வெள்ளி, 20 அக்டோபர், 2023

கதம்பம் - டிசைன் - ஆவாரம் பூ - இயற்கை - புது வரவு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LET YOUR HANDS BE SO BUSY CATCHING BLESSINGS THAT YOU DON’T HAVE THE CAPACITY TO HOLD ON TO GRUDGES.

 

******

 


ரோஷ்ணி கார்னர் - 25 செப்டம்பர் 2023:





 

கல்லூரியில் படிக்கும் மகள் தன் Record workக்காக design செய்தது! உங்களுடன் ஒரு பகிர்வாக!

 

&*&*&*&**&*&*

 

ஆவாரம் பூ - 28 செப்டெம்பர் 2023:











 

ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ!

 

ஆவாரம் பூவை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் நம்மை எந்த நோய்நொடியும் எளிதில் அணுகாது என்று சொல்கிறார்கள்! ஆவாரம் பூவை நீரில் கொதிக்க வைத்து தேநீராகவும் பருகலாம்! இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும்  உதவுகிறது! 

 

இன்றைய நடைப்பயிற்சியில் வழியெங்கும் ஆவாரை பூத்திருந்ததை பார்க்க முடிந்தது! இத்தனை நாட்கள் ஏனோ எங்கள்  கண்களுக்கு தட்டுப்படவில்லை! இன்னும் சில புதிய வகை செடிகளையும் பார்க்க முடிந்தது!

 

ஏய்! கீழ பார்த்து வா! அட்டைய மிதிச்சிருப்ப...!

 

அட்டைப்பூச்சியா!! அது ரத்தத்த உறிஞ்சிடும்னு சொல்லுவாங்களே! அது காட்டுல தான இருக்கும்! இங்க எப்படி??

 

இது தான் அட்டைப்பூச்சி! பாரு!

 

மரத்துல இருந்து ஏதோ இலை விழுந்திருக்குன்னு தான் நினைச்சேன்!!

அது போற வழியெல்லாம் ஒரு கோடு மாதிரி போட்டுண்டே போகும்! இதோ பாரு!

 

அட! ஆமா! 

 

இது உடம்பில இருக்கிற கெட்ட ரத்தத்த உறிஞ்சி எடுக்கும்னு மெடிக்கல் ஃபீல்டுல யூஸ் பண்றாங்க! அதுக்கு பேரு leech therapy! Vericose vainக்கெல்லாம் இத வெச்சு  ட்ரீட்மெண்ட் குடுக்கறாங்க!

 

ஓ! அதுக்காக அத கடிக்க விட்டு வேடிக்கை பார்க்க முடியுமா...🙂

 

ட்ரீட்மெண்ட்டே அது தான்னு சொல்லும் போது ஒத்துண்டு தானே ஆகணும்!

 

சரி! அங்க பாரு! அந்த வாட்டர் டேங்க்குக்கு கீழே sun தெரியறதா! அந்த ஃப்ரேமுக்குள்ள இருக்கிற மாதிரி க்ளிக் பண்ணு பார்க்கலாம்! கரெக்ட்டா வெச்சு எடுக்கணும்!

 

&*&*&*&**&*&*

 

புதுவரவு - 1 அக்டோபர் 2023:


 

ELGI Ultra wet grinder!

 

சில நாட்களுக்கு முன் 18 வருடங்களாக எனக்கும் பெரிதும் உதவி உழைத்துக் கொண்டிருந்த என்னுடைய PVG super grinderக்கு ஓய்வு கொடுக்கலாம் என நினைத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தேன்! அதில் புதிதாக வேறு கிரைண்டர் வாங்கணும் என்றும் எழுதியிருந்தேன்! 

 

அந்தப் பதிவில் நட்புகளான உங்கள் அனைவரின் பரிந்துரையும் ELGI Ultraவாக தான் இருந்தது! அன்றே  நாங்களும் அதையே வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டோம்! என்னவரும் அதை உடனே வாங்கிக் கொள் என்று சொன்னாலும் நான் மறுத்து விட்டேன்! 

 

எந்த ஒரு பொருளும் சேமிப்பிலிருந்து தான் வாங்கணும் என்று நினைப்பவள் ஆயிற்றே..🙂 அதனால் சற்றே பொறுத்திருந்து வீட்டுச் செலவில் மிச்சம் பிடித்து  கையிருப்பை மிகைப்படுத்திக் கொண்டு இதோ வாங்கி விட்டேன்! இதில் தானே உண்மையான மகிழ்ச்சி!

 

இதுவும் எங்க ஊர் தயாரிப்பு தான்! டிப்ளமோ முடித்திருந்த சமயம் பல கம்பெனிகளிலும் வேலைக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த போது ELGI யிலும் கூட  அப்ளை செய்திருந்தேன்! இவர்கள் Air compressors உற்பத்தி செய்பவர்கள்!

