ஞாயிறு, 28 மே, 2023

வாசிப்பனுபவம் - மாயங்கள் செய்திடும் மான் - மியாழ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். ******

சனி, 27 மே, 2023

காஃபி வித் கிட்டு - 171 - கௌன் திஷா மே - கப்பலில் பயணிக்கும் வாகனங்கள் - The Silent Shift - ஐஸ்க்ரீம் - கோடைத் தெருக்களில்… - அசட்டு தைரியம் - சந்திப்பு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட MG Marg Gangtok - மார்க்கெட் உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். ******

வெள்ளி, 26 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பதினைந்து - MG Marg Gangtok - மார்க்கெட் உலா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைமுடி உதிர்வும் வெங்காய பக்கோடாவும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“I think they should list shopping as a cardiovascular activity. My heart never beats as fast as it does when I see a ‘reduced by 50 percent’ sign.” — Sophie Kinsella, Confessions Of A Shopaholic (2009 American Film). 


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


பகுதி பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம்


பகுதி பன்னிரண்டு - மலை இரயிலில் ஒரு பயணம்


பகுதி பதிமூன்று - LOVERS MEET VIEWPOINT


பகுதி பதினான்கு - சிக்கிம் தங்குமிடம் - Monastery உலா


******சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் Gகாங்டாக் நகரில் புத்தமத வழிபாட்டுத் தலம் ஒன்றையும், ஒரு சிறு அருவியையும் பார்த்த பிறகு எங்கள் வாகனங்கள் அனைத்தும் நகரின் பிரபலமான மார்க்கெட் ஆன MG Marg நோக்கி விரைந்தன.  மலைப்பகுதிகளில் உள்ள எல்லா நகரங்களிலும், குறிப்பாக ஷிம்லா, டார்ஜிலிங், நைனிதால் போன்ற மலைவாசஸ்தலங்களில் ஆங்கிலேயர்கள் Maal Road என்ற பெயரில் கடைகள் வரிசையாக அமைத்து இயற்கை எழிலை ரசித்தபடி அங்கே உலா வர ஏதுவாக அமைத்து இருந்தார்கள்.  அதே போல சிக்கிம் தலைநகர் Gகாங்டாக்-இலும் ஆங்கிலேயர்கள் ஒரு மால் ரோடு அமைக்கவில்லை என்றாலும் தற்போது அந்த நகரில் MG Marg என்ற பெயரில் ஒரு பிரபலமான ஷாப்பிங் பகுதி அமைந்திருக்கிறது.  விதம் விதமான கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு வசதிகள் என மிகவும் அழகான இடமாக உருவாக்கி இருக்கிறார்கள்.  சிக்கிம் தலைநகர் Gகாங்டாக்-இன் இதயம் போன்றது இந்தப் பகுதி என்றும் சொல்லலாம். மொத்தமே ஒரு கிலோ மீட்டர் நீளம் தான் இருக்கும் இந்த MG Marg - MG என்ற பெயர் சுருக்கம் இவருடையது என்று நீங்கள் யூகித்து இருக்கலாம் - ஆம் தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்களின் பெயரில் தான் இந்த சாலை அமைத்து இருக்கிறார்கள்.  சாலையின் ஆரம்பத்தில் அவருடைய ஒரு பெரிய சிலையும் இருக்கிறது.  அந்த இடம் பலரும் நிழற்படம் எடுத்துக் கொள்ளும் இடமாகவும் இருக்கிறது. இந்த சாலையின் சிறப்பு என சில விஷயங்களைச் சொல்லலாம். இந்த ஒரு கிலோ மீட்டர் பாதையில் எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை! எச்சில் துப்புவது, குப்பைகள் போடுவது, சிகரெட்-பீடி போன்றவை குடிப்பது என எதற்கும் அனுமதி இல்லை.  