புதன், 28 பிப்ரவரி, 2018

சூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 3கடந்த ஞாயிறன்றும் திங்கள் அன்றும், இந்த வருடத்தின் சூரஜ்குண்ட் மேளாவிற்குச் சென்றபோது எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை பகிர்ந்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம். பார்க்காதவர்கள் வசதிக்காக அந்த பதிவின் சுட்டி கீழே….இந்த நாளில் மூன்றாம் பகுதியாக இன்னும் சில புகைப்படங்கள். புகைப்படங்கள் தவிர சில காணொளிகளும் எடுத்திருக்கிறேன் – அவற்றை அடுத்த பகுதியாக வெளியிடுகிறேன்.


படம்-1: ஒரு நாட்டியக் கலைஞர்

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – பாலையில் ஒரு இரவு - கட்ச் இரவு உணவும் இன்னிசையும்இரு மாநில பயணம் – பகுதி – 12

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!வெண்பாலையிலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் அடுத்ததாக நின்ற இடம் எங்கள் தங்குமிடம் தான். காலையிலிருந்து வாகனம் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. ஓட்டுனர் முகேஷுக்கும் ஓய்வு தேவை. எங்களுக்கும் தான். தங்குமிடம் வந்து ஒரு குளியல் போட்டு இளைப்பாறினோம்.  குளியல் என்றதும் இங்கே ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது – அது சாலைகள் போலவே குஜராத் மாநிலத்தில் இருக்கும் தண்ணீர் வசதி பற்றியது. கட்ச் பகுதி பாலைவனம் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். பாலைவனத்தில் தண்ணீர் கஷ்டம் இருக்கத்தானே செய்யும்.  ஆனால் நர்மதா ஆற்றின் தண்ணீரை கட்ச் பகுதி வரை குழாய் வழியே கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் கிராம வாசிகளுக்கு தண்ணீர் கஷ்டமில்லை. நல்ல விஷயம் இது.

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தங்குமிட உரிமையாளர் வந்து இரவு உணவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை எப்போது வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம் என்று தகவல் சொல்லிச் சென்றார். இந்த மாதிரி தங்குமிடங்களில் தங்குவதற்கான வாடகையோடு, மூன்று வேளை உணவுக்கும் சேர்த்தே காசு வாங்கிக் கொள்கிறார்கள். பெரிதாக உணவகங்கள் ஏதும் கிராமங்களில் இருக்காது என்பதால் இந்த ஏற்பாடு. இதுவும் ஒரு விதத்தில் நல்லதே.  பாரம்பரியமாக கட்ச் பகுதி கிராமங்களில் கிடைக்கும் உணவு வகைகளை அவர்கள் புதிதாகவும் சுவையுள்ளதாகவும் சமைத்துக் கொடுக்க, நாம் ருசித்து ரசித்து சாப்பிட முடிகிறது.

திங்கள், 26 பிப்ரவரி, 2018

சூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 2
கடந்த ஞாயிறன்று, இந்த வருடத்தின் சூரஜ்குண்ட் மேளாவிற்குச் சென்றபோது எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை பகிர்ந்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம். பார்க்காதவர்கள் வசதிக்காக அந்த பதிவின் சுட்டி கீழே….


இந்த நாளில் இரண்டாவது பகுதியாக இன்னும் சில புகைப்படங்கள். எடுத்த படங்கள் அதிகமாக இருப்பதால், இன்னும் சில படங்கள் அடுத்த பதிவாக வியாழன் அன்று வெளி வரும்!


படம் - 1: காலம் பறந்து போகும் எனச் சொல்லாமல் சொல்கிறதோ...

