Clicks and Colours என்ற முகநூல் குழுமம் ஒன்று உண்டு.
ஒவ்வொரு வார இறுதியிலும் அவர்கள் சொல்லும் கருவிற்கு ஏற்ற படங்களை, குழுவின் உறுப்பினர்கள்
முகநூலில் பகிர்ந்து கொள்வார்கள். நானும் அங்கே ஒரு Silent உறுப்பினர்! மற்றவர்களின்
படங்களை ரசிப்பதோடு சரி. வெகு குறைவாகவே எனது படங்களை அங்கே பகிர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு
வாரமும் ஒரு கரு கொடுத்து, அதற்குத் தகுந்த ஐந்து படங்களை பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுடைய
முந்தைய கருக்களில் ஒன்றான ”மூன்று” என்பதற்கு ஏற்ற சில படங்களை எனது வலைப்பூவிலும்
பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான சுட்டி கீழே.
Clicks and Colours லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Clicks and Colours லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 2 செப்டம்பர், 2017
ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017
Clicks and Colours – Theme 132 – மூன்று – புகைப்படங்கள்….
ஃபேஸ்புக்
– எத்தனை எத்தனை குழுக்கள் இங்கே உண்டு என்பதற்கு ஒரு கணக்கே இல்லை. புகைப்படங்களுக்காகவே நிறைய குழுக்கள் இயங்குகின்றன.
எல்லாவற்றிலும் உறுப்பினராக இருந்தால் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் ஃபேஸ்புக்கில் மூழ்கி
இருந்தால் கூட பார்த்து முடிக்க முடியாத அளவிற்கு இற்றைகள் வந்த வண்ணமே இருக்கும்… நானும் ஒன்றிரண்டு குழுக்களில் இருக்கிறேன். அப்படி ஒரு குழு Clicks and Colours! நமது வலையுலக
நண்பர்கள் சிலரும் அக்குழுவில் உண்டு. வாராவாரம், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்
ஒரு Theme அறிவித்து உறுப்பினர்களை அதற்குத் தகுந்த புகைப்படங்கள் வெளியிட அழைப்பு
விடுவது வழக்கம்.
இந்த
வார இறுதியின் மையக்கரு – மூன்று! Clicks and Colours குழுவில் குறிப்பிட்டு இருப்பதை
அப்படியே இங்கே தருகிறேன்.
Concept
132
C
& C Welcomes..
Weekend
Concept : Three
வாரயிறுதி
மையக்கரு : மூன்று
மூன்று
என்னும் எண்ணிக்கையில் உள்ள பொருட்களின் புகைப்படங்கள், மூன்று என்பதை சொல்லும் வித்தியாசமான
புகைப்படங்கள் இதற்குள் அடங்கும்.
ஐந்து
புகைப்பட வரைமுறை உண்டு.
அதிகம்
போட விரும்பினால்,
For
Desktop :
நமது
C & C குழுவின் Photos பிரிவில், Albums என்பதில்,
Concept
132 – மூன்று / Three என்பதில் சேமிக்கலாம்
For
Mobile :
நமது
C & C குழுவின் Info Tab யில் Photos பிரிவில், View All கொடுத்தால் Albums இருக்கும்.
அதில் இருக்கும் Concept 132 – மூன்று / Three என்பதில் சேமிக்கலாம்
Happy
Posting..
Admin
Ahila
Puhal
Admin
Desk
Geetha
Mathi
Ezhil
Arul
Krishna
Ranjani
நேற்று
தில்லியை அடுத்த சூரஜ்குண்ட்-ல் நடக்கும் வருடாந்திர மேளா சென்றிருந்த போது இந்த வார
மையக்கரு நினைவுக்கு வர, இதற்குத் தகுந்த புகைப்படங்கள் எடுக்கலாமே என்று நிறைய படங்கள்
எடுத்தேன். அவற்றில் சில இந்த ஞாயிறின் புகைப்படங்களாக….
படம்-1: ஹரியானாவில் வீடுகளின் மண் சுவர்களில் இப்படி ஓவியங்கள் வரைவதுண்டு......
படம்-2: எலிஃபண்டா குகைகளில் இருக்கும் சிலையின் ஒரு பிரதிமை - மேளாவிலும்.....
படம்-3: சத்தீஸ்கர் மாநிலத்தில் தயாராகும் டோக்ரா கலைவடிவங்கள்....
படம்-4: டெரக்கோட்டாவில் மூன்று பிள்ளையார்கள்...
படம்-5: டெரக்கோட்டா விளக்குகள்....
படம்-6: குட்டி குட்டி பொம்மைகளோடு கீ செயின்....
படம்-7: ஆனை ஆனை அழகர் ஆனை.....
படம்-8: மூணு வண்டி ரெடியா இருக்கு... எதுல வேணும்னாலும் போலாம்.....
படம்-9: சிலைகள்...
படம்-10: ஹரியானா பாரம்பரிய உடையில் மூன்று ஆண்கள்....
படம்-11: மண் பானைகளின் மூன்று வரிசை!
படம்-12: அகாடா என அழைக்கப்படும் குஸ்தி பயிற்சிக்கள மாடல் முன் குஸ்தி செய்யும் மூன்று இளஞ்சிட்டுகள்....
என்ன
நண்பர்களே இந்த வார புகைப்படங்களை ரசித்தீர்களா? புகைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….
மீண்டும்
ச[சி]ந்திப்போம்…..
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
Labels:
இந்தியா,
புகைப்படங்கள்,
பொது,
ஹரியானா,
Clicks and Colours,
Haryana,
India