மிகவும் சுத்தமாக பராமரிக்கிறார்கள் என்பதால் எப்போதும் அழகாகவே இருக்கிறது இந்த இடம்.  சுற்றுலாவாசிகள், உள்ளூர் மனிதர்கள் என அனைவரும் நாடும் இடமாக இந்த MG Marg அமைந்து இருக்கிறது.  செவ்வாய் கிழமைகளில் மட்டும் விடுமுறை விடப்படும் இந்த மார்க்கெட் தினமும் காலை 08.00 மணிக்கு திறந்தால் மாலை 07.00 (சில சமயங்களில் 09.00 மணி) வரை கடைகள் அனைத்தும் திறந்திருக்கின்றன.  மாலை நேரங்களில் இந்த இடமே ஜகஜ்ஜோதியாக இருக்கிறது.  எங்கேயும் ஒளிரும் அழகிய விளக்குகள், தண்ணீர் திவலைகள் திளைக்கும் நீரூற்றுகள், அங்கே வருபவர்கள் அமர்ந்து சூழலை ரசிக்கும் விதமாக, சாலையின் நடுவே அமைக்கப்பட்ட பெஞ்சுகள், அங்கே அமர்ந்து கொண்டு சூழலை ரசிக்கும் பெரியவர்களும், யுவதிகளும் என மிகவும் சிறப்பாக இருக்கிறது அந்த இடம் முழுவதும்! எங்கள் குழுவினர் அனைவரும் ஆங்காங்கே இருக்கும் கடைகளுக்கும் உணவகங்களுக்கும் படையெடுக்க, நான் மீண்டும் தனியாக உலா வந்தேன்.  நிறைய கடைகள் - உணவு வகைகள், துணி வகைகள், அலங்காரப் பொருட்கள், பெண்களுக்கான விஷயங்கள், வீட்டிற்குத் தேவையான பொருட்கள், மூங்கில் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் என பல விஷயங்கள் அங்கே விற்பனை ஆகின்றன.  விதம் விதமான தேயிலை தூள் மட்டுமே விற்கும் கடைகளும் நிறையவே அங்கே பார்க்க முடிந்தது.  அந்தக் கடைகளுக்குள் நுழைந்தால் விதம் விதமான தேநீர் வாசம்! சில கடைகளில் தேநீர் வாசம் என்றால் பல கடைகளில் அங்கே விற்கப்படும் விதம் விதமான உணவுப் பொருட்களின் வாசம் அங்கே உலா வரும் சுற்றுலாவாசிகள்/உள்ளூர்வாசிகளின் மூக்கில் நுழைந்து தங்களுக்கான வாடிக்கையாளர்களை வலைவீசிப் பிடிக்கின்றது. நாள் முழுவதும் பல இடங்களை பார்த்து விட்டு வந்த பின்னர், இந்த அழகான சூழலில் நடந்தபடியே பாரம்பரிய உணவு வகைகளை சுவைப்பதோடு, அந்த இடத்தில் இருக்கும் பலகைகளில் அமர்ந்து சூழலை ரசிக்கலாம் என்பதும் நல்லதொரு வசதி.  பல சுற்றுலாவாசிகள் இங்கே வந்தாலும், உள்ளூர்வாசிகளும் இந்த இடத்தில் நிறைந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு மாலைப் பொழுதும் இங்கே வந்து பொழுதைப் போக்குவது அவர்களது வாடிக்கையாக இருக்கிறது.  பெரும்பாலான கடைகள் பச்சை வண்ணத்தில் மிளிர்கின்றன.  சாலையின் ஒரு ஓரத்தில் சுற்றுலா பயணிகள் தகவல் மையம் இருக்கிறது. அதன் அருகே ஒரு தற்காலிக மேடையும் அமைத்து இருக்கிறார்கள்.  அந்த மேடையில் அவ்வப்போது கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்.  நாங்கள் சென்ற நேரம் கலைநிகழ்ச்சிகள் முடிவடைந்து கலைஞர்கள் ஒப்பனைகளைக் கலைத்து, தங்களது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.  நீண்ட நேரம் இந்த சாலையில் நான் உலாவிக் கொண்டிருந்தாலும், எதுவும் வாங்கவில்லை.  என்னுடன் வந்திருந்த மற்ற அலுவலர்கள் அனைவரும் எதை எதையோ வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள்.  திரும்பவும் விமானத்தில் பயணிக்கும் போது பொருட்களின் எடை அனுமதிக்கப்பட்ட 15 கிலோவை தாண்டிவிடும் என்று எனக்குத் தோன்றியது.  ஆனால், குழுவாக இருப்பதால் என்போன்றவர்கள் பொருட்கள் குறைவாக வைத்திருந்தால் பிரச்னை இருக்காது என்பதும் மனதில் ஓடியது.  