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

என்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர் விடைகள்
நேற்றைய பதிவில் மூன்றாவது புகைப்படப் புதிராக ஐந்து படங்களை வெளியிட்டு இருந்தேன். யார் யார் பதிலை சரியாச் சொன்னாங்கன்னு சொல்லப் போறதில்லை! ஆனா சரியான பதில்களை கீழே தந்திருக்கிறேன். வாங்க, நேற்று பகிர்ந்த படங்கள் என்னன்னு பார்க்கலாம்…


படம் – 1

சூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 1ஹரியானாவின் சூரஜ்குண்ட் பகுதியில் ஒவ்வொரு வருடமும் சூரஜ்குண்ட் மேளா நடக்கும். வருடா வருடம் மேளாவிற்குச் செல்வது தொடர்கிறது. இந்த வருடமும் நானும் நண்பர் பத்மநாபனும் மேளாவிற்குச் சென்று வந்தோம்.  வருடா வருடம் ஏதாவது ஒரு மாநிலத்தினைச் சிறப்பு மாநிலமாக தேர்ந்தெடுத்து அங்கிருந்து கலைஞர்களையும் கலை விற்பன்னர்களையும் அழைப்பார்கள். இதற்கு முந்தைய வருடங்களில் நடந்த மேளாக்களில் நான் எடுத்த புகைப்படங்களை முன்னர் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அப்போது பார்க்காதவர்களின் வசதிக்காக, முந்தைய பதிவுகளின் சுட்டிகள் கீழே தந்திருக்கிறேன்.

சனி, 24 பிப்ரவரி, 2018

என்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர்சில மாதங்களுக்கு முன்னர் புகைப்படங்களை வெளியிட்டு அவை என்ன என்ற கேள்வியைக் கேட்டிருந்தேன். இரண்டு பதிவுகளுக்குப் பிறகு வெளியிடவில்லை. இதோ இப்போது மூன்றாவது புகைப்படப் புதிர்.  வாங்க, படம் பார்த்து என்னன்னு சொல்லுங்க….


படம்-1

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – வெண் பாலை – எங்கெங்கும் உப்புஇரு மாநில பயணம் – பகுதி – 11

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஆதவனின் மறைவு....
வெண் பாலையில்....

மதிய உணவு முடித்து சற்றே ஓய்வெடுத்த பிறகு, மாலை தேநீர் சுடச்சுடக் குடித்து, தங்குமிடத்திலிருந்து புறப்பட்டோம். மாலை நேரத்தில் வெண்பாலையில் சூரியன் மறையும் காட்சி பார்க்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.  வெண் பாலை என ஏன் அழைக்கிறார்கள் – இந்தப் பகுதி முழுவதுமே மண்ணே உப்பு தான் – வெள்ளை வெள்ளையாக பூத்துக் கிடக்கும். பகுதி முழுவதுமே உப்பு சதுப்பு நிலங்கள்! பொதுவாக மணல் சதுப்பு நிலங்களைத் தான் நாம் பார்த்திருப்போம். இங்கே இருப்பவை உப்பு சதுப்பு நிலங்கள். இந்த இடத்தில் தான் வருடா வருடம் ரண் உத்சவ் கொண்டாடுவார்கள். அதைப்பற்றி படித்திருக்கிறோமே தவிர நேரில் பார்த்ததில்லை.

வியாழன், 22 பிப்ரவரி, 2018

ஷிவ் ஜெயந்தி – சத்ரபதி ஷிவாஜி – புகைப்பட உலா

சத்ரபதி ஷிவாஜி அவர்களின் பிறந்த நாள் இந்த முறை பல இடங்களில் கொண்டாடப்பட்டது – ஃபிப்ரவரி 19-ஆம் தேதி தலைநகரிலும் ஷிவ் ஜெயந்தி 2018 என்ற பெயரில் திருவிழா நடக்கப்போவது பற்றி 18-ஆம் தேதி தான் தெரிந்தது. 18-ஆம் தேதி வேறு ஒரு விழாவிற்குச் சென்றபோது தான் விழா பற்றிய பதாகை பார்த்தேன். நான் 18-ஆம் தேதி சென்ற போது கோல்ஹாபூர் [மஹாராஷ்ட்ரா]விலிருந்து வந்திருந்த இளைஞர்கள் டோல் எனப்படும் கருவியை இசைத்தபடி வீர முழக்கங்கள் எழுப்புவதைப் பார்த்தபோது அடுத்த நாள் மாலை விழாவிற்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன் – நாம் முடிவு எடுத்துவிட்டால் போதுமா? அடுத்த நாள் பார்க்க முடிந்ததா?

