ஞாயிறு, 31 டிசம்பர், 2017

திரும்பிப் பார்க்கிறேன் - புத்தாண்டு நல்வாழ்த்துகள்
2017 – ஆம் ஆண்டு முடிவடைந்திருக்கிறது. நாட்கள் வேகமாகவே கடந்து கொண்டிருக்கிறது. மிகச் சமீபமாகத் தான் இந்த ஆண்டு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது என்றாலும் அதற்குள் வருடத்தின் முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்த வருடம் மட்டுமல்ல எல்லா வருடங்களுமே இப்படித்தான் வேக வேகமாகவே கடந்து விடுகிறது – கல்லூரி முடித்து 1991-ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தது நேற்று போல இருக்கிறது – அதற்குள் 26 வருடங்கள் முடிந்து 27 ஆம் ஆண்டுகளாக தில்லி வாசம்! காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே! எல்லா வருடங்கள் போல இந்த வருடம் நன்றாகவே கடந்திருக்கிறது.

குஜராத் மாடல் – அப்படி என்னதான் இருக்கு?


சில வருடங்களாகவே “குஜராத் மாடல்” ரொம்பவே பிரசித்தி பெற்ற இரு வார்த்தைகள்! யாரைக் கேட்டாலும் குஜராத் மாடல், குஜராத் மாடல் என்று தான் பேசுகிறார்கள் – சிலர் உயர்த்தியும் சிலர் தாழ்த்தியும்! அப்படி என்னதாங்க இருக்கு இந்த ‘குஜராத் மாடல்’ல! இந்தப் பதிவுல கொஞ்சம் குஜராத் மாடல் பத்தி பார்க்கலாம்!

சனி, 30 டிசம்பர், 2017

கதம்பம் – 21 காய்கறி பை – வைகுண்ட ஏகாதசி கோலம் – இறைவனின் படைப்பில் – கோதுமை சேமியா21 காய்கறிகள் கொண்ட பை - கோலங்கள்

கோவிலில் இருந்து வரும் வழியில் பொம்மைக் கடைகள், காய்கறி கடைகள், வீடுகளில் போட்டிருக்கும் கோலங்கள் என கண்களை கவர்ந்தது. அதிலும் நாளை துவாதசிக்கு 21 வகை காய்களை போட்டு குழம்பு செய்வார்கள். அதனால் எல்லா காய்களிலும் சில துண்டுகள் நறுக்கி சேர்த்து பை போட்டு தருவார்கள்.


வெள்ளி, 29 டிசம்பர், 2017

லாலுவுக்கும் புதிருக்கும் சம்பந்தம் - புகைப்படப் புதிர் – இரண்டு – விடைகள்….நேற்று காலை நான்கு புகைப்படங்களை வெளியிட்டு அவை பற்றிய கேள்வியைக் கேட்டிருந்தேன். அந்த படங்களில் இருப்பவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்!


புதிர் படம்-1:  இது ஒரு இயந்திரம். என்ன இயந்திரம் என்று சொல்ல முடியுமா?

விடை: இந்த இயந்திரத்திற்குப் பெயர் chசாரா குட்டி! வட இந்திய கிராமங்களின் பெரும்பாலான வீடுகளில் இந்த இயந்திரத்தினை பார்க்க முடியும். chசாரா, Bபூசா என அழைக்கப்படும் மாடுகளுக்கு வழங்கும் புல், வைக்கோல் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக்க இந்த இயந்திரத்தினை பயன்படுத்துவார்கள். புல்/வைக்கோலை அதற்கான இடத்தில் வைத்து, சக்கரத்தினைச் சுற்ற, சிறு சிறு துண்டுகளாக்கும் இந்த இயந்திரம். இப்போதெல்லாம் மின்சார மோட்டார் கொண்டும் இயக்கப்படுகிறது என்றாலும் கொஞ்சம் அபாயமானது – கிராமத்தில் பலருக்கும் கை விரல்கள் வெட்டுப்பட்டிருக்கின்றன! இந்த chசாரா Gகோட்டாலா [Fodder Scam]-ல் தான் லாலு பிரசாத் யாதவ் குற்றம் செய்தவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது!