நான் பல கடைகளில் மகளுக்கு ஏதேனும் வித்தியாசமான பொருட்கள் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒன்றிரண்டு கைப்பைகள் பிடித்திருக்க, அவற்றை படம் எடுத்து அனுப்பி வைத்தேன்.  ஆனால் மகளுக்கு  அது அவ்வளவாக பிடித்திருக்கவில்லை என்பதால் வாங்கவில்லை.  அதுவும் நல்லதற்கே! மகளுக்கும் மனைவிக்கும் எது பிடிக்குமோ அவர்களே வாங்கிக் கொள்வது நல்லது தானே.  சிறிது நேரம் அந்த சாலையின் ஓரத்தில் இருக்கும் பலகைகளில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தபடியே ஒரு தேநீர் அருந்தினேன்.  ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனபிறகும் என்னுடன் வந்தவர்கள் அவர்களது ஷாப்பிங் முடித்திருக்கவில்லை.  நான்கு ஐந்து பேர் என்றால் வாகனத்தில் சேர்ந்து பயணித்து இருக்கலாம்.  தனியாக வாகனம் அமர்த்திக் கொள்ள எனக்கு மனதில்லை.  ஒரு கிலோ மீட்டர் தொலைவு தானே, மலைப்பாதையில், மேலும் கீழும் செல்லும் சாலையில் நடக்க ஆரம்பித்து விட்டேன் - இருக்கவே இருக்கிறது Google Maps. பொதுவாக சாலையில் வாகனத்தில் பயணிக்கும் போது மட்டுமல்ல, நடந்து செல்லும் போதும் Google Maps பயன்படுத்தினால் சில சமயங்களில் நன்றாக சுற்றவைத்துவிடும்! ஆனால் இந்த முறை பிரச்னை ஏதும் இல்லாமல் நேரடியாக எனது தங்குமிடத்திற்கு என்னால் Google Maps உதவியோடு சென்று சேர முடிந்தது.  ஆனால் அந்தப் பாதைகளில் பெரும்பாலும் தெரு விளக்குகள் இல்லை - இருந்தாலும் மிகவும் மங்கலாக இருந்தது.  தனியாக நடக்கும்போது, எதிரே பார்க்கும் உள்ளூர் வாசிகள் ஏனோ ஒரு வித விரோதத்துடன் பார்ப்பது போலவே எனக்குத் தோன்றியது.  எனக்கு எந்த வித பிரச்னையும் இல்லை என்றாலும், வட கிழக்கு மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு நண்பருக்கு அவர் நடந்து வந்த போது சில தொல்லைகள் இருந்ததாம்.  அவர் பாதி வழி நடந்து வந்தபின்னர் தொல்லைகளில் இருந்து தப்பிக்க ஒரு டாக்ஸி பிடித்து வந்ததைச் சொன்னபோது, நல்லவேளை எனக்கு பிரச்னை ஏதும் இல்லாமல் போனதே என்று நினைத்துக் கொண்டேன்.  தங்குமிடத்திற்கு வந்து சில நிமிடங்கள் ஒய்வு எடுத்துக் கொண்ட பிறகு இரவு உணவுக்காக தங்குமிடத்தில் இருந்த உணவகத்திற்குச் சென்று சேர்ந்தேன்.  நல்ல வேளையாக மதியம் இருந்தது போல அதிக கூட்டம் இல்லாமல் நாங்கள் மட்டுமே இருந்ததால் நின்று நிதானித்து, Buffet முறையில் வைக்கப்பட்டு இருந்த உணவை கவனித்து, தேவையானவற்றை எடுத்துக் கொண்டு சில நண்பர்களுடன் அமர்ந்து அளவளாவியபடி உண்ண முடிந்தது.  அடுத்த நாள் காலையில் விரைவாக தங்குமிடத்திலிருந்து புறப்பட வேண்டும் - நீண்டதொரு பயணம் காத்திருந்தது - என்பதால் எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று கதவை தாளிடாமல் தூங்க ஆரம்பித்தேன் - எனது ரூம் பார்ட்னர் எப்போது வந்தார் என்று கூட தெரியாமல் நல்ல உறக்கம்! இப்படியாக சிக்கிம் தலைநகர் Gகாங்டாக் நகரில் எனது ஒரு நாள் கழிந்தது.  அடுத்த நாள் எங்களுக்கு என்ன அனுபவங்களைத் தந்தது என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே. 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

