சமீபத்தில்
தமிழகத்தில் இருந்தபோது சில பேருந்து பயணங்கள். பெரும்பாலான பயணங்களில் சக பயணிகளின்
சம்பாஷணைகளை கவனிப்பது பழக்கமாக இருந்தது. [உடனே ”ராஜா காது
கழுதை காது பகுதிக்கு மேட்டர் நிறைய தேத்திட்டீங்க போல” என்று கேட்டால் பதில்
இல்லை என்பதாகத் தான் இருக்கும்! நகரப் பேருந்தில் பயணங்கள், அதுவும் கிராமப் புறப்
பயணங்களில் நிறையவே அனுபவங்கள் கிடைக்கின்றன. திருப்பராய்த்துறைக்கு சில முறைகள் பயணித்த
போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம். மக்கள் இப்போதெல்லாம் நிறையவே அரசியல் பேசுகிறார்கள்.
அப்படியே நிகழ்வுகளை நேரில் பார்த்த மாதிரியே விமர்சிக்கிறார்கள். அந்த அரசியல்வாதிக்கு
இத்தனை கோடி சொத்து, இவனுக்கு அவளோடு தொடர்பு என பேச நிறைய விஷயங்கள், அதையும் பொது
வெளியில் சத்தமாகவே பேசுகிறார்கள். The Right to Speech!
Tamil Nadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil Nadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 31 அக்டோபர், 2017
ஞாயிறு, 29 அக்டோபர், 2017
புகைப்பட உலா – நவராத்ரி கொலு
நீண்ட
இடைவெளிக்குப் பிறகு இந்த ஞாயிறில் ஒரு புகைப்பட உலா. நவராத்ரி சமயத்தில் நான் சென்ற
வீடு/கோவில்களில் வைத்திருந்த கொலு பொம்மைகளை படம் எடுத்து பகிர்ந்து கொள்வதுண்டு.
[புகைப்படம் எடுக்கச் செல்கிறேன் என்ற பெயரில் சுண்டல் சாப்பிடச்
செல்வேன் என்று யாரும் தப்பாக புரிந்து கொள்ள வேண்டாம்! – யார்ப்பா அது, அது
தான் உண்மை என்று குரல் கொடுப்பது!]. இந்த ஆண்டு நவராத்ரி சமயத்தில் தமிழகத்தில் தான்
இருந்தேன் என்றாலும், கொலு பார்ப்பதற்கென்று சென்ற இடங்கள் ரொம்பவும் குறைவு – In
Fact, ஒரே ஒரு வீட்டிற்குத் தான் என்னை அழைத்துச் சென்றார்கள்!! What a pity! வீட்டிலேயே
கொலு வைத்திருந்ததால் அதற்கே நேரம் சரியாக இருந்தது [தினம்
சுண்டல் உங்க கைவண்ணம் தானே என மதுரைத் தமிழனும், சகோதரி ராஜியும் கேட்டால் பதிலாக,
நானில்லை என்று தான் சொல்லுவேன்!]
Labels:
அனுபவம்,
இந்தியா,
தமிழகம்,
திருவரங்கம்,
பதிவர்கள்,
புகைப்படங்கள்,
பொது,
India,
Tamil Nadu
புதன், 2 ஆகஸ்ட், 2017
கெத்தாமரிக்காய் – தொக்கு – ஆதி வெங்கட்.
நெய்வேலியில்
இருந்த போது எங்கள் வீட்டிற்கு சில தெருக்கள் தாண்டி, ஒரு உறவினர் இருந்தார். சில சமயங்களில்
எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் பேசுவதைக் கேட்டாலே எங்களுக்கு சிரிப்பு வரும் – காரணம்
பாதி புரியாது! எதைச் சொல்கிறார் என்று புரிந்த பிறகு சிரிப்பு தான்! ஒரு நாள் அப்படித்தான்
வீட்டிற்கு வந்தவர், “இன்னிக்கு டொக்கு போட்டேன்! ரொம்ப நல்லா வந்தது” என்றார். என்னது
டொக்கு போட்டாரா, அப்படின்னா என்ன என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது அவரது
அடுத்த வாக்கியத்தில் எங்களுக்கான பதில் இருந்தது. “நீங்க கொடுத்த மாங்கால தான் டொக்கு போட்டேன்… ரொம்ப
நல்லா இருந்தது. இன்னும் இரண்டு மாங்கா இருந்தா கொடுங்களேன்!” என்றார்…. அட மாங்காயில்
தொக்கு எனப்படும் ஊறுகாய் செய்ததைத் தான் இப்படி “டொக்கு” போட்டேன் என்று சொல்கிறார்
என்று புரிந்ததும், சிரித்தோம். சில காலம் வரை அவர் வரும்போது அம்மாவுக்கு மட்டும்
கேட்கும் குரலில் “அம்மா, டொக்கு மாமி வந்துருக்காங்க!” என்று சொன்னதும் நினைவில்!
Labels:
அனுபவம்,
ஆதி வெங்கட்,
சமையல்,
நினைவுகள்,
நெய்வேலி,
பொது,
India,
Tamil Nadu
செவ்வாய், 2 மே, 2017
செவ்வாய், 25 ஏப்ரல், 2017
சனி, 21 ஜனவரி, 2017
சீறுவோர் சீறு…. – ஜல்லிக்கட்டு – அனைவரும் பார்க்க வேண்டிய குறும்படம்
இன்றைக்கும்
ஜல்லிக்கட்டு பற்றிய பதிவு தான். சமீபத்தில்
புதுகை நண்பர்களும் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் இணைந்து தமிழ் வலைப்பதிவகம் எனும்
WhatsApp குழுவினைத் தொடங்கியது பற்றி எனது பதிவிலும் எழுதி இருக்கிறேன். அதன் மூலம் பல புதிய வலைப்பூக்களை படிக்கும் வாய்ப்பு
கிடைத்து இருக்கிறது எனக்கு. அப்படி புதிதாக படிக்க ஆரம்பித்திருக்கும் ஒரு வலைப்பூ
“தமிழ்ப்பூ”. நேற்று அந்த வலைப்பூவில் “வெள்ளையர் செய்த சூது” எனும் பதிவு படிக்க நேர்ந்தது.
அந்த
பதிவினைப் படிக்க வசதியாக அப்பதிவின் இணைப்பு கீழே….
அந்தப்
பதிவில் மிகச் சிறப்பான தகவல்களை கொடுத்திருக்கிறார். பதிவின் கடைசியில் கொடுத்த சுட்டி வழியாக பார்த்த
ஒரு குறும்படம் “சீறுவோர் சீறு”. மிகச் சிறப்பாக
இருக்கிறது இந்த குறும்படம் – சென்ற வருடத்தில் வெளியிட்டு இருந்தாலும் நிறைய பேர்
பார்க்கவில்லை என்பது தான் சோகம். இப்போதாவது
பாருங்களேன்….
பாரதியாரின்
பாடலோடு முடிந்த குறும்படம் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.
YOUTUBE-ல்
இந்த குறும்படத்தினை இணைத்திருக்கும் திரு ராமசுவாமி இந்த வருடமும் ஒரு காணொளியை இணைத்திருக்கிறார்.
அதையும் பாருங்கள். காணொளி கீழே….
நாளை
வேறொரு பதிவில் சந்திப்போம். சிந்திப்போம்……
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி.
Labels:
இந்தியா,
குறும்படங்கள்,
தமிழகம்,
பதிவர்கள்,
பொது,
India,
Tamil Nadu