புதிர் படம்-2: இது என்ன?விடை: பார்ப்பதற்கு வழிபாட்டுத் தலம் போல இருந்தாலும், இது அப்படி அல்ல! கிணற்றின் மேலே நான்கு பக்கங்களிலும் இப்படிச் சுவர் எழுப்பி, அதில் நான்கு புறத்திலும் தண்ணீர் எடுத்துக்கொள்ள வழி செய்திருப்பார்கள். முதலில் கொடுத்த படம் தவிர, தண்ணீர் எடுக்க வசதி செய்திருக்கும் படமும் கொடுத்திருக்கின்றேன்.புதிர் படம்-3: இந்த இடம் என்ன இடம், எங்கே இருக்கிறது. ஒரு Clue – முன்னரே இப்படம் எனது பதிவில் வந்திருக்கலாம்!

விடை: கோனார்க் என சிலர் பதில் சொல்லி இருந்தாலும் இது கோனார்க் அல்ல! ஆனால், இதுவும் சூரியனார் கோவில் தான்! குஜராத் மாநிலத்தில் உள்ள Modhera எனும் இடத்தில் உள்ள சூரியனார் கோவில் இது. முன்பு பிரம்மாண்டமாக இருந்திருந்தாலும், இப்போது இருப்பது இவ்வளவு தான்! இந்த இடம் பற்றி விரைவில் எழுதுகிறேன்.படம்-4: இந்த முதியவரின் பக்கத்தில் ஒரு கருவி இருக்கிறது... அது என்ன கருவி!

விடை: இந்த மாதிரி கருவியை நம் ஊரில் நிச்சயம் பார்த்திருக்க முடியாது! இந்த கருவியின் பெயர் DHதூனி. இயக்குபவர் DHதூனியா! வட மாநிலங்களில் குளிர் அதிகம் என்பதால் ரஜாய் பயன்படுத்துவது வழக்கம். ரஜாயில் இருக்கும் பஞ்சை சுத்தம் செய்ய, மீண்டும் பயன்படுத்தத் தகுந்த வகையில் ஆக்குவதற்கு இந்தக் கருவி பயன்படுகிறது! குளிர் காலங்களில் இக்கருவியைச் சுமந்து கொண்டு வருவார்கள். இந்தக் கருவியில் இருக்கும் String-ஐ மீட்ட வித்தியாசமான ஒரு இசை வெளியாகும்! அந்த String எதிலிருந்து செய்கிறார்கள் என சமீபத்தில் கேள்விப்பட்டேன் – அது ஆட்டுக் குடலிலிருந்து செய்யப்படுகிறது என்பது தான் அந்த விஷயம்! கருவியை எப்படி இயக்குவார்கள் என பார்க்க விரும்பினால் இங்கே பார்க்கலாம்!


புகைப்படங்களைப் பார்த்து புதிர்களுக்கு விடை சொல்ல முயற்சித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்.

முடிந்த போது வேறு சில புகைப்படங்களுடன் வருவேன் – உங்களுக்கும் விருப்பமிருந்தால்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


ஒரு திருமணமும் அதன் விபரீத விளைவும்


வட இந்திய மாநிலங்களில் ஒரு பழக்கம் உண்டு – குறிப்பாக ஹரியானா, உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் இப்பழக்கம் வெகு சாதாரணம். என்ன பழக்கம்?

வியாழன், 28 டிசம்பர், 2017

புகைப்படப் புதிர் – இரண்டு – கண்டுபிடிங்க பார்க்கலாம்….


சில நாட்களுக்கு முன்னர் ”படமும்புதிரும் – எங்கள் பிளாக்குப் போட்டியா?” என்ற தலைப்பில் ஐந்து படங்களைத் தந்து அவை பற்றி கேள்விகள் கேட்டிருந்தேன். பங்கு கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. இப்போது மீண்டும் ஒரு புகைப்படப் புதிர்! இந்த முறை நான்கு படங்கள்.படம்-1:  இது ஒரு இயந்திரம். என்ன இயந்திரம் என்று சொல்ல முடியுமா?

புதன், 27 டிசம்பர், 2017

சாப்பிடலாம் வாங்க – இருபுளிக் குழம்பு
சாம்பாருக்காக எடுத்து வைத்த நான்கு வெண்டைக்காய்கள் இருந்தது. வழக்கமாக செய்யும் சாம்பாரும், ரசமும் சலித்துப் போக இணையத்தில் தேடி இருபுளி குழம்பு செய்தேன்.