வியாழன், 25 மே, 2023

தலைமுடி உதிர்வும் வெங்காய பக்கோடாவும் - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட 22ஆம் ஆண்டில் அடியெடுத்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். ******

புதன், 24 மே, 2023

22ஆம் ஆண்டில் அடியெடுத்து….! - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WHEN YOU STOP EXPECTING PEOPLE TO BE PERFECT, YOU CAN LIKE THEM FOR WHO THEY ARE - DONALD MILLER. 


******

செவ்வாய், 23 மே, 2023

கதம்பம் - வீடு திரும்பல் - ஓவியம் - பகோடா - PS 2 - கல்லூரி வாசல் - கனவை நோக்கி - பொது - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சிக்கிம் தங்குமிடம் - Monastery உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


STOP BEING AFRAID OF WHAT COULD GO WRONG AND START BEING EXCITED ABOUT WHAT COULD GO RIGHT. 


******

திங்கள், 22 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பதினான்கு - சிக்கிம் தங்குமிடம் - Monastery உலா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி பத்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


LIFE IS A JOURNEY WITH PROBLEMS TO SOLVE AND LESSONS TO LEARN BUT MOST OF ALL… EXPERIENCES TO ENJOY. 


******

ஞாயிறு, 21 மே, 2023

தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி பத்து - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்பது படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மகிழ்ச்சி வேண்டுமானால் பணம் சார்ந்ததாக இருக்கலாம்; ஆனால் நிம்மதி என்றும் மனம் சார்ந்தது. 


******

சனி, 20 மே, 2023

தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்பது - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட LOVERS MEET VIEWPOINT படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


DO EVERYTHING WITH A GOOD HEART AND EXPECT NOTHING IN RETURN, AND YOU WILL NEVER BE DISAPPOINTED. 


******

வெள்ளி, 19 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பதிமூன்று - LOVERS MEET VIEWPOINT


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி எட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


"The road is there, it will always be there. You just have to decide when to take it." - Chris Humphrey. 


******

வியாழன், 18 மே, 2023

தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி எட்டு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மலை இரயிலில் ஒரு பயணம் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ACCEPT YOUR PAST WITHOUT REGRETS; HANDLE YOUR PRESENT WITH CONFIDENCE; FACE YOUR FUTURE WITHOUT FEAR.


******

புதன், 17 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பன்னிரண்டு - Darjeeling Himalayan Railway - மலை இரயிலில் ஒரு பயணம்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஏழு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“Be like a train; go in the rain, go in the sun, go in the storm, go in the dark tunnels!” —Mehmet Murat Ildan.