புதன், 21 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – ஹோட்கா கிராமம் – மண்குடிசையில் தங்கலாம் – மதிய உணவு
இரு மாநில பயணம் – பகுதி – 10

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


[B]பூங்கா என அழைக்கப்படும் மண்குடிசை
ரண் விசாமோ கிராமிய விடுதி - கட்ச்....

வெண்பாலைக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்தபோதே அங்கேயுள்ள கிராமத்து வீட்டில் தங்கும் உணர்வு கிடைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தோம். அதனால் ஹோட்கா எனும் கிராமத்தில் இருக்கும் “Rann Visamo Village Stay” எனும் இடத்தில் தான் முன்பதிவு செய்திருந்தோம். Rann [રણ] எனும் குஜராத்தி சொல்லிற்கு பாலை என்ற பொருள். விசாமோ [વિસામો] என்ற குஜராத்தி சொல்லிற்கு Relax என்ற அர்த்தம். ஹோட்கா எனும் கிராமத்தில் இருக்கும் இந்த கிராமத்தில் ஹாயாக இருக்கலாம் – இந்த இடத்தில் [B]பூங்கா என அழைக்கப்படும் வட்ட வடிவ மண் குடிசைகளில் தங்க வசதிகள் உண்டு.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

ஆட்டோ அப்க்ரேட் – லோகநாயகியின் கதை
ஒவ்வொரு முறை திருச்சியிலிருந்து தில்லி வரும்போதும், சென்னை வரை பேருந்து பயணம் தான். கடைசி நேரத்தில் முடிவு செய்து புறப்படுவேன் - இரயிலில் இடம் இருக்காது என்பதால் பேருந்து பயணம். இம்முறை மலைக்கோட்டை விரைவு வண்டியில் பார்க்க, தத்காலில் இடம் கிடைத்தது. திருவரங்கம் இரயில் நிலையத்திலேயே ஏறிக்கொள்ளலாம் என்பது ஒரு வசதி. ஜங்ஷன் வரை செல்ல வேண்டாம். இணையம் வழி முன்பதிவு செய்யும் போது எப்போதுமே “ஆட்டோ அப்க்ரேட்” என்ற இடத்தில் டிக் செய்து வைப்பேன். நீங்கள் முன்பதிவு செய்வது எந்த வகுப்பிலிருந்தாலும், அதற்கு மேலே உள்ள வகுப்பில் இடம் இருந்தால் இப்படி “டிக்” செய்து வைத்திருப்பவர்களுக்கு அதிக கட்டணம் ஏதும் வாங்காமல் அப்கிரேட் செய்துவிடுவார்கள். இப்படி நிறைய முறை எனக்குக் கிடைத்திருக்கிறது.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – காலோ டுங்கார் எனும் கருப்பு மலை – ஒட்டக சவாரிஇரு மாநில பயணம் – பகுதி – 9

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஒட்டக மந்தை...
காலோ டுங்கார் செல்லும் வழியில்...

