அங்கீகரித்துள்ளனர். அதனாலேயே தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்கள் குழந்தைகளை பல பெற்றோரும் இந்த அரசுப் பள்ளியில் சேர்த்து வருகிறார்கள்.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

சுவையான விருந்து – ஹோட்டல் தஸபல்லா, விசாகப்பட்டினம்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 17

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


சுவையான விருந்து....
படம்: இணையத்திலிருந்து....

அரக்கு பள்ளத்தாக்கு சென்று வந்த பிறகு, பேருந்து எங்களை தங்குமிடம் அருகே இறக்கிவிட, அங்கே சென்று கொஞ்சம் Fresh ஆன பிறகு, இரவு உணவு எங்கே என்ற கேள்வி வந்தது? பயணத்தில் கிடைத்த நண்பர்கள் வீட்டிற்கு அழைத்தாலும், வேண்டாம் என்று சொல்லி தங்குமிடம் வந்தோம். அப்போது தான், நண்பர், முன்பு ஒரு முறை விசாகப்பட்டினம் வந்தபோது சாப்பிட்ட உணவகம் பற்றிச் சொல்லி, அங்கே போய் சாப்பிடலாம், உணவு ரொம்பவே நன்றாக இருக்கும் என்று சொல்ல, அங்கே எப்படிச் செல்வது என்பதை யோசித்தோம். முதலாம் நாள் எங்களுடன் இருந்த வண்டி, இரண்டாம் நாளன்று இல்லை. ஆட்டோவில் பயணிக்கலாம் என முடிவானது!

புதன், 9 ஆகஸ்ட், 2017

சாப்பிட வாங்க – எனது ஐந்தாவது மின் புத்தகம் வெளியீடு
அன்பின் நண்பர்களுக்கு,

மாலை வணக்கம்! ஒரே நாளில் இரண்டு சாப்பாட்டு பதிவா? என்று அலற வேண்டாம்! அப்படி அமைந்து விட்டது! என்னுடைய வலைப்பூவில் எழுதிய பயணக் கட்டுரைகளைத் தொகுத்து இது வரை நான்கு மின்புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறேன் – மூன்று புத்தகங்கள் WWW.FREETAMILEBOOKS.COM தளம் மூலமாகவும், நான்காவது புத்தகம் WWW.PUSTAKA.CO.IN தளம் மூலமாகவும்.  அவற்றின் விவரங்கள் எனது வலைப்பூவின் வலப்பக்க ஓரத்தில் இருக்கிறது…. [குறிப்பு: படத்தின் மேல் சுட்டினால் அந்த மின்புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்].

சாப்பிட வாங்க: மாலாடும் ஆட்டா லாடும் – ஆதி வெங்கட்


அது என்னப்பா, புதன் கிழமையான இல்லத்தரசியோட பதிவு தானா என்று யாரும் கேட்டுவிடக்கூடாது! அது மட்டும் இல்லாம, அவங்க எழுதுன போஸ்ட்ல எதுக்கு உன்னோட உள்ளீடு முதல் பாராவா? என்றும் யாரும் கேட்கக்கூடாது சொல்லிட்டேன்! ஜஸ்ட் ஒரு இண்ட்ரோ… அவ்வளவு தான்! இதுக்கு பெரிய காரணம் எல்லாம் கிடையாது! சரியா, இன்னிக்கு பதிவுக்கு முன்னாடி ஒரு இண்ட்ரோ!

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சுடச்சுட தேநீரும் போண்டாவும் – நன்றி நவிலல் - அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 16

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


போரா குகை - நுழைவாயில்...
போரா குகைகள் - இன்னும் சில படங்கள்...

போரா குகைகள் பார்த்த பிறகு வெளியே வந்த நாங்கள் அங்கே இருந்த கடைகளில் தண்ணீர் வாங்கிக் குடித்து, தேநீருக்கு ஏங்கிய போது தான் எங்களுடன் வந்த வழிகாட்டி அடுத்ததாய் நாம் போகப்போகும் இடம் டைடாவில் உள்ள ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையின் ஒரு தங்குமிடம்/உணவகம் என்று சொல்ல மனதுக்குள் நிம்மதி. பொதுவாகவே வெளியே செல்லும்பொழுது, Aerated Drinks எதுவும் நான் குடிப்பதில்லை. காபியோ, தேநீரோ, இளநீர் அல்லது தண்ணீரோ தான். எந்தவித Aerated Drinks குடிப்பதையும் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். எனக்குப் பிடிக்காது என்பது மட்டுமல்ல, கண்ட கண்ட Chemicals கலந்து குளிர்பானம் என்ற பெயரில் விற்பதை வாங்கிக் குடித்து எதற்கு வயிற்றைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான்.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

”பாலசுப்ரமணியனின் கவிதைகள்” – திரு G.M.B. ஐயாவின் கவிதைத் தொகுப்பு - வாசிப்பனுபவம்
இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே WWW.PUSTAKA.CO.IN மூலம் வெளியான தனது முன்று மின்புத்தகங்களை அன்பளிப்பாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்திருந்தார் G.M.B. ஐயா. சில பல காரணங்களால், மின்புத்தகங்களை வாசிக்க முடியாமல் தட்டிக்கொண்டே போனது. மேலும், புஸ்தகாவில் மின்புத்தகங்களை கணினியில்/அலைபேசியில் படிப்பதில் சில சிக்கல்கள்! குறிப்பாக அன்பளிப்பாக வந்த புத்தகங்கள் அலைபேசியில் காணமுடிவதில்லை. கணினியில் படிக்கும்போதும் சற்று கஷ்டப்பட்டே படிக்க வேண்டியிருக்கிறது. என்றாலும் இந்த வாரத்தின் ஞாயிறில் அவர் அனுப்பிய மின்புத்தகங்களில் ஒன்றாவது படித்து முடிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இதோ படித்து, அந்த வாசிப்பனுபவத்துடன் உங்களோடு!