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


பகுதி பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம்


******


தேயிலைத் தோட்டங்களை பார்த்ததோடு, ரோப்வேயில் பயணித்த அனுபவங்களுடன் மதிய உணவுக்காக மீண்டும் தங்குமிடம் பயணித்தோம் என்று சென்ற பகுதியில் சொல்லி இருந்தது நினைவில் இருக்கலாம்.  அதன் பின்னர் சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் டார்ஜிலிங் நோக்கி வாகனத்தில் பயணித்தோம்.  இந்தப் பயணம் எதற்காக?  மிகவும் பிரபலமான, UNESCO WORLD HERITAGE என்று சொல்லப்படும், பாதுகாக்கப்படும் ஒரு புராதனமான இரயில் மூலம் நாங்கள் பயணிப்பதற்காகவே இந்த டார்ஜிலிங் நோக்கிய பயணம்.  Darjeeling Himalayan Railway, இந்தியாவில் மலைப்பகுதிகளில் இயங்கும் மூன்று இரயில் பாதைகளில் பிரதானமானதும் முதன்மையானதும் ஆகும்.   இந்தியாவில் மூன்று மலைப்பிரதேசங்களில் இது போன்ற இரயில்கள் இயங்குகின்றன.  அவை நம் தமிழகத்தின் நீலகிரி மலையில் (மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை) இயங்கும் இரயில், மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பய்குரியிலிருந்து டார்ஜிலிங் வரை இயங்கும் இரயில் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் கல்கா நகரிலிருந்து ஷிம்லா வரை இயங்கும் இரயில் ஆகியவை. இந்த மூன்று மலை ரயில்களில் 1854-ஆம் ஆண்டு நீலகிரி மலை இரயில் குறித்து பேசப்பட்டாலும், முதன் முதலாக 1881-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மலைப்பாதை இரயில் டார்ஜிலிங் நகரில் இயங்கும் இரயில் தான்.  இருப்பதிலேயே நீளமான மலைப்பகுதி இரயில் பாதையைக் கொண்டது ஷிம்லா இரயில்! அதிக அளவு பரப்பளவு கொண்டதும் இந்த ஷிம்லா இரயில் தான்.  டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே மொத்தம் 88.48 கிலோமீட்டர் நீளமான பாதையைக் கொண்டுள்ளது. நியூ ஜல்பைகுரியை டார்ஜிலிங்குடன் இணைக்கும் இந்தப் பாதை நாங்கள் தங்கி இருந்த GHUM வழியாக செல்கிறது.  கடல் மட்டத்திலிருந்து 2258 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த பாதையில் இரயில்கள் தற்போதும் இயங்குகின்றன.  மூன்று மலைப்பகுதி ரயில்களும் தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது பெருமைக்குரிய விஷயம் தான்.  மலைப்பாதையில் பேருந்து போன்ற வாகனங்கள் செல்லும் சாலையும், இரயில் பாதையும் குறுக்கேயும் நெடுக்கேயும் போக, இரயில் செல்லும் போது தானாகவே வாகனங்கள் நின்று வழி விடுவதுமாக அழகான காட்சிகளை இந்த டார்ஜிலிங் பகுதிகளில் நீங்கள் பார்க்க முடியும்.  

நியூ ஜல்பய்குரியிலிருந்து டார்ஜிலிங் வரையான தூரம் சுமார் 89 கிலோமீட்டர்.  ஆனால் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக டார்ஜிலிங் நகரிலிருந்து புறப்பட்டு Batasia Loop என்ற நிலையம் வழியாக Ghum வரை சென்று மீண்டும் அதே வழியில் டார்ஜிலிங் வரை சென்று சேரும்படி ஒரு Circular Train-ஐ இயக்குகிறார்கள்.  தினமும் இப்படியான இரயில்கள் காலையிலிருந்து மாலை வரை இயக்கப்படுகிறது.  ஒரு Circular Trip இந்த இரயிலில் பயணிக்க, கட்டணம் 1600 ரூபாய்.  மிகவும் சிறிய, Toy Train என்று அழைக்கப்படும் இந்த இரயிலில் பயணிக்கும்போது மிகவும் மெதுவாகவே செல்வதால் சுற்றி இருக்கும் மலைகளின் அழகையும் இயற்கை எழிலையும் பார்த்தபடி பயணிப்பதோடு, நடுவில் வரும் சிறு கிராமங்களில் கடைத்தெருக்களையும் பார்த்த படியே நீங்கள் பயணிக்க முடியும்.  இந்த இரயிலில் பயணிப்பதற்காகவே நாங்களும் டார்ஜிலிங் நோக்கி வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம்.  இரயில் நிலையம் வாயிலில் எங்களை இறக்கி விட்ட வாகனங்கள் அங்கேயே காத்திருக்க, நாங்கள் இரயிலில் சுற்றி வர இரயில் நிலையத்திற்குள் புகுந்தோம்.  