சென்ற பகுதியில் பாடண் நகரிலிருந்து கட்ச் நோக்கி சென்று கொண்டிருந்தோம் என எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம். இந்தப் பகுதிக்கு செல்லும் போது தான் இதுவரை பார்த்திராத ஒரு காட்சியைப் பார்க்க முடிந்தது. அது ஒட்டக மந்தை. நூற்றுக் கணக்கில் ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தவுடன் முகேஷ்-இடம் காரை நிறுத்தச் சொன்னோம். சாதாரணமாக ஆட்டு மந்தை, மாட்டு மந்தை, கோழி/வாத்துக் கூட்டம் ஆகியவற்றை சாலை வழி அழைத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒட்டக மந்தை…. இது வரை பார்த்ததில்லை என்பதால் வண்டியை விட்டு இறங்கி சில புகைப்படங்களும் காணொளியும் எடுத்துக் கொண்டேன். அந்தப் புகைப்படங்களையும் காணொளியும் ஏற்கனவே ஒரு முறை எனது பதிவொன்றில் வெளியிட்டு இருக்கிறேன். படிக்காதவர்கள்/ பார்க்காதவர்கள் வசதிக்காக, கீழே அதன் சுட்டி தருகிறேன்.

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

பறக்கும் காவடி – தைப்பூசம் – புகைப்படம் மற்றும் காணொளிபறக்கும் காவடி...
தைப்பூசம் - 2018 - திருவரங்கத்திலிருந்து...

நெய்வேலி வாழ்க்கையில் மறக்க முடியாத பல விஷயங்கள் – அவற்றில் ஒன்று பங்குனி உத்திரம் சமயத்தில் காவடி பார்க்கப் போவது – நெய்வேலி நகரில் உள்ள வில்லுடையான்பட்டி முருகன் கோவிலுக்கு நகரில் உள்ள அத்தனை கோவில்களிலிருந்தும் காவடி எடுத்து வருவார்கள். ஒவ்வொரு கோவிலிலிருந்தும் 108, 1008 போன்ற எண்ணிக்கைகளில் காவடிகள் ஊர்வலமாக வந்து கோவிலுக்குச் செல்ல, நெய்வேலி நகரமே திருவிழா கோலம் கொண்டிருக்கும். பத்து நாட்களுக்கும் மேலாக திருவிழா நடக்கும் என்றாலும் பங்குனி உத்திரம் அன்று எடுக்கப்படும் காவடி பார்க்க அத்தனை ஆனந்தம். வீட்டிலிருந்து ஆறரை மணிக்குள் குளித்து, புறப்பட்டு எட்டு ரோடு என அழைக்கப்படும் சந்திப்பிற்கு சென்று விடுவோம்.

சனி, 17 பிப்ரவரி, 2018

கதம்பம் – பொங்கல் கோலம் – தமிழகத்தில் குளிர் – திருவரங்கம் தோசைக்கல் – முருங்கைக்கீரை அடை – ரஜினி மக்கள் மன்றம்


தமிழகத்தில் குளிர்:தலைநகரின் குளிருக்குப் பழக்கப்பட்ட எனக்கு, தமிழகத்தில் இருப்பவர்கள் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இருக்கும் குளிர் அதிகம் என்று சொல்லும்போது ”அட இது என்ன பெரிய குளிர்” என்று தோன்றும்! தில்லியின் குளிர், பனிப்பொழிவு அதிகம் இருக்கும் இடங்களில் இருப்பவர்களுக்கு, இது ஒன்றுமே இல்லை என்று தோன்றுவது போலவே! தமிழகத்தில் இருக்கும் மிதமான குளிருக்கே பலரும் ஸ்வெட்டர், மஃப்ளர், குரங்கு குல்லாய் என இருப்பதைப் பார்த்தால் கொஞ்சம் வேர்த்தது! திருச்சி N.S.B. சாலையில் இருந்த கடையில் பொம்மைக்கு பட்டுப்பாவடை-தாவணியும் குரங்கு குல்லாயும் அணிவித்து இருந்தார்கள்! ரொம்ப குளிர் ஜாஸ்திப்பா!

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – வெண் பாலை நோக்கி – காலை உணவு
இரு மாநில பயணம் – பகுதி – 8

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


காலைச் சூரியன்.... - வெண்பாலை நோக்கிய பயணத்தில்....