 

இன்று புதிய கிரைண்டரில் இட்லி மாவும் அரைத்து விட்டேன்! இதுவரை புழங்கிக் கொண்டிருந்த கிரைண்டரிலிருந்து இது சற்றே மாறுபட்டு உள்ளதாக எனக்குத்  தோன்றுகிறது! சில வருடங்களாகவே அரிசியை போட்டவுடன் நின்று விடும் கிரைண்டரில் தாராளமாக தண்ணீர் ஊற்றி தள்ளி விட்டுக் கொண்டே தான் இருப்பேன்! ஆனால் இன்று குறைவான தண்ணீரில் விரைவாகவும் அரைத்து எடுக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி!

 

அதேசமயம் கிரைண்டர் ஓடிக் கொண்டிருக்கும் போதே குழவியிலிருந்து மாவை ஒட்ட ஒட்ட எடுக்க முடியலை! க்ளீன் செய்வதற்கும் சற்று கூடுதலாக வேலை வாங்குகிறது! மேலே உள்ள பார் இடைஞ்சலாக இருக்கிறது! என்று சில கருத்துகளும் என்னிடம் இருக்கின்றன! 

 

நான் அதற்கு தகுந்தவாறு பழகிக் கொள்ளணும்...🙂 அதேபோல்  உங்களின் டிப்ஸ்களையும் சொன்னால் எனக்கு உதவிகரமாக இருக்கும்!

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

பின் குறிப்பு:  கடந்த செப்டம்பர்/அக்டோபர் மாதம் எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றை, வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

 

10 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் அருமை.  ரோஷ்ணியின் டிசைன் ஓவியங்கள் மிக அருமை.  டேங்குக்கு கீழே சூரியன் படம் நன்றாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. ஒரு பொருள் புதிதாய் வாங்கி உபயோகிக்கும்போது வரும் சந்தோஷம் தனிதான்.  சில குறைகள் இருக்கலாம்.  பழகி விடும்.

    பதிலளிநீக்கு
  3. அட்டை பற்றி சொல்லி இருப்பதைப் படிக்கும்போது இது வேறு அட்டை என்று தோன்றியது.  வனங்களில் இருக்கும் அட்டைகள்தான் ரத்தம் உறிஞ்சும் என்று நினைக்கிறேன்.  இது சாது!

    பதிலளிநீக்கு
  4. மகளின் டிசைன்கள் அருமை.

    படங்களும் அருமை. ஆவாரம் பூவு ஆறேழு நாளாய்.... பாடல் மனதில் வந்துபோனது

    பதிலளிநீக்கு
  5. நிர்மலா ரெங்கராஜன்20 அக்டோபர், 2023 அன்று AM 9:08

    படங்களும் Roshni ன் design களும் அருமை.
    புகைபடங்களில் கிராமத்தில் நான் பார்த்த செடிகளை அடையாளம் காண முடிந்தது👍
    புது வரவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐

    பதிலளிநீக்கு
  6. ரோஷ்ணியின் கைவண்ணங்களும் இயற்கையின் கைவண்ணங்களும் அருமை!

    சல்லடை இலை! முள்ளம்பன்றி காய் எல்லாம் அருமை!

    பதிலளிநீக்கு
  7. ரோஷ்ணியின் டிசைன்கள் எல்லாம் அருமை.
    இயற்கையின் கொடைகள் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  8. தங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. ரோஷ்ணியின் டிசைன்கள் எல்லாமே மிக நன்றாக இருக்கின்றன.

    நீங்க எடுத்திருக்கும் படங்கள் எல்லாமே அழகு.

    அந்த அட்டை Leech ஆச்கேன்னு படம் பார்த்ததும் தெரிந்ததும் நீங்களும் சொல்லிட்டீங்க. ஆமாம் இது மருத்துவ உலகில் பயன்படுத்தப்படுகிறது.

    ஆவாரம் பூ ரொம்ப நல்ல மருத்துவ குணங்களைக் கொண்டதுதான். சர்க்கரை வியாதிக்கும் நல்லதுதான் ஆனால் மருத்துவரைக் கலந்தாலோசித்துக் கொண்டுதான் எடுக்க வேண்டும்.

    இயற்கை படங்கல் அத்தனையும் அருமை ரசித்துப் பார்த்தேன்.

    ஆ புது கிரைண்டர் வந்தாச்சா....சூப்ப்ர். சரஸ்வதி பூஜைக்கு வடைக்கு அரைச்சுடுங்க!!!!!!!!!!!!! நல்லா வரும். சீக்கிரம் அரைஞ்சுடும் புதுசு இல்லையா...
    அல்ட்ரா பழகிடும். ஆமாம் இதில் குழவியில் வழித்து எடுக்க முடியாது. நடுவில் ராட் வரும்...அன்று சொல்ல விட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன். ஆனா நீடித்து வரும் ஆதி. நாம் பயன்படுத்துவதிலும் இருக்குதான்...நீங்க நல்லா வைச்சுக்குவீங்க. ஸோ பிரச்சனை வராது.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....