செவ்வாய், 26 டிசம்பர், 2017

மீண்டும் குழந்தைகளாவோம் – பிரதாப்கட்[ர்], ஹர்யானா…

மீண்டும் குழந்தைகளாவோம்....


மீண்டும் குழந்தைகளாவோம்....

தலைநகர் வாழ்க்கை கொஞ்சம் சவாலான விஷயம். பெரும்பாலான நேரம் போக்குவரத்தில் மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து அலுவலகம் சென்று சேரவும், அலுவலகத்திலிருந்து வீடு சேரவும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகும். எனக்கு அந்தப் பிரச்சனை இல்லை என்றாலும் – அலுவலகம் மூன்று கிலோமீட்டர் தூரம் தான் – நேரடி பேருந்து இல்லை! பெரும்பாலான நாட்களில், நடை, பேருந்து, நடை என இருக்குமென்பதால் 15 நிமிடம் முதல் 25 நிமிடம் வரை ஆகிவிடுகிறது. வீடு, சமையல், அலுவலகம், வீடு திரும்பி மீண்டும் சமையல், மற்ற வேலைகள், தூக்கம் என Routine and Boring Schedule இந்த தலைநகர வாழ்க்கை.

திங்கள், 25 டிசம்பர், 2017

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்….எனது வலைப்பூவை [ஸ்]வாசிக்க வரும் அனைத்து கிறிஸ்துவ நண்பர்களுக்கும் மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்….

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

கண்கவர் ஓவியங்கள் – கிராமியக் காட்சிகள் - ஹரியானாவிலிருந்து…


சமீபத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் Outing வகையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜர் மாவட்டத்தில் ஓரிடத்திற்குச் சென்றிருந்தோம். ஹரியானா கிராமிய வாழ்க்கையையும், அங்கே மக்கள் வாழும் வாழ்க்கையையும், சூழலையும் நாமும் வாழ ஒரு வழி. விதம் விதமான விளையாட்டுகள், உணவு, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மிகவும் ரசித்த ஒரு நாள் அது. அப்படிச் சென்ற போது அங்கே கிராமிய வீடுகள் – மண் சுவர் கொண்ட வீடுகளின் உள்ளே வரைந்திருந்த ஓவியங்களை மட்டும் தனித்தனியே படம் பிடித்துக் கொண்டேன்.  அந்த ஓவியங்கள் மட்டும் இந்த ஞாயிறில் புகைப்பட உலாவாக….

சனி, 23 டிசம்பர், 2017

தலைநகரில் தமிழகக் குடிமகன்கள் - நான் செய்தது சரியா தவறா


இவர்கள், அவர்களல்ல!
படம்: இணையத்திலிருந்து....

அலுவலகத்திலிருந்து சமீபத்தில் ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டினருகே இருக்கும் ஒரு சாலையில் தொடர்ந்து அரசு நடத்தும் மூன்று சரக்கு/சாராய விற்பனை நிலையங்கள். காலை பத்து மணிக்குத் திறந்தால் இரவு ஒன்பது, ஒன்பதரை மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும் – எப்போதும் இந்தக் கடையில் மட்டும் நுகர்வோர் கூட்டம் அதிகமாகவே இருக்கும்! வாசலிலேயே சில கடைகள் – காரசாரமாக மிக்ஸர் விற்பவர்கள், ஆம்லேட் விற்பவர்கள் என அனைவருக்கும் இந்த இடம் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையை ஓட்ட உதவுகிறது. இவை போதாதென்று இக்கடைகளுக்கு அருகிலேயே அசைவ உணவு வகைகள் விற்கும் கடைகளும் உண்டு.

வெள்ளி, 22 டிசம்பர், 2017

கதம்பம் – மண் வாணலி சமையல் – மெஹந்தி – பீட்ரூட் பூரி - மார்கழிப்ரேக் ஃபாஸ்ட் – சாப்பிட வாங்க!


மகளுக்கு செய்து கொடுத்த பீட்ரூட் பூரி! நீங்களும் சாப்பிடலாம்!