முதல் நாள் இரவு பாடண் நகரில் தங்கிய பிறகு இரண்டாம் நாள் நாங்கள் பாடண் நகரிலிருந்து சென்ற இடம் கட்ச்! கட்ச் மற்றும் புஜ் பகுதிகள் பற்றி தெரியாத பலருக்கும் 2001-ஆம் ஆண்டு 26 ஜனவரி அன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் [ரிக்டர் ஸ்கேலில் 7.7 அளவு!] அப்பகுதி பற்றி தெரிய வந்தது. அந்த கட்ச் மற்றும் [B]புஜ் பகுதிகளுக்கு இப்பயணத்தின் போது சென்று வர வேண்டும் என்பது எங்கள் திட்டமாக இருந்தது.  கட்ச் பகுதியில் இருக்கும் வெண் பாலைவனம் [White Desert] பகுதிக்குச் சென்று வர நாங்கள் திட்டமிட்டிருந்தோம். பாடண் நகரிலிருந்து நேராக கட்ச் சென்று அங்கிருந்து [B]புஜ் செல்வதாக எங்கள் திட்டம்.  குஜராத் மாநில சுற்றுலாத் துறையின் ஒரு விளம்பர வாசகம் தான் எங்களை அங்கே செல்லத் தூண்டியது! அந்த விளம்பர வாசகம்….

வியாழன், 15 பிப்ரவரி, 2018

சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் அரங்கனின் சீர் – புகைப்பட உலாதை மாத சமயத்தில் சமயபுரம் மாரியம்மனுக்கு திருவரங்கத்தில் இருக்கும் அரங்கன், அண்ணன் சீர் தரும் வைபவம் தை மாதத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த முறை திருவரங்கம் சென்றபோது தான் அந்த நிகழ்ச்சி நடந்தது [ஜனவரி 31]. சமயபுரத்திலிருந்து மாரியம்மனின் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு ஊர்வலமாக சமயபுரத்திலிருந்து புறப்பட்டு கொள்ளிடம் ஆற்றின் வழியாக திருவரங்கம் கொண்டு வருவார்கள். கொள்ளிடம் ஆற்றின் உள்ளே ட்ராக்டர் கொண்டு வாகனம் இழுத்து வரப்படும். வழியெங்கும் உற்சாகம் தான். 


புதன், 14 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – இரவுத் தங்கலும் அசைவ உணவுக்கான தேடலும்
இரு மாநில பயணம் – பகுதி – 7

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!இரு மாநில பயணம் தொடரின் சென்ற பகுதியில் பாடண் நகரிலிருக்கும் ராணி கி வாவ் பற்றிய தகவல்களையும் அங்கே எடுத்த புகைப்படங்களையும் பார்த்தோம்.  இந்தப் பயணத்தில் இது தான் முதல் நாள். அஹமதாபாத் நகரிலிருந்து புறப்பட்ட எங்கள் குழு, அன்றைய தினத்தில் இரவு தங்குவதற்கு திட்டமிருந்த இடமும் இந்த பாடண் எனும் இடம் தான். குஜராத் மாநிலத்தின் ஒரு மாவட்டமாக இந்த பாடண் இருக்கிறது என்றாலும் தங்குமிடங்கள் கொஞ்சம் குறைவு தான். இணையம் மூலமாக நாங்கள் தேர்ந்தெடுத்த தங்குமிடம் ஹோட்டல் நவ்ஜீவன் என்ற இடம் – சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இடம் – தங்குமிடம், உணவகம் இரண்டுமே இங்கே இருக்கிறது.


செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சாப்பிட வாங்க: அரிநெல்லிக்காய் ஊறுகாய் மற்றும் சாதம்

நெய்வேலியில் இருந்த போது வீட்டிலேயே அரிநெல்லிக்காய் மரம் இருந்தது. பந்தல் போட்டமாதிரி கொத்துக் கொத்தாய் நெல்லிக்காய் காய்த்துத் தொங்கும். சாதாரண அரிநெல்லி மரங்களை விட சற்றே உயரமாக வளர்ந்த மரம்! அரிநெல்லி மரத்திற்கு அத்தனை வலு கிடையாது. கிளைகளை பிடித்து இழுத்தாலே உடைந்து விடும் தன்மை கொண்டது. இருந்தாலும் சிறு வயதில் மரத்தின் உச்சி வரை சரசரவென்று ஏறிவிடுவது எனக்கு வழக்கமாக இருந்தது – உடைந்து விடும், கீழே விழக்கூடும் என்ற எண்ணமோ பயமோ வந்ததே இல்லை – அப்போது நானும் முப்பது கிலோவிற்கு மேல் இருக்க மாட்டேன் என்பது வேறு விஷயம்!

திங்கள், 12 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – ராணிக் கிணறு – வாவ் சிற்பங்கள்இரு மாநில பயணம் – பகுதி – 6

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


”அழகே அழகு.... தேவதை....”
ராணி கி வாவ் - பாடண்

சென்ற பகுதியில் மொதேராவில் அமைந்திருக்கும் சூரியனார் கோவில் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். படிக்காதவர்கள் மேலே குறிப்பிட்ட படி Drop Down Menu மூலம் பதிவுகளைப் படிக்கலாம்! சூரியனார் கோவிலைப் பார்த்த பிறகு நாங்கள் புறப்பட்டு அடுத்ததாய் சென்ற இடம் பாடண் – பட்டணம் என்பதைத் தான் பாடண் என்று குஜராத்தி மொழியில் சொல்கிறார்கள். இந்த பாடண்-இல் என்ன இருக்கிறது – சோலங்கி மாஹாராஜாவான முதலாம் பீமதேவரின் நினைவாக ராணி உதயமதி அவர்கள் அமைத்த ஒரு கிணறு தான் இந்த ராணி கி வாவ் என அழைக்கப்படும் கிணறு.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

தைத் தேர் 2018 – திருவரங்கம் – புகைப்பட உலாதிருவிழா, தேரோட்டம், காவடி, தீமிதி, விதி உலா, என எல்லா விஷயங்களும் நமக்கு ஒரு பொழுதுபோக்கு – தமிழகத்தில் இருக்கும் வரை இந்த விஷயங்கள் ஒரு சாதாரண நடவடிக்கையாக இருந்தாலும், தமிழகத்தினை விட்டு விலகி இருக்கும்போது இவை பார்க்க மனதில் ஒரு பரவசம், குதூகலம், மகிழ்ச்சி என பல்வேறு அடைமொழிகளோடு சொல்லக் கூடிய ஒரு அனுபவம். சித்திரை, தை மாதங்களில் திருவரங்கம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால், அதுவும் தேரோட்டம் சமயம் என்றால் நிச்சயம் விடிகாலையில் எழுந்து கையில் கேமராவுடன் புறப்பட்டுவிடுவேன்! மனைவியும் மகளும் முதல் நாளிலிருந்தே சற்றே கிண்டல் தொனியுடன் “நாளைக்கு தேர் பாக்க போவீங்க தானே?” என்று கேட்க ஆரம்பித்தாலும்!


புதன், 7 பிப்ரவரி, 2018

சாப்பிட வாங்க: கட்டா மீட்டா எலுமிச்சை ஊறுகாய்ஊறுகாய் என்றதுமே காரமும், புளிப்பும் தான் நினைவுக்கு வரும் இல்லையா?? இது ஒரு வட இந்திய ஊறுகாய். ஏற்கனவே ஒருமுறை என்னுடைய பகிர்வில் "ஆம் கா சுண்டா" என்ற மாங்காய் இனிப்பு ஊறுகாய் பற்றி பகிர்ந்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – மோதேரா சூரியனார் கோவில் – தங்கத்தில் சிலை வடித்து….


