இரு மாநில பயணம் –
பகுதி – 33
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
தியு - கிர் சாலை வழி உணவகத்தில்.....
தியு நகரிலிருக்கும் சில இடங்களையும்,
தியு நகரிலுள்ள போர்த்துகீசியர்கள் கட்டிய கோட்டையையும் பார்த்த பிறகு நாங்கள்
தியுவிலிருந்து புறப்பட்டோம். இன்னும் சில இடங்கள் – குறிப்பாக கடற்கரைகள் இருந்தாலும்,
அடுத்த நாள் காலை நாங்கள் குஜராத்தின் Gகிர் வனப் பயணத்திற்கு முன்பதிவு
செய்திருந்ததால் மதியமே புறப்பட்டோம். முதல் நாள் இரவு கிடைத்த அனுபவத்தினால் மதிய
உணவினை வழியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். தியு நகரிலிருந்து
குஜராத் - Gகிர் வனம் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவு தான் என்றாலும் இரண்டு மணி
நேரத்திற்கு மேல் ஆகிறது. வழியில் குஜராத் எல்லையில் தியுவிலிருந்து வரும் அனைத்து
வாகனங்களுமே நிறுத்தப்படுகிறது.


