அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*********
சமீப காலமாக கோவா அளவுக்கு மற்ற சுற்றுலா தலங்கள் இத்தனை சோகங்களைப் பார்த்திருக்குமா என்பது சந்தேகமே.
நான் பார்த்தவரை, கேட்டவரை பகிர்கிறேன் (grief will be half when shared - Goa's mind voice)
ஐம்பதை கடந்த எ(இ)டையில் எழுவதைக் கடந்த பல பெண்மணிகள் தங்களின் டீன் ஏஜ் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள நாடும் ஒரே இடம் கோவா.
அவர்களின் ஒரே குறிக்கோள் அங்கு இருக்கும் இடங்களைப் பார்ப்பதல்ல. அந்த இடங்கள் யாவும் *தங்களைப்* பார்க்க வேண்டும் என்பதுதான். அவர்கள் செய்யும் முதல் காரியம் குட்டை பாவாடைகள், அரை டிராயர், குட்டை கவுன் இவற்றை முதலில் வாங்கி கபோர்டில் சேர்ப்பது. உடனே கபோர்ட் நேரே கோவாவுக்கு ஒரு தந்தி அடிக்கிறது, 'இதைப் போன்ற பல குட்டை உடைகள் பரந்து விரிந்த உடல்களுடன் கோவாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன உஷார்' என்று. அது தன்னை சுதாரிப்பதற்குள் சம்பவம் நிகழ்ந்து விடுகின்றது. கோட்டை, கொத்தளம், கடற்கரை, தேவாலயம் எங்கு நோக்கினும் பீதியடா என்று அங்கு நேரத்தை ஜாலியாக செலவிட வேண்டும் என்று கருதி வந்த பல பாவப்பட்ட ஜென்மங்கள் இக்காட்சிகளை பார்த்துவிட்டு காண்டாகி சாதாரணமாக ஒரு பாட்டில் குடிப்பதாக இருந்தாலும் அதை இரட்டிப்பாக்கி தன்னை மறந்து ஊருக்குள் பைத்தியம் போல் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். சிலர் சொந்த ஊருக்குத் திரும்புவதே இல்லை! குதிரைக்காரன் படகோட்டி, taxi driver, ஏன் குதிரைகள் முகத்திலும் ஒரு இனம் புரியாத சோகம்!
கடற்கரை நண்டுகள் கூட வெளிவர பயந்து உள்ளேயே இருக்கின்றன. கடல் கூட சொல்லிப் பார்த்தாயிற்று 'அங்கு படுத்துக்கொண்டு pose குடுக்கர ஒரு ஃபிகரை வெடுக்கென்று கடித்து விட்டாவது வா, கொஞ்சம் மனசு ஆறும் என்று!' இவைகள் பாவம் பயந்த சுபாவம். போவதில்லை. வலையில் மாட்டினாலும் மாட்டுவோம் அந்த காட்சிக் கொலையில் மாட்டமாட்டோம் என்கிற வைராக்கியம்.
குட்டை straight கவுன் தைப்பவன் கெட்டிக்காரன். எப்படியும் கிழியத்தான் போகிறது என்கிற ஞானம் பெற்று முன்னாலும் பின்னாலும் slit குடுத்து விடுகிறான்! அனுபவசாலி👍🏻
கறுப்புக் கண்ணாடி is an icing added on the cake! அதைப் போட்டுக் கொள்வதால் ஒரு நன்மை, கண்ணை சுற்றி இருக்கும் சுருக்கம் தெரியாது!
Facebook, Instagram இல் இந்த photos viral (இப்படி யாரு பேரு வெச்சா. நிஜமாவே fever வருது🥵)
இப்படங்களைப் பார்த்து புதுக் குடிகாரர்கள் பெருகுகிறார்கள்களாம்!(வேற யார் அவர்களைக் கட்டிக்கொண்ட ஜீவன்கள்தான்😥)
நாங்களும் போனோம் 12 வருடங்கள் முன்னால். அப்போது இந்த உடை கலாச்சாரம் பற்றி அறியாத பேதைகள் நாங்கள்! ஒரு தோழி கடற் கரையிலிருந்து கடலைப் பார்த்தது போதாதென்று சற்று கடலுக்குள் போய் அங்கு நிறைந்திருந்த நன்கு பச்சையாய் பாசி பிடித்திருந்த பாறையில் ஏறியதைப் பார்த்துவிட்டு 'பாத்து வழுக்.........' முடிப்பதற்குள் அவளைக் காணவில்லை! பார்த்தால் கீழே பாற்(பாறைக்) கடலில் பள்ளி கொண்ட பெருமாள் pose! அவளைக் காப்பாற்ற ஒரு MGR வந்தான். அவளில் பாதி உயரம் பாதி எடை ஆனால் full booze. அவனாலேயே நேராக நிற்க முடியவில்லை, அவளைக் கை குடுத்து தூக்க வந்துவிட்டு அவனே வழுக்கி வழுக்கி விழுந்து கொண்டிருந்தான்! நல்ல வேளை அவசரம் அவசரமாக நகர்ந்து ஓடி வந்து அவனிடமிருந்து எங்களை வழுக்கி விழாமல்(!) காத்துக்கொண்டோம்!
ஒரு சர்ச்சில் ஒரு பிரேதத்தை பல வருடங்களாக பாதுகாக்கிறார்கள். நகம், முடியெல்லாம் வளர்கிறதாம். எனக்கென்னவோ அந்த காலத்திலேயே பல ஆங்கிலோ இந்திய குட்டைப் பாவடைகளைப் பார்த்து பயத்தில் உறைந்தவனாக அவன் இருந்திருப்பானோ என்று சந்தேகம்😟.
சரி விடுங்கள், எப்போ கோவா trip வெச்சுக்கலாம்?
சொன்னாத்தான் purchase-க்குப் போகமுடியும்😂
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்.


கோ வா ன்னு இருந்தால் சரிதான். அங்கேயே இருந்தால்தான் சிரமம். நாமும் உறைந்து விடுவோம். நலலவேளை(?) நான் கோவா பார்த்ததில்லை.
பதிலளிநீக்கு