இரு மாநில பயணம் – பகுதி – 5

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மொதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபமும் குட மண்டபமும்....

திங்கள், 5 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – மோதேரா சூரியனார் கோவில் - கல்லிலே கலைவண்ணம்


இரு மாநில பயணம் – பகுதி – 4

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மோதேரா சூரியனார் கோவில் - குட மண்டபாவும் சபா மண்டபாவும் - பக்கவாட்டிலிருந்து....

இந்தப் பயணத்தொடரை எழுத ஆரம்பித்த சில நாட்களிலேயே தமிழகப் பயணம் வாய்த்ததால் தொடரவில்லை. எனவே ஒரு முன்னோட்டமாக தொடரின் முதல் மூன்று பதிவுகளின் சுட்டி கீழே….

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

புகைப்பட உலா – சாலையோர மலர்களும் செடிகளும்….

தமிழகம் வரும்போதெல்லாம் வீட்டிலிருந்து காலை மாலை வேளைகளில் நடைப்பயணம் செய்வது வழக்கமாக இருக்கிறது. அப்படி நடந்து செல்லும்போது சாலையோரங்களில் இயற்கை அன்னை விதைத்த சில செடிகளும், அவற்றின் பூக்களும், வித்தியாசமான வடிவங்களில் காய்களும் என பார்த்துக் கொண்டே நடப்பதுண்டு. இந்த முறையும் அப்படியே பல நாட்கள் பார்த்தபடியே நடந்தேன். இயற்கை அன்னையின் படைப்பில் எத்தனை எத்தனை அழகிய படைப்புகள் – இலைகள், காய்கள், பூக்கள், விதம் விதமான வண்ணங்கள் என ஒன்றுக்கொன்று போட்டி! பல செடிகள் மருத்துவ குணங்கள் கொண்டவை என்றாலும் நமக்கு அவற்றை சொல்பவர்கள் குறைவு.

சனி, 3 பிப்ரவரி, 2018

பேருந்து கட்டண உயர்வு - என்னால குடிக்காம இருக்க முடியாது....


தமிழகம் வந்திருந்த போது தான் பேருந்து கட்டணங்களை Overnight-ல் இரண்டு மடங்காக உயர்த்தி இருந்தது தமிழக அரசு. கட்டண உயர்வு அமலுக்கு வந்த அடுத்த நாள் திருவரங்கத்திலிருந்து திருப்பராய்த்துறை வரை செல்ல வேண்டியிருந்தது. அப்போது பேருந்தில் கேட்ட சில சம்பாஷணைகள் இன்றைய பதிவாக….

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக?படம்: இணையத்திலிருந்து...

சாப்பிட வாங்க: கேரட் தோசை” என்ற பதிவினை போட்டுவிட்டு, சில நாட்களுக்கு பதிவுலகம் பக்கம் வரமாட்டேன் என்று எழுதிச் சென்று இன்றோடு சரியாக மூன்று வாரம் ஆகிறது! இதோ இந்த வெள்ளியில் மீண்டும் வந்து விட்டேன். இந்த இடைப்பட்ட மூன்று வாரங்களில் பதிவுலகத்தில் என்ன நடந்தது என்பது கூடத் தெரியாது! முழுக்க முழுக்க வீடு, ஓய்வு, சில நிகழ்வுகள், சந்திப்புகள் மட்டுமே. பதிவுகள் எதையும் படிக்கவில்லை. நானும் எழுதவில்லை. கடந்த முறை தமிழகம் சென்றபோதும் இப்படியே தான் – பதிவுலகம் வர விருப்பம் இல்லாமலேயே இருந்தது – இணைய இணைப்பிலும் சில பிரச்சனைகள்! இம்முறையும் அப்படியே மூன்று வாரம் ஓடி விட்டது. பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு வணக்கம் சொல்லி இன்றைய பதிவுக்குப் போகிறேன்!