ஆரம்ப காலத்தில் நீராவி மூலம் இயங்கிய எஞ்சின்கள் மட்டுமே இருந்தன என்றாலும் பின்னர் டீசல் மூலம் இயங்கும் என்ஜின்களும் இந்தப் பாதையில் பயன்படுத்தப்பட்டன.  இப்போதும், நீராவி மூலம் இயக்கப்படும் எஞ்சின்கள் இந்தப் பாதையில் பயன்படுத்தப்படுகின்றன.  132-ஆண்டுகள் ஆனாலும் இப்போதும் இந்த எஞ்சின்கள் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  நாங்கள் இரயில் நிலையம் சென்ற போது அங்கே இருந்த சில நீராவி எஞ்சின்களை படங்களும் காணொளியும் எடுத்துக் கொண்டோம்.  பிறகு எங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் அனைவரும் அமர்ந்து கொண்டோம்.  ஒரு பெட்டி முழுவதும் எங்கள் குழுவினர் மட்டுமே! அதனால் பாட்டும், நடனமும் புகைப்படங்கள் எடுப்பது என்றும் மிகவும் சந்தோஷமாக ஆரம்பித்தது எங்கள் மலைப்பாதை இரயில் பயணம்.  மிகவும் மெதுவாகவே இந்த இரயில்கள் இயங்கும் என்பதால் காட்சிகளை பொறுமையாக பார்த்து ரசிக்கலாம்.  பொதுவாக நாம் இரயிலில் பயணிக்கும்போது வேகமாக பயணிப்பதால், பல காட்சிகள் நொடியில் மறைந்து விடுவதாகவே அமையும்.  ஆனால் இந்த இரயில் மிகமிக மெதுவாக பயணிப்பதால் நின்று நிதானித்து எல்லா காட்சிகளையும் நாம் பார்த்து ரசிக்க முடியும். 


பொதுவாக நாம் பார்த்திருக்கும் இரயில் பாதைகள் மூன்று மட்டுமே - அதாவது Broad Gauge, Meter Gauge மற்றும் Standard Gauge மட்டுமே! ஆனால் இந்த மலை இரயில்கள் இயங்குவது அவற்றை விட குறுகிய Narrow Gauge என்ற இரயில் பாதையில்!  அதாவது இரயில் பாதையில் இரண்டு இரயில் தண்டவாளங்களுக்கு இடையே இருக்கும் தூரத்தினை வைத்து இந்த பெயர்கள் வைத்திருக்கிறார்கள்.  உங்கள் புரிதலுக்காக பொதுவான அளவுகள் கீழே தந்திருக்கிறேன்.  


Broad Gauge - 1676 mm - 5 Ft 6 Inches;

Standard Gauge - 1435 mm - 4 Ft 8 ½ Inches;

Meter Gauge - 1,000 mm - 3 ft 3 3/8 Inches;

Narrow Gauge - 600 mm 


பல ஹிந்தி சினிமா படங்கள் இந்த இரயில் பாதையிலும், இரயிலிலும் எடுக்கப்பட்டு இருக்கின்றன.  2012-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட Barfi என்ற திரைப்படம் கூட இங்கே தான் எடுத்தார்கள் என்று தகவல்கள் உண்டு.  இந்தப் படத்தில் டார்ஜிலிங் மற்றும் இங்கே இயங்கும் இந்த இரயில் என அனைத்தையும் அழகாகக் காண்பித்து இருப்பார்கள்.  படத்தில் இருக்கும் பல காட்சிகளை நாங்கள் நேரிலேயே பார்த்தோம்.  அழகான பாதையும் காட்சிகளும் பார்த்து ரசிக்க வேண்டியவை.  