வியாழன், 21 டிசம்பர், 2017

பதிவு எண் 1500 – பதிவுலகமும் நானும் – நன்றி சொல்லும் நேரம்
இன்றைக்கு வெளியிடும் இப்பதிவு “சந்தித்ததும் சிந்தித்ததும்” வலைப்பூவில் 1500-ஆவது பதிவு! இத்தனை தூரம் நான் கடந்து வருவேன் என்ற சிந்தனை வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கும் போது எனக்குள் சத்தியமாக இல்லை. இந்த வலைப்பூவில் தான் நான் முதன் முதலாக எழுத ஆரம்பித்தேன் என்றாலும், நடுநடுவே ”ரசித்த பாடல்” என்ற வலைப்பூவும், “Venky’s Thoughts” என்ற ஆங்கில மொழி வலைப்பூவும் ஆரம்பித்து எழுதிக் கொண்டிருந்தேன். ரசித்த பாடல் வலைப்பூவில் என் இல்லத்தரசியும் எழுதிக் கொண்டிருந்தார். 23 டிசம்பர் 2013-க்குப் பிறகு அந்த வலைப்பூவில் எந்த பதிவும் வெளியிடவில்லை.  ஆங்கில வலைப்பூவில் மூன்றோ நான்கோ பதிவுகள் எழுதியபிறகு தொடரவில்லை. சில மாதங்களில் அதனை மொத்தமாக அழித்துவிட்டேன்! தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது இங்கே மட்டும் தான்!

புதன், 20 டிசம்பர், 2017

டல்ஹவுசியிலிருந்து தரம்ஷாலா – ஓட்டுனரின் வருத்தம் - பயணத்தின் முடிவுஇரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 22

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


தரம்ஷாலா - எங்கெங்கும் வீடுகள்...

Bபலேய் மாதா மந்திரில் குடிகொண்டிருக்கும் Bபத்ரகாளியை தரிசனம் செய்த பிறகு புறப்பட்டோம். மீண்டும் CHசமேரா அணைக்கட்டு வழியாகவே பயணித்து டல்ஹவுஸி வரை வந்தோம். தரம்ஷாலவிலிருந்து வாகனத்தினை அமர்த்திக் கொண்ட போது, எங்களை டல்ஹவுஸியில் விட்டுவிட்டு வாகனத்தினை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று தான் வாகன ஓட்டுனரிடமும்/வாகனம் தந்த நிறுவனத்திடமும் சொல்லி இருந்தோம். டல்ஹவுஸியிலிருந்தே தலைநகர் தில்லி திரும்புவதாக எங்கள் திட்டம் இருந்தது. ஆனால் தலைநகர் திரும்புவதற்கான பேருந்திற்கு முன்பதிவு செய்திருக்கவில்லை. கஜ்ஜியாரிலிருந்த போது இணையம் வழியாக முன்பதிவு செய்யலாம் என பார்த்தபோது பேருந்துகள் அத்தனை வசதியாக இல்லை – அங்கிருந்து புறப்படும் பேருந்துகள் குறைவு என்பதால் திட்டத்தினை மாற்ற வேண்டியிருந்தது.

செவ்வாய், 19 டிசம்பர், 2017

கனவில் வந்த காளி - பலேய் மாதா மந்திர் – வெள்ளை சரக்கொன்றை


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 21

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


CHசமேரா ஏரி.....


பலேய் மாதா மந்திர் - வெளிப்புறத் தோற்றம்..... 

CHசமேரா ஏரியிலிருந்து புறப்பட்டு அதே மலைப்பாதையில் நாங்கள் சென்றடைந்த இடம் ஒரு கோவில் – Bபலேய் மாதா மந்திர். சமேரா ஏரி இருக்கும் பகுதியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கோவில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3800 அடி உயரத்தில் இருக்கும் இந்தக் கோவிலின் கீழே இருக்கும் வாகன நிறுத்தத்தில் எங்கள் ஓட்டுனர் இறக்கி விட மலை மீது இருக்கும் கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டும் – சுமார் 100 படிகள் ஏறிச் சென்றால் பலேய் மாதா மந்திர்.  இந்தக் கோவிலில் குடி கொண்டிருப்பது எந்த தேவி, இக்கோவிலின் வரலாறு என்ன, கோவில் பற்றிய கதை என்ன என்பதையெல்லாம் பார்க்கலாம் வாருங்கள். 100 படிகள் ஏறிச் செல்லும் போதே உங்களுக்குக் கதையும் சொல்லி விடுகிறேன்.

