அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
********
Movie GDN at CGV theatre on 06.09.2026
மாலை 6.30 க்கு இந்தப் படம் திரையிடுவதாக தெரியவந்ததும் நான் கணவரிடம் வாருங்கள் போகலாம், மாதவன் படம் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும் என்று சொல்ல, என் கணவர் டாக்குமெண்டரி மாதிரி தான் இருக்கப் போகிறது நீ நச்சரிக்கிறாய் என்பதால் வருகிறேன்,பின்னர் என்னை குற்றம் சொல்லாதே என்றார்.நானும் biopic என்பதால் சிறிது தயங்கியபடியே சென்றேன்.
CGV யின் வரலாறு காணாத அளவு அன்று theatre நிரம்பியிருந்தது. (30 பேர்! Capacity *32*. எப்போதும் 10 - 12 பேருக்கு மேல் கூட்டம் வந்ததில்லை, எந்தப் படமாக இருந்தாலும்).இது OTT யில் வெளிவந்த உடனேயே இரண்டு நாட்களில் இங்கு திரையிடப் பட்டதால் இருக்கலாம்.
இந்தப் படம் திரையிடப்படும் cost முழுவதும் வில்லாவாசியான பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு gentleman ஏற்றுக் கொண்டார். (இல்லாவிடில் cost sharing இல் அனைவரும் pay பண்ணுவோம்) மிக்க நன்றிகள் Sir🙏🏻
படம் ஆரம்பித்த உடன் சத்தமேயில்லை எங்களிடமிருந்து அல்ல ஸ்கிரீனிலிருந்தே! BGM வருகிறது, ஆனால் டயலாக் மட்டும் கேட்கவில்லை.
என்னென்னவோ செய்துபார்த்து பின்னர் எங்கள் சொத்தாகிய மேனேஜர் முத்து வந்தபின்தான் சரியாயிற்று.. முக்கால்மணி நேரம் அதில் கழிந்துவிட்டது. ஆனால் யாருமே bore ஆகி எழுந்து செல்லவில்லை...
ஆச்சர்யம்..
படம் ஆரம்பித்தது.. அதில் ஒன்றினோம்.
இதுவரை GD Naidu என்பவர் படிப்பு கம்மியாக இருந்தும் பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தார், கொஞ்சம் eccentric என்பது மட்டுமே தெரிந்துகொண்டிருந்தோம். ஆனால் அவர் ஒரு தீவிரமான தேசப் பற்று மிக்கவர் என்பதும் தனது கண்டுபிடிப்புகள் எல்லா எளிய மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும் எனும் எண்ணம் கொண்டவர் என்பது புதிய தகவல்...
பல இடங்களில் வசனங்கள் sharp👏🏻👏🏻
விசில் தான் அடிக்கத் தெரியாது, கையாவது தட்டலாம் என்றால் ஒருவர் கூட மூச்சு விடும் சப்தம் கூட எழாமல் படத்தை ஒன்றி பார்த்துக் கொண்டிருந்தனர். (சில அட்டகாசமான scenes பார்க்கும்போது, Elite group ஓடு பார்ப்பதைவிட தரை ticket குரூப்போடு பார்க்கும்போது இன்னும் நன்றாக கைதட்டி ரசிக்கலாமோ என்று எண்ணம் தோன்றியது என்னவோ உண்மை😒)
*Spoiler alert*:
முதல் மனைவி தான் இருந்தால் அவர் (GDN) கண்டுபிடிப்புகள், முன்னேற்றம் இவை தடைபடும் (அதைச் சொல்லும்போது அவளுக்கு குழந்தையும் பிறந்தாயிற்று) ஆகவே அவர், படித்த அவருக்கு அவர் வேலைகளில் supportive ஆக இருக்கும் ஒரு பெண்ணை மணக்கச் சொல்கிறார்..
இவரும் மணக்கிறார். பிள்ளைகளும் பிறக்கின்றனர்.. இது என்ன logic என்று தெரியவில்லை.
பார்க்கப் போனால் முதன் முதலில் GDN பைக் வாங்க பணம் (பைக் விலை Rs.250!) சற்றுக் குறையும்போது அவள்தான் தன் சேமிப்பிலிருந்து (Rs.20) எடுத்துக் கொடுக்கிறாள்.
அதுமட்டுமல்லாமல் அவரை அமரச் சொல்லி தானே மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வது கவிதை 👌🏻👌🏻
புது மனைவியும் ஒன்றும் இவருக்கு பெரிசாக இவர் வேலைகளில் உதவுவதாகத் தெரியவில்லை. கடைசி வரை முதல் மனைவியோ அவள் குழந்தையோ காட்டப் படவில்லை...
பிரியாமணி (முதல் மனைவி) வீணடிக்கப்பட்டிருக்கிறார்...
புதுப் புது கண்டுபிடிப்புகள், இந்தியத் தலைவர்கள் எல்லோரையும் சந்திப்பது, அவர் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைப்பது, ஜெர்மனி பயணம் ஹிட்லர் ஐ சந்திப்பது போன்றவை எல்லாம் பிரமிக்க வைக்கின்றன.
இயக்குநர் நிறைய homework, ஆராய்ச்சி செய்திருக்கிறார்.. GDN குடும்பத்தாருக்கே கூட தெரியாத விஷயங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. சபாஷ்👏🏻👏🏻.
GDN கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதும் முற்போக்கு கொள்கைகள் கொண்டவர் என்பதும் அவருடன் சில காட்சிகளில் தோன்றும் ஈ வே ரா மூலம் கொள்ள முடிகிறது. (அவர் portion ம் waste.... ஒன்றும் பெரிய (வெங்காய கருத்துக்கள்) எல்லாம் சொல்லி, செய்துவிடவில்லை).
சத்யராஜ் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும் GDN இன் நண்பராக வந்து தன் பாத்திரத்தை எப்போதும் போல் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.
அவருக்கே உரித்தான கொங்குத் தமிழில் dialogue delivery superb👏🏻👏🏻👏🏻 (அவரின் தகடு தகடு காலத்தை நினைவு படுத்துகின்றன). சில இடங்களில் கண்களில் நீர் வரவழைக்கும் நடிப்பு! உண்மையான தோழமையின் அழகு அந்நடிப்பில்!👌🏻👌🏻
ஜெயராமன் பாத்திரம் நெகடிவ் போலத் தெரிந்தாலும் கடைசியில் பெரிய twist.. மனுஷன் பின்னியெடுத்திருக்கிறார்...👏🏻👏🏻👏🏻
மாதவனுக்கு ஒரு ஓ போட்டே ஆகவேண்டும். மிக நாசுக்கான மிகையில்லாத பாத்திரமாகவே ஆகிவிடும் நடிப்புத்திறமைக்கு மட்டுமல்லாமல் இதுபோல் biopic எடுக்கும் தைரியத்திற்கும்! (ஏற்கெனவே rocketry எடுத்து கையை சுட்டுக் கொண்ட பின்பும்!)👏🏻👏🏻👏🏻
நம் நாட்டின் மிகச் சிறந்த, அதிகம் பலருக்கும் தெரியவராத மனிதர்களை அவர்கள் பட்ட கஷ்டங்களையும் அதை மீறி அவர்கள் ஜெயித்த கதைகளையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட நினைக்கும் அவர் நோக்கத்திற்கு ஒரு ஜே!🫡🫡.
ஏன் இது போன்ற படங்களை ஜனம் ரசிப்பதில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. இத்தனைக்கும் எங்குமே தொய்வில்லாமல் மிக சுவாரசியமாக எடுக்கப் பட்டிருக்கிறது இப்படம் (ofcourse குத்துப்பாட்டு, முகத்துக்கு நேரே விரலை நீட்டி சொல்லப்படும் punch dialogues இல்லையே! பின்னர் எப்படி கூட்டம் வரும்!)
கொஞ்சம் தவறினால் டாக்குமெண்டரி மாதிரி அமைந்துவிடும் அபாயத்தை அழகாகக் கடந்து தவிர்த்து நின்று ஜெயித்திருக்கிறார்கள் மொத்த இயக்குநர், நடிகர்கள் மற்றும் அனைத்து technicians & படக் குழுவினரும்...
எளிதாக தேங்காய் துருவ மனைவிக்கு ஒரு கருவி, மில்லில் பஞ்சைப் பிரித்தெடுக்க ஒரு கருவி (ஈறுகோதியைப் பார்த்து impress ஆனதால்), முதல் electric shaver etc etc இதுபோல் சாமானிய ஜனங்களுக்கு உபயோகமாகும் பலப் பல கருவிகளைக் கண்டுபிடித்திருக்கிறார், முக்கியமாக தேசப்பற்று என்பதை மூச்சாகவே கொண்டிருந்தார் என்பதை இப்படத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறோம் (நம்மில் பலரும்) என்பது வெட்கப் பட வேண்டிய விஷயம்.... அதுவும் GDN பேட்டையான கோவையிலேயே பல வருடங்கள் குப்பை கொட்டிவிட்டு!
ஆங்கிலம் கற்றுக் கொண்டு அழகாக புன்னகைத்துக் கொண்டே ஆங்கிலேயர்களை வாருவது maddy's touch👌🏻👌🏻👌🏻
Edison of India என்று அழைக்கப்பட்ட GDN பற்றிய இந்தப்படத்தை இந்தியர்கள் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை...
மனதில் தெளிவான ஒரு நோக்கமும் ஆர்வமும் தீப்பொறி போன்ற அறிவும் (பாரதியாரின் அக்னிக்குஞ்சு போல்) இருந்தால் சாதிக்க படிப்போ பணமோ அவசியம் இல்லை என்று நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார் GDN...🫡.
(வீட்டுக்குத் திரும்பி வரும்போது என்ன டாக்குமெண்டரி மாதிரி இருந்ததா படம் என்று கேட்டு என் கணவரை tease செய்தேன். பதிலுக்குக் கிடைத்தது ஒரு சிறு புன்னகை... அதில் ஆயிரம் அர்த்தங்கள்!)
Titbit:
படம் பார்க்கவந்த இங்கு வில்லாவில் வசிக்கும் திரு.கண்ணன் அவர்கள் தன் அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.
தான் GDN காரியாலயத்தில் அவருக்குக் கீழேயே 3 வருடங்கள் வேலை பார்த்ததாகவும், தன் திருமணத்திற்கு 10 நாட்கள் விடுப்பு கேட்டதாகவும் அதற்கு GDN, எதற்கு 10 நாட்கள்? ஐந்து நாட்கள் போதும் என்று சொன்னதாகவும். (அப்படிச் சொல்லவில்லையென்றால் தான் ஆச்சர்யம்!)
மொத்தத்தில்.....
GDN :
*G* reat
*D* ominant
*N* inaivugal...
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்.


இந்தப் படம் பார்க்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் பயந்த அதே காரணம்தான். ஆனால் உங்கள் விமர்சனம் படித்தால் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. இதேபோல கீதா அக்கா மனோஜ் பாஜ்பயீ நடித்த கவர்னர் படத்தை சிபாரிசு செய்திருக்கிறார். பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குமாதவன் அஜித் தொவளாகவும் நடிக்கிறார். GDN ஆகவும் நடிக்கிறார். அசாத்திய திறமை. அஜய் தேவ்கன் படத்தில் டிராகுலா போல வில்லனாகவும் நடிக்கிறார்.
பதிலளிநீக்குயாரும் கைதட்டாவிட்டால் என்ன.. நீங்கள் மெலிதாக ஆரம்பித்து வைத்திருந்தால் அப்புறம் அப்புறம் தூள் பறந்திருக்கும். எதற்குமே ஒரு ஆரம்பம் தேவை அவ்வளவுதான். எல்லோருமே அதற்குதான் தயங்கி கொண்டிருந்திருப்பார்கள்!
பதிலளிநீக்குஅதுபோல் முயற்ச்சித்தி ருக்கிறேன் அங்கே, ஆனால் என் கைதட்டு மட்டும் அங்கே ஒலித்தது....
நீக்குவிஜி.