சில மணித்துளிகள் பயணித்த பிறகு இரயில் Batasia Loop என்ற இரயில் நிலையத்தில் ஒரு சுற்று சுற்றி நிற்கிறது.  அங்கே சுமார் 15 நிமிடங்கள் இரயில் நிற்கும்.  அந்த இரயில் நிலையத்தில் ஒரு ஸ்தூபாவும் அழகான பூங்காவும் இருக்கிறது.  அங்கே ஒவ்வொரு சுற்றுலா பயணியும் படங்கள் எடுத்துக் கொள்வதோடு இயற்கை எழிலையும் பார்த்து ரசிக்கலாம்.  நிறைய படங்கள், காணொளிகள் என எடுத்துக் கொண்டிருக்க, இரயில் புறப்படுவதற்கான நீண்டதொரு விசில் ஒலிக்கிறது! மீண்டும் அனைத்து பயணிகளும் இரயிலில் ஏறிக்கொள்ள மலைப்பாதையில் பயணித்து இரயில் சென்று சேரும் இடம், நாங்கள் தங்கி இருந்த Ghum! இந்த இரயில் நிலையத்தில் இரயில் சுமார் 20 நிமிடங்கள் நிற்கின்றது.  அங்கே இந்த மலை இரயில் சம்பந்தமான ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது.  அதனை சுற்றுலா வாசிகள் கண்டு ரசிக்கவே இந்த 20 நிமிடம்.  நாங்கள் சென்ற சமயத்தில் அங்கே ஒரு திருவிழாவும் நடந்தது என்பதால் பாட்டு, ஆட்டம் என மிகவும் ரசனையாக இருந்தது.  இந்த நேரத்திலும் நிறைய படங்கள் எடுத்தோம்.  


இருபது நிமிடத்திற்குப் பிறகு நாங்கள் வந்த இரயில் மீண்டும் டார்ஜிலிங் நோக்கிய தனது பயணத்தினை துவங்கியது.  நாங்களும் அந்த இரயிலில் ஏறிக்கொண்டு டார்ஜிலிங் நோக்கி பயணித்தோம்.   காலையில் புறப்படும் போது எங்களுடன் வராமல் தாமதமாக புறப்பட்ட பெண் (சக பயிற்சியாளர்) ஓடும் இரயிலில் வந்து ஏற, அவரை கை பிடித்து தூக்கி விட்டோம்! ஒரு வழியாக எங்கள் அன்றைய தினத்தின் திட்டங்களில் கடைசியாக இருந்த பயணத்தில் அவரும் வந்து சேர்ந்து விட்டார்.  அவர் தாமதமாக வந்தாலும், விட்டு வந்த மற்ற சக பயிற்சியாளர்களிடம் அவர்கள் தவறு செய்தது போல சண்டை வேறு!  அனைவரையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பில் நானும் எங்களது பயிற்சியாளரும்! எப்படியோ, UNESCO WORLD HERITAGE இரயிலில் நாங்களும் பயணித்து விட்டோம் என்கிற மகிழ்ச்சியுடன் இந்த இரயில் பயணம் இனிதே முடிந்தது.  டார்ஜிலிங் நகரில் எங்கள் வாகனங்கள் காத்திருக்க, அந்த வாகனங்களில் ஏறிக்கொண்டு நாங்கள் தங்கிய இடமான GHUM வந்து சேர்ந்தோம்.  தொடர்ந்து என்ன அனுபவங்கள் என்பதை வரும் பகுதிகளில் பகிர்ந்து கொள்கிறேன். அது வரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.    


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…