திங்கள், 18 டிசம்பர், 2017

சமேரா லேக் – மலைப்பாதைகளில் ஒரு பயணம்


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 20

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


CHசமேரா ஏரி... என்ன அழகு எத்தனை அழகு....  

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

கத்புத்லி – ஹேமமாலினி நடனம் – புகைப்படங்களும் காணொளியும்சென்ற ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணம் – ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜர் எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு! அங்கே சென்ற போது பார்த்த கத்புத்லி என்று இங்கே அழைக்கப்படும் பொம்மலாட்டம் பார்க்க முடிந்தது. அப்போது நான் எடுத்த புகைப்படங்களும், குழுவில் இருந்த நண்பரின் மகள் எடுத்த காணொளியும் இந்த ஞாயிறில் உங்கள் பார்வைக்கு.


சனி, 16 டிசம்பர், 2017

ஓடி ஓடி உழைக்கும் அரசு ஊழியர்


இன்றைய நாளிலும் ரன்னர்!

பொதுவாகவே அரசு ஊழியர் என்றாலே, வேலை செய்யாமலேயே சம்பளம் மற்றும் கிம்பளம் வாங்குபவர்கள் என்ற ஒரு தோற்றத்தினை உருவாக்கி வைத்திருக்கிறது இந்தச் சமூகம். அப்படி இருப்பவர்கள் சிலர் மட்டுமே என்றாலும் ஒட்டு மொத்த அரசு ஊழியர்களும் இப்படித்தான் என்று முடிவு செய்து விடுகிறார்கள். மற்றவர்கள் மீது இப்படிக் குற்றம் சுமத்துவது மிகச் சுலபமான ஒரு விஷயமாயிற்றே. இவர்களிலும் பல நல்லவர்கள் உண்டு என்பதை யாரும் உணர்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே இப்படியான நல்லவர்களின் செயல்களை விளம்பரம் தருகிறார்கள் – சனிக்கிழமைகளில் எங்கள் பிளாக் பாசிட்டிவ் மனிதர்கள் போல! இன்றைக்கு இப்பதிவில் நான் அடையாளம் காட்டும் மனிதரும் அப்படி ஒரு பாசிட்டிவ் மனிதர் – அஞ்சல் துறையில் வேலை செய்யும் ஒரு அரசு ஊழியர்.

வெள்ளி, 15 டிசம்பர், 2017

கஜ்ஜியாரிலிருந்து டல்ஹவுஸி – காலாடாப்பில் என்ன இருக்கிறது?


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 19

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


காலை நேரத்தில் கஜ்ஜியார்....

நடைப்பயணத்தினை முடித்துக் கொண்டு தங்குமிடம் திரும்பிய பின் சிறிது ஓய்வு. ஓய்வுக்குப் பிறகு தங்குமிட சிப்பந்தி இரவு உணவு தயார் என்ற அழைப்போடு வர, தரைத் தளத்திற்குச் சென்றோம். சிறிது நேரம் காத்திருந்த பிறகு நாங்கள் சொல்லி இருந்த உணவு வந்து சேர்ந்தது. சப்பாத்தி, சப்ஜி, தால், சலாட் என சொல்லி இருந்த அனைத்துமே நன்றாக இருக்கவே ரசித்து ருசித்து சாப்பிட ஒரு மணி நேரம் ஆனது – கூடவே அரட்டையும் இருந்தது. பயணத்தில் இதுவரை பார்த்த இடங்கள் பற்றிய அரட்டையும், நாளை பார்க்கப் போகும் இடங்கள் பற்றிய திட்டமிடலும் ஸ்வாரஸ்யமாகச் செல்ல, நேரம் போனதே தெரியவில்லை. இரவு உணவுக்குப் பிறகு வெளியே நடக்கலாம் என்றால், மேலே இருந்து சாலையைப் பார்க்க, சாலையில் ஈ, காக்கா இல்லை! இப்படி இருக்கையில் நடப்பது சரியாக இருக்காது என்பதால், தங்குமிடத்திலேயே கொஞ்சம் நடந்தோம். சிப்பந்திகள் விறகுகளை எரித்து குளிர்காய்ந்து கொண்டிருக்க, அங்கே நாங்களும் சங்கமித்தோம்.   


பயணத்தில் கண்ட காட்சி....

வியாழன், 14 டிசம்பர், 2017

படமும் புதிரும் - சரியான விடைகள்

படப் புதிருக்கான விடைகள்:

இதற்கு முந்தைய பதிவில் படங்கள் கொடுத்து, அவற்றுக்கான பதில்கள் கேட்டிருந்தேன்.  


படம்-1


செவ்வாய், 12 டிசம்பர், 2017

படமும் புதிரும் – எங்கள் பிளாக்-க்கு போட்டியா?


எங்கள் பிளாக் வலைப்பூவில் ஒவ்வொரு புதன் கிழமையும் புதிர் போட்டுக் கொண்டிருந்தார்கள். சென்ற வாரத்தில் புதிருக்கு பதிலாக ”வார வம்பு” பதிவு வந்தது. சரி அதற்கென்ன இப்போது என்ற கேள்வி எழுமுன், பதில் சொல்லி விடுகிறேன்.

இன்றைக்கு வந்திருக்க வேண்டிய பதிவு வெளியிட முடியவில்லை. அதனால் இப்போது சில படங்கள் தந்திருக்கிறேன் – அந்த படங்கள் பற்றியது தான் புதிர்! முடிந்தால் பதில் சொல்லுங்களேன்.

திங்கள், 11 டிசம்பர், 2017

கஜ்ஜியாரிலிருந்து காலா டாப் – நடையும் உழைப்பாளிகளும்


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 18

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


நடக்கலாம் வாங்க.....
படம்: நண்பர் பிரமோத்..

நண்பர்கள் ஓய்வு எடுக்கப் போவதாகச் சொல்லி விட, நான் மட்டும் மாலை நேரத்தில் கொஞ்சம் நடந்து வரலாம் என நினைத்தேன். அறையிலிருந்து வெளியே வர, தங்குமிடச் சிப்பந்தி, இரவு உணவுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டார். ஐந்து பேருக்கும் தேவையானது Simple Tawa roti, dhal, Sabji மட்டும் என்பதைச் சொல்ல, சரி 08.00 மணிக்குள் தயார் செய்து விடுகிறேன் என்று சொல்லி, இன்னுமொரு சிப்பந்தியை அழைத்து, Fresh-ஆக காய்கறிகள் வாங்கி வரச் சொன்னார். இந்த மாதிரி இடங்களில் தேவைக்கேற்ப, அவ்வப்போது காய்கறி வாங்கிக்கொள்ளலாம். வந்திருக்கும் விருந்தினர்களிடம் கேட்டு பிறகு சமையல் செய்து தருவார்கள் என்பதால் சுடச்சுடவும், புதியதாகவும் சாப்பிடக் கிடைக்கும். நகரங்களில் பெரும்பாலான இடங்களில் Deep Freezer-ல் சமைத்து வைத்திருந்தவற்றை சூடு செய்து கொடுத்து விடுவார்கள்!

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

காவேரிக் கரையிருக்கு – புகைப்பட உலா


பல மாதங்களாக வரண்டு கிடந்த காவேரி ஆற்றைப் பார்த்துப் பார்த்து மனதில் ஆற்றாமை மட்டுமே. ஒவ்வொரு முறையும் ஒன்றாம் எண் பேருந்தில் திருவரங்கத்திலிருது போகும்போதும் வரும்போதும், வறண்டு கிடக்கும் காவேரி ஆற்றைப் பார்க்கும் போது, “எப்படி இருந்த ஆறு, இப்படி ஆகி விட்டதே” என்று தோன்றுவதுண்டு.  எப்போதாவது தண்ணீர் வரத்து இருந்துவிட்டால், தண்ணீர் இருக்கும் காவேரி பார்த்து மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி பொங்கும். 

சனி, 9 டிசம்பர், 2017

கதம்பம் – ஒரு சூப்பர் டான்ஸ் – மொட்டைமாடி காட்சிகள் – மண் வாணலி!ஒரு சூப்பர் டான்ஸ்!கடவுளின் படைப்பில் தான் எத்தனை அற்புதம்!!! சமீபத்தில் வீட்டின் சமையலறைக்குள் சுவற்றில் பார்த்த ஒரு உயிரினம். என்னமா டான்ஸ் ஆடுது பாருங்க. ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தாத்தா! என்ன டான்ஸ் பாருங்க.
மொட்டை மாடிக் காட்சிகள்

சமீபத்தில் மாலை நேரத்தில் மொட்டை மாடிக்குச் சென்ற போது கண்ட காட்சிகள்! இயற்கையின் அழகு – புகைப்படங்களாய் -உங்கள் பார்வைக்கு!


மண் வாணலி


சமீபத்தில் தான் இந்த வாணலியை வாங்கினேன். குழம்பு, கூட்டு செய்ய ஏற்கனவே ஒரு சட்டி ஐந்து வருடமாய் என்னிடத்தில் உண்டு! தினசரி சமையல் அதில் தான். மண்பாத்திர சமையலில் அடுத்த கட்டமாக இந்த வாணலி.

இதைப் பழக்க ஆரம்பிக்க உங்களிடம் டிப்ஸ் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்! தெரிந்து கொள்கிறேன். எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து எடுக்கணும் என்று வாசித்த ஞாபகம்.

வெங்கி’ஸ் கார்னர்: [என்னவரின் முகப்புத்தக இற்றை ஒன்று!]

ராஜா காது கழுதைக் காது.....

இன்று மதியம் தலைநகரின் பிரபலமான ஒரு இடத்தில்....

பின்னணியில் அந்த இடம் இருக்க, ஒரு இளம் ஜோடி - பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் - இரண்டு பேரும் சேர்ந்து செல்ஃபி எடுக்கவில்லை. சுற்றுலா வந்திருக்கும் தமிழர்கள் போலும்!

ஆண் நிற்க, பெண் அவரது அலைபேசி மூலம் புகைப்படம் எடுத்த போது, சொன்னது - “லூசு லூசு... கண்ணை ஏன் மூடிக்கற, நல்ல திறந்து வை!”

ஆண் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் சொல்ல நினைத்திருப்பார் - “சூரியனை பார்த்து கண்ணை மூடாம, எப்படிம்மா நல்ல திறந்து வைக்கறது!”

நான் சிரிப்பதைப் பார்த்து ஹிந்திக்கார நண்பர் கேட்க விவரித்தேன் - அவருக்கும் புன்னகை!

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....


வெள்ளி, 8 டிசம்பர், 2017

கஜ்ஜியார் – இந்தியாவின் மினி ஸ்விஸ்….


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 17

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


கஜ்ஜியார் - இந்தியாவின் மினி ஸ்விஸ்....


கஜ்ஜியார் - இந்தியாவின் மினி ஸ்விஸ்....
நண்பர் எடுத்த படங்களில் ஒன்று....

வியாழன், 7 டிசம்பர், 2017

அட்டையில் ரங்கோலி…..


ஷூ/செருப்பு வாங்கும்போது அட்டைப்பெட்டியில் தருவார்களே, அதை வெட்டி, ஒட்டி, வண்ணம் தீட்டி செய்த ரங்கோலி!பிடிச்சுருக்கா சொல்லுங்களேன்!

ரோஷ்ணி வெங்கட்


புதன், 6 டிசம்பர், 2017

சுக் எனும் ஊறுகாய் – வித்தியாசமாக ஒரு பீன்ஸ் - அருங்காட்சியகம்


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 16

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


வித்தியாசமான ஒரு பீன்ஸ்!
இதன் பெயர் லுங்டூ.... வித்தியாசமா இருக்குல்ல!


மாயமானை ராமன் துரத்திச் சென்ற காட்சி!
சம்பா ஓவியமாக....

லக்ஷ்மி நாராயண் மந்திரில் இருந்து புறப்பட்டு chசம்பா நகரின் பிரதான வீதி வழியே நடந்து கொண்டிருந்த போது, ஒரு கடையின் பதாகை நிற்க வைத்தது.  CHசம்பா நகர் பற்றி சொல்லும் போது மூன்று விஷயங்களைச் சொல்வது இவர்களது வழக்கம்.  சுக் என அழைக்கப்படும் மிளகாய் ஊறுகாய், சம்பா ஓவியங்கள் மற்றும் சம்பாவின் செருப்பு – நாங்கள் பார்த்த கடையின் பதாகையில் சுக் விற்பனை பற்றி எழுதி இருக்க நின்று விட்டோம். இந்த chசுக் எப்படிச் செய்வது என்பது பற்றி எனது பக்கத்தில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். படிக்காதவர்கள் வசதிக்காக இங்கே அதன் இணைப்பு மீண்டும் தந்திருக்கிறேன்.

செவ்வாய், 5 டிசம்பர், 2017

அதிகாலையில் கேட்ட காதல் கதை…..

நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் தமக்குள் ஏதோ ஒரு கதையை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள். வெகு சிலரே அந்த கதை பற்றிப் பேசுகிறார்கள். பெரும்பாலானவர்கள் தனது கதையைப் பற்றி யாரிடமும் பேசுவதில்லை, பிரஸ்தாபிப்பது இல்லை. சிறுகதை எழுதுபவர்கள் கதைக்கான கருவை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கும் கதைக்கும் ரொம்பவே தூரம். சமீபத்தில் எழுதிய ஒரு பதிவிற்குக் கூட தில்லையகத்து கீதா அவர்கள் “இது ஒரு கதைக்கான கரு” என்று சொல்லி இருந்தார்.  அவரையே நேரம் கிடைத்தால் எழுதச் சொல்லி இருப்பது இப்போது நினைவுக்கு வருகிறது! சரி அது ஒரு புறம் இருக்கட்டும், இப்போது இன்றைய பதிவுக்கு வருகிறேன்!

திங்கள், 4 டிசம்பர், 2017

லக்ஷ்மி நாராயண் மந்திர் – பத்தாம் நூற்றாண்டு – இராஜாவின் இழப்பு


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 15

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா....

ஜோத் என்ற மலைச்சிகரத்திலிருந்து புறப்பட மனதே இல்லாமல் புறப்பட்ட நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் chசம்பாவிற்கு. இங்கே பார்க்க வேண்டிய இடங்கள் சில உண்டு என்பதால் அங்கே தான் பயணம் செய்தோம். முதலாக நாங்கள் சென்ற இடம் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு அற்புதமான கோவில். கோவிலின் பெயர் லக்ஷ்மி நாராயண் மந்திர். கோவில் அருகே வாகனம் செல்லாது என்பதால் சற்றே தள்ளி வாகனத்தினை நிறுத்தி எங்களை இறக்கி விட்டார் ஓட்டுனர். கோவில் பார்த்ததும் அலைபேசியில் அழைத்தால், அதே இடத்திற்கு வாகனத்தினை கொண்டு வருவதாகச் சொல்லி அவர் புறப்பட்டார்.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

திருவையாறு கோவில் சிற்பங்கள் – புகைப்பட உலாசமீபத்திய தமிழகப் பயணத்தின் போது விஜயவாடாவிலிருந்து வந்திருந்த நண்பர் குடும்பம், நான் மற்றும் பெரியம்மா ஒரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு வரகூர் சென்ற போது அப்படியே திருவையாறு சென்று வந்தோம். அது பற்றி ஏற்கனவே ஒன்றிரண்டு பதிவுகள் எழுதி இருக்கிறேன்.

இந்த ஞாயிறில் திருவையாறு கோவிலில் எடுத்த சில படங்கள் – குறிப்பாக சிற்பங்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு!சனி, 2 டிசம்பர், 2017

சாப்பிட வாங்க – தக்காளி தோசை [அ] அடைதக்காளி தோசை

தக்காளி நிறைய இருந்ததால் தக்காளி தோசை செய்தேன். எப்போதும் செய்வது போல அல்லாது YouTube ல் Chitra murali's kitchen-ல் போய்ப்பார்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இவரைப் பற்றி மாத இதழில் ஒரு கட்டுரை வந்திருந்தது. ஆடம்பரம் இல்லாமல் இவருடைய கிச்சனிலேயே அன்றாடம் சமைப்பது போல் செய்து காட்டியுள்ளார்.

வெள்ளி, 1 டிசம்பர், 2017

சாப்பிட வாங்க – கொத்தமல்லி பொடிவாரச்சந்தையில் நானும் தோழியும் காய்கறி வாங்கினோம். எல்லாம் வாங்கிய பின் அண்ணே!! கறிவேப்பிலை, கொத்தமல்லி குடுங்க என்றேன்.

வியாழன், 30 நவம்பர், 2017

ஜோத் என்றொரு மலைச்சிகரம் – அற்புத அனுபவம்இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 14

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


பனிபடர்ந்த மலைச்சிகரங்களும் இயற்கை